பழைய ஏற்பாடு 2022
ஜனுவரி 10–16. ஆதியாகமம் 3–4; மோசே 4–5: ஆதாம், ஏவாளின் வீழ்ச்சி


“ஜனுவரி 10–16. ஆதியாகமம் 3–4; மோசே 4–5: ஆதாம் மற்றும் ஏவாளின் வீழ்ச்சி,”என்னைப் பின்பற்றி வாருங்கள்—தனிநபர்களுக்கும் குடும்பங்களுக்கும்: பழைய ஏற்பாடு 2022 (2021)

“ஜனுவரி 10–16. ஆதியாகமம் 3–4; மோசே 4–5,” என்னைப் பின்பற்றி வாருங்கள்— தனிநபர்களுக்கும் குடும்பங்களுக்கும்: 2022

ஆதாமும் ஏவாளும் ஒன்றாக நடத்தல்

ஆதாம் மற்றும் ஏவாள்–டக்ளஸ் எம்.பிரையர்

ஜனுவரி 10–16

ஆதியாகமம் 3–4; மோசே 4–5

ஆதாம், ஏவாளின் வீழ்ச்சி

ஆதியாகமம் 3–4 மற்றும் மோசே 4–5 நீங்கள் படிக்கும்போது, கர்த்தர் உங்களுக்கு என்ன போதிக்க முயற்சிக்கிறார் என்பதைக் கருத்தில் கொள்ளவும். இந்த சத்தியங்களையும் உங்கள் ஆவிக்குரிய எண்ணங்களையும் பதிவுசெய்து, வாரம் முழுவதும் அவற்றைப்பற்றி சிந்திக்கவும்.

உங்கள் எண்ணங்களைப் பதிவுசெய்யவும்

முதலில், ஆதாம், ஏவாளின் வீழ்ச்சியின் கதை ஒரு சோகம் போல் தோன்றலாம். ஆதாமும் ஏவாளும் அழகிய ஏதேன் தோட்டத்திலிருந்து வெளியேற்றப்பட்டனர். வேதனை, துக்கம் மற்றும் மரணம் எப்போதும் இருக்கும் உலகத்தினுள், அவர்கள் தூக்கி எறியப்பட்டனர் (ஆதியாகமம் 3:16–19பார்க்கவும்). அவர்கள் தங்கள் பரலோக பிதாவிடமிருந்து பிரிக்கப்பட்டார்கள். ஆனால் மோசே புத்தகத்தில் தீர்க்கதரிசி ஜோசப் ஸ்மித் மூலம் சத்தியங்கள் மறுஸ்தாபிதம் செய்யப்பட்டதால், ஆதாம், ஏவாளின் கதை உண்மையில் நம்பிக்கையளிக்கும் ஒன்றாகும் என்பதை நாம் அறிகிறோம், மேலும் அவருடைய பிள்ளைகளுக்கான தேவனின் திட்டத்தின் இன்றியமையாத பகுதியாகும்.

ஏதேன் தோட்டம் அழகாக இருந்தது. ஆனால் ஆதாமுக்கும் ஏவாளுக்கும் அழகான சூழலை விட வேறு ஏதோ தேவைப்பட்டது. அவர்களுக்கும், நம் அனைவருக்கும் வளர, ஒரு வாய்ப்பு தேவைப்பட்டது. ஏதேன் தோட்டத்தை விட்டு வெளியேறுவது தேவனிடம் திரும்பி வருவதற்கும், இறுதியில் அவரைப் போல மாறுவதற்கும் தேவையான முதல் படியாகும். அதாவது எதிர்ப்பை எதிர்கொள்வது, தவறுகளைச் செய்வது, மனந்திரும்ப கற்றுக்கொள்வது, இரட்சகரை நம்புவது, அவரின் பாவநிவர்த்தி முன்னேற்றத்தையும் “நம்முடைய மீட்பின் சந்தோஷத்தையும்” சாத்தியப்படுத்துகிறது (மோசே 5:11). ஆகவே, ஆதாம் மற்றும் ஏவாளின் வீழ்ச்சியைப்பற்றி நீங்கள் வாசிக்கும்போது, தோன்றும் சோகத்தில் கவனம் செலுத்தாதீர்கள், ஆனால் சாத்தியங்களில்—ஆதாமும் ஏவாளும் இழந்த பரதீசை அல்ல, ஆனால் அவர்கள் தெரிந்துகொண்ட, நாம் பெற அனுமதிக்கிற மகிமையின் மீது கவனம் செலுத்துங்கள்.

தனிப்பட்ட படிப்பு சின்னம்

தனிப்பட்ட வேதப் படிப்பிற்கான ஆலோசனைகள்

ஆதியாகமம் 3: 1–7 ; மோசே 4 ; 5: 4–12

அவருடைய பிள்ளைகளை மீட்பதற்கான தேவனின் திட்டத்தின் அவசியமான பகுதியாக இந்த வீழ்ச்சி இருந்தது.

ஆதாம், ஏவாளின் வீழ்ச்சி சரீர மற்றும் ஆவிக்குரிய மரணத்தை உலகிற்கு கொண்டு வந்தது. இது துன்பத்தையும், துக்கத்தையும், பாவத்தையும் கொண்டு வந்தது. இவை அனைத்தும் வீழ்ச்சிக்காக மனம் வருந்தும் காரணங்கள் போல் தோன்றுகிறது. ஆனால் வீழ்ச்சி என்பது “பிதாவின் ஒரே பேறானவரின் பலியின் மூலம்” தன் பிள்ளைகளை மீட்கவும் மேன்மைப்படுத்தவும், பரலோக பிதாவின் திட்டத்தின் ஒரு பகுதியாகும், ( மோசே 5:7). ஆதியாகமம் 3: 1–7 ; மோசே 4; 5: 4–12 நீங்கள் வாசிக்கும்போது, வீழ்ச்சியை கிறிஸ்துவின் பாவநிவர்த்தி அதை எவ்வாறு மேற்கொள்கிறது என்பதையும் புரிந்துகொள்ள உதவும் எந்த சத்தியங்களை நீங்கள் காண்கிறீர்கள்? இதைப் போன்ற கேள்விகள் உதவக்கூடும்:

  • ஆதாம், ஏவாளை எவ்வாறு வீழ்ச்சி பாதித்தது? இது என்னை எவ்வாறு பாதிக்கிறது?

  • ஆதாமும் ஏவாளும் ஏன் பலிகளைச் செலுத்தினார்கள்? அந்த பலிகள் எதைக் குறிக்கின்றன? இந்த வசனங்களில் தூதனின் வார்த்தைகளிலிருந்து நான் என்ன கற்றுக்கொள்ள முடியும்?

  • ஆதாமும் ஏவாளும் தங்கள் வீழ்ச்சிக்குப் பிறகு ஏன் “மகிழ்ச்சியடைந்தார்கள்”? இயேசு கிறிஸ்துவின் மூலம் என்னை மீட்பதற்கான தேவனின் திட்டத்தைப்பற்றி இந்த விவரத்திலிருந்து நான் என்ன கற்றுக்கொள்கிறேன்?

மார்மன் புஸ்தகம் மற்றும் பிற பிற்கால வெளிப்பாடுகள் நிமித்தம், வீழ்ச்சி குறித்த தனித்துவமான பார்வையை நாம் பெற்றுள்ளோம். உதாரணமாக, 2 நேபி 2: 15–27ல் ஆதாம், ஏவாளைப்பற்றி தீர்க்கதரிசி லேகி தனது குடும்பத்தினருக்குக் கற்பித்ததைக் கருத்தில் கொள்ளவும். ஏதேன் தோட்டத்தில் என்ன நடந்தது என்பதை லேகியின் போதனைகள் எவ்வாறு தெளிவுபடுத்துகின்றன, அது ஏன் முக்கியமானது என்பதைப் புரிந்துகொள்ள நமக்கு உதவுகிறது?

1 கொரிந்தியர் 15:20–22; மோசியா 3:19; ஆல்மா 12:21–37; கோட்பாடும் உடன்படிக்கைகளும் 29:39–43; விசுவாசப்பிரமாணங்கள் 1:3; Dallin H. Oaks, “The Great Plan,” Liahona, May 2020, 93–96; Dallin H. Oaks, “Opposition in All Things,” Liahona, May 2016, 114–17; Jeffrey R. Holland, “Where Justice, Love, and Mercy Meet,” Liahona, May 2015, 104–6 ஐயும் பார்க்கவும்.

ஏவாள் கனியை வைத்திருத்தல்

ஏதேனை விட்டுச் செல்லுதல்–ஆன்னி ஹென்றி நாடர்

ஆதியாகமம் 3:16 ; மோசே 4:22

ஆதாம் ஏவாளை “ஆண்டு கொள்ளுதல்” என்பதன் அர்த்தம் என்ன?

இந்த வேத பாகம் சில சமயங்களில் ஒரு கணவன் தன் மனைவியை இரக்கமின்றி நடத்துவதில் நியாயப்படுத்தப்படுகிறான் என தவறாக புரிந்து கொள்ளப்படுகிறது. ஒரு கணவன் நீதியில் வீட்டுக்கு தலைமை தாங்கினால், அவன் தன் மனைவியை சம பங்குதாரராக பார்க்க வேண்டும் என நமது நாளில் கர்த்தரின் தீர்க்கதரிசிகள் போதித்திருக்கின்றனர் (“குடும்பம்: உலகத்துக்கு ஓர் பிரகடனம்” [ChurchofJesusChrist.org]). ஒரு நேர்மையான கணவர் “ஊழியம் செய்ய நாடுவார், அவர் பிழையை ஒப்புக் கொண்டு மன்னிப்பை நாடுவார்; அவர் விரைவாக புகழ்வார்; அவர் குடும்ப அங்கத்தினர்களின் விருப்பங்களை கருத்தில் கொள்வார்; அவர் தனது குடும்பத்தின் ‘வாழ்க்கை மற்றும் பாதுகாப்பின் தேவைகளை’ வழங்குவதற்கான பெரும் பொறுப்பை உணருவார்; அவர் தனது மனைவியை மிகுந்த மரியாதையுடனும் நடத்துவார் என மூப்பர் டேல் ஜி.ரென்லன்டும், சகோதரி ரூத் லிபர்ட் ரென்லன்டும், விளக்கினர். . … அவர் தனது குடும்பத்தை ஆசீர்வதிப்பார்” (The Melchizedek Priesthood: Understanding the Doctrine, Living the Principles [2018], 23).

மோசே 5: 4–9, 16–26

என் பலிகளை நான் மனமுவந்து மற்றும் கீழ்ப்படிதலான இருதயத்துடன் கொடுத்தால் தேவன் ஏற்றுக்கொள்வார்.

மிருக ஜீவன்களின் பலி கிறிஸ்துவின் பாவநிவாரண பலியின் அடையாளமாக இருப்பதை ஆதாமும் ஏவாளும் அறிந்தார்கள், மேலும் அவர்கள் இதை “தங்கள் குமாரர்களுக்கும் குமாரத்திகளுக்கும் தெரியப்படுத்தினார்கள்”(மோசே 5:12). நீங்கள் மோசே 5: 4–9, 16–26 படிக்கும்போது, இந்த பலிகளைப்பற்றிய அவர்களின் இரண்டு மகன்களான காயீன் மற்றும் ஆபேலின் மாறுபட்ட மனோபாவங்களைக் கவனியுங்கள். ஆபேலின் பலியை கர்த்தர் ஏன் ஏற்றுக்கொண்டார், ஆனால் காயீனின் பலியை ஏன் ஏற்றுக்கொள்ளவில்லை?

கர்த்தர் உங்களிடம் என்ன வகையான பலிகளைக் கேட்கிறார்? மோசே 5: 4–9, 16–26 உள்ள எதாவது அந்த பலிகளைப்பற்றிய நீங்கள் நினைக்கும் விதத்தை மாற்றுகிறதா?

சங்கீதம் 4: 5; 2 கொரிந்தியர் 9: 7; ஓம்னி 1:26 ; 3 நேபி 9: 19–20 ; மரோனி 7: 6–11 ; கோட்பாடும் உடன்படிக்கைகளும் 97: 8 ; Jeffrey R. Holland, “Behold the Lamb of God,” Liahona, May 2019, 44–46.

குடும்பப் படிப்பு சின்னம்

குடும்ப வேதப் படிப்பு மற்றும் இல்ல மாலைக்கான ஆலோசனைகள்

ஆதியாகமம் 3; மோசே 4 .ஆதாம் மற்றும் ஏவாளின் வீழ்ச்சியை உங்கள் குடும்பத்தினர் நன்கு புரிந்துகொள்ள உதவ நீங்கள் என்ன செய்ய முடியும்? “ஆதாம் ஏவாள்” (பழைய ஏற்பாடு கதைகளிலிருந்து) படங்களை நீங்கள் பிரதி எடுத்து அவற்றை வெட்டி எடுக்கலாம். ஆதாம் மற்றும் ஏவாளின் அனுபவங்களைப்பற்றி விவாதிக்கும்போது படங்களை ஒழுங்காக வைக்க நீங்கள் இணைந்து வேலை செய்யலாம். பரலோக பிதாவின் இரட்சிப்பின் திட்டத்தில் வீழ்ச்சி ஏன் தேவைப்பட்டது? “வீழ்ச்சி” ( ChurchofJesusChrist.org ) காணொலியைப் பார்ப்பது இந்த கேள்விக்கு பதிலளிக்க உதவும்.

மோசே 4:1–4.இந்த வசனங்களிலிருந்து இயேசு கிறிஸ்துவை மற்றும் சாத்தானைப்பற்றி நாம் என்ன கற்றுக் கொள்ளுகிறோம்? அதை அழிக்க சாத்தான் விரும்புகிற திட்டத்திற்கு சுயாதீனம் ஏன் முக்கியமாயிருக்கிறது?

மோசே 5:5–9.இரட்சகரைப்பற்றி சிந்திக்க உதவ ஆதாமுக்கும் ஏவாளுக்கும் என்ன செய்ய வேண்டுமென தேவன் கட்டளையிட்டார்? இரட்சகரைப்பற்றி சிந்திக்க நமக்கு உதவ தேவன் நமக்கு என்ன கொடுத்திருக்கிறார்?

மோசே 5:16–34.நமது “சகோதரனின் காவலாளி” என்பதன் அர்த்தம் என்ன? ஒரு குடும்பமாக ஒருவருக்கொருவரை எவ்வாறு சிறப்பாக கவனிக்க முடியும்?

பிள்ளைகளுக்கு போதிக்க கூடுதல் ஆலோசனைகளுக்கு, இந்த வாரக் குறிப்பில்,என்னைப் பின்பற்றி வாருங்கள்—ஆரம்ப வகுப்புக்காகவில் பார்க்கவும்.

ஆலோசனையளிக்கப்பட்ட பாடல்: “Choose the Right Way,” Children’s Songbook, 160–61.

தனிப்பட்ட படிப்பை மேம்படுத்துதல்

வேதப் படிப்பு உதவிகளைப் பயன்படுத்தவும். நீங்கள் வேதங்களைப் படிக்கும்போது, அடிக்குறிப்புகள், Topical Guide, Bible Dictionary, Guide to the Scriptures, மற்றும் பிற படிப்பு உதவிகளை கூடுதல் உள்ளுணர்வு பெற பயன்படுத்தவும்.

ஆதாம் ஏவாளை தூதன் சந்தித்தல்

மாதிரி–வால்டர் ரானே