பழைய ஏற்பாடு 2022
ஜனுவரி 17–23. ஆதியாகமம் 5; மோசே 6: “இந்த காரியங்களை உன் பிள்ளைகளுக்கு சுதந்தரமாக போதி”


“ஜனுவரி 17–23. ஆதியாகமம் 5; மோசே 6: ‘இந்த காரியங்களை உன் பிள்ளைகளுக்கு சுதந்தரமாக போதி,’”என்னைப் பின்பற்றி வாருங்கள்—தனிநபர்களுக்கும் குடும்பங்களுக்கும்: பழைய ஏற்பாடு 2022 (2021)

“ஜனுவரி 17–23. ஆதியாகமம் 5; மோசே 6:“ என்னைப் பின்பற்றி வாருங்கள்—தனிநபர்களுக்கும் குடும்பங்களுக்கும்: 2022

படம்
ஏதேன் தோட்டத்துக்கு வெளியே ஆதாமும் ஏவாளும்

பரதீசை விட சிறந்தது–கென்டல் ரே ஜான்சன்

ஜனுவரி 17–23

ஆதியாகமம் 5; மோசே 6

“இந்த காரியங்களை உன் பிள்ளைகளுக்கு சுதந்தரமாக போதி”

ஆதியாகமம் 5 மற்றும் மோசே 6 நீங்கள் வாசித்து சிந்திக்குமபோது, நீங்கள் பெறுகிற ஆவிக்குரிய உணர்வுகளை பதிவு செய்யவும். உங்களுக்கும் உங்கள் குடும்பத்துக்கும் மதிப்புடைய என்ன செய்திகளைக் காண்கிறீர்கள்?

உங்கள் எண்ணங்களைப் பதிவுசெய்யவும்

ஆதியாகமம் 5}ன் அதிகமானது ஆதாமுக்கும் ஏவாளுக்கும் நோவாவுக்கும் இடையிலான தலைமுறைகளின் பட்டியல். நாம் நிறைய பெயர்களை வாசிக்கிறோம், ஆனால் அவற்றைப்பற்றி நாம் அதிகம் அறிவதில்லை. பின்னர் ஆதாமிலிருந்து ஆறாவது தலைமுறையான ஏனோக்கைப்பற்றி நாம் வாசிக்கிறோம், அவர் இந்த விளக்கப்படாத, வரியுடன் விவரிக்கப்படுகிறான்: “ஏனோக்கு தேவனோடு சஞ்சரித்துக் கொண்டிருக்கையில் காணாமற் போனான், தேவன் அவனை எடுத்துக் கொண்டார்.”( ஆதியாகமம் 5:24 ). நிச்சயமாக அதன் பின்னால் ஒரு கதை இருக்கிறது. ஆனால் அதிக விளக்கம் இல்லாமல், தலைமுறைகளின் பட்டியல் மீண்டும் தொடங்குகிறது.

நன்றி சொல்லக்கூடிய விதமாக, மோசே 6 ஏனோக்கின் கதையின் விளக்கங்களை வெளிப்படுத்துகிறது, இது ஒரு கதை. ஏனோக்கின் மனத்தாழ்மை, அவனது பாதுகாப்பின்மை, தேவன் அவனிடம் கண்ட ஆற்றல் மற்றும் தேவனின் தீர்க்கதரிசியாக அவன் செய்த மகத்தான பணிகளைப்பற்றி நாம் கற்கிறோம். அது தலைமுறைகளாக முன்னேறியபோது, ஆதாம் மற்றும் ஏவாளின் குடும்பத்தின் தெளிவான படத்தையும் பெறுகிறோம். சாத்தானின் “பெரிய ஆளுகையைப்பற்றியும்” மட்டுமல்லாமல், “தேவனின் வழிகளை” பிள்ளைகளுக்கு கற்பித்த பெற்றோர்களையும், “பேசிய மற்றும் தீர்க்கதரிசனம் கூறிய” நீதியின் பிரசங்கிகளையும்பற்றி“ நாம் வாசிக்கிறோம். ( மோசே 6:15, 21, 23 ). இந்த பெற்றோரும் பிரசங்கிகளும் கற்பித்த கோட்பாட்டைப்பற்றி நாம் கற்றுக்கொள்வது மிகவும் அருமையானது: நம்பிக்கை, மனந்திரும்புதல், ஞானஸ்நானம் மற்றும் பரிசுத்த ஆவியானவரைப் பெறுதல் (மோசே 6: 50–52 பார்க்கவும்). அந்தக் கோட்பாடு, அதனுடன் கூடவரும் ஆசாரியத்துவத்தைப் போலவே, “அது ஆரம்பத்தில் இருந்தது, உலகத்தின் முடிவிலும் இருக்கும்” ( மோசே 6:7).

படம்
தனிப்பட்ட படிப்பு சின்னம்

தனிப்பட்ட வேதப் படிப்பிற்கான ஆலோசனைகள்

மோசே 6:26–36

தீர்க்கதரிசி ஒரு ஞானதிருஷ்டிக்காரர்.

நீங்கள் மோசே 6: 26–36 படிக்கும்போது, கண்கள், இருள் மற்றும் பார்ப்பதைப்பற்றி நீங்கள் என்ன கற்றுக்கொள்கிறீர்கள்? ஏனோக்கின் காலத்தில், யாரால் “தொலைவில் பார்க்க” முடியவில்லை? இந்த ஜனங்கள் ஏன் சத்தியத்தைக் காண முடியவில்லை? ஏனோக்கால் என்ன பார்க்க முடிந்தது? தற்கால தீர்க்கதரிசிகள் ஞானதிருஷ்டிக்காரர்கள் என உங்கள் நம்பிக்கையை எது கட்டியெழுப்பியது?( வசனம் 36; Guide to the Scriptures, “Seer,” scriptures.ChurchofJesusChrist.org பார்க்கவும்). .

மோசே 6:26–47

நம்முடைய போதாமைகளை மீறி தம்முடைய பணியைச் செய்ய தேவன் நம்மை அழைக்கிறார்.

கர்த்தர் நாம் செய்யுமாறு அழைத்ததைக் கண்டு அழுத்தப்படுவதாக உணர்வது வழக்கமற்றதல்ல. கர்த்தர் அவனை தீர்க்கதரிசியாக அழைத்தபோது ஏனோக்கு கூட அப்படி உணர்ந்தான். நீங்கள் மோசே 6: 26–36 வாசிக்கும்போது, ஏனோக் ஏன் அழுத்தப்பட்டதாக உணர்ந்தான் என்பதையும், அவனுக்கு தைரியம் கொடுக்க கர்த்தர் சொன்னதையும் தேடுங்கள். வசனங்கள் 37–47ல், கர்த்தர் ஏனோக்கை ஆதரித்த வழிகளையும் அவருடைய பணியைச் செய்ய அவனுக்கு வல்லமை அளித்ததையும் தேடுங்கள்( மோசே 7:13. ஏனோக்கின் அனுபவத்தை போதாதவன் என உணர்ந்த மோசே போன்ற பிற தீர்க்கதரிசிகளின் அனுபவத்துடன் ஒப்பிடலாம் ( யாத்திராகமம் 4: 10–16 ), எரேமியா ( எரேமியா 1: 4-10 பார்க்கவும்), நேபி ( 2 நேபி 33: 1–4 பார்க்கவும்), மற்றும் மரோனி (ஏத்தேர் 12: 23–29 பார்க்கவும்). அவர் நீங்கள் செய்யுமாறு கொடுத்த வேலையைப்பற்றி இந்த வசனங்களிலிருந்து நீங்கள் கற்றுக்கொள்ள தேவன் விரும்புகிறார் என்பதைப்பற்றி நீங்கள் என்ன உணர்கிறீர்கள்?

யாக்கோபு 4:6–8ஐயும் பார்க்கவும்.

மோசே 6:48–68.

தேவனின் இரட்சிப்பின் திட்டத்திற்கு கிறிஸ்துவின் கோட்பாடு மையமானது.

மோசேயின் புத்தகம் நம்மிடம் இருப்பதால், ஆரம்பத்தில் இருந்தே மன்னிப்பையும் மீட்பையும் எப்படிக் கண்டுபிடிப்பது என்பதை தேவன் தம் பிள்ளைகளுக்குக் கற்பித்திருக்கிறார் என்பதை நாம் அறிகிறோம். வேதங்களில், இந்த போதனைகள் சில சமயங்களில் கிறிஸ்துவின் கோட்பாடு என்று அழைக்கப்படுகின்றன ( 2 நேபி 31: 13–21 பார்க்கவும்). மோசே 6:48–68, படிக்கும்போது நாம் மீட்கப்படும்படிக்கு நாம் எதை அறிய வேண்டும் மற்றும் செய்ய வேண்டும் என தேடவும். ஏனோக் கற்பித்தவற்றின் சுருக்கத்தை உங்கள் சொந்தமாக எழுதுவது உங்களுக்கு உதவிகரமானதாக நீங்கள் காணக்கூடும். ஆதாம் மற்றும் ஏவாளின் நாட்களிலிருந்து இந்த உண்மைகள் கற்பிக்கப்பட்டுள்ளன என்பதை அறிவது ஏன் முக்கியம்? இந்த போதனைகளைப் படித்ததன் விளைவாக செய்ய தூண்டப்படுகிற எதை நீங்கள் உணருகிறீர்கள்?

மோசே 6:51–62

“உங்கள் பிள்ளைகளுக்கு இவற்றை சுதந்தரமாக போதியுங்கள்.”

இயேசு கிறிஸ்துவின் சுவிசேஷத்தின் அருமையான சத்தியங்களை ஆதாமும் ஏவாளும் கற்பித்தார்கள். ஆனால் மோசே 6: 27–28ல் உள்ள கர்த்தரின் வார்த்தைகள் ஏனோக்கிற்கு முந்தைய தலைமுறைகளில், பலர் அந்த சத்தியங்கள்படி வாழவில்லை என்பதை தெளிவுபடுத்துகின்றன. ஆதாமுக்கு முதலில் கொடுக்கப்பட்ட கட்டளையாகிய: “இவற்றை உங்கள் பிள்ளைகளுக்கு சுதந்தரமாக போதியுங்கள்” எனும் இழந்த சத்தியங்களை மீட்டெடுக்க கர்த்தர் விரும்பினார்-(மோசே 6:58). மோசே 6: 51–62 வாசிக்கும்போது, இயேசு கிறிஸ்துவைப்பற்றி நீங்கள் என்ன கற்றுக்கொள்கிறீர்கள்? வளர்ந்து வரும் தலைமுறைக்கு இது மிகவும் மதிப்புமிக்கதாக இருக்கும் என்று நீங்கள் விசேஷித்த மதிப்புடைய எதைக் காண்கிறீர்கள்? இந்த சத்தியங்களை வருங்கால சந்ததியினருக்கு கடத்த உதவ நீங்கள் என்ன செய்ய முடியும்?

படம்
குடும்பத்தினர் வேதங்களைப் படித்தல்

பெற்றோர் தங்கள் குழந்தைகளுக்கு சுவிசேஷத்தை கற்பிக்க வேண்டும்.

படம்
குடும்பப் படிப்பு சின்னம்

குடும்ப வேதப் படிப்பு மற்றும் இல்ல மாலைக்கான ஆலோசனைகள்

ஆதியாகமம் 5; மோசே 6: 5–25, 46 .ஆதாம் மற்றும் ஏவாளின் குடும்பத்தினர் வைத்திருந்த “ஞாபகப் புத்தகத்தைப்பற்றிப்” படிப்பது உங்கள் சொந்த ஞாபகப் புத்தகத்தை உருவாக்க உங்கள் குடும்பத்தை ஊக்குவிக்கும். நீங்கள் சேர்க்க விரும்புவதை ஒரு குடும்பமாக விவாதிக்கவும். உங்கள் குடும்ப வரலாற்றிலிருந்து புகைப்படங்கள், கதைகள் அல்லது ஆவணங்கள் உங்களிடம் இருக்கலாம். இப்போது உங்கள் குடும்பத்தில் நடக்கும் விஷயங்களைச் சேர்க்க நீங்கள் தேர்ந்தெடுக்கக்கூடும். எதிர்கால தலைமுறையினர் எதை மதிப்புள்ளவைகளாகக் காண்பார்கள்? “உணர்த்துதலின் ஆவியால்” (மோசே 6:5) மற்றும் “தேவனின் விரலால் கொடுக்கப்பட்ட மாதிரி” (மோசே 6:46) எனும் சொற்றொடர்கள் உங்கள் முயற்சிகளுக்கு வழிகாட்டும் எனவும் நீங்கள் கலந்துரையாடலாம். FamilySearch.orgல் உங்கள் ஞாபகப் புத்தகத்திலிருந்து தகவல்களை பாதுகாப்பதைக் கருத்தில் கொள்ளவும்.

மோசே 6:53–62. மோசே 6:53 ல் காணப்படும் ஆதாமின் கேள்விக்கு நாம் எவ்வாறு பதிலளிப்போம்? வசனங்கள் 57–62ல் என்ன பதில்களை நாம் காண்கிறோம்?

மோசே 6:59.“பரலோக ராஜ்யத்தில் மீண்டும் பிறத்தல்” என்பதன் அர்த்தம் என்ன? நம் வாழ்நாள் முழுவதும் மீண்டும் பிறக்க நாம் என்ன செய்ய முடியும்? உதவிக்கு ஆல்மா 5:7–14, 26; Guide to the Scriptures, “Born Again, Born of Godscriptures.ChurchofJesusChrist.org; David A. Bednar, “Always Retain a Remission of Your Sins” (Liahona, May 2016, 59–62) பார்க்கவும்.

மோசே 6:61.இந்த வசனத்திலிருந்து பரிசுத்த ஆவியானவரைப்பற்றி நாம் என்ன கற்றுக்கொள்கிறோம்?

மோசே 6:63.“[கிறிஸ்துவை] சாட்சி கொடுக்கும் சில காரியங்கள் யாவை? ( 2 நேபி 11: 4 ஐயும் பார்க்கவும்). இயேசு கிறிஸ்துவைப்பற்றி அறிய உதவும் “மேலே வானத்தில்” அல்லது “பூமியில்” காணும் ஒன்றைப் பகிர்ந்து கொள்ள குடும்ப அங்கத்தினர்களை அழைப்பதைக் கருத்தில் கொள்ளவும். உதாரணமாக, மரங்கள், பாறைகள் அல்லது சூரியன் இரட்சகரை எவ்வாறு நினைவூட்டுகின்றன? “ஜீவ தண்ணீர்” மற்றும் “ஜீவ அப்பம்” என்ற தலைப்புகள் அவரைப்பற்றி நமக்கு என்ன கற்பிக்கின்றன?? (யோவான் 4:10–14; 6:35).

பிள்ளைகளுக்கு போதிக்க கூடுதல் ஆலோசனைகளுக்கு, இந்த வாரக் குறிப்பில், என்னைப் பின்பற்றி வாருங்கள்—ஆரம்ப வகுப்புக்காகவில் பார்க்கவும்.

ஆலோசனையளிக்கப்பட்ட பாடல்: “I’ll Go Where You Want Me to Go,” Hymns, no. 270.

தனிப்பட்ட படிப்பை மேம்படுத்துதல்

அடையாளங்களுக்காக தேடவும். வேதங்களில், பொருள்கள் அல்லது நிகழ்வுகள் பெரும்பாலும் ஆன்மீக சத்தியங்களை குறிக்கலாம் அல்லது அடையாளப்படுத்தலாம். இந்த அடையாளங்கள் போதிக்கப்பட்டிருக்கிற கோட்பாடைப்பற்றிய உங்களுடைய புரிந்துகொள்ளுதலை வளமாக்கமுடியும். உதாரணமாக, மோசே 6:35ல் உள்ள கண்கள் மற்றும் களிமண் அடையாளங்களிலிருந்து நீங்கள் என்ன கற்றுக்கொள்கிறீர்கள்?

படம்
பிள்ளைகளுடன் ஆதாமும் ஏவாளும்

ஆதாம் ஏவாள் தங்கள் பிள்ளைகளுக்கு கற்பித்தல் –டெல் பார்சன்

அச்சிடவும்