பழைய ஏற்பாடு 2022
ஜனுவரி 24–30. மோசே 7: “கர்த்தர் அவனுடைய ஜனத்தை சீயோன் என்றழைத்தார்”


“ஜனுவரி 24–30. மோசே 7: ‘கர்த்தர் அவனுடைய ஜனத்தை சீயோன் என்றழைத்தார்’” என்னைப் பின்பற்றி வாருங்கள்—தனிநபர்களுக்கும் குடும்பங்களுக்கும்: பழைய ஏற்பாடு 2022 (2021)

“ஜனுவரி 24–30. மரோனி 7,”என்னைப் பின்பற்றி வாருங்கள்—தனிநபர்களுக்கும் குடும்பங்களுக்கும்: 2022

அநேக ஜனங்கள் அன்பான விதங்களில் தொடர்புகொள்கிறார்கள்

ஒருவரையொருவர் நேசியுங்கள் – எம்மா டொனால்ட்சன் டெய்லர்

ஜனுவரி 24–30

மோசே 7

“கர்த்தர் அவனுடைய ஜனத்தை சீயோன் என்றழைத்தார்”

மோசே 7 நீங்கள் வாசித்து சிந்திக்கும்போது, உங்கள் ஆவிக்குரிய எண்ணங்களைப் பதிவு செய்யுங்கள். இதைச் செய்வதனால், நீங்கள் கர்த்தரிடமிருந்து வழிகாட்டுதலை மதிக்கிறீர்கள் மற்றும் அவரது வழிகாட்டுதலை அதிகம் பெற விரும்புகிறீர்கள் என காட்டுகிறீர்கள்.

உங்கள் எண்ணங்களைப் பதிவுசெய்யவும்

வரலாறு முழுவதும், ஏனோக்கும் அவனது ஜனமும் பெற்றதைப் பெற, ஜனங்கள் முயன்றிருக்கிறார்கள்: வறுமை அல்லது வன்முறை இல்லாத ஒரு சிறந்த சமூகத்தைக் கட்டுதல். தேவனின் ஜனமாக நாம் இந்த வாஞ்சையை பகிர்ந்துகொள்கிறோம். நாம் இதை சீயோனைக் கட்டுவது என அழைக்கிறோம், வறியவர்களைக் கவனித்துக்கொள்வது மற்றும் சமாதானத்தை ஊக்குவிப்பதையும் சேர்த்து, உடன்படிக்கைகள் செய்வது, நீதியில் ஒன்றுசோர்ந்திருப்பது, மற்றும் ஒருவரோடொருவருடனும் “சீயோனின் இராஜாவாகிய” இயேசு கிறிஸ்துவுடனும் ஒன்றாவது இதில் அடங்கும் (மோசே 7:53). சீயோனை ஸ்தாபிக்கும் பணி நமது நாளிலும் தொடர்வதால், ஏனோக்கும் அவனது ஜனமும் அதை எப்படி செய்தார்கள் என கேட்பது உதவிகரமாயிருக்கும். அவர்களைச் சுற்றியிருந்த துன்மார்க்கத்திலும், அவர்கள் எவ்வாறு “ஒரே இருதயமும் ஒரே மனதும் உடையவர்களானார்கள்” (மோசே 7:18)? சீயோனைப்பற்றி மோசே 7 நமக்குக் கொடுக்கிற அநேக விளக்கங்களுக்கு மத்தியிலும், பிற்காலப் பரிசுத்தவான்களுக்கு குறிப்பாக மதிப்புமிக்கதாக இது இருக்கலாம்: சீயோன் ஒரு பட்டணம் மட்டுமல்ல, அது இருதயம் மற்றும் ஆவியின் நிலை. கர்த்தர் போதித்திருக்கிறபடி, சீயோன் “இருதயத்தில் சுத்தமுள்ளவர்கள்” (கோட்பாடும் உடன்படிக்கைகளும் 97:21). ஆகவே ஒருவேளை சீயோனைக் கட்டும் சிறந்த வழி, நமது சொந்த இருதயங்களிலும் வீடுகளிலும் தொடங்குவது.

தனிப்பட்ட படிப்பு சின்னம்

தனிப்பட்ட வேதப் படிப்பிற்கான ஆலோசனைகள்

மோசே 7:16–21, 27, 53, 62–69

ஏனோக்கின் முயற்சிகள் நமது சொந்த வாழ்க்கையில் சீயோனைக் கட்டுவதற்கான மாதிரி.

மோசே 7 தேவனைப் பின்பற்றியவர்கள் எவ்வாறு வெற்றிகரமாக சீயோனைக் கட்டினார்கள் எனும் பதிவாக இருப்பதால், அதையே நாமும் செய்ய இன்று நமக்கு அறிவுறுத்தி உணர்த்துகிறது. மோசே 7:16–21, 27, 53, 62–69லிருந்து, சீயோனைப்பற்றி நீங்கள் கற்பதை பதிவுசெய்ய இதுபோன்ற அட்டவணையை பயன்படுத்துவதைக் கருத்தில்கொள்ளவும்.

வசனம்

சீயோனைப்பற்றி நீங்கள் என்ன கற்கிறீர்கள்?

சீயோனைக் கட்ட உங்கள் முயற்சிகளைப்பற்றி இது என்ன ஆலோசனையளிக்கிறது?

வசனம்

7:18

சீயோனைப்பற்றி நீங்கள் என்ன கற்கிறீர்கள்?

சீயோன் ஜனம் “ஒரே இருதயமும் ஒரே மனமும் கொண்டவர்கள்”.

சீயோனைக் கட்ட உங்கள் முயற்சிகளைப்பற்றி இது என்ன ஆலோசனையளிக்கிறது?

நாம் குடும்பங்களாகவும், சபையாகவும் ஒன்றுபட்டிருக்க வேண்டும்.

வசனம்

7:21

சீயோனைப்பற்றி நீங்கள் என்ன கற்கிறீர்கள்?

“காலப்போக்கில், [சீயோன்]பரலோகத்துக்குள் எடுத்துக்கொள்ளப்பட்டது.”

சீயோனைக் கட்ட உங்கள் முயற்சிகளைப்பற்றி இது என்ன ஆலோசனையளிக்கிறது?

சீயோனைக் கட்டுவது படிப்படியான செயல்.

வசனம்

சீயோனைப்பற்றி நீங்கள் என்ன கற்கிறீர்கள்?

சீயோனைக் கட்ட உங்கள் முயற்சிகளைப்பற்றி இது என்ன ஆலோசனையளிக்கிறது?

வசனம்

சீயோனைப்பற்றி நீங்கள் என்ன கற்கிறீர்கள்?

சீயோனைக் கட்ட உங்கள் முயற்சிகளைப்பற்றி இது என்ன ஆலோசனையளிக்கிறது?

மோசே 7:18–19, 53

தேவனுடைய ஜனம் “ஒரே இருதயத்தோடும் ஒரே மனதோடும்” இருக்க முயற்சிக்க வேண்டும்.

மோசே 7: 18–19 கர்த்தர் சீயோன் என்று அழைத்த ஜனத்தின் முக்கிய பண்புகளை பட்டியலிடுகிறது. சீயோனைக் கட்டியெழுப்ப இந்த பண்புகள் அவசியம் என்று நீங்கள் ஏன் நினைக்கிறீர்கள்? இந்த அதிகாரத்தில் விவரிக்கப்பட்டுள்ளபடி சீயோன் எவ்வாறு உலகின் மற்ற ஒன்றுபட்டுள்ள குழுக்கள் அல்லது அமைப்புகளிலிருந்து வேறுபடுகிறது? இந்த கேள்வியை நீங்கள் சிந்திக்கும்போது, வசனம் -53 லுள்ள இயேசு கிறிஸ்துவின் இந்த வார்த்தைகளைப்பற்றி நீங்கள் சிந்திக்கலாம்: “நான் சீயோனின் இராஜாவாகிய மேசியா.” இயேசு கிறிஸ்துவை நாம் நமது இராஜாவாகக் கொண்டிருப்பதன் அர்த்தம் என்ன? சீயோனின் பண்புகளை மேம்படுத்த அவர் எவ்வாறு நமக்கு உதவுகிறார்?

மேலும் பிலிப்பியர் 2: 1–5 ; 4 நேபி 1: 15–18 ; கோட்பாடு மற்றும் உடன்படிக்கைகள் 97:21 ; 105: 5 ஐயும் பார்க்கவும்.

ஜனங்கள் ஒருவரையொருவர் வாழ்த்துதல்

நாம் “ஒரே இருதயத்தோடும் ஒரே மனதோடும்” இருக்க முயற்சிக்க வேண்டும் ( மோசே 7:18 ).

மோசே 7:21, 23–24, 27, 69

ஏனோக்கின் பட்டணத்திற்கு என்ன நிகழ்ந்தது?

“எடுத்துக்கொள்ளப்பட்டது” ( மோசே 7: 21, 23 ), “உயர்த்தப்பட்டது” (மோசே 7:24 ), “எடுத்துக்கொள்ளப்பட்டது” ( மோசே 7: 27 ), மற்றும் “மறைந்தது” ( மோசே 7:69 ) ஆகிய சொற்றொடர்கள் சீயோனும், ஏனோக்கின் ஜனமும் மறுரூபமாக்கப்பட்டு பரலோகத்துக்குள் எடுத்துக்கொள்ளப்படுவதைக் குறிக்கின்றன. மறுரூபமாக்கப்பட்ட ஜனம் அநித்தியமானவர்களாக “வேதனையையோ மரணத்தையோ அனுபவிக்காதபடி மாற்றப்படுகிறார்கள்” (Guide to the Scriptures, “Translated Beings,” “Zion,” scriptures.ChurchofJesusChrist.org; 3 நேபி 28:4–9, 15–18, 39–40ஐயும் பார்க்கவும்).

மோசே 7:28–69.

தேவன் அவருடைய பிள்ளைகளுக்காக அழுகிறார்.

நமக்கு என்ன நடக்கிறது என்பதால் உணர்ச்சிவசப்படாத தொலைவில் இருப்பவர்போல தேவனை சிலர் பார்க்கிறார்கள். ஆனால் ஏனோக் தேவன் தம் பிள்ளைகளுக்காக அழுத தரிசனத்தைக் கண்டான். மோசே 7: 28–40 நீங்கள் வாசிக்கும்போது, தேவன் அழுத காரணங்களைத் தேடுங்கள். மோசே 7: 41–69 ல் விவரிக்கப்பட்டுள்ள ஏனோக்கின் தரிசனத்தின் எஞ்சிய பகுதியில், தேவன் “இரக்கமுள்ளவர் மற்றும் தயவுள்ளவர்” என்பதற்கு என்ன ஆதாரத்தை நீங்கள் காண்கிறீர்கள்? ( மோசே 7:30 ; உதாரணங்களுக்கு வசனங்கள் 43, 47 , மற்றும் 62 பார்க்கவும்).

மோசே 7:62

கடைசி நாட்களில் தேவன் தம்முடைய தேர்ந்தெடுக்கப்பட்டவர்களைச் சேகரிப்பார்.

கடைசி நாட்களின் நிகழ்வுகளை வசனம் 62 விவரிக்கிறது. இது போன்ற சொற்றொடர்கள் எதைக் குறிக்கின்றன என்பதைக் கருத்தில் கொள்ளவும்: “நீதியை நான் பரலோகத்திலிருந்து அனுப்புவேன்,” “சத்தியத்தை நான் பூமியிலிருந்து அனுப்புவேன்,” “நீதியும் சத்தியமும் பூமியை வெள்ளத்தைப் போல துடைக்கச் செய்யும்.” பிற்காலத்தில் தேவனின் கிரியையைப்பற்றி இந்த சொற்றொடர்கள் உங்களுக்கு என்ன கற்பிக்கின்றன?

குடும்பப் படிப்பு சின்னம்

குடும்ப வேதப் படிப்பு மற்றும் இல்ல மாலைக்கான ஆலோசனைகள்

மோசே 7:18–19.“ஒரே இதயத்தோடு” இருப்பதன் அர்த்தம் என்ன என குடும்ப அங்கத்தினர்கள் கற்பனை செய்ய உதவுவதற்கு, நீங்கள் ஒரு காகித இதயத்தை உருவாக்கி, ஒவ்வொரு குடும்ப அங்கத்தினருக்கும் ஒரு துண்டு போதுமானதாக இருக்கும்படியாக, புதிர் துண்டுகளாக வெட்டவும், குடும்ப அங்கத்தினர்கள் தங்கள் பெயரை தங்கள் துண்டுகளில் எழுதி, பின்னர் ஒருவருக்கொருவர் இணைந்து இதயத்தை ஒன்றாக இணைக்க வேலை செய்யவும். புதிரை முடிக்கும்போது, ஒவ்வொரு குடும்ப அங்கத்தினரையும் குறித்து நீங்கள் விரும்பும் காரியங்களைப்பற்றி பேசலாம்.

மோசே 7:28–31, 35.இந்த வசனங்களிலிருந்து தேவனைப்பற்றி நாம் என்ன கற்றுக் கொள்ளுகிறோம்?

மோசே 7:32.தேவன் ஏன் நமக்கு சுயாதீனம் கொடுத்தார்? தேவனின் கட்டளைகள் நமது சுயாதீனத்தை கட்டுப்படுத்துகின்றன என்று நினைக்கும் ஒருவருக்கு நாம் என்ன சொல்லக்கூடும்? 2 நேபி 2: 25–27 வாசித்தல் இந்த கலந்துரையாடுதலோடு சேர்க்கப்படலாம்.

மோசே 7:59–67.உங்கள் குடும்பம் மோசே 7: 59–67 வாசிக்கும்போது, கர்த்தர் ஏனோக்கிடம் கடைசி நாட்களைப்பற்றி சொல்லும் காரியங்களைக் குறிக்க அல்லது அடையாளமிட முயற்சிக்கவும், உதாரணமாக, தேவன் “தம்முடைய தேர்ந்தெடுக்கப்பட்டவர்களைச் கூட்டிச் சேர்ப்பார்” ( வசனம் 62) மற்றும் “துன்மார்க்கர்களிடையே பெரும் உபத்திரவங்கள்” இருக்கும் ( வசனம் 66 ). கடைசி நாட்களில் துன்மார்க்கம் இருந்தபோதிலும் நாம் எவ்வாறு விசுவாசத்தையும், நம்பிக்கையையும் கொண்டிருக்க முடியும்? இந்த கலந்துரையாடலின் பகுதியாக, மூப்பர் ரொனால்ட் ஏ. ராஸ்பான்டின் இந்த வார்த்தைகளை வாசிப்பதைக் கருத்தில் கொள்ளவும்: “சகோதர சகோதரிகளே, நினைவில் கொள்ளுங்கள். ஆம், நாம் ஆபத்தான காலங்களில் வாழ்கிறோம், ஆனால் நாம் உடன்படிக்கையின் பாதையில் இருக்கும்போது, நாம் பயப்படத் தேவையில்லை. நீங்கள் அவ்வாறு செய்யும்போது, நாம் வாழும் காலங்களாலோ அல்லது உங்களுக்கு வரும் கஷ்டங்களாலோ நீங்கள் தொந்தரவு செய்யப்பட மாட்டீர்கள், என்று நான் உங்களை ஆசீர்வதிக்கிறேன். பரிசுத்த ஸ்தலங்களில் நிற்கவும், அசைக்கப்படாமலும் இருக்க நான் உங்களை ஆசீர்வதிக்கிறேன். அவர் ஜீவிக்கிறார், அவர் நம்மைக் கண்காணிக்கிறார், நம்மைக் கவனிக்கிறார் மற்றும் நமதருகில் நிற்கிறார் என்ற இயேசு கிறிஸ்துவின் வாக்குத்தத்தங்களை நம்புமாறு நான் உங்களை ஆசீர்வதிக்கிறேன்” (“Be Not Troubled,” Liahona, Nov. 2018, 21).

பிள்ளைகளுக்கு போதிக்க கூடுதல் ஆலோசனைகளுக்கு, இந்த வாரக் குறிப்பில், என்னைப் பின்பற்றி வாருங்கள்—ஆரம்ப வகுப்புக்காக பார்க்கவும்.

ஆலோசனையளிக்கப்பட்ட பாடல்: “Love at Home,” Hymns, no. 294.

நமது கற்பித்தலை மேம்படுத்துதல்

கவனிப்பவராயிருங்கள். உங்கள் பிள்ளைகளின் வாழ்க்கையில் என்ன நடந்துகொண்டிருக்கிறது என நீங்கள் கவனம் செலுத்தும்போது, நீங்கள் மிகச் சிறந்த கற்பிக்கும் சந்தர்ப்பங்களைப் பெறுவீர்கள். நாள் முழுவதும் உங்கள் பிள்ளைகளின் விமரிசனங்களும் கேள்விகளும் சாத்தியமான கற்பிக்கும் தருணங்களுக்கு சமிக்ஞை கொடுக்க முடியும். (Teaching in the Savior’s Way, 16 பார்க்கவும்.)

ஏனோக்கும் ஜனங்களும் ஒளியை நோக்கி உயரே பார்க்கும் ஓவியம்

சீயோன் பட்டணம் எடுத்துக்கொள்ளப்படுதல்–டெல் பார்சன்