என்னைப் பின்பற்றி வாருங்கள் 2024
செப்டம்பர் 23–29: “எழுந்து என்னிடத்தில் வாருங்கள்.” 3 நேபி 8–11


“செப்டம்பர் 23–29: ‘எழுந்து என்னிடத்தில் வாருங்கள்.’ 3 நேபி 8–11,” என்னைப் பின்பற்றி வாருங்கள்— வீடு மற்றும் சபைக்காக: மார்மன் புஸ்தகம் 2024 (2023)

“செப்டம்பர் 23–29. 3 நேபி 8–11,” என்னைப் பின்பற்றி வாருங்கள்—வீடு மற்றும் சபைக்காக: 2024 (2023)

நேபியருக்கு இயேசு தரிசனமாகுதல்

I Am the Light of the World (நானே உலகத்துக்கு ஒளியாயிருக்கிறேன்) – ஜேம்ஸ் புல்மர்

செப்டம்பர் 23–29: “எழுந்து என்னிடத்தில் வாருங்கள்.”

3 நேபி 8–11

“இதோ, உலகினுள் வருவதாக தீர்க்கதரிசிகள் சாட்சி பகர்ந்த இயேசு கிறிஸ்து நானே” (3 நேபி 11:10). இந்த வார்த்தைகளுடன், 600 வருடங்களுக்கு மேலான மார்மன் புஸ்தக தீர்க்கதரிசனங்களை நிறைவேற்றி, உயிர்த்தெழுந்த இரட்சகர் தம்மையே அறிமுகம் செய்தார். மூப்பர் ஜெப்ரி ஆர். ஹாலண்ட் எழுதினார், “அந்த தரிசனமும், பிரகடனமும், மார்மன் புஸ்தக சரித்திரம் முழுமையும் மகோன்னத தருணமான முக்கிய நேரத்தை அடக்கியது. அந்த தெரிவிப்பும் அறிவிப்பும் ஒவ்வொரு நேபிய தீர்க்கதரிசிக்கும் அறிவித்து உணர்த்தியது. … எல்லோரும் அவரைப்பற்றிப் பேசினார்கள், அவரைப்பற்றிப் பாடினார்கள், அவரைப்பற்றி கனவு கண்டார்கள், அவருடைய தோற்றத்திற்காக ஜெபித்தார்கள், ஆனால் உண்மையில் அவர் இங்கே இருந்தார். நாட்களின் முக்கிய நாள்! ஒவ்வொரு இருண்ட இரவையும் காலை வெளிச்சமாக்குகிற தேவன் வந்து விட்டார்” (Christ and the New Covenant [1997], 250–51).

16:44

Jesus Christ Appears in the Ancient Americas | 3 Nephi 8–11

வீட்டிலும் சபையிலும் கற்றுக்கொள்வதற்கான ஆலோசனைகள்

3 நேபி 8–11

இயேசு கிறிஸ்துவே உலகத்தின் ஒளி.

இருளுக்கும் ஒளிக்கும் தொடர்புடைய, தலைப்புக்கள் 3 நேபி 8–11 முழுவதிலும் திரும்ப திரும்ப சொல்லப்பட்டிருப்பதை நீங்கள் கவனிக்கலாம் . ஆவிப்பிரகார இருள் மற்றும் ஒளி பற்றி இந்த அதிகாரங்களிலிருந்து நீங்கள் என்ன கற்றுக்கொள்கிறீர்கள்? (உதாரணமாக, 3 நேபி 8:19–23; 9:18; 10:9–13 பார்க்கவும்). உங்கள் வாழ்க்கையில் இருளை எது கொண்டு வருகிறது? ஒளியை எது கொண்டு வருகிறது? “உலகத்தின் ஒளியும் ஜீவனுமாயிருக்கிறேன்,” என இரட்சகர் தன்னையே அறிமுகம் செய்யத் தேர்ந்தெடுத்தது ஏன் என நீங்கள் நினைக்கிறீர்கள் (3 நேபி 9:18; 11:11).

3 நேபி 9–11ல் விவரிக்கப்பட்டுள்ள நிகழ்வுகள் மார்மன் புஸ்தகத்தில் மிகவும் பரிசுத்தமானவை. அவற்றை மெதுவாக படித்து, கவனமாக சிந்திக்கவும். உங்களுக்குதவ இங்கே சில கேள்விகள்: உங்களுக்கு வரும் பதிவுகளை பதிவு செய்வதைக் கருத்தில் கொள்ளவும்.

  • நான் இந்த மக்கள் மத்தியில் இருந்தால் எப்படி உணர்ந்திருப்பேன்?

  • இந்த அதிகாரங்களில் இரட்சகரைப் பற்றி என்னைக் கவர்ந்தது எது?

  • இயேசு கிறிஸ்து என் இரட்சகர் என்பதை நான் எப்படி அறிவேன்?

  • இயேசு கிறிஸ்து எப்படி நம் வாழ்க்கையில் ஒளியாக இருக்கிறார்?

எண்ணங்களைப் பதிவு செய்யவும். நீங்கள் பெறும் ஆவிக்குரிய பதிவுகளை நீங்கள் எழுதும்போது, நீங்கள் அதிகமாகப் பெறுவதற்கான வாய்ப்புகள் அதிகம்.

3 நேபி 9–10

இயேசு கிறிஸ்து மன்னிக்க ஆவலாக இருக்கிறார்.

மன்னிக்க கிறிஸ்துவின் ஆர்வத்தைப்பற்றிய ஆதாரத்துக்காக 3 நேபி 9–10ல் தேடுங்கள். இரட்சகரின் அன்பையும் இரக்கத்தையும் நீங்கள் உணர உதவுகிற 3 நேபி 9:13–22 மற்றும் 10:1–6ல் நீங்கள் என்ன காண்கிறீர்கள்? அவர் உங்களைக் “கூட்டிச் சேர்த்து” “போஷிப்பதை” எப்போது உணர்ந்தீர்கள் (3 நேபி 10:4பார்க்கவும்).

3 நேபி 9:19–22

கர்த்தருக்கு “நொறுங்குண் இருதயமும், நருங்குண்ட ஆவியும்” தேவை.

இரட்சகரின் வருகைக்கு முன், மிருக பலிகள் இயேசு கிறிஸ்துவின் பலியின் அடையாளமாக இருந்தன (மோசே 5:5–8 பார்க்கவும்). 3 நேபி 9:20–22ல் என்ன புதிய கட்டளையை இரட்சகர் கொடுத்தார்? அது எப்படி அவரை நோக்கியும் அவருடைய தியாகத்தை நோக்கியும் நமக்கு சுட்டிக்காட்டுகிறது?

நொறுங்குண்டஇருதயத்தையும், நருங்குண்ட ஆவியையும் பலி கொடுப்பதன் அர்த்தம் என்ன? மீட்பர் உங்களிடமிருந்து இந்தத் தியாகத்தை விரும்புவதாக நீங்கள் ஏன் உணர்கிறீர்கள்?

3 நேபி 11:1–8

seminary icon
தேவனின் குரலைக் கேட்கவும் புரிந்து கொள்ளவும் நான் கற்றுக்கொள்ள முடியும்

எப்போது தேவன் உங்களுடன் பேசிக்கொண்டு இருக்கிறார் என்பதை நீங்கள் எவ்வாறு அறிகிறீர்கள்? ஒருவேளை 3 நேபி 11:1–8லிலுள்ள ஜனங்களின் அனுபவம் தேவனின் குரலைக் கேட்பது மற்றும் புரிந்துகொள்வதன் சில கொள்கைகளை புரிய உங்களுக்கு உதவும். ஜனங்கள் கேட்ட தேவனின் குரலின் தன்மைகளையும் அதை சிறப்பாக புரிந்துகொள்ள அவர்கள் செய்தவற்றையும் நீங்கள் கவனிக்கலாம்.

தேவனின் குரல் அல்லது அவருடைய ஆவியின் செல்வாக்கை விவரிக்கும் மற்ற வேதங்களை ஆராய்வதற்கும் இது உதவக்கூடும். சில இங்கே உள்ளன. ஒருவேளை, இவற்றைப் படித்த பிறகு, வெளிப்பாட்டை அடையாளம் காண சில வழிகாட்டுதல்களை எழுதலாம்: 1 இராாக்கள் 19:11–12; கலாத்தியர் 5:22–23; ஆல்மா 32:27–28, 35; ஏலமன் 10:2–4; ஏத்தேர் 4:11–12; கோட்பாடும் உடன்படிக்கைகளும் 9:7–9; 11:11–14.

தேவனின் குரலைக் கேட்டு பின்பற்றிய அனுபவம் உள்ள, இன்றைய தீர்க்கதரிசிகள், அப்போஸ்தலர்கள் மற்றும் பிற சபைத் தலைவர்கள் பேசக்கேட்டு நீங்கள் பயனடையலாம். ஒன்று அல்லது பலவற்றைப் பார்க்கவும்.

தேவனின் குரலை இன்னும் தெளிவாகக் கேட்கவும் அடையாளம் காணவும் நீங்கள் கற்றுக்கொண்டதை எவ்வாறு செயல்படுத்துவீர்கள்?

ரசல் எம். நெல்சனின், “அவருக்குச் செவிகொடுங்கள்,” லியஹோனா, மே 2020, 88–92; ஐயும் பார்க்கவும். 

தன் காயங்களிலுள்ள தழும்புகளை நேபியருக்கு இயேசு காட்டுதல்

ஒவ்வொருவராக – வால்டர் ரானே

3 நேபி 11:8–17

அவரைப்பற்றிய தனிப்பட்ட சாட்சியைப் பெற இயேசு கிறிஸ்து என்னை அழைக்கிறார்.

இயேசு கிறிஸ்து தோன்றியபோது உதாரத்துவ ஸ்தலத்தில் ஆலயத்தில் சுமார் 2,500 பேர் கூடியிருந்தனர் (3 நேபி 17:25 பார்க்கவும்). இந்தப் பெரிய எண்ணிக்கையிருந்தும், அவரது கரங்களிலும் பாதங்களிலும் இருந்த ஆணித்தழும்புகளை உணர இரட்சகர் அவர்களை “ஒவ்வொருவராக” அழைத்தார் (3 நேபி 11:14–15). நீங்கள் வாசிக்கும்போது, அங்கு இருந்திருந்தால் எப்படி இருந்திருக்கும் என்று கற்பனை செய்து பாருங்கள். அவரிடத்தில் “எழுந்து வர” உங்களை என்ன விதங்களில் இரட்சகர் அழைக்கிறார் (3 நேபி 11:14)

பிள்ளைகளுக்கு போதிப்பதற்கான ஆலோசனைகள்

இந்த ஞாயிற்றுக்கிழமை மாதத்தின் ஐந்தாவது ஞாயிற்றுக்கிழமை என்பதால், ஆரம்ப வகுப்பு ஆசிரியர்கள் “பிற்சேர்க்கை B: தேவனின் உடன்படிக்கைப் பாதையில் வாழ்நாள் முழுவதற்குமாக குழந்தைகளைத் தயார்படுத்துதல்” இல் கற்றல் நிகழ்ச்சிகளைப் பயன்படுத்த ஊக்குவிக்கப்படுகிறார்கள்.

3 நேபி 8–9

நான் இருளிலிருக்கும்போது இயேசு கிறிஸ்து என் ஒளியாயிருப்பார்.

  • 3 நேபி 8–9ல் விவரிக்கப்பட்ட அனுபவங்களை உங்கள் பிள்ளைகள் தொடர்புபடுத்த உதவ, ஒரு இருட்டறையில் இந்த அதிகாரங்கள் உள்ள பகுதிகளை நீங்கள் சொல்லலாம் அல்லது ஒலிப்பதிவை கேட்கலாம். மூன்று நாட்கள் இருட்டில் இருந்தது எப்படி இருந்திருக்கும் என கலந்துரையாடவும். பின்னர், எப்படி இயேசு கிறிஸ்து தம்மை“உலகத்தின் … ஒளியாக” அழைத்தார் என்பதைப்பற்றி நீங்கள் பேசலாம் (3 நேபி 9:18). அவர் நமக்கு ஒளியாக இருக்க முடியும்படியாக, இயேசு மக்களையும் நம்மையும் என்ன செய்ய அழைத்தார்? (3 நேபி 9:20–22 பார்க்கவும்).

3 நேபி 10:4–6

கோழி தன் குஞ்சுகளைப் பாதுகாப்பது போல் இயேசு தம் மக்களைப் பாதுகாக்கிறார்.

  • ஒரு கோழி தன் குஞ்சுகளை சேகரிக்கும் கற்பனைச் சித்திரம், இரட்சகரின் தன்மை மற்றும் ஊழியத்தை குழந்தைகள் புரிந்துகொள்ள உதவும் ஒரு சக்திவாய்ந்த கற்பித்தல் கருவியாக இருக்கும். உங்கள் குடும்பத்தினர் ஒரு கோழி மற்றும் குஞ்சுகளின் படத்தைப் பார்க்கும்போது நீங்கள் 3 நேபி 10:4–6ஐப் படிக்கலாம். ஒரு கோழி தன் குஞ்சுகளை ஏன் கூட்டிச் சேர்க்க வேண்டும்? அவருக்கு நெருக்கமாக நம்மைக் கூட்டிச் சேர்க்க இரட்சகர் ஏன் விரும்புகிறார்? பாதுகாப்புக்காக நாம் எப்படி அவரிடம் வருவோம்?

3 நேபி 11:1–15

இயேசு கிறிஸ்து அனைவரையும் அவரண்டை வர அழைக்கிறார்.

  • நீங்கள் 3 நேபி 11:1–15ஐ ஒன்றாக வாசிக்கும்போது உங்கள் பிள்ளைகள் ஆவியானவரை எப்படி உணர உதவுவீர்கள்? இந்த வசனங்களில் தேவனின் அன்பை உணர உதவும் ஏதாவது ஒன்றை அவர்கள் கண்டறிந்தால் உங்களிடம் சொல்லும்படி நீங்கள் அவர்களிடம் கேட்கலாம் இந்த நிகழ்வுகளை வாசித்து சிந்திக்கும்போது நீங்கள் எப்படி உணருகிறீர்கள் என்பதைப் பற்றி உங்கள் பிள்ளைகளுக்குச் சொல்லுங்கள். அவர்களும் தங்கள் உணர்வுகளைப் பகிர்ந்து கொள்ளட்டும்.

    5:40

    Jesus Christ Appears at the Temple | 3 Nephi 11:1–17

3 நேபி 11:1–8

தேவன் என்னிடம் அமர்ந்த மெல்லிய குரலில் பேசுகிறார்.

  • ஒருவேளை நீங்கள் இந்த சில வசனங்களை மெல்லிய “அமர்ந்த” சத்தத்தில் வாசிக்கலாம் (3 நேபி 11:3). பரலோகத்திலிருந்து வரும் குரலைப் புரிந்துகொள்ள ஜனங்கள் என்ன செய்ய வேண்டும்? (வசனங்கள் 5–7 பார்க்கவும்). அவர்களுடைய அனுபவத்திலிருந்து நாம் என்ன கற்றுக்கொள்கிறோம்?

3 நேபி 11:21–26

நான் ஞானஸ்நானம் பெற வேண்டும் என்று இயேசு கிறிஸ்து விரும்புகிறார்.

  • 3 நேபி 11:21–26ஐ நீங்கள் வாசிக்கும்போது, உங்கள் பிள்ளைகள் ஞானஸ்நானம் என்ற வார்த்தையைக் கேட்கும்போதெல்லாம் எழுந்து நிற்கும்படி அழைக்கலாம். ஞானஸ்நானம் பற்றி இயேசு என்ன போதித்தார்? உங்கள் பிள்ளைகள் முன்பு ஞானஸ்நானத்தைப் பார்த்திருந்தால், அவர்கள் பார்த்ததை விவரிக்கச் சொல்லுங்கள். நாம் ஞானஸ்நானம் பெற வேண்டும் என்று இயேசு ஏன் விரும்புகிறார்?

நேபியருக்கு இயேசு தரிசனமாகுதல்

One Shepherd (ஒரே மேய்ப்பன்) – ஹோவர்ட் லயான்