என்னைப் பின்பற்றி வாருங்கள் 2024
ஆகஸ்ட் 19–25: “அவருடைய அற்புதமான வல்லமையினாலே காக்கப்பட்டு” ஆல்மா 53–63


“ஆகஸ்ட் 19–25: ‘அவருடைய அற்புதமான வல்லமையினாலே காக்கப்பட்டு’ ஆல்மா 53–63,” என்னைப் பின்பற்றி வாருங்கள்—வீடு மற்றும் சபைக்காக: மார்மன் புஸ்தகம் 2024 (2023)

“ஆகஸ்டு 19–25. ஆல்மா 53–63,” என்னைப் பின்பற்றி வாருங்கள்—வீடு மற்றும் சபைக்காக: 2024(2023)

படம்
இரண்டாயிரம் இளம் போர் வீரர்கள்

Two Thousand Young Warriors (இரண்டாயிரம் இளம் போர் வீரர்கள்) – அர்னால்ட் ப்ரீபெர்க்

ஆகஸ்ட் 19–25: “அவருடைய அற்புதமான வல்லமையினாலே காக்கப்பட்டு”

ஆல்மா 53–63

லாமானிய சேனைகளோடு ஒப்பிடும்போது, ஏலமனின் இளைஞர்களைக் கொண்ட “சிறிய சேனை” (ஆல்மா 56:33) வென்றிருக்க வாய்ப்பிருந்திருக்காது. எண்ணிக்கையில் குறைவு மட்டுமல்லாமல், ஏலமனின் போர் வீரர்கள் “அனைவரும் இளைஞர்கள்” மற்றும் “அவர்கள் என்றுமே யுத்தம் பண்ணியதில்லை”(ஆல்மா 56:46–47). சில விதங்களில், சாத்தான் மற்றும் உலகத்தின் தீய சக்திகளுக்கு எதிரான நமது பிற்காலப் போராட்டத்தில் தோற்கடிக்கப்பட்டதாகவும் தாங்கமுடியாததாகவும் சிலசமயங்களில் நினைக்கிற நமக்கு அவர்களின் சூழ்நிலைகள் பரிச்சயமாகத் தோன்றலாம்.

ஆனால் எண்ணிக்கை அல்லது ராணுவ திறனில் எந்த தொடர்புமில்லாமல், லாமானியர்மேல் ஏலமனின் சேனைக்கு சில அனுகூலகங்கள் இருந்தன. அவர்களை வழிநடத்த தீர்க்கதரிசியாகிய ஏலமனை அவர்கள் தேர்ந்தெடுத்தார்கள் (ஆல்மா 53:19 பார்க்கவும்), “தாங்கள் சந்தேகப்படாமலிருந்தால், தேவன் தங்களை விடுவிப்பார் என்று அவர்கள் தங்கள் தாய்மாரால் போதிக்கப்பட்டிருந்தார்கள்” (ஆல்மா 56:47), “தாங்கள் போதிக்கப்பட்டவற்றின் மீது அவர்கள் மிகுந்த விசுவாசம் வைத்திருந்தனர்.” அதன் விளைவாக, அவர்கள் “தேவனுடைய அற்புதமான வல்லமையால்” (ஆல்மா 57:26) பாதுகாக்கப்பட்டார்கள். எனவே வாழ்க்கைப் போர்களை எதிர்கொள்ளும்போது, நாம் தைரியமாக இருக்க முடியும். ஏலமனின் இராணுவம் நமக்குக் கற்பிக்கிறது, “ நியாயமுள்ள தேவன் ஒருவர் [உண்டென்றும்], சந்தேகிக்காமலிருக்கிற எவரும் அவருடைய அற்புதமான வல்லமையினாலே காக்கப்படுவார்கள்.” (ஆல்மா 57:26).

வீட்டிலும் சபையிலும் கற்றுக்கொள்வதற்கான ஆலோசனைகள்

ஆல்மா 53:10–22; 56:43–49, 55–56; 57:20–27; 58:39–40

படம்
seminary icon
தேவனை விசுவாசிப்பது எனக்கு பயத்தை போக்க உதவுகிறது.

அவர்களின்விசுவாசம் இல்லாவிட்டால், ஏலமனின் இளம் வீரர்கள் பயப்படுவதற்கு நல்ல காரணம் இருந்திருக்கும். ஆனால் அவர்களுடைய விசுவாசத்தின் காரணமாக, அவர்கள் தைரியமாக இருப்பதற்கு இன்னும் கூடுதலான காரணம் இருந்தது. ஆல்மா 53–58 நீங்கள் வாசிக்கும்போது, கிறிஸ்துவில் விசுவாசத்துடன் உங்கள் அச்சங்களை எதிர்கொள்ள உதவும் விஷயங்களைத் தேடுங்கள். பின்வரும் வசனங்களில் கவனம் செலுத்துவதைக் கருத்தில் கொள்ளுங்கள்: ஆல்மா 53:10–22; 56:43–49, 55–56; 57:20–27; மற்றும் 58:39–40. நீங்கள் கண்டதை பதிவு செய்ய இந்த அட்டவணை உங்களுக்கு உதவும்.

ஏலமனின் இளம் போர்வீரர்களின் தன்மைகள்:

கிறிஸ்துவின் மீதான அவர்களின் விசுவாசம் மிகவும் வலுவாக இருந்ததற்கான சாத்தியமான காரணங்கள்:

கிறிஸ்துவில் விசுவாசம் வைக்க அவர்கள் என்ன செய்தார்கள்:

தேவன் அவர்களை எப்படி ஆசீர்வதித்தார்:

நமது ஆவிக்குரிய போர்களில் வெற்றி பெற, இயேசு கிறிஸ்துவின் வல்லமையும் நமக்குத் தேவை. அவருடைய வல்லமையை எப்படி பெற முடியும்? ஏலமனின் வீரர்கள் செய்த காரியங்களுடன் அவருடைய ஆலோசனையை நீங்கள் ஒப்பிடலாம்.

இந்த விஷயங்களைப் படித்த பிறகு, உங்கள் சொந்த ஆவிக்குரிய போர்களைப் பற்றி சிந்தியுங்கள். இயேசு கிறிஸ்துவில் உங்கள் விசுவாசத்தைப் பிரயோகிக்க நீங்கள் உணர்த்தப்பட்டதை எழுதுங்கள்.

 நீல் எல். ஆண்டர்சென், “காயம்பட்டோர்,” லியஹோனா, நவ. 2018, 83–86; ஐயும் பார்க்கவும். 

படம்
இளம் போர்வீரர்கள் தங்கள் தாயுடன்

They Did Not Doubt (அவர்கள் சந்தேகப்படவில்லை) – ஜோசப் ப்ரிக்கி

ஆல்மா 58:1–12, 31–3761

இயேசு கிறிஸ்துவைப் பின்பற்றுபவர்கள் எளிதில் புண்பட மாட்டார்கள்.

புண்படுத்தப்பட ஏலமனுக்கும் பகரோனுக்கும் நல்ல காரணங்கள் இருந்தன. தனது சேனைக்கு போதுமான ஆதரவை ஏலமன் பெறவில்லை, அந்த ஆதரவை பகரோன் தடுத்து வைத்திருந்ததாக மரோனியால் பகரோன் தப்பாக குற்றஞ்சுமத்தப்பட்டான் (ஆல்மா 58:4–9, 31–3260 பார்க்கவும்). ஆல்மா 58:1–12, 31–37 மற்றும் ஆல்மா 61ல் அவர்களது பிரதிக்கிரியையில் எது உங்களைக் கவர்கிறது? அவர்கள் ஏன் இப்படி பதிலளித்தார்கள் என்று நினைக்கிறீர்கள்?

மூப்பர் டேவிட் ஏ. பெட்னார், பகோரனை சாந்தத்திற்கு உதாரணமாகச் சுட்டிக்காட்டி, “சாந்தத்தின் மிக கம்பீரமான மற்றும் அர்த்தமுள்ள உதாரணங்கள் இரட்சகரின் வாழ்க்கையில் காணப்படுகின்றன” என்று கற்பித்தார். (“Meek and Lowly of Heart,” Liahona, May 2018, 32). இரட்சகர் எவ்வாறு சாந்தத்தைக் காட்டினார் என்பதை சிந்தித்துப் பாருங்கள். உதாரணமாக, மத்தேயு 27:11–26; லூக்கா 22:41–42; யோவான் 13:4–17 பார்க்கவும். அவருடைய எடுத்துக்காட்டை நாம் எப்படி பின்பற்ற முடியும்?

ஆல்மா 60:7–14

என்னைச் சுற்றியுள்ளவர்களை உயர்த்தும் பொறுப்பு எனக்கு இருக்கிறது.

நேபிய சேனைகளின் தேவைகளை தெரிந்தே புறக்கணித்தால் தேவன் பகோரனை பொறுப்பாக்குவார் என்று மரோனி எழுதினான். ஆல்மா 60:7–14லிருந்து தேவையிலிருப்பவர்களைக் கவனிப்பது பற்றி நீங்கள் என்ன கற்றுக்கொள்கிறீர்கள்? மற்றவர்களின் தேவைகளைப் பற்றி அதிக விழிப்புணர்வோடு இருக்க நீங்கள் என்ன செய்யலாம்?

ஆல்மா 62:39–51.

நான் தாழ்மையுடன் இருந்தால், துன்பங்கள் என் இருதயத்தை கர்த்தரிடம் திருப்பலாம்.

உங்கள் சோதனைகளால் “மென்மையாக” அல்லது “கடினமாக” ஆவது என்பதை நீங்கள் எவ்வாறு தேர்வு செய்யலாம் என்பதைப் பற்றி சிந்திக்க உதவும் ஒரு பச்சை முட்டை மற்றும் ஒரு உருளைக்கிழங்கை கொதிக்கும் நீரில் போடவும். உங்கள் முட்டையும் உருளைக்கிழங்கும் வேகும் போது, ஆல்மா 62:39–51 படித்து, லாமானியர்களுடனான நீண்ட போருக்குப் பிறகு, ஏலமனின் ஊழியத்திற்கு மக்கள் எவ்வாறு பதிலளித்தார்கள் என்பதைக் கவனியுங்கள். 13 ஆண்டுகளுக்கு முன்பு அவனுடைய பிரசங்கத்திற்கு அவர்கள் எவ்வாறு பதிலளித்தார்களோ அதை நீங்கள் ஒப்பிட்டுப் பார்க்கலாம் (ஆல்மா 45:20–24 பார்க்கவும்). அதே துன்பங்களால் நேபியர்கள் எப்படி வித்தியாசமாக பாதிக்கப்பட்டனர்? முட்டை மற்றும் உருளைக்கிழங்கு முழுமையாக வெந்ததும், முட்டையை உடைத்து உருளைக்கிழங்கை நறுக்கவும். கொதிக்கும் நீர் அவைகளை எவ்வாறு வித்தியாசமாக பாதித்தது? துன்பத்திற்கு நாம் எவ்வாறு பதிலளிக்கலாம் என்பதை பற்றி நீங்கள் என்ன கற்றுக்கொள்கிறீர்கள்? உங்கள் துன்பங்களின் போது நீங்கள் எவ்வாறு தேவனிடம் திரும்ப முடியும்?

வீட்டில் அனுபவங்களை நினைவுகூரவும். நீங்கள் சபை வகுப்பில் கற்பித்தால், வகுப்பில் உள்ளவர்கள் வீட்டில் கற்றுக்கொண்டவற்றைப் பகிர்ந்துகொள்ளச் சொல்லுங்கள். உதாரணமாக, வேகவைத்த முட்டை மற்றும் உருளைக்கிழங்கிலிருந்து அவர்கள் துன்பங்கள் மற்றும் பணிவு பற்றி என்ன கற்றுக்கொண்டார்கள் என்பதைக் கண்டறியவும்.

பிள்ளைகளுக்கு போதிப்பதற்கான ஆலோசனைகள்

ஆல்மா 53:20–21; 56:47–48

நான் ஏலமனின் இளம் வீரர்களைப் போல தேவனுக்கு உண்மையாக இருக்க முடியும்.

  • இந்த வார நிகழ்ச்சி பக்கம், உங்கள் பிள்ளைகள் ஏலமனின் இராணுவத்தைப் போல எப்படி இருக்க முடியும் என்பதைப் பற்றி சிந்திக்க உதவும். ஆல்மா 53:20–21லிருந்து இளம் வீரர்களின் சில குணங்களை அவர்கள் தொடங்குவதற்குப் பகிர்வதைக் கருத்தில் கொள்ளவும்.

ஆல்மா 56:45–48; 57:21

என் பெற்றோர்கள் நீதியாக எதைக் கற்பிக்கிறார்களோ அதற்கு நான் உண்மையாக இருக்க முடியும்.

  • ஏலமனின் இளம் வீரர்கள் பெரும் சவாலை எதிர்கொண்டபோது தங்கள் தாய்மார்களின் நம்பிக்கையை பார்த்தனர். ஒருவேளை நீங்கள் உங்கள் குழந்தைகளுடன் ஆல்மா 56:46–48 வாசித்து, இந்த வாலிபர்களின் தாய்மார்கள் விசுவாசத்தைப் பற்றி அவர்களுக்குக் கற்பித்ததைக் கேட்கும்படி அவர்களை அழைக்கலாம். இரட்சகரைப் பற்றி அவர்கள் பெற்றோரிடமிருந்தோ அல்லது பிற விசுவாசமிக்க பெரியவர்களிடமிருந்தோ என்ன கற்றுக்கொண்டார்கள் என்று நீங்கள் அவர்களிடம் கேட்கலாம். “கச்சிதமாக” கீழ்ப்படிவது ஏன் முக்கியம்? (ஆல்மா 57:21).

  • துடிப்பான படைவீரர்களின் தாய்மார்களைப் போல் நீங்கள் எவ்வாறு தேவன்மீது உங்கள் விசுவாசத்தை உங்கள் பிள்ளைகளுக்குத் தெரியப்படுத்தலாம்? உங்கள் விசுவாசம் உங்கள் வாழ்க்கையை எவ்வாறு பாதிக்கிறது என்பதைப் பகிர்ந்துகொள்வது ஒரு வழி. உதாரணமாக, நீங்கள் “சந்தேகமே கொள்ளாதபோது” அவர் உங்களை எப்படி “விடுவித்தார்”?

படம்
தாய் தன் மகனுக்கு கற்பிக்கிறாள்

Seed of Faith (விசுவாசத்தின் விதை),-ஜே வார்ட்

ஆல்மா 53:10–18

பரலோக பிதாவுடன் நான் செய்த உடன்படிக்கைகளைக் கடைப்பிடிக்க முடியும்.

  • ஒருவர் தங்களுக்கு ஒரு வாக்குறுதியை அளித்து அதை நிறைவேற்றியதைப்பற்றி உங்கள் குழந்தைகள் பேசலாம். வாக்குறுதி நிறைவேற்றப்பட்டபோது அவர்கள் எப்படி உணர்ந்தார்கள்? நீங்கள் ஆல்மா 53:10–18 வாசித்து, ஏலமன், அம்மோன் மக்கள் மற்றும் அம்மோனிய மக்களின் குமாரர்கள் எவ்வாறு தங்கள் வாக்குறுதிகளை அல்லது உடன்படிக்கைகளைச் செய்தார்கள் மற்றும் நிறைவேற்றினார்கள் என்பதைப் பார்க்க உங்கள் குழந்தைகளை அழைக்கலாம். நீங்கள் உங்கள் உடன்படிக்கைகளைக் கடைபிடிக்கும்போது பரலோக பிதா உங்களை எவ்வாறு ஆசீர்வதிக்கிறார் என்பதை நீங்கள் பகிர்ந்து கொள்ளலாம்.

ஆல்மா 61:3–14

கோபப்படாமல் இருப்பதை நான் தேர்வு செய்யலாம்.

உங்கள் பிள்ளைகள் செய்யாத ஒன்றைச் செய்ததாகக் குற்றம் சாட்டப்பட்ட காலத்தைப் பற்றி சிந்திக்க அவர்களை அழைக்கவும். பகோரன் எவ்வாறு பதிலளித்தான் என்பதைப்பற்றி அறிய, ஆல்மா 61:3–14 இலிருந்து வசனங்களை மாறி மாறி வாசிக்கவும். மரோனி குற்றம் சாட்டியபோது பகோரன் என்ன செய்தான்? (அல்மா 61:2–3, 8–9 பார்க்கவும் ). இரட்சகரின் உதாரணத்திலிருந்து மன்னிப்பைப் பற்றி நாம் என்ன கற்றுக்கொள்கிறோம்? (லூக்கா 23:34 பார்க்கவும்).

படம்
இரண்டாயிரம் இளம் போர் வீரர்கள்

It’s True, Sir, All Present and Accounted For (இது உண்மை, ஐயா, அனைவரும் இருக்கின்றனர், எண்ணப்பட்டுவிட்டனர்) – க்ளார்க் கெல்லி ப்ரைஸ்.

அச்சிடவும்