என்னைப் பின்பற்றி வாருங்கள் 2024
செப்டம்பர் 30–அக்டோபர் 6: “இதோ, நானே நியாயப்பிரமாணமும் ஒளியுமாயிருக்கிறேன்.” 3 நேபி 12–16


“செப்டம்பர் 30–அக்டோபர் 6: ‘இதோ, நானே நியாயப்பிரமாணமும் ஒளியுமாயிருக்கிறேன்.’ 3 நேபி 12–16,” என்னைப் பின்பற்றி வாருங்கள்— வீடு மற்றும் சபைக்காக: மார்மன் புஸ்தகம் 2024 (2023)

“செப்டம்பர் 30–அக்டோபர் 6. 3 நேபி 12–16,” என்னைப் பின்பற்றி வாருங்கள்—வீடு மற்றும் சபைக்காக: 2024 (2023)

படம்
பன்னிரு அப்போஸ்தலர்களை இயேசு குறிப்பிடுகிறார்

மூன்றாம் நேபி: நான் தேர்ந்தெடுத்த இந்த பன்னிருவர் – காரி எல். காப்

செப்டம்பர் 30–அக்டோபர் 6: “நானே நியாயப்பிரமாணமும் ஒளியுமாயிருக்கிறேன்”

3 நேபி 12–16

கலிலேயாவில் மலைப் பிரசங்கத்தைக் கேட்க கூடிச்சேர்ந்த இயேசுவின் சீஷர்களைப்போல, உதாரத்துவ ஸ்தல ஆலயத்தில் கூடிச்சேர்ந்த ஜனங்கள் மோசேயின் நியாயப்பிரமாணத்தின்படி வாழ்ந்திருக்கிறார்கள். இது அவர்கள் ஆத்துமாக்களை கிறிஸ்துவை நோக்கி சுட்டிக்காட்டியதால் அவர்கள் இதைப் பின்பற்றினார்கள் (யாக்கோபு 4:5 பார்க்கவும்), இப்போது ஒரு உயர் பிரமாணத்தை அறிவித்து அவர்களுக்கு முன்பாக கிறிஸ்து நின்றார். ஆனால், மோசேயின் நியாயப்பிரமாணத்தின்படி ஒருபோதும் வாழாத நாமும்கூட, இயேசு அவருடைய சீஷர்களுக்கு ஏற்படுத்திய தரம், ஒரு மிக உயர்வானதென அடையாளம் காணமுடியும். “நீங்களும் பூரணசற்குணராயிருக்க வேண்டுமென, வாஞ்சிக்கிறேன்” (3 நேபி 12:48) என அவர் அறிவித்தார். இது உங்களை போதுமானவர்களாக இல்லாததாக உணரவைத்தால் “என்னிடத்தில் வருகிற, ஆவியில் எளிமையுள்ளவர்கள் பாக்கியவான்கள். ஏனெனில் பரலோக இராஜ்ஜியம் அவர்களுடையது” (3 நேபி 12:3) என இயேசு மேலும் சொன்னதை நினைவுகூருங்கள். இந்த உயர் நியாயப்பிரமாணம் ஒரு அழைப்பு, “நீங்கள் என்னிடத்தில் வந்து இரட்சிப்படையுங்கள்” (3 நேபி 12:20) என சொல்லும் மற்றொரு வழி. மோசேயின் நியாயப்பிரமாணத்தைப்போல, இந்த நியாயப்பிரமாணம் நம்மை இரட்சிக்கிற, நம்மை பரிபூரணப்படுத்துகிற ஒரே ஒருவரான கிறிஸ்துவை நோக்கி நமக்கு சுட்டிக்காட்டுகிறது. “இதோ, நானே நியாயப்பிரமாணமும் ஒளியுமாயிருக்கிறேன். என்னை நோக்கிப்பார்த்து, முடிவுபரியந்தம் நிலைத்திருங்கள். அப்பொழுது நீங்கள் ஜீவிப்பீர்கள்” (3 நேபி 15:9) என அவர் சொன்னார்.

வீட்டிலும் சபையிலும் கற்றுக்கொள்வதற்கான ஆலோசனைகள்

3 நேபி 12–14

படம்
வேதபாட வகுப்பு சின்னம்
நான் இயேசு கிறிஸ்துவின் உண்மையான சீஷனாயிருக்கமுடியும்.

3 நேபி 12-14ல் இரட்சகர் கற்பித்தவற்றைப் படித்து நடைமுறைப்படுத்துவதற்கான ஒரு வழி இங்கே உள்ளது: வசனங்களின் தொகுப்பைத் தேர்ந்தெடுத்து, “இயேசு கிறிஸ்துவின் உண்மையான சீடர்கள்…” என்று தொடங்கும் ஒரு வாக்கியத்தில் அவற்றை சுருக்கமாகச் சொல்ல முடியுமா என்று பாருங்கள். எடுத்துக்காட்டாக, 3 நேபி 13:1–8ன் சுருக்கம், “இயேசு கிறிஸ்துவின் உண்மையான சீடர்கள் நன்மை செய்வதற்காக பொதுப் புகழைத் தேடுவதில்லை” என்பதாக இருக்கலாம். இந்த பாகங்களில் இவற்றை முயலவும்:

  • 12:3–16:

  • 12:38–44:

  • 13:19–24:

  • 14:1–5:

  • 14:21–27:

  • உங்களுக்கு உணர்த்தும் பிற பாகங்கள்

இந்த வசனங்களை வாசித்த பிறகு, இயேசு கிறிஸ்துவைப் பின்பற்ற நீங்கள் என்ன செய்ய வேண்டும் என்று உணர்த்தப்பட்டீர்கள்?

3 நேபி 12:48ல் உள்ள கட்டளை மிகப்பெரியதாக தோன்றலாம்—அசாத்தியமானதும் கூட. , மரோனி 10:32–33ன்படி, இரட்சகரைப் போல பரிபூரணமாக இருப்பதை எது சாத்தியமாக்குகிறது?

“,” , “,” ,

பொருள்சார் பாடங்களைப் பயன்படுத்தவும். பரிச்சயமான பொருட்களை குறிப்பிட்டு இரட்சகர் மகத்துவமான சத்தியங்களை போதித்தார். 3 Nephi 12ஐப் பற்றி நீங்கள் படிக்கும்போதோ அல்லது கற்பிக்கும்போதோ இதேபோன்ற ஒன்றைச் செய்யலாம். சிறிது உப்பு, ஒரு மெழுகுவர்த்தி அல்லது ஒரு மேலங்கியைப் பார்ப்பது அல்லது வைத்திருப்பது இரட்சகர் கற்பித்த நித்திய சத்தியங்களைப் பற்றிய கலந்துரையாடலை மேம்படுத்தும்.

3 நேபி 12:1– 2; 15:23–24; 16:1–6

காணாமல் நம்புகிறவர்கள் பாக்கியவான்கள்.

உதாரத்துவ ஸ்தல மக்கள் போல, தேவனின் பிள்ளைகளில் மிகச் சிலரே இரட்சகரைக் கண்டும் அவருடைய குரலைக் கேட்டுமிருக்கிறார்கள். 3 நேபி 12:2; 15:23; மற்றும் 16:4–6ல் விவரிக்கப்பட்டுள்ள ஜனங்களைப்போலவே நம்மில் அதிகமானோர் இருக்கிறார்கள். இந்த வசனங்களிலுள்ள அத்தகைய ஜனங்களுக்கு என்ன வாக்குத்தத்தங்கள் செய்யப்பட்டிருக்கின்றன? உங்கள் வாழ்க்கையில் இந்த வாக்குத்தத்தங்கள் எவ்வாறு நிறைவேற்றப்பட்டிருக்கின்றன?

யோவான் 20:26–29; 2 நேபி 26:12–13; ஆல்மா 32:16–18 ஐயும் பார்க்கவும்.

3 நேபி 12:21–30; 13:1–8, 16–18; 14:21–23

என் இருதயத்தின் ஆசைகளைத் தூய்மைப்படுத்த நான் முயற்சி செய்ய முடியும்.

இந்த அதிகாரங்களில் நீங்கள் கவனிக்கக்கூடிய ஒரு கருப்பொருள், உயர்ந்த நியாயப்பிரமாணத்தின்படி வாழ்வதற்கான இரட்சகரின் அழைப்பாகும், நமது செயல்களில் மட்டுமல்ல, நம் இருதயங்களிலும் நீதியாக இருக்க வேண்டும். பிணக்கு, (3 நேபி 12:21–26) அழியாமை (3 நேபி 12:27–30) ஜெபம் (3 நேபி 13:5–8) மற்றும் உபவாசத்தைபற்றி (3 நேபி 13:16–18) இரட்சகர் பேசும்போது இந்த கருப்பொருளை தேடவும். என்ன பிற எடுத்துக்காட்டுகளை நீங்கள் காணமுடியும்? உங்கள் இருதயங்களின் வாஞ்சைகளை சுத்தப்படுத்த நீங்கள் என்ன செய்ய முடியும்?

3 நேபி 14:7–11

நான் கேட்கும்போதும், தேடும்போதும், தட்டும்போதும் பரலோக பிதா எனக்கு நன்மையான காரியங்களைத் தருவார்.

கேட்கவும், தேடவும், தட்டவும் 3 நேபி 14:7–11ல் கர்த்தரின் அழைப்பை நீங்கள் வாசிக்கும்போது என்ன “நன்மையான காரியங்களை” நீங்கள் கேட்க அவர் விரும்புவாரென சிந்தியுங்கள். எவ்வாறு கேட்பது, தேடுவது மற்றும் தட்டுவது என புரிந்துகொள்ள, பின்வரும் கூடுதலான வசனங்கள் உங்களுக்குதவலாம். நீங்கள் எதிர்பார்க்கிற வழியில் ஏன் சில ஜெபங்கள் பதிலளிக்கப்படுவதில்லை என விளக்குவதற்கும் அவைகள் உதவக்கூடும்: ஏசாயா 55:8–9; ஏலமன் 10:4–5; மரோனி 7:26–27, 33, 37; மற்றும் கோட்பாடும் உடன்படிக்கைகளும் 9:7–9; 88:64. இந்த பத்திகள் நீங்கள் கேட்கும், தேடும் மற்றும் தட்டுவதை எவ்வாறு பாதிக்கலாம்?

மில்டன் காமர்கோ, “கேளுங்கள், தேடுங்கள், தட்டுங்கள்,” லியஹோனா, நவ். 2020, 106–8 ஐயும் பார்க்கவும்.

பிள்ளைகளுக்கு போதிப்பதற்கான ஆலோசனைகள்

3 நேபி 12:14–16

இயேசுவைப் பின்பற்றுவதன் மூலம் நான் ஒரு நல்ல உதாரணமாக இருக்க முடியும்.

  • சில சமயங்களில் தங்கள் உதாரணங்கள் மற்றவர்களை எவ்வளவு ஆசீர்வதிக்கும் என்பதை குழந்தைகள் உணராமல் இருக்கலாம். 3 நேபி 12:14–16ஐப் பயன்படுத்தி, அவர்களின் ஒளி பிரகாசிக்க அவர்களை ஊக்குவிக்கவும். உதாரணமாக, இந்த வசனங்களில் நீங்கள் “நீங்கள்” அல்லது “உங்கள்” என்று வாசிக்கும்போது, உங்கள் பிள்ளைகள் தங்களைச் சுட்டிக்காட்டும்படி கேளுங்கள். இயேசு கிறிஸ்துவைப் பின்தொடரும்போது அவர்களிடம் நீங்கள் காணும் ஒளியைப் பற்றியும், அவரைப் பின்பற்ற உங்களைத் தூண்டும் விதத்தைப் பற்றியும் குழந்தைகளிடம் சொல்லுங்கள்.

  • உங்கள் பிள்ளைகள் தங்கள் ஒளியை மறைக்க வேண்டாம் என்று ஊக்குவிக்க (3 நேபி 12:15 பார்க்கவும்), அவர்கள் மாறி மாறி ஒரு விளக்கையோ அல்லது மற்ற ஒளியையோ மறைத்து அல்லது மூடிவைக்கட்டும். அவர்கள் மற்றவர்களுக்கு ஒரு நல்ல முன்மாதிரியாக இருக்க முடியும் என்று அவர்கள் ஏதாவது குறிப்பிடும் ஒவ்வொரு முறையும் ஒளியை வெளிப்படுத்த முடியும்.

3 நேபி 13:19–21

“பரலோகத்தில் உங்களுக்குப் பொக்கிஷங்களைச் சேர்த்து வையுங்கள்.”

  • இந்த வசனங்களைப் படிப்பது, நாம் பொக்கிஷமாக கருதும் விஷயங்களைப் பற்றிய கலந்துரையாடளைத் தூண்டும். நித்திய மதிப்புள்ள பொக்கிஷங்களை நினைவூட்டும் விஷயங்களைக் கண்டுபிடிக்க நீங்கள் உங்கள் குழந்தைகளை புதையல் வேட்டைக்கு அழைத்துச் செல்லலாம்.

3 நேபி 14:7–11

பரலோக பிதா என் ஜெபங்களைக் கேட்கிறார்.

  • 3 நேபி 14:7ஐ நீங்கள் வாசிக்கும்போது, இந்த வசனத்தில் உள்ள இரட்சகரின் ஒவ்வொரு அழைப்பையும் குறிக்கும் செயல்களை உங்கள் பிள்ளைகள் செய்யலாம். உதாரணமாக, அவர்கள் தங்கள் கைகளை உயர்த்தலாம் (கேட்கலாம்), தங்கள் கைகளால் தொலைநோக்கியை உருவாக்கலாம் (தேடலாம்), அல்லது கதவைத் தட்டுவது போல் நடிக்கலாம் (தட்டலாம்). உங்கள் பிள்ளைகள் தங்கள் ஜெபங்களில் சொல்லக்கூடிய மற்றும் கேட்கக்கூடிய விஷயங்களைச் சிந்திக்க உதவுங்கள்.

  • உங்கள் பிள்ளைகள் ஏதாவது ஒன்றைக் கேட்கும் மற்றும் முற்றிலும் வித்தியாசமான ஒன்றைப் பெறும் விளையாட்டை ரசிக்கலாம். 3 Nephi 14:7–11ல், பரலோகத்திலுள்ள நம் பிதாவைப் பற்றி நாம் என்ன தெரிந்துகொள்ள வேண்டும் என்று இரட்சகர் விரும்புகிறார்?

3 நேபி 14:21–27; 15:1

இரட்சகர் அவர் கற்பிப்பதை நான் கேட்டு செய்ய வேண்டும் என்று விரும்புகிறார்.

  • இந்த வசனங்களிலுள்ள உவமையை மனதில் கற்பனைசெய்ய உங்கள் குழந்தைகளுக்குதவ வழிகளைப்பற்றி நினைத்துப் பாருங்கள். ஒருவேளை அவர்கள் படங்களை வரையலாம், செயல்களைச் செய்யலாம், அல்லது திடமான மற்றும் மணல் அஸ்திபாரங்களின் மேல் பொருட்களைக் கட்டலாம். அவர்கள் 3 நேபி 14:24–27ஐ வாசிக்கும்போது, “புத்திமான்” என்பதற்குப் பதிலாகத் தங்கள் பெயர்களை மாற்றிக்கொள்ளலாம்.  அல்லது 3 Nephi 14:21–27 மற்றும் 15:1 இல் “செய்தல்” என்ற வார்த்தையை கேட்கும் ஒவ்வொரு முறையும் அவர்கள் எழுந்து நிற்கலாம்.

  • இங்கே நீங்கள் முயற்சி செய்யக்கூடிய ஒரு பொருள்சார் பாடம்: உங்கள் குழந்தைகளின் கால்களில் ஒன்று இரட்சகரின் வார்த்தைகளைக் கேட்பதைக் குறிக்கிறது என்றும் மற்றொன்று இரட்சகர் கற்பித்ததைச் செய்வதைக் குறிக்கிறது என்றும் கற்பனை செய்யச் சொல்லுங்கள். உங்கள் குழந்தைகளை அவர்களின் “கேட்கும்” காலில் மட்டுமே சமநிலைப்படுத்த முயற்சிக்கவும். அறைக்குள் பலத்த காற்று வீசினால் என்ன நடக்கும்? பிறகு நீங்களும் உங்கள் குழந்தைகளும் இரட்சகர் எங்களுக்குக் கற்றுக் கொடுத்த குறிப்பிட்ட விஷயங்களைத் தேடலாம்: 3 நேபி 12:3–12, 21–26; 13:5-8.

படம்
நேபியர்களுக்கு இயேசு போதித்தல்

The Savior’s Visit to the People in America (அமெரிக்காவிலுள்ள மக்களை இரட்சகர் சந்தித்தல்) – க்ளென் எஸ். ஹாப்கின்சன்

அச்சிடவும்