“அக்டோபர் 7–13: ‘இதோ, என் சந்தோஷம் நிறைவாயிருக்கிறது.’ 3 நேபி 17–19,” என்னைப் பின்பற்றி வாருங்கள்— வீடு மற்றும் சபைக்காக: மார்மன் புஸ்தகம் 2024 (2023)
“அக்டோபர் 7–13. 3 நேபி 17–19,” என்னைப் பின்பற்றி வாருங்கள்—வீடு மற்றும் சபைக்காக: 2024 (2023)
அக்டோபர் 7–13: “இதோ, என் சந்தோஷம் நிறைவாயிருக்கிறது.”
3 நேபி 17–19
தன் சுவிசேஷத்தைப் போதித்து, அவரது உயிர்த்தெழுந்த சரீரத்திலிருந்த தழும்புகளைப் பார்க்கவும் உணரவும் ஜனங்களுக்கு சந்தர்ப்பம் அளித்து, அவரே வாக்குத்தத்தம் செய்யப்பட்ட இரட்சகர் என சாட்சியளித்து, உதாரத்துவ ஸ்தலத்தில் ஊழியம் செய்து இயேசு கிறிஸ்து அந்த நாளைக் கழித்திருந்தார். இப்போது இது அவர் செல்வதற்கான நேரம். “என் நேரம் சமீபமாயிருக்கிறது” அவர் சொன்னார் (3 நேபி 17:1). அவர் தன் பிதாவினிடத்துக்குத் திரும்ப வேண்டும், மற்றும் அவர் போதித்தவற்றை சிந்திக்க ஜனங்களுக்கு நேரம் தேவை என அவர் அறிவார். ஆகவே மறுநாள் திரும்ப வருவதாக வாக்களித்து, திரளானோரை தங்கள் வீடுகளுக்கு அவர் அனுப்பினார். ஆனால் ஒருவரும் போகவில்லை. தாங்கள் உணர்ந்ததை அவர்கள் சொல்லவில்லை, ஆனால் இயேசுவால் அதை உணர முடிந்தது: அவர் “தங்களோடு சற்று அதிகமாய்த் தங்குவார்” என அவர்கள் நம்பினர். (3 நேபி 17:5). அவருக்கு மற்ற முக்கியமான காரியங்கள் இருந்தன, ஆனால் தேவனின் பிள்ளைகளுக்கு இரக்கம் காட்டுவது அவருக்கு எப்போதும் அதிக முன்னுரிமையாகும். எனவே இயேசு சிறிது காலம் தங்கினார். வேதத்தில் பதிவுசெய்யப்பட்ட ஊழியத்தின் மிக மென்மையான உதாரணம் ஒருவேளை பின்தொடர்ந்தது. அங்கிருந்தவர்களால், விவரிக்க முடியாதது என மட்டுமே சொல்ல முடிந்தது (3 நேபி 17:16–17 பார்க்கவும்). இயேசு தாமே இந்த எளிய வல்லமையான வார்த்தைகளில், இந்த வழக்கமில்லாத ஆவியின் பொழிவை சுருக்கிச் சொன்னார்: “இப்பொழுதும் இதோ, என் சந்தோஷம் நிறைவாயிருக்கிறது” (3 நேபி 17:20).
வீட்டிலும் சபையிலும் கற்றுக்கொள்வதற்கான ஆலோசனைகள்
ஊழியம் செய்தலுக்கு இரட்சகர் எனது பரிபூரண எடுத்துக்காட்டு.
இரட்சகர் தோன்றியபோது சுமார் 2,500 பேர் உடனிருந்தனர், ஆனாலும் அவர்களே ஒவ்வொருவருக்கும் ஊழியம் செய்ய அவர் ஒரு வழியைக் கண்டுபிடித்தார். 3 நேபி 17 18:24–25, 28–32ல் அவர் ஊழியம் செய்த விதத்தைப் பற்றி நீங்கள் என்ன கவனிக்கிறீர்கள்; ? என்ன தேவைகளுக்காக அவர் ஊழியம் செய்தார்? என்ன பண்புகள் அவருடைய ஊழியத்தை திறம்பட செய்தன? அவர் உங்களுக்கு எவ்வாறு ஊழியம் செய்கிறார் என்பதையும் நீங்கள் சிந்திக்கலாம். அவருடைய எடுத்துக்காட்டை நாம் எப்படி பின்பற்ற முடியும்? (3 நேபி 18:24–25 மற்றும் 28–32 பார்க்கவும்.)
3 நேபி17:13–22; 18:15–25; 19:6–9, 15–36
எப்படி ஜெபிப்பது என இரட்சகர் நமக்கு கற்பித்தார்.
உங்களுக்காக இரட்சகர் ஜெபிப்பதைக் கேட்பது எப்படி இருக்கும் என கற்பனை செய்து பாருங்கள். நீங்கள் ஜெபிக்கும் விதத்தை இந்த அனுபவங்கள் எவ்வாறு பாதிக்கின்றன? 3 நேபி17:13–22; 18:15–25; மற்றும் 19:6–9, 15–36 வாசிக்கும்போது இதைச் சிந்திக்கவும். ஜெபத்தைப் பற்றிய இயேசு கிறிஸ்துவின் முன்மாதிரி மற்றும் போதனைகளிலிருந்து நீங்கள் என்ன கற்றுக்கொள்கிறீர்கள்? எப்படி, எப்போது, எங்கே, யாருக்காக, ஏன் ஜெபிக்க வேண்டும் என்பது பற்றிய உள்ளுணர்வுகளைத் தேடுவதைக் கருத்தில் கொள்ளுங்கள். இந்த வசனங்களிலிருந்து வேறு என்ன உள்ளுணர்வுகளை நீங்கள் பெறுகிறீர்கள்?
கோட்பாடும் உடன்படிக்கைகளும் 10:5 ஐயும் பார்க்கவும்.
நான் திருவிருந்தில் பங்கேற்கும்போது, நான் ஆவிக்குரிய விதமாக நிரப்பப்பட முடியும்.
நாம் அடிக்கடி ஏதாவது செய்யும் போது, அது வழக்கமான அல்லது சாதாரணமாக மாறும். சில சமயங்களில் யோசிக்காமல் செய்து முடிப்போம். திருவிருந்தின் வாராந்திர நியமத்தின் மூலம் அது நடப்பதிலிருந்து எவ்வாறு தடுக்க முடியும்? நீங்கள் 3 நேபி 18:1–12 வாசிக்கும்போது, ஒவ்வொரு முறையும் நீங்கள் திருவிருந்தை எடுக்கும்போது எப்படி ஆவிக்குரிய ரீதியில் “நிரப்பப்படுவீர்கள்” என்று சிந்தியுங்கள் (3 நேபி 20:1–9ஐயும் பார்க்கவும்). வசனங்கள் 5– 7, 11ன் படி, நீங்கள் “எப்போதும்” செய்ய வேண்டிய சில விஷயங்கள் என்ன? இயேசு ஏன் நமக்கு திருவிருந்து நியமங்களை வழங்கினார், மேலும் இந்த திருவிருந்து உங்கள் வாழ்க்கையில் அவருடைய நோக்கங்களை நிறைவேற்றுகிறதா என்பதையும் நீங்கள் சிந்திக்கலாம். திருவிருந்து ஏன் உங்களுக்கு பரிசுத்தமானது?
இந்த ஆலோசனைகளில் உங்களுக்கு முக்கியமானதாக எது தோன்றுகிறது? திருவிருந்து மற்றும் வாரம் முழுவதும் உங்கள் ஆராதனையை மேம்படுத்த நீங்கள் என்ன செய்யலாம்?
இன்னும் அர்த்தமுள்ளதாக ஆராதிக்க வேறு என்ன செய்யலாம்? இதுபோன்ற கேள்விகளை நீங்களே கேட்டுக்கொள்ளலாம்: “இரட்சகரின் தியாகம் எனது அன்றாட வாழ்க்கையை எவ்வாறு பாதிக்கிறது?” “அவருடைய சீடனாக நான் என்ன சிறப்பாகச் செய்கிறேன், நான் என்ன மேம்படுத்த முடியும்?”
மத்தேயு 26:26–28; ஜெப்ரி ஆர் ஹாலன்ட், “இதோ தேவ ஆட்டுக்குட்டி,” லியஹோனா, மே 2019, 44–46; ஐயும் பார்க்கவும்.
இயேசு கிறிஸ்துவின் ஒளியை என்னால் “உயரப்பிடிக்க” முடியும்.
நீங்கள் இயேசு கிறிஸ்துவைப் பின்பற்றுபவர்களில் ஒருவர் என்பதைத் தவிர அவரைப் பற்றி எதுவும் தெரியாத ஒரு நண்பர் உங்களுக்கு இருந்தார் என்று வைத்துக்கொள்வோம். உங்கள் செயல்களின் அடிப்படையில் உங்கள் நண்பர் அவரைப் பற்றி என்ன முடிவு செய்வார்? “உலகிற்குப் பிரகாசிக்கும்படி உங்கள் ஒளியை உயர்த்திப்பிடிப்பது” உங்களுக்கு என்ன அர்த்தமாகிறது? (3 நேபி 18:24). 3 நேபி 18:22–25ல் இரட்சகர் கொடுத்த வேறு என்ன அழைப்புகள் அந்த ஒளியை நிலைநிறுத்த உதவுகின்றன?
போனி ஹெச். கார்டன், “அவர்கள் காணும்படிக்கு,” லியஹோனா, மே 2020, 78–80 ஐயும் பார்க்கவும்.
இயேசு கிறிஸ்துவின் சீஷர்கள் பரிசுத்த ஆவியின் வரத்தை நாடுகிறார்கள்.
உங்களுடைய அண்மை ஜெபங்களைப்பற்றி சிந்தியுங்கள். உங்கள் ஆழமான வாஞ்சைகளைப்பற்றி, உங்கள் ஜெபங்கள் உங்களுக்கு போதிப்பது என்ன? இரட்சகரின் சமூகத்தில் ஒரு நாளைக் கழித்தபின், திரளானோர் “தாங்கள் மிகவும் வாஞ்சித்த பரிசுத்த ஆவியானவரின் வரத்திற்காக ஜெபித்தார்கள்” (3 நேபி 19:9). பரிசுத்த ஆவியின் வரம் வரம் ஏன் வாஞ்சிக்கத்தக்கது? இந்த பாகங்களை வாசிக்கும்போது, பரிசுத்த ஆவியின் தோழமைக்காக உங்கள் சொந்த வாஞ்சையைப்பற்றி சிந்தியுங்கள். அந்த தோழமையை நீங்கள் எப்படி நேர்மையாக தேடலாம்?
பிள்ளைகளுக்கு போதிப்பதற்கான ஆலோசனைகள்
இரட்சகர் பரலோக பிதாவின் ஒவ்வொரு பிள்ளையையும் நேசிக்கிறார்.
-
மக்கள் மீது இரட்சகரின் அன்பை வலியுறுத்தும் (வசனங்கள் 7 மற்றும் 20–25 போன்றவை) 3 Nephi 17ல் உள்ள சொற்றொடர்கள் அல்லது வசனங்களைப் படிப்பதைக் கருத்தில் கொள்ளவும். அப்போது உங்கள் பிள்ளைகள் இயேசுவோடு இருக்கும் படத்தை வரையலாம். அவர்கள் செய்யும்போது, இயேசு தம்முடைய அன்பைக் அவர்களுக்குக் காட்டிய வழிகளைப் பற்றி சிந்திக்க அவர்களுக்கு உதவுங்கள்.
நான் திருவிருந்தை எடுக்கும்போது இயேசுவைப் பற்றி சிந்திக்க முடியும்.
-
திருவிருந்தின் போது என்ன நடக்கிறது என்பதைச் சொல்ல உங்கள் குழந்தைகளை நீங்கள் அழைக்கலாம். நீங்கள் 3 நேபி 18:1–12 வாசித்து, இன்று நாம் செய்வதைப் போல உள்ளவற்றை உங்கள் பிள்ளைகள் கேட்கும்போது கையை உயர்த்தச் சொல்லுங்கள். திருவிருந்தின் போது நாம் எதை நினைவில் கொள்ள வேண்டும் அல்லது சிந்திக்க வேண்டும் என்று இயேசு கிறிஸ்து விரும்புகிறார்? (3 நேபி 18:7, 11 பார்க்கவும்).
3 நேபி 18:15–24; 19:6–9, 15–36
எப்படி ஜெபிப்பது என இரட்சகர் நமக்கு கற்பித்தார்.
-
நீங்களும் உங்கள் குழந்தைகளும் 3 நேபி 18:18–21 வாசித்து, ஜெபத்தைப் பற்றி இயேசு கற்பித்ததைப் பற்றி பேசலாம். உங்கள் பிள்ளைகள் ஜெபிக்கும்போது அவர்கள் எப்படி உணருகிறார்கள் என்பதை உங்களுக்குச் சொல்ல அழைப்பது அவர்கள் ஜெபத்தின் சாட்சியைப் பகிர்ந்துகொள்ள உதவும்.
-
ஜெபத்தின் சில பொக்கிஷமான ஆசீர்வாதங்களுக்காக குழந்தைகள் தேடுவது வேடிக்கையாக இருக்கலாம். நீங்கள் பின்வரும் வசன குறிப்புகளை காகிதத்தில் எழுதி அவற்றை மறைக்கலாம்: 3 நேபி 18:15; 3 நேபி 18:20; 3 நேபி 18:21; 3 நேபி 19:9; மற்றும் 3 நேபி 19:23. இயேசு கிறிஸ்து அல்லது அவருடைய சீடர்கள் ஜெபத்தைப் பற்றி கற்பித்த விஷயங்களைத் தேடி உங்கள் பிள்ளைகள் காகிதங்களைக் கண்டுபிடித்து வசனங்களைப் படிக்கலாம்.