“டிசம்பர் 27– ஜனுவரி 2. மோசே 1; ஆபிரகாம் 3: ‘இது என்னுடைய கிரியையும் என்னுடைய மகிமையுமாயிருக்கிறது’” என்னைப் பின்பற்றி வாருங்கள்—தனிநபர்களுக்கும் குடும்பங்களுக்கும்: பழைய ஏற்பாடு 2022 (2021)
“டிசம்பர் 27– ஜனுவரி 2. மோசே 1; ஆபிரகாம்3,” என்னைப் பின்பற்றி வாருங்கள்—தனிநபர்களுக்கும் குடும்பங்களுக்கும்: 2022
டிசம்பர் 27–ஜனுவரி 2
மோசே 1; ஆபிரகாம் 3
“இது என்னுடைய கிரியையும் என்னுடைய மகிமையுமாயிருக்கிறது”
தேவன் மோசேயுடனும் ஆபிரகாமுடனும் சொன்னதை நீங்கள் வாசிக்கும்போது, அவர் உங்களிடம் என்ன சொல்லக்கூடும் என்று சிந்தியுங்கள்.
உங்கள் எண்ணங்களைப் பதிவுசெய்யவும்
வேதாகமம் இந்த வார்த்தைகளுடன் தொடங்குகிறது “ஆதியிலே தேவன் வானத்தையும் பூமியையும் படைத்தார்”(ஆதியாகமம் 1:1 ). ஆனால், இந்த “ஆரம்பத்திற்கு” முன்பு அங்கே என்ன இருந்தது? ஏன் இவை அனைத்தையும் தேவன் படைத்தார்? தீர்க்கதரிசி ஜோசப் ஸ்மித் மூலம், இந்த கேள்விகளுக்கு கர்த்தர் வெளிச்சம் பாய்ச்சியுள்ளார்.
உதாரணமாக, ஆபிரகாம்“உலகத் தோற்றத்திற்கு முன்பாக” நாம் இருந்ததை ஆவிகளாகக் கண்ட ஒரு தரிசனத்தின் பதிவை நமக்குக் கொடுத்தான்( ஆபிரகாம் 3: 22–28 பார்க்கவும்). மோசேயின் புத்தகம் என்று அழைக்கப்படும் ஆதியாகமத்தின் முதல் ஆறு அத்தியாயங்களின் உணர்த்தப்பட்ட மொழிபெயர்ப்பு அல்லது திருத்தத்தையும் கர்த்தர் நமக்குக் கொடுத்தார், அது “ஆதியில்” எனத் தொடங்குவதில்லை. மாறாக, நன்கு அறியப்பட்ட சிருஷ்டிப்புக் கதைக்கு பொருளடக்கத்தை வழங்கும் மோசேயின் ஒரு அனுபவத்துடன் இது தொடங்குகிறது. ஒன்றாக, இந்த பிற்கால வேதங்கள் பழைய ஏற்பாட்டைப்பற்றிய நமது ஆய்வைத் தொடங்க ஒரு நல்ல இடம், ஏனென்றால், அவை தேவன் யார், என நம் வாசிப்பை வடிவமைக்கக்கூடிய சில அடிப்படை கேள்விகளுக்குப் பதிலளிக்கின்றன. நாம் யார்? தேவனின் கிரியை என்ன, அதில் நமது இடம் எது? ஆதியாகமத்தின் தொடக்க அதிகாரங்கள் மோசேயின் வேண்டுகோளுக்கு கர்த்தரின் பதிலாகக் காணப்படுகின்றன: “தேவனே, உமது அடியேனிடம் இரக்கமாயிரும், இந்த பூமியையும், அதன் குடிகளையும், பரலோகங்களையும்பற்றி எனக்குச் சொல்லும்” (மோசே 1:36).
தனிப்பட்ட வேதப் படிப்பிற்கான ஆலோசனைகள்
தேவனின் பிள்ளையாக, எனக்கு ஒரு தெய்வீக இலக்கு உள்ளது.
தலைவர் டியட்டர் எப். உக்டர்ப் போதித்தார், “இந்த வாழ்க்கையில் நாம் அனுபவிக்கும் குழப்பங்களில் பெரும்பாலானவை நாம் யார் என்பதைப் புரிந்து கொள்ளாமல் இருப்பதிலிருந்து வருகிறது” (“The Reflection in the Water” [Church Educational System fireside for young adults, Nov. 1, 2009], ChurchofJesusChrist.org). பரலோக பிதாவுக்கு இது தெரியும், சாத்தானுக்கும் தெரியும். மோசேக்கு தேவன் அளித்த முதல் செய்தியில் “நீயே என்னுடைய குமாரன்” மற்றும் “நீ என்னுடைய ஒரே பேறானவரின் சாயலில் இருக்கிறாய்” ( மோசே 1: 4, 6 )என்ற சத்தியங்கள் அடங்கியிருந்தன. மாறாக, சாத்தான் மோசேயை ஒரு “மனுஷகுமாரன்” என்று அழைத்தான் (மோசே 1:12). “மனுஷ குமாரன் [அல்லது குமாரத்தி]“ என்று சாத்தான் விரும்புகிறபடி உங்களைப்பற்றி நீங்கள் நினைத்தால் உங்கள் வாழ்க்கையும் தீர்மானங்களும் எவ்வாறு வித்தியாசமாக இருக்கும்? நீங்கள் தேவனின் பிள்ளை என்பதை அறிந்துகொள்வதும் நினைவில் கொள்வதும் உங்கள் வாழ்க்கையை எவ்வாறு ஆசீர்வதிக்கிறது?
மோசே 1ல் உள்ள எந்த வசனங்கள் அல்லது சொற்றொடர்கள் உங்கள் தெய்வீக தகுதியை உணர்த்துகின்றன?
சாத்தானின் செல்வாக்கை என்னால் எதிர்க்க முடியும்.
மோசே 1 தெளிவாகக் காட்டுவது போல், வலலமையான ஆவிக்குரிய அனுபவங்கள் நம்மை சோதனையிலிருந்து விலக்குவதில்லை. உண்மையில், சாத்தானின் தந்திரங்களில் ஒன்று, அந்த அனுபவங்களை அல்லது அவர்களிடமிருந்து நாம் கற்றுக்கொண்டவற்றை சந்தேகிக்க தூண்டுவதாகும். வசனங்கள் 12–26ல் சாத்தானுக்கு மோசே அளித்த பதிலைப்பற்றி நீங்கள் வாசிக்கும்போது, நீங்கள் பெற்ற சாட்சியத்துக்கு உண்மையாக இருக்க உதவும் எதைக் கற்றுக்கொள்கிறீர்கள்? சாத்தானின் பிற சோதனைகளை எதிர்க்க உங்களுக்கு எது உதவுகிறது? (எடுத்துக்காட்டாக, வசனங்கள் 15 மற்றும் 18பார்க்கவும்).
நீங்கள் கற்பனவற்றின் அடிப்படையில், சோதனையை எதிர்ப்பதற்கான திட்டத்தை நீங்கள் உருவாக்கலாம். எடுத்துக்காட்டாக, “நான் சோதிக்கப்படும்போது, நான் செய்வேன்,” என வாசகத்தை நீங்கள் பூர்த்தி செய்யலாம்.
மத்தேயு 4: 1–11 ; ஏலமன் 5:12 ; Gary E. Stevenson, “Deceive Me Not,” Liahona, Nov. 2019, 93–96; “I Am a Son of God” (video), ChurchofJesusChrist.orgஐயும் பார்க்கவும்.
நித்திய ஜீவனைப் பெற எனக்கு உதவுவதே தேவனின் கிரியையும் மகிமையும் ஆகும்.
தேவனின் சிருஷ்டிப்புகளைப் பார்த்த பிறகு, மோசே கர்த்தரிடம் ஒரு வேண்டுகோளை விடுத்தான்: “எனக்குச் சொல்லும்… இந்தக் காரியங்கள் ஏன் இப்படி இருக்கின்றன” (மோசே 1:30). மோசே 1:31–39லுள்ள கர்த்தரின் பதில்களில் எது உங்களைக் கவர்கிறது?
ஆபிரகாம் 3ல் பதிவு செய்யப்பட்டுள்ள ஒரு தரிசன அனுபவத்தை ஆபிரகாமும் பெற்றான். வசனங்கள் 22–26ல் மோசேயின் கோரிக்கைக்கு பதிலளிக்க உதவும் எதை நீங்கள் காண்கிறீர்கள்?
மோசேயும் ஆபிரகாமும் தரிசனங்களில் கற்றுக்கொண்ட பிற சத்தியங்களை பட்டியலிடுவதைக் கருத்தில் கொள்ளவும்: தேவனைப்பற்றிய சத்தியங்கள், தங்களைப்பற்றியும், தேவனின் சிருஷ்டிப்புகளின் நோக்கங்களைப்பற்றியும். உங்களையும் உங்களைச் சுற்றியுள்ள உலகையும் நீங்கள் பார்க்கும் விதத்தை இந்த சத்தியங்கள் எவ்வாறு பாதிக்கின்றன?
Dieter F. Uchtdorf, “You Matter to Him,” Liahona, Nov. 2011, 19–22; Gospel Topics, “Premortality,” topics.ChurchofJesusChrist.org ஐயும் பார்க்கவும்.
ஆபிரகாமைத் தவிர மற்றவர்கள் “[அவர்கள்] பிறப்பதற்கு முன்பே” தெரிந்துகொள்ளப்பட்டார்களா?
“அநித்தியத்துக்கு முந்தைய ஆவி உலகில், தேவன் சில ஆவிகளை அவர்களின் அநித்திய வாழ்க்கையில் குறிப்பிட்ட பணிகளை நிறைவேற்ற நியமித்தார். இது முன்நியமிப்பு என்று அழைக்கப்படுகிறது. … முன்நியமன கோட்பாடு சபையின் அனைத்து அங்கத்தினர்களுக்கும் பொருந்தும், மீட்பருக்கும் அவருடைய தீர்க்கதரிசிகளுக்கும் மட்டுமல்ல” (Gospel Topics, “Foreordination,” topics.ChurchofJesusChrist.org).
மோசே மற்றும் ஆபிரகாமின் புத்தகங்களை நாம் எவ்வாறு பெற்றோம்?
ஜோசப் ஸ்மித்தின் உணர்த்தப்பட்ட வேதாகம மொழிபெயர்ப்பின் முதல் பகுதி மோசேயின் புத்தகம். எகிப்திய பாப்பிரியுடன் பணியாற்றிய போது ஜோசப் ஸ்மித்துக்கு ஆபிரகாமின் புத்தகம் வெளிப்படுத்தப்பட்டது. விலையேறப்பெற்ற முத்துவில் இன்று காணப்படும் இந்த புத்தகங்கள், பழைய ஏற்பாட்டில் காணப்படாத மோசே, ஆபிரகாம் மற்றும் பிற தீர்க்கதரிசிகளைப்பற்றிய பல தகவல்களை வழங்குகின்றன. இந்த புத்தகங்களை நாம் எவ்வாறு பெற்றோம் என்பதைப்பற்றி மேலும் அறிய, “Joseph Smith Translation of the Bible” (Church History Topics, ChurchofJesusChrist.org/study/history/topics) and “Translation and Historicity of the Book of Abraham” (Gospel Topics, topics.ChurchofJesusChrist.org பார்க்கவும்).
குடும்ப வேதப் படிப்பு மற்றும் இல்ல மாலைக்கான ஆலோசனைகள்
-
மோசே 1: 2–6 ; ஆபிரகாம் 3: 11–12.இந்த வேதங்களில் போதிக்கப்பட்ட சத்தியங்களுடன் தொடர்புடைய “I Am a Child of God” (Children’s Songbook, 2–3) பாடலில் சொற்றொடர்களைக் காண குடும்ப அங்கத்தினர்களை அழைக்கலாம்.
-
மோசே 1:4, 30–39.“[தேவனின்] கைகளின் வேலைப்பாடு” சிலவற்றைப் பார்த்து உங்கள் குடும்பத்தினர் மகிழ்வார்களா? ( வசனம் 4). இந்த வசனங்களை ஒரு பூங்காவில் அல்லது நட்சத்திரங்களுக்கு அடியில் இரவில் நீங்கள் வாசிக்கலாம். பின்பு தேவன் ஏன் உலகை சிருஷ்டித்தார் என்பதையும், அவருடைய “கிரியை மற்றும் [அவருடைய] மகிமை” ( வசனம் 39) ஆகியவற்றில் நாம் எவ்வாறு பங்கேற்கிறோம் என்பதையும்பற்றி பேசலாம்.
-
மோசே 1:18.தேவனுக்கும் சாத்தானுக்கும் இடையில் “நியாயந்தீர்க்க” ஒருவருக்கொருவர் உதவ நாம் என்ன ஆலோசனையைப் பகிர்ந்து கொள்ளலாம்? மரோனி 7:12–18; கோட்பாடும் உடன்படிக்கைகளும் 50:23–24ஐயும் பார்க்கவும்.
-
ஆபிரகாம் 3:24–26. இது ஒரு காகித விமானத்தை மடிப்பது அல்லது ஒரு உணவு செய்முறையைப் பின்பற்றுவது போன்ற அறிவுறைகளைப் பின்பற்ற முடியும் என்பதை நிரூபிக்க அனுமதிக்கிற, குடும்ப அங்கத்தினர்களுக்கு ஒரு வேடிக்கையான ஆனால் சவாலான பணியை நீங்கள் வழங்கலாம். இந்த வசனங்களில் விவரிக்கப்பட்டுள்ளபடி இந்த செயல்பாடு நம் அநித்திய வாழ்க்கையின் நோக்கத்துடன் எவ்வாறு ஒத்திருக்கிறது?
பிள்ளைகளுக்கு போதிக்க கூடுதல் ஆலோசனைகளுக்கு, இந்த வாரக் குறிப்பில், என்னைப் பின்பற்றி வாருங்கள்—ஆரம்ப வகுப்புக்காகவில் பார்க்கவும்.
ஆலோசனையளிக்கப்பட்ட பாடல்: “I Am a Child of God,” Children’s Songbook, 2–3.