“ஆகஸ்ட் 5–11: ‘மகா மகிழ்ச்சியின் திட்டம்’ ஆகஸ்ட் 39–42,” என்னைப் பின்பற்றி வாருங்கள்—வீடு மற்றும் சபைக்காக: மார்மன் புஸ்தகம் 2024 (2023)
“ஆகஸ்டு 5–11. ஆல்மா 39–42,” என்னைப் பின்பற்றி வாருங்கள்—வீடு மற்றும் சபைக்காக: 2024 (2023)
ஆகஸ்ட் 5–11: “மகா மகிழ்ச்சியின் திட்டம்”
ஆல்மா 39–42
நாம் நேசிக்கிற ஒருவர் ஒரு கடுமையான தவறு செய்யும்போது, எப்படி பதிலளிப்பது என அறிவது கடினமாக இருக்கலாம். அவனது சொந்த கொடிய பாவங்களுக்காக ஒரு சமயம் மனந்திரும்பிய, கிறிஸ்துவின் சீஷனாகிய ஆல்மா வெளிப்படுத்துகிற ஆல்மா 39–42ஐ கொண்ட பகுதி மிக மதிப்புடையதாக்குகிறது. ஆல்மாவின் குமாரன் கொரியாந்தன் பாலியல் பாவம் செய்தான், ஆல்மா, தன் ஊழியத்தில் செய்யக் கற்றுக்கொண்டபடி, தன் குமாரனுக்கு நித்தியமான கண்ணோட்டத்தைக் கொடுக்கவும் மனந்திரும்புதலை ஊக்குவிக்கவும் உண்மையான கோட்பாட்டின் வல்லமையை நம்பினான் (ஆல்மா 4:19; 31:5 பார்க்கவும்). இந்த அதிகாரங்களில், பாவத்தை கடிந்துகொள்வதில் ஆல்மாவின் தைரியத்தையும், கொரியாந்தன் மீது அவனது இளகிய மனதையும் அன்பையும் நாம் கவனிக்கிறோம். முடிவில், “உலகத்தினுடைய பாவங்களை சுமந்து தீர்க்கவும், தன்னுடைய ஜனங்களுக்கு இரட்சிப்பைப்பற்றிய நற்செய்திகளை அறிவிக்கவும் இரட்சகர் வருவார்” என்ற ஆல்மாவின் தன்னம்பிக்கையை உணர்கிறோம். (ஆல்மா 39:15). கொரியாந்தன் மனந்திரும்பி, இறுதியில் ஊழியப்பணிக்கு திரும்புவான் என்ற உண்மை, (ஆல்மா 49:30 பார்க்கவும்) நமது சொந்த பாவங்களுக்காக அல்லது நாம் நேசிக்கிற ஒருவரின் பாவங்களின் மன்னிப்புக்கான நம்பிக்கையையும், நாம் துன்பப்படும்போது மீட்பையும் நமக்கு கொடுக்க முடியும் (ஆல்மா 42:29 பார்க்கவும்).
வீட்டிலும் சபையிலும் கற்றுக்கொள்வதற்கான ஆலோசனைகள்
நான் பாலியல் பாவத்தை தவிர்க்க முடியும்.
ஆல்மா 39ல் தனது மகன் கொரியாந்தனுக்கு ஆல்மா அளித்த அறிவுரை, ஆபாசப் படங்கள் உட்பட பாலியல் பாவத்தின் அழிவுகரமான விளைவுகளைப் பற்றி அறிய சிறந்த வாய்ப்பை வழங்குகிறது. ஒருவேளை மிக முக்கியமாக, மனந்திரும்புபவர்களுக்கு இரட்சகரின் மன்னிப்பு மற்றும் குணப்படுத்துதல் கொடுப்பதை புரிந்துகொள்ளவும் இது உங்களுக்கு உதவும். இந்தக் கேள்விகளும் செயல்பாடுகளும் உதவக்கூடும்:
-
என்ன தவறுகள் கற்புடைமை நியாயப்பிரமாணத்தை மீறுவதற்கு கொரியாந்தனை வழிநடத்தியது? (ஆல்மா 39:2–4, 8–9 பார்க்கவும்). அவனது செயல்களின் விளைவுகள் யாவை? (வசனங்கள் 5–13 பார்க்கவும்). கொரியாந்தன் மனந்திரும்பினான் என்பதற்கு என்ன ஆதாரம் உள்ளது? (ஆல்மா 42:31; 49:30; 48:18 பார்க்கவும்). இந்த அனுபவங்களிலிருந்து இரட்சகரைப்பற்றி நாம் என்ன கற்றுக் கொள்ளுகிறோம்?
-
ஆபாசம் என்றால் என்ன, அது ஏன் ஆபத்தானது, அதை எதிர்கொள்ளும்போது நீங்கள் என்ன செய்வீர்கள் என்று உங்கள் சொந்த விளக்கத்தை எழுதுங்கள். (லூக்கா 5:27–28; கோட்பாடும் உடன்படிக்கைகளும் 63:16 ஐயும் பார்க்கவும்.)
-
ஆபாசப் படங்களைத் தவிர்க்கவும், கற்புடைமை நியாயப்பிரமாணத்தை பின்பற்றவும் நீங்கள் ஏன் தேர்வு செய்கிறீர்கள் என்பதை நண்பருக்கு எப்படி விளக்குவீர்கள்?
-
ஒவ்வொரு முறையும் தாவீது வித்தியாசமான தேர்வு செய்திருக்கலாம் என்று காணொலியை இடைநிறுத்தவும். தாவீதின் தேர்வுகள் நீங்கள் எதிர்கொள்ளக்கூடிய தேர்வுகளுக்கு எப்படி ஒத்திருக்கிறது?
பிராட்லி ஆர். வில்காக்ஸ், “தகுதி, குறைபாடற்ற தன்மை அல்ல,” லியஹோனா, நவ. 2021, 61–67; ஐயும் பார்க்கவும்.
நான் இறந்த பிறகு எனக்கு என்ன நடக்கும்?
மரணத்திற்குப் பிறகு என்ன நடக்கிறது என்பது பற்றி கொரியாந்தனுக்கு சில கேள்விகள் இருந்தன. அவனது கவலைகள் ஆல்மா 40–41ல் காணப்படும் கொள்கைகளை கற்பிக்க ஆல்மாவை வழிநடத்தியது. நீங்கள் படிக்கும்போது, ஆவி உலகம், உயிர்த்தெழுதல் மற்றும் நியாயத்தீர்ப்பு போன்ற விஷயங்களைப் பற்றி நீங்கள் கண்டுபிடிக்கும் சத்தியங்களின் பட்டியலை உருவாக்கவும். கொரியாந்தனைப் போல மனந்திரும்ப வேண்டிய ஒருவரின் கண்ணோட்டத்தில் இந்த அதிகாரங்களை வாசிப்பதைக் கருத்தில் கொள்ளுங்கள், எல்லாவற்றிற்கும் மேலாக, அது நம் அனைவருக்கும் உண்மை.
இயேசு கிறிஸ்து மீது நம்பிக்கை வைத்து எனது கேள்விகளுக்கான பதில்களை என்னால் தேட முடியும்.
எல்லா சுவிசேஷ கேள்விகளுக்கும் தீர்க்கதரிசிகள் பதிலை அறிந்திருக்கிறார்கள் என சிலசமயங்களில் நாம் நினைக்கலாம். ஆனால் அதிகாரம் 40ல் ஆல்மாவிடம் இருந்த விடை தெரியாத கேள்விகளைக் கவனியுங்கள். பதில்களைக் கண்டுபிடிக்க அவன் என்ன செய்தான்? அவனிடம் பதில்களில்லாதபோது, அவன் என்ன செய்தான்? ஆல்மாவின் உதாரணம் உங்களுக்கு எப்படி உதவும்?
இயேசு கிறிஸ்துவின் பாவநிவர்த்தி மீட்பை சாத்தியமாக்குகிறது.
பாவங்களுக்கான தண்டனை நியாயமற்றது என கொரியாந்தன் நம்பினான் (ஆல்மா 42:1 பார்க்கவும்). ஆல்மா 42ல், ஆல்மா தனது கவலையை எவ்வாறு கையாண்டான்? “தேவன் நீதியுள்ளவர்” மற்றும் “தேவன் இரக்கமுள்ளவர்” என்று இரண்டு குழுக்களாக இந்த அதிகாரத்தில் உள்ள பகுதிகளை நீங்கள் ஒழுங்கமைக்கலாம். இரட்சகரின் பாவநிவர்த்தி எவ்வாறு நீதி மற்றும் இரக்கம் இரண்டையும் சாத்தியமாக்குகிறது?
பிள்ளைகளுக்கு போதிப்பதற்கான ஆலோசனைகள்
என்னுடைய நல்ல முன்மாதிரி மற்றவர்களை கிறிஸ்துவிடம் கொண்டு செல்ல முடியும்.
-
கொரியாந்தனுக்கு ஆல்மாவின் அறிவுரை உங்கள் பிள்ளைகளுக்கு நல்ல முன்மாதிரியாக இருப்பதன் முக்கியத்துவத்தைப் புரிந்துகொள்ள உதவும். ஆல்மா 39:1ஐ ஒன்றாக வாசிப்பதைக் கருத்தில் கொள்ளவும். கொரியாந்தனின் சகோதரன் சிப்லோன் எப்படி ஒரு நல்ல முன்மாதிரியாக இருந்தான்? ஆல்மா 38:2–4ல் இந்தக் கேள்விக்கான கூடுதல் பதில்களை உங்கள் பிள்ளைகள் காணலாம்.
-
நீங்களும் உங்கள் குழந்தைகளும் ஒருவரையொருவர் பின்பற்றும் அல்லது பாவிக்கும் ஒரு விளையாட்டையும் நீங்கள் விளையாடலாம். நமது செயல்கள் மற்றவர்களுக்கு எப்படி நல்ல தேர்வுகளை செய்ய உதவும் என்பதை விளக்க இந்த விளையாட்டைப் பயன்படுத்தவும்.
-
ஒளிரும் விளக்கு அல்லது சூரியனின் படம் மூலம், நீங்கள் ஒளியை ஒரு நல்ல உதாரணத்தின் சக்தியுடன் ஒப்பிடலாம். நீங்களும் உங்கள் குழந்தைகளும் இயேசு நல்ல காரியங்களைச் செய்யும் படங்களைப் பார்த்து அவர் நமக்கு வைத்த முன்மாதிரியைப் பற்றி பேசலாம்.
இயேசு கிறிஸ்துவின் நிமித்தமாக, நான் தவறு செய்யும் போது மனந்திரும்ப முடியும்.
-
அவனது பாவங்களின் தன்மையைப் பற்றி விரிவாகப் பேசாமல், கொரியாந்தமன் தவறான தேர்வு செய்தான் என்பதை விளக்குங்கள். அவருக்கு உதவ நாம் என்ன சொல்ல முடியும்? உங்கள் பிள்ளைகளுக்கு ஆல்மா 39:9ஐப் படிப்பதைக் கருத்தில் கொள்ளவும், மனந்திரும்புதல் மற்றும் விட்டுவிடுதல் என்றால் என்ன என்பதைப் புரிந்துகொள்ள அவர்களுக்கு உதவுங்கள். மனந்திரும்புதல் இயேசு கிறிஸ்து மற்றும் அவரது பாவநிவர்த்தி மூலம் சாத்தியம் என்று சாட்சியமளிக்கவும்.
-
மனந்திரும்புதலின் மகிழ்ச்சியை விளக்குவதற்கு ஒரு பொருள்சார் பாடம் இங்கே உள்ளது: ஏதாவது தவறு செய்து, மோசமாக உணர்ந்த ஒருவரைப் பற்றி நீங்கள் கதை சொல்லும்போது, ஒரு குழந்தைக்கு கனமான ஒன்றைக் கொடுங்கள். நாம் தவறு செய்யும் போது நமக்கு ஏற்படக்கூடிய மோசமான உணர்வுகளைப் போன்றது அந்தப் பொருள் என்று உங்கள் பிள்ளைகளுக்குச் சொல்லுங்கள். பரலோக பிதாவும் இயேசு கிறிஸ்துவும் கனமான, கெட்ட உணர்வுகளை அகற்றி, நாம் மனந்திரும்பும்போது சிறப்பாக இருக்க உதவுவார்கள் என்று நீங்கள் சாட்சியமளிக்கும்போது, குழந்தையிடமிருந்து கனமான பொருளை எடுத்துக் கொள்ளுங்கள்.
நாம் இறந்த பிறகு, உயிர்த்தெழுதல் மற்றும் தீர்ப்பு வரை நமது ஆவிகள் ஆவி உலகத்திற்குச் செல்கின்றன.
-
இறந்த பிறகு நமக்கு என்ன நடக்கும் என்று ஆச்சரியப்படுவது எதார்த்தமானது. உணர்த்தப்பட்ட பதில்களைக் கண்டறிய உங்கள் பிள்ளைகளுக்கு உதவ நீங்கள் என்ன செய்யலாம்? நீங்கள் மரணம், ஆவி உலகம் (பரதீசு மற்றும் ஆவி சிறை), உயிர்த்தெழுதல் மற்றும் நியாயத்தீர்ப்பு ஆகியவற்றை தனித்தனி காகிதத்தில் எழுதலாம். இந்த வார்த்தைகளின் அர்த்தம் என்ன என்பதைப் புரிந்துகொள்ள உங்கள் பிள்ளைகளுக்கு உதவுங்கள். நீங்கள் ஆல்மா 40:6–7, 11–14, 21–23 ஆகியவற்றை ஒன்றாக வாசிக்கும்போது, உங்கள் பிள்ளைகள் இந்த வசனங்களில் வார்த்தைகள் வரும் வரிசையில் வைக்கலாம்.
-
ஆல்மா 40:6–7, 11–14, 21–23ஐத் தேடுவதன் மூலம் கேள்விகளுக்கான பதில்களைக் கண்டுபிடிப்பதில் இருந்து பெரிய குழந்தைகள் பயனடையலாம். “நான் உயிர்த்தெழுப்பப்படும்போது என் உடல் எப்படி இருக்கும்?” போன்ற இந்த வசனங்களில் பதிலளிக்கக்கூடிய கேள்விகளை உங்கள் குழந்தைகளிடம் கேட்பதைக் கருத்தில் கொள்ளவும். பொருத்தமான வசனங்களில் பதில்களைத் தேட அவர்களை அழைக்கவும்.
-
இறந்து போன ஒருவரை உங்கள் குழந்தைகளுக்கு தெரியுமா? ஒருவேளை நீங்கள் அந்த நபரைப் பற்றி சுருக்கமாகப் பேசலாம். இயேசு கிறிஸ்துவின் காரணமாக ஒரு நாள் அவள் அல்லது அவனும் மற்ற அனைவரும் உயிர்த்தெழுப்பப்படுவார்கள் என்று உங்கள் சாட்சியத்தை கூறுங்கள். தேவைப்பட்டால், உயிர்த்தெழுதல் என்றால் என்ன என்பதை விளக்க இந்த வார நிகழ்ச்சி பக்கத்தைப் பயன்படுத்தவும்.