பழைய ஏற்பாடு 2022
ஜனுவரி 3–9. ஆதியாகமம் 1–2; மோசே 2–3; ஆபிரகாம் 4–5: “ஆதியிலே தேவன் வானத்தையும் பூமியையும் சிருஷ்டித்தார்”


“ஜனுவரி 3–9. ஆதியாகமம் 1–2; மோசே 2–3; ஆபிரகாம் 4–5: “ஆதியிலே தேவன் வானத்தையும் பூமியையும் சிருஷ்டித்தார்”என்னைப் பின்பற்றி வாருங்கள்—தனிநபர்களுக்கும் குடும்பங்களுக்கும்: பழைய ஏற்பாடு 2022(2021)

“ஜனுவரி 3–9. ஆதியாகமம் 1–2; மோசே 2–3; ஆபிரகாம் 4–5,” என்னைப் பின்பற்றி வாருங்கள்— தனிநபர்களுக்கும் குடும்பங்களுக்கும்: 2022

பூமி மற்றும் சந்திரனின் தோற்றம்

ஜனுவரி 3–9

ஆதியாகமம் 1–2; மோசே 2–3; ஆபிரகாம் 4–5

“ஆதியிலே தேவன் வானத்தையும் பூமியையும் சிருஷ்டித்தார்”

சிருஷ்டிப்பைப்பற்றி நீங்கள் முன்பே வாசித்திருந்தாலும், வேதங்களிலிருந்து கற்றுக்கொள்ள எப்போதும் அதிகம் இருக்கிறது. புதிய புரிந்துகொள்ளுதலைக் கண்டறிய உங்களுக்கு உதவ, பரிசுத்த ஆவியின் வழிகாட்டுதலுக்காக ஜெபியுங்கள்.

உங்கள் எண்ணங்களைப் பதிவுசெய்யவும்

நம்மைச் சுற்றியுள்ள உலகம் மிகவும் அழகாகவும் மகத்தானதாகவும் இருப்பதால், பூமியை “ஒழுங்கின்மையாயும் வெறுமையாயும்” “வெற்றிடமாயும் பாழடைந்ததாயும்” இருந்தது என கற்பனை செய்வது கடினம் (ஆதியாகமம் 1: 2; ஆபிரகாம் 4:2). சிருஷ்டிப்பின் கதை நமக்குக் கற்பிக்கும் ஒரு விஷயம் என்னவென்றால், ஒழுங்கமைக்கப்படாத ஒன்றிலிருந்து தேவனால் மகத்தான ஒன்றை உருவாக்க முடியும். வாழ்க்கை குழப்பமானதாக தோன்றும்போது நினைவில் கொள்ள அது உதவிகரமாக இருக்கும். பரலோக பிதாவும், இயேசு கிறிஸ்துவும் சிருஷ்டிகர்கள், நம்முடன் அவர்களுடைய சிருஷ்டிப்புப் பணி முடிவடையவில்லை. அவர்கள் நம் வாழ்வின் இருண்ட தருணங்களில் ஒளியைப் பிரகாசிக்கச் செய்ய முடியும். வாழ்க்கையின் புயல் வீசும் கடலின் மத்தியில் அவர்கள் திடமான நிலத்தை உருவாக்க முடியும். அவர்கள் பஞ்ச பூதங்களுக்கு கட்டளையிட முடியும், மேலும் பஞ்ச பூதங்களைப் போலவே அவர்களின் வார்த்தைக்கு நாம் கீழ்ப்படிந்தால், அவர்கள் நாம் இருக்கவேண்டிய விதமான அழகான சிருஷ்டிகளாக நம்மை மாற்ற முடியும். அது, அவரைப்போல, அவருடைய சாயலில் சிருஷ்டிக்கப்படுவதன் ஒரு பகுதியாகும்( ஆதியாகமம் 1:26 பார்க்கவும்). அவரைப் போல ஆகும் ஆற்றல் நமக்கு உள்ளது: மேன்மைப்படுத்தப்பட்ட, மகிமைப்படுத்தப்பட்ட, சிலஸ்டியல் மனிதர்களாக.

ஆதியாகமம் புத்தகத்தின் மேலோட்டமான பார்வைக்கு, “Genesis” in the Bible Dictionary பார்க்கவும்.

தனிப்பட்ட படிப்பு சின்னம்

தனிப்பட்ட வேதப் படிப்பிற்கான ஆலோசனைகள்

ஆதியாகமம் 1:1–25; மோசே 2:1–25; ஆபிரகாம் 4:1–25

பரலோக பிதாவின் வழிகாட்டுதலின் கீழ், இயேசு கிறிஸ்து பூமியை சிருஷ்டித்தார்.

மூப்பர் டி. டாட் கிறிஸ்டாபர்சன் சொன்னார், “சிருஷ்டிப்பு செயல்முறையின் விளக்கங்கள் எதுவாக இருந்தாலும், அது விபத்து அல்ல, ஆனால் அது பிதாவாகிய தேவனால் வழிநடத்தப்பட்டு, இயேசு கிறிஸ்துவால் செயல்படுத்தப்பட்டது என்பதை நாம் அறிவோம்” (“Why Marriage, Why Family,” Liahona, May 2015, 51). உலகம் எவ்வாறு சிருஷ்டிக்கப்பட்டது என்பதைப்பற்றி நமக்குத் தெரியாத நிறைய விஷயங்கள் இருந்தாலும், ஆதியாகமம் 1: 1–25 ; மோசே 2: 1–25 ; மற்றும் ஆபிரகாம் 4: 1–25 ல் தேவன் வெளிப்படுத்தியவற்றிலிருந்து சிருஷ்டிப்பைப்பற்றி நீங்கள் என்ன கற்றுக்கொள்கிறீர்கள் என்று சிந்தியுங்கள். அதைப் போன்றிருக்கிற இந்த விவரங்களில் நீங்கள் என்ன கவனிக்கிறீர்கள்? வித்தியாசமான எதை நீங்கள் கவனிக்கிறீர்கள்? சிருஷ்டிப்பைப்பற்றி நீங்கள் வாசிக்கும்போது, பரலோக பிதா மற்றும் இயேசு கிறிஸ்துவைப்பற்றி நீங்கள் என்ன சிந்தனை பெற்றிருக்கிறீர்கள்?

கோட்பாடும் உடன்படிக்கைகளும் 101:32–34ஐயும் பார்க்கவும்.

சிருஷ்டிப்பின் வெவ்வேறு நிலைகளை சித்தரிக்கும் போர்வை

சிருஷ்டிப்பு–ஜோன் ஹிப்பர்ட் டச்சி

ஆதியாகமம் 1:27–28; 2:18–25; மோசே 3:18, 21–25; ஆபிரகாம் 5:14–19

ஒரு ஆணுக்கும் பெண்ணுக்குமிடையிலான திருமணம் தேவனால் நியமிக்கப்பட்டது.

“ஆதாமும் ஏவாளும் நித்திய ஆசாரியத்துவத்தின் வல்லமையால் இக்காலத்துக்கும், நித்திய காலத்துக்கும் ஒன்றாக இணைக்கப்பட்டனர்” (ரசல் எம். நெல்சன், “Lessons from Eve,” Ensign, Nov. 1987, 87). அறிந்து கொள்ள இந்த உண்மை ஏன் முக்கியமானதாயிருக்கிறது? ஆதியாகமம் 1: 27–28 ; 2: 18–25 ; மோசே 3:18, 21–25 ; மற்றும் ஆபிரகாம் 5: 14-19 நீங்கள் வாசிக்கும்போது இதை சிந்தியுங்கள். தேவனின் திட்டத்திற்குள் திருமணத்தைப்பற்றி மேலும் அறிய நீங்கள் விரும்பினால், கீழே பட்டியலிடப்பட்டுள்ள ஆதாரங்களை வாசித்து சிந்தியுங்கள். இந்த ஆதாரங்கள் உங்கள் திருமணத்தை மேம்படுத்த அல்லது எதிர்காலத்தில் திருமணத்திற்கு ஆயத்தப்பட என்ன செய்யத் தூண்டுகின்றன?

மத்தேயு 19:4–6; 1 கொரிந்தியர் 11:11; Linda K. Burton, “We’ll Ascend Together,” Liahona, May 2015, 29–32; “குடும்பம்: உலகிற்கு ஓர் பிரகடனம்,” ChurchofJesusChrist.org ஐயும் பார்க்கவும்.

ஆதியாகமம் 2:2–3; மோசே 3:2–3; ஆபிரகாம் 5:2–3

தேவன் ஓய்வுநாளை ஆசீர்வதித்து பரிசுத்தப்படுத்தினார்.

தேவன் ஓய்வுநாளை பரிசுத்தமாக்கி, அதைப் பரிசுத்தமாக ஆசரிக்கும்படி அவர் நமக்கு சொல்கிறார். மூப்பர் டேவிட் ஏ. பெட்னார் போதித்தார், “ஓய்வுநாள் தேவனின் நேரம், பரிசுத்த நேரம் குறிப்பாக அவரை ஆராதிப்பதற்கும் அவருடைய பெரும் மற்றும் அருமையான வாக்குத்தத்தங்களைப் பெறுவதற்கும் நினைவில் கொள்வதற்கும் ஒதுக்கப்பட்டுள்ளது”(“Exceeding Great and Precious Promises,” Liahona, Nov. 2017, 92). நீங்கள் ஏன் ஓய்வுநாளைக் கனம் பண்ண தெரிந்துகொண்டீர்கள் என ஒருவருக்கு விளக்க, இந்த வாசகத்தையும், ஆதியாகமம் 2:2–3; மோசே 3:2–3; அல்லது ஆபிரகாம் 5:2–3ஐயும், நீங்கள் எவ்வாறு பயன்படுத்த முடியும்? அவரது நாளை ஆசரித்ததற்காக கர்த்தர் உங்களை எவ்வாறு ஆசீர்வதித்திருக்கிறார்?

ஏசாயா 58:13–14; கோட்பாடும் உடன்படிக்கைகளும் 59:9–13; “The Sabbath Is a Delight” (video), ChurchofJesusChrist.org ஐயும் பார்க்கவும்.

family study icon

குடும்ப வேதப் படிப்பு மற்றும் இல்ல மாலைக்கான ஆலோசனைகள்

ஆதியாகமம் 1:1–25; மோசே 2:1–25; ஆபிரகாம் 4:1–25.சிருஷ்டிப்பைப்பற்றி கற்பதை உங்கள் குடும்பத்தினருக்கு இரசிக்கத்தக்கதாக எவ்வாறு ஆக்கலாம்? சிருஷ்டிப்புக் கதையின் ஒவ்வொரு காலகட்டத்திலும் நட்சத்திரங்கள், மரங்கள் அல்லது விலங்குகள் போன்ற பல்வேறு வகையான விஷயங்களைத் தேடுவதற்கு உங்கள் குடும்பத்தை வெளியே கூட்டிச் செல்லலாம். ஒவ்வொரு காலகட்டத்திலும் உருவாக்கப்பட்ட காரியங்களின் படங்களையும், நீங்கள் காண்பிக்கலாம் மற்றும் சிருஷ்ப்பின் விவரங்களில் ஒன்றை சேர்ந்து படித்த பிறகு படங்களை ஒழுங்குபடுத்தி வைக்க குடும்ப அங்கத்தினர்களை அழைக்கலாம். பரலோக பிதா மற்றும் இயேசு கிறிஸ்துவைப்பற்றி இந்த சிருஷ்டிப்புகள் நமக்கு என்ன போதிக்கின்றன?

ஆதியாகமம் 1 ; மோசே 2 ; ஆபிரகாம் 4 .சிருஷ்டிப்பின் கதையை அணுகுவதற்கான ஒரு வழி, ஆதியாகமம் 1 அல்லது மோசே 2 ல் எத்தனை முறை தேவன் தான் சிருஷ்டித்தவற்றை “நல்லது” என அழைக்கிறார் என்பதைக் கண்டுபிடிக்க உங்கள் குடும்பத்தினரை அழைப்பதாகும். நாம் உட்பட, தேவனின் சிருஷ்டிப்புகளை நாம் எவ்வாறு நடத்த வேண்டும் என்பதைப்பற்றி இது என்ன ஆலோசனையளிக்கிறது? ஆபிரகாம் 4ல் இந்த நிகழ்வுகள் சொல்லப்பட்ட விதத்திலிருந்து நாம் என்ன கற்கிறோம்?

ஆதியாகமம் 1: 26–27 ; மோசே 2: 26–27 ; ஆபிரகாம் 4: 26–27 .நாம் தேவனின் சாயலில் சிருஷ்டிக்கப்பட்டோம் என்பதை அறிவது ஏன் முக்கியமானதாகும்? நம்மைப்பற்றியும், மற்றவர்களைப்பற்றியும், தேவனைப்பற்றியும் நாம் உணரும் விதத்தை இது எவ்வாறு பாதிக்கிறது?

உங்களுக்கு சிறிய பிள்ளைகள் இருந்தால், மோசே 2:27 நீங்கள் ஒன்றாகப் படிக்க விரும்பலாம் மற்றும் ஒரு எளிய விளையாட்டை விளையாடலாம்: படம் 90 Gospel Art Book (2009), போன்ற பரலோக பிதாவையும் இயேசு கிறிஸ்துவையும் சித்தரிக்கும் ஒரு படத்தைக் காட்டுங்கள், மற்றும் குடும்ப அங்கத்தினர்களிடம் பரலோக பிதா அல்லது இயேசுவின் சரீரத்தின் ஒரு பகுதியை சுட்டிக்காட்ட முறை எடுத்துக்கொள்ளும்படி கேட்கவும். பின்னர் மற்ற குடும்ப அங்கத்தினர்கள் தங்கள் உடலில் அதே பகுதியை சுட்டிக்காட்டலாம்.

ஆதியாகமம் 1:28; மோசே 2:28 ; ஆபிரகாம் 4:28 .“பூமியைப் பலுகிப் பெருகி நிரப்ப வேண்டும் என்ற தேவனின் கட்டளை நடைமுறையில் உள்ளது” (“ குடும்பம்: உலகிற்கு ஒர் பிரகடனம்,” ChurchofJesusChrist.org ). இந்த சத்தியத்தை அறியாத அல்லது வித்தியாசமாக நம்புபவர்களுக்கு இந்த கட்டளையைப்பற்றிய நமது நம்பிக்கைகளை எவ்வாறு விளக்குவது என்பதை குடும்ப அங்கத்தினர்கள் நடித்துக்காட்டலாம்.

ஆதியாகமம் 1:28 ; மோசே 2:28; ஆபிரகாம் 4:28.“பூமியின் மேல் நடமாடுகிற சகல ஜீவ ஜந்துக்களையும் ஆண்டுகொள்ளுங்கள்,” என்றால் என்ன? (கோட்பாடும் உடன்படிக்கைகளும் 59:16–21ஐயும் பார்க்கவும்.) பூமியைக் கவனிப்பதற்கான நமது பொறுப்பை நமது குடும்பம் எவ்வாறு நிறைவேற்ற முடியும்?

பிள்ளைகளுக்கு போதிக்க கூடுதல் ஆலோசனைகளுக்கு, இந்த வாரக் குறிப்பில், என்னைப் பின்பற்றி வாருங்கள்—ஆரம்ப வகுப்புக்காகவில் பார்க்கவும்.

ஆலோசனையளிக்கப்பட்ட பாடல்: “My Heavenly Father Loves Me,” Children’s Songbook, 228–29.

தனிப்பட்ட படிப்பை மேம்படுத்துதல்

நமது வாழ்க்கைக்கு வேதங்களைப் பயன்படுத்தவும். வேதத்தின் ஒரு பாகத்தை வாசித்த பிறகு, அதை தங்கள் வாழ்க்கையில் பயன்படுத்த குடும்ப அங்கத்தினர்களை அழைக்கவும். உதாரணமாக, ஒவ்வொரு வாரமும் ஓய்வுநாளை நாம் ஆசரிப்பதற்கு மோசே 3:1–3 எவ்வாறு பொருந்துகிறது? (Teaching in the Savior’s Way, 21 பார்க்கவும்.)

இயேசு கிறிஸ்து மேகங்களூடே நின்றுகொண்டிருத்தல்

சிருஷ்டிப்பு–ஆனி ஹென்றி நாடர்