என்னைப் பின்பற்றி வாருங்கள் 2024
ஆகஸ்டு 26–செப்டம்பர் 1: “நம் மீட்பராகிய கன்மலை” ஏலமன் 1–6


“ஆகஸ்டு 26–செப்டம்பர் 1: ‘நம் மீட்பராகிய கன்மலை’ ஏலமன் 1-6,” என்னைப் பின்பற்றி வாருங்கள்— வீடு மற்றும் சபைக்காக: மார்மன் புஸ்தகம் 2024 (2023)

“ஆகஸ்ட் 26–செப்டம்பர் 1. ஏலமன் 1–6,” என்னைப் பின்பற்றி வாருங்கள்—வீடு மற்றும் சபைக்காக: 2024 (2023)

படம்
பாறைகளில் மோதுகிற அலைகள்

ஆகஸ்டு 26–செப்டம்பர் 1: “நம் மீட்பராகிய கன்மலை”

ஏலமன் 1–6

நேபியர்களுக்கும் லாமானியர்களுக்கும் மத்தியில் நடந்த வெற்றிகளையும் சோகங்களையும் ஏலமன் புஸ்தகம் பதிவுசெய்கிறது. நேபியர்களின் ஜனங்களுக்குள்ளே “ஓர் கடுமையான பிரச்சனையுடன்” இது ஆரம்பிக்கிறது (ஏலமன் 1:1), பதிவேடு முழுவதும் இந்த பிரச்சினை வந்துகொண்டேயிருக்கிறது. அரசியல் சூழ்ச்சி, திருடர்கூட்டங்கள், தீர்க்கதரிசிகளை மறுதலித்தல், தேசமுழுவதிலுள்ள பெருமை மற்றும் அவநம்பிக்கைகளைப்பற்றி இங்கே நாம் வாசிக்கிறோம். ஆனால் நேபி, லேகி போன்றவர்களின் எடுத்துக்காட்டுகளையும், பிழைத்தவர்களாக மட்டுமல்ல, ஆவிக்குரியவிதமாக செழிப்பானவர்களான, “ஜனங்களில் மிகுந்த தாழ்மையுடைய பகுதியினரையும்கூட” நாம் காணலாம் (ஏலமன் 3:34). இதை அவர்கள் எப்படிச் செய்தார்கள்? அவர்களுடைய நாகரீகம் சரிந்து, விழ ஆரம்பித்தபோது அவர்கள் எவ்வாறு வலிமையுள்ளவர்களாக நிலைத்திருந்தார்கள்? “தேவ குமாரனாகிய கிறிஸ்துவும் … நமது மீட்பருமானவரின் கன்மலையின் மேல், அவர்கள் விழுந்துபோகாதிருக்கிற அந்த அஸ்திபாரத்தின்மேல், நமது வாழ்க்கையை மனுஷர் கட்டினால்,” “ [நம்மீது] அடிக்கப்பட” பிசாசானவன் அனுப்புகிற “பெரும் புயலில்” அதே மாதிரியான வழியில் நம்மில் எவரும் வலிமையுள்ளவர்களாக நிலைத்து நிற்கிறோம் (ஏலமன் 5:12).

வீட்டிலும் சபையிலும் கற்றுக்கொள்வதற்கான ஆலோசனைகள்

ஏலமன் 1–6

கர்த்தருடைய ஆவியிலிருந்தும் பெலத்திலிருந்தும் பெருமை என்னைப் பிரிக்கிறது.

நீங்கள் ஏலமன் 1–6 வாசிக்கும்போது, நேபியர்களின் நடத்தையில் ஒரு மாதிரியை நீங்கள் கவனிக்கலாம். அவர்கள் நீதியுள்ளவர்களாக இருக்கும்போது, தேவன் அவர்களை ஆசீர்வதிக்கிறார், அவர்கள் செழிக்கிறார்கள். ஒரு காலத்திற்குப் பின்பு அவர்கள் பெருமையுள்ளவர்களாயும், துன்மார்க்கர்களுமாகி, அழிவுக்கும் வேதனைக்கும் நடத்திய தேர்ந்தெடுப்புகளைச் செய்தவர்களுமாயினர். பின்னர் தாழ்த்தப்பட்டு, மனந்திரும்ப உணர்த்தப்பட்டு, மீண்டும் தேவன் அவர்களை ஆசீர்வதிக்கிறார். “பெருமை சுற்றென” சில ஜனங்கள் அழைக்கிற அந்த மாதிரி அடிக்கடி மீண்டும் மீண்டும் வருகிறது.

படம்
பெருமை சுற்று

“பெருமை சுற்று”

ஏலமன் 1–6 நீங்கள் வாசிக்கும் போது இந்த சுற்றின் உதாரணங்களைத் தேடுங்கள். இந்த மாதிரியைப் புரிந்துகொள்ள உதவும் சில கேள்விகள் இங்கே:

  • நேபியர்களுக்கு மத்தியில் பெருமையின் என்ன நிரூபணங்களை நீங்கள் பார்க்கிறீர்கள்? ( உதாரணமாக, ஏலமன் 3:33–34; 4:11–13 பார்க்கவும்). உங்களுக்குள் இதைப்போன்ற பெருமையின் நிருபணங்களை நீங்கள் பார்க்கிறீர்களா?

  • பெருமை மற்றும் துன்மார்க்கத்தின் விளைவுகள் என்ன? (ஏலமன் 4:23–26 பார்க்கவும்). தாழ்மை மற்றும் மனந்திரும்புதலின் விளைவுகள் என்ன? (ஏலமன் 3:27–30, 35; 4:14–16 பார்க்கவும்).

  • அவனுடைய குமாரர்கள் எதை நினைவில் வைத்திருக்க ஏலமன் விரும்பினான்? (ஏலமன் 5:4–12 பார்க்கவும்) பெருமையுடையவர் ஆவதை தவிர்க்க இந்த சத்தியங்களை நினைவுகூருதல் எவ்வாறு உங்களுக்குதவுகிறது?

ஏலமன் 3:24–35

கிறிஸ்துவின் மீதுள்ள விசுவாசம் என் ஆத்துமாவை மகிழ்ச்சியால் நிரப்புகிறது.

ஏலமன் 3 இல், தலைவர்கள் கூட ஆச்சரியப்படும் அளவுக்கு சபை ஆசீர்வதிக்கப்பட்டபோது மகிழ்ச்சியான நேரத்தை மார்மன் விவரித்தான். 24–32 வசனங்களில் நீங்கள் படித்தவற்றின் அடிப்படையில், அந்த மகிழ்ச்சியான நிலைக்கு எது வழிவகுத்தது என்று நீங்கள் நினைக்கிறீர்கள்? இருப்பினும் அனைத்து உறுப்பினர்களும் மகிழ்ச்சியில் தொடரவில்லை. 33–35 வசனங்களில் விவரிக்கப்பட்டுள்ள மக்களிடையே உள்ள வேறுபாடுகளைக் கவனியுங்கள். அவர்களது உதாரணங்களிலிருந்து நீங்கள் என்ன கற்றுக்கொள்ளுகிறீர்கள்?

தனிப்பட்ட பயன்பாட்டைத் தேடுங்கள். மார்மன் தீர்க்கதரிசி, மார்மன் புத்தகத்தை சுருக்கி எழுதியபோது முக்கியமான சத்தியங்களை வலியுறுத்த “இவ்வாறு நாம் பார்க்கிறோம்” என்ற சொற்றொடரைப் பயன்படுத்தினான். ஏலமன் 3:27–30ல் நாம் என்ன பார்க்கவேண்டுமென அவன் விரும்பினான்? நீங்கள் வசனங்களைப் படிக்கும்போது, நீங்கள் படித்ததைப் பற்றிய “இவ்வாறு நாம் பார்க்கிறோம்” என்ற சொற்றொடரை முடிக்க எப்போதாவது இடைநிறுத்தலாம்.

ஏலமன் 5:6–7

இரட்சகரின் பெயரை என்னால் மதிக்க முடியும்.

ஏலமன் 5:6–7 வாசிப்பது, குடும்பப் பெயர்கள் உட்பட உங்களுக்கு வழங்கப்பட்ட பெயர்களைக் கருத்தில் கொள்ள உங்களுக்கு உணர்த்தலாம். இந்த பெயர்கள் உங்களுக்கு என்ன அர்த்தத்தைக் கொடுக்கிறது? நீங்கள் அவைகளை எப்படி மதிக்க முடியும்? இன்னும் முக்கியமாக, இரட்சகரின் பெயரைத் தாங்குவது என்றால் என்ன என்பதைக் கவனியுங்கள் (மரோனி 4:3 பார்க்கவும்). அந்தப் பரிசுத்தமான பெயரை நீங்கள் எப்படி மதிக்கிறீர்கள்?

ஏலமன் 5:12–52

படம்
seminary icon
நான் இயேசு கிறிஸ்துவை என் அடித்தளமாக ஆக்கினால், என்னால் விழ முடியாது.

“நம் மீட்பராகிய கன்மலையின்” மேல் “உங்கள் அஸ்திபாரத்தைக் கட்டுவதென்றால்” உங்களுக்கு என்ன பொருள்படுகிறது? (ஏலமன் 5:12). இயேசு கிறிஸ்துவில் வாழ்க்கையின் புயல்களிலிருந்து நீங்கள் எவ்வாறு பாதுகாப்பைக் கண்டீர்கள்? நீங்கள் ஏலமன் 5:12–52 வாசிக்கும்போது, நேபியும் லேகியும் தங்கள் மீட்பரின் கன்மலையில் தங்கள் விசுவாசத்தைக் கட்டியெழுப்பியதற்காக எப்படி ஆசீர்வதிக்கப்பட்டார்கள் என்பதை அடையாளம் காணுங்கள்.

சிலர் தாங்கள் படிப்பதை கற்பனை செய்து பார்ப்பது உதவியாக இருக்கும். ஏலமன் 5:12ஐ சித்தரிக்க, நீங்கள் வெவ்வேறு வகையான அடித்தளங்களில் ஒரு சிறிய கட்டமைப்பை உருவாக்கலாம். பின்னர், அதன்மேல் தண்ணீரைத் தெளித்து, “பலத்த புயலை” உருவாக்க, ஒரு மின்விசிறியைப் பயன்படுத்தி பெரும் புயலை நீங்கள் உருவாக்கலாம். இயேசு கிறிஸ்துவின் மீது உங்கள் அடித்தளத்தை கட்டியெழுப்புவது பற்றி இது உங்களுக்கு என்ன உள்ளுணர்வு அளிக்கிறது?

வசனம் 50, லாமனியர்கள் பெற்ற “நிரூபணங்களின் மகத்துவத்தை” குறிப்பிடுகிறது. ஏலமன் 5:12–52ஐ வாசிப்பது, தேவன் உங்களுக்குக் கொடுத்துள்ள நிரூபணங்களை உங்கள் நினைவுக்குக் கொண்டுவரலாம். உதாரணமாக, பரிசுத்த ஆவியின் “ஒரு கிசுகிசுப்பு” இரட்சகர் மீதான உங்கள் விசுவாசத்தைப் பலப்படுத்தியிருக்கலாம் (ஏலமன் 5:30; கோட்பாடும் உடன்படிக்கைகளும் 88:66 ஐயும் பார்க்கவும்). அல்லது ஒருவேளை நீங்கள் இருளில் இருந்திருக்கலாம் மற்றும் அதிக விசுவாசத்திற்காக தேவனிடம் கூக்குரலிட்டிருக்கலாம் (ஏலமன் 5:40–47பார்க்கவும்). இயேசு கிறிஸ்துவின் மீது உங்கள் அஸ்திபாரத்தை கட்டியெழுப்ப வேறு எந்த அனுபவங்கள் உங்களுக்கு உதவியுள்ளன?

ரசல் எம். நெல்சன், “ ஆலயமும் உங்களுடைய ஆவிக்குரிய அஸ்திபாரமும்,” லியஹோனா, நவ. 2021, 93–96; சீன் டக்லஸ், “கிறிஸ்துவை நம்பி நமது ஆவிக்குரிய சூறாவளிகளை எதிர்கொள்ளுதல்,” லியஹோனா, நவ. 2021, 109–11; ஐயும் பார்க்கவும்.

பிள்ளைகளுக்கு போதிப்பதற்கான ஆலோசனைகள்

ஏலமன் 3:24, 33– 34; 4:11–15

நான் மனத்தாழ்மையுடன் இருக்க வேண்டும் என்று பரலோக பிதா விரும்புகிறார்.

  • மேலே உள்ள வரைபடத்தின் அடிப்படையில் “பெருமை சுற்றின்” சொந்த பதிப்பை வரைய உங்கள் குழந்தைகளை அழைக்கவும். பிறகு, நீங்கள் ஏலமன் 3:24, 33–34 மற்றும் 4:11–15 ஆகியவற்றை ஒன்றாக வாசிக்கும்போது, இந்த வசனங்கள் விவரிக்கும் சுற்றின் பகுதிகளை அவர்கள் சுட்டிக்காட்டலாம். நாம் எப்படி மனத்தாழ்மையாக இருக்க வேண்டும் என்று தேர்வு செய்யலாம்—அப்படியே இருக்கலாம்?

ஏலமன் 5:12.

நான் என் அஸ்திவாரத்தை இயேசு கிறிஸ்துவின் மீது கட்டுவேன்.

  • கட்டிடங்களுக்கு ஏன் வலுவான அஸ்திவாரங்கள் தேவை என்பதைப் பற்றிய உரையாடலைத் தொடங்க ஒரு ஆலயத்தின் படத்தைப் பயன்படுத்தவும். அல்லது உங்கள் வீடு அல்லது சபை கட்டிடத்தின் அடித்தளத்தை நீங்கள் பார்க்கலாம். ஒரு திடமான கன்மலை அஸ்திவாரத்தின் வலிமையை வலியுறுத்த, உங்கள் பிள்ளைகள் பாறை மீது ஊதுவதன் மூலம் நகர்த்த முயற்சி செய்யலாம். ஏலமன் 5:12ஐ நீங்கள் ஒன்றாக வாசிக்கும்போது, இயேசு கிறிஸ்து ஏன் நம் வாழ்க்கைக்கு “உறுதியான அஸ்திவாரம்” என்று உங்கள் குழந்தைகளிடம் கேளுங்கள். அவர் மீது நம் வாழ்க்கையை எவ்வாறு கட்டமைக்க முடியும்? (ஏலமன் 3:27–29, 35 மற்றும் விசுவாசப் பிரமாணங்கள் 1:4 பார்க்கவும்).

  • வெவ்வேறு வகையான அடித்தளங்களில் (பருத்தி பந்துகள் அல்லது தட்டையான கல் போன்றவை) கற்கள் அல்லது பிற பொருட்களைப் பயன்படுத்தி ஒரு கோபுரத்தை உருவாக்க உங்கள் குழந்தைகளை அழைக்கவும். உறுதியான அடித்தளம் எப்படி இயேசு கிறிஸ்துவைப் போன்றது? அவரைப் பின்தொடர என்ன செய்ய முடியும் என்பதைப் பற்றி அவர்கள் பகிர்ந்து கொள்ளும் ஒவ்வொரு யோசனைக்கும் கட்டமைப்பில் ஒரு கல்லைச் சேர்க்கலாம்.

ஏலமன் 5:21–52

பரிசுத்த ஆவியானவர் அமர்ந்த, மெல்லிய குரலில் கிசுகிசுக்கிறார்.

  • ஏலமன் 5:29–30, 45–47 இல் விவரிக்கப்பட்டுள்ள குரல், பரிசுத்த ஆவியானவர் நம்மிடம் பேசும் ஒரு விதத்தை நமக்குக் கற்பிக்கிறது. மக்கள் கேட்ட குரலைப் பற்றி நீங்கள் பேசும்போது, மென்மையான குரலில் பேசுங்கள். கதையை சில முறைகள் திரும்ப சொல்லவும், குழந்தைகளை உங்களுடன் கிசுகிசுக்க அழைக்கவும். பரிசுத்த ஆவியானவர் நம்மிடம் பேசக்கூடிய மற்ற விதங்களைப் பற்றி சிந்திக்க அவர்களுக்கு உதவுங்கள்.

ஏலமன் 5:20–52

மனந்திரும்புதல் ஆவிக்குரிய இருளை ஒளியுடன் மாற்றுகிறது.

  • இருள் மற்றும் ஒளி பற்றி ஏலமன் 5:20–41 என்ன கற்பிக்கிறது என்பதை வலியுறுத்த, இருட்டில் இந்த வசனங்களைப் படிக்கவும் அல்லது சுருக்கி சொல்ல முயற்சிக்கவும், ஒளிக்கு ஒரு ஒளிரும் விளக்கைப் பயன்படுத்தவும். இருள் விலக்கப்பட மக்கள் என்ன செய்ய வேண்டும் என்பதை உங்கள் குழந்தைகள் கேட்கலாம். பின்னர் விளக்குகளை ஏற்றி, 42–48 வசனங்களை ஒன்றாக வாசியுங்கள். மனந்திரும்புதல்பற்றி இந்த வசனங்கள் நமக்கு என்ன போதிக்கின்றன?

படம்
சிறையில் நேபியும் லேகியும்

சிறையில் கூட, நேபியும் லேகியும் தேவ வல்லமையால் பாதுகாக்கப்பட்டனர்.

© The Book of Mormon for Young Readers, Nephi and Lehi Encircled by a Pillar of Fire, (நேபியும் லேகியும் அக்கினி ஸ்தம்பத்தால் சூழப்படுதல்)-ப்ரின்னா க்ராப்ட்; பிரதி எடுக்கப்படக் கூடாது

அச்சிடவும்