“செப்டம்பர் 2–8: ‘கர்த்தரை நினைவுகூருங்கள்’ ஏலமன் 7–12,” என்னைப் பின்பற்றி வாருங்கள்— வீடு மற்றும் சபைக்காக: மார்மன் புஸ்தகம் 2024 (2023)
“செப்டம்பர் 2–8. ஏலமன் 7–12,” என்னைப் பின்பற்றி வாருங்கள்—வீடு மற்றும் சபைக்காக: 2024 (2023)
செப்டம்பர் 2–8: “கர்த்தரை நினைவுகூருங்கள்”
ஏலமன் 7–12
நேபியின் தகப்பனாகிய ஏலமன், தனது மகன்களை “நினைவு கூருங்கள், நினைவு கூருங்கள்” என்று வலியுறுத்தினான். அவர்கள் தங்கள் முன்னோர்களை நினைவுகூரவும், தீர்க்கதரிசிகளின் வார்த்தைகளை நினைவுகூரவும், அனைத்தையும் விட, “நமது மீட்பராகிய கிறிஸ்துவை” நினைவுகூரவும் வேண்டும் என அவன் விரும்பினான் (ஏலமன் 5:5–14 பார்க்கவும்). நேபி நினைவுகூர்ந்தான் என்பது தெளிவாகிறது, ஏனெனில் இதே செய்தியைத்தான் பல வருடங்களுக்குப் பிறகு அவன் “சோர்ந்து போகாமல்” ஜனங்களுக்கு அறிவித்தான். (ஏலமன் 10:4) “தேவனை நீங்கள் மறந்து போகக் கூடுமோ”? என அவன் கேட்டான் (ஏலமன் 7:20). பிரசங்கித்தல், ஜெபித்தல், அற்புதங்களை நடப்பித்தல் மற்றும் பஞ்சத்திற்காக தேவனிடம் விண்ணப்பித்தல் போன்ற நேபியின் அனைத்து முயற்சிகளும், ஜனங்கள் தேவனிடத்தில் திரும்பி அவரை நினைவுகூர உதவும் முயற்சிகள்தான். பல வழிகளில், தேவனை மறப்பது அவரை அறியாமல் இருப்பதை விட பெரிய பிரச்சனை. நமது மனங்கள் “உலகத்தின் வீணானவைகளால்” விலக்கப்பட்டு பாவத்தால் மறைக்கப்படும்போது, அவரை மறப்பது எளிதாகிறது (ஏலமன் 7:21; ஏலமன் 12:2 ஐயும் பார்க்கவும்). ஆனால் நேபியின் ஊழியம் காட்டுகிறதைப் போல, நினைவுகூரவும், “உங்கள் தேவனாகிய கர்த்தரிடத்தில் திரும்புவதற்கும்” ஒருபோதும் தாமதமாகவில்லை (ஏலமன் 7:17).
வீட்டிலும் சபையிலும் கற்றுக்கொள்வதற்கான ஆலோசனைகள்
தேவனின் சித்தத்தை தீர்க்கதரிசிகள் ஜனங்களுக்கு வெளிப்படுத்துகிறார்கள்.
தீர்க்கதரிசிகள் என்ன செய்கிறார்கள் என்பதைப் பற்றி அறிய குறிப்பாக ஏலமன் 7–11 ஒரு நல்ல இடம். இந்த அதிகாரங்களை நீங்கள் வாசிக்கும்பொழுது, கர்த்தருடன் நேபியின் செயல்கள், சிந்தனைகள், மற்றும் உரையாடல்களுக்கு கவனம் செலுத்தவும். தீர்க்கதரிசிகளின் பங்கை நன்கு புரிந்துகொள்ள நேபியின் ஊழியம் உங்களுக்கு எவ்விதம் உதவுகிறது? சில எடுத்துக்காட்டுகள் இங்கே கொடுக்கப்பட்டுள்ளன. நீங்கள் வேறு என்ன காண்கிறீர்கள்?
-
ஏலமன் 7:17–22: தீர்க்கதரிசிகள் மனந்திரும்புதலுக்காக கூக்குரலிட்டு, பாவங்களின் விளைவுகள் குறித்து எச்சரிக்கிறார்கள்.
நீங்கள் படித்தவற்றின் அடிப்படையில், தீர்க்கதரிசி என்றால் என்ன, அவர் என்ன செய்கிறார் என்பதை எப்படி விவரிப்பீர்கள்? ஒரு சுருக்கமான வரையறையை எழுதுவதைக் கருத்தில் கொள்ளவும்.
ஏலமன் 7:11–29ல் நேபி எவ்வளவு தைரியமானவன் என்பதை கவனித்தீர்களா? நேபி செய்தது போல் தீர்க்கதரிசிகள் சில சமயங்களில் தைரியமாக பேச வேண்டும் என்று நீங்கள் ஏன் நினைக்கிறீர்கள்? “ஆச்சரியப்படாதீர்கள்” என்ற பகுதியில் மூப்பர் நீல் எல். ஆண்டர்சனின் செய்தி “தேவனின் தீர்க்கதரிசி” (லியஹோனா, மே 2018, 26)ல் பதில்களைக்காண கருத்தில்கொள்ளுங்கள் .
இந்த சத்தியங்களை மனதில் கொண்டு, கர்த்தர் தம்முடைய தீர்க்கதரிசிகளின் ஊழியத்தின் மூலம் உங்களை எவ்வாறு ஆசீர்வதித்தார் என்பதை சிந்தித்துப் பாருங்கள். நமது ஜீவிக்கும் தீர்க்கதரிசி மூலம் அவர் சமீபத்தில் உங்களுக்கு என்ன கற்பித்தார்? செவிகொடுக்கவும், கர்த்தருடைய வழிகாட்டுதலை பின்பற்றவும் நீங்கள் என்ன செய்கிறீர்கள்?
அடையாளங்கள் மற்றும் அற்புதங்களை விட இயேசு கிறிஸ்துவில் என் விசுவாசம் கட்டியெழுப்பப்பட வேண்டும்.
ஒருவரின் இருதயத்தை மாற்ற அடையாளங்கள் அல்லது அற்புதங்கள் போதுமானால், ஏலமன் 9ல் நேபி காட்டிய விசேஷித்த அடையாளங்களால் நேபியர் அனைவரும் மனமாற்றப்பட்டிருப்பார்கள். ஆனால் அது நடக்கவில்லை. ஏலமன் 9–10ல் உள்ள அற்புதத்திற்கு மக்கள் பல்வேறு விதங்களில் வினையாற்றியதைக் கவனியுங்கள். உதாரணமாக, ஏலமன் 9:1–20ல் உள்ள ஐந்து பேர் மற்றும் தலைமை நியாயாதிபதிகளின் பதில்களை நீங்கள் ஒப்பிடலாம் (ஏலமன் 9:39–41; 10:12–15 ஐயும் பார்க்கவும்). இயேசு கிறிஸ்துவில் உங்கள் விசுவாசத்தை எவ்வாறு வளர்ப்பது என்பது பற்றி இந்த அனுபவங்களிலிருந்து நீங்கள் என்ன கற்றுக்கொள்கிறீர்கள்?
(3 நேபி 1:22 2:1–2ஐயும் பார்க்கவும்.)
தம்முடைய சித்தத்தை நாடி, அவருடைய கட்டளைகளைக் கடைப்பிடிக்க முயலுகிற மக்களுக்கு கர்த்தர் வல்லமையைக் கொடுக்கிறார்.
நீங்கள் ஏலமன் 10:1–12 படிக்கும்போது, கர்த்தரின் நம்பிக்கையைப் பெற நேபி என்ன செய்தான் என்பதைக் கவனியுங்கள். தன் சொந்த சித்தத்தை விட, கர்த்தரின் சித்தத்தை அவன் நாடுகிறான் என அவன் எப்படி காட்டினான்? நீங்கள் என்ன செய்ய வேண்டுமென நேபியின் அனுபவம் உணர்த்துகிறது?
தேவனின் வார்த்தையைச் சிந்திப்பது வெளிப்பாட்டிற்கு அழைப்பு விடுகிறது.
நீங்கள் விழத்தள்ளப்பட்டும், கவலையுடனும் அல்லது குழம்பியும் எப்போதாவது உணரும்போது, ஏலமன் 10:2–4ல் நேபியின் எடுத்துக்காட்டிலிருந்து நீங்கள் ஒரு முக்கிய பாடத்தை கற்கலாம். அவன் “தள்ளப்பட்டதாக” உணர்ந்தபோது, அவன் என்ன செய்தான்? ( வசனம் 3).
சிந்திக்கும் பழக்கத்தை நீங்கள் எப்படி உருவாக்கலாம்?
நான் கர்த்தரை நினைவுகூர வேண்டும் என அவர் விரும்புகிறார்.
குடும்ப உறுப்பினரின் பிறந்த நாள் அல்லது பரீட்சைக்கான தகவல் போன்ற முக்கியமான தகவல்களை எப்படி நினைவில் வைத்திருப்பீர்கள்? “கர்த்தரை நினைவுகூர” வேண்டிய முயற்சிக்கு இது எப்படி ஒத்திருக்கிறது? (ஏலமன் 12:5). அது எப்படி வித்தியாசமானது?
ஏலமன் 12 மக்கள் கர்த்தரை மறக்கச் செய்யும் பல விஷயங்களை விவரிக்கிறது. ஒருவேளை நீங்கள் அவற்றைப் பட்டியலிடலாம் மற்றும் அவைகள் உங்களை அவரிடமிருந்து திசை திருப்ப முடியுமா என்று சிந்திக்கலாம். இயேசு கிறிஸ்துவை நினைவுகூர உங்களுக்கு எது உதவுகிறது? நீங்கள் கற்றுக்கொண்டவற்றின் அடிப்படையில் என்ன மாற்றங்கள் செய்ய உணர்த்தப்பட்டிருக்கிறீர்கள்?
கோட்பாடும் உடன்படிக்கைகளும் 20:77, 79 பார்க்கவும்.
பிள்ளைகளுக்கு போதிப்பதற்கான ஆலோசனைகள்
நான் கர்த்தரை நினைவுகூர வேண்டும் என அவர் விரும்புகிறார்.
-
கர்த்தரை நினைவுகூருவது பற்றிய உரையாடலைத் தொடங்க, நீங்கள் எதையாவது மறந்த காலத்தைப் பற்றி உங்கள் குழந்தைகளுக்குச் சொல்லலாம். அவர்கள் தங்கள் சொந்த அனுபவங்களைப் பகிர்ந்து கொள்ளட்டும். நீங்கள் ஏலமன் 7:20–21ஐ ஒன்றாக வாசித்து, தேவனை மறப்பது என்றால் என்ன என்று உங்கள் குழந்தைகளிடம் கேட்கலாம். ஒருவேளை உங்கள் பிள்ளைகள் நாம் கர்த்தரை மறந்துவிடக்கூடிய விஷயங்களைப் படங்களாய் வரைந்து, இயேசுவின் படத்தை மறைக்க அவர்களின் ஓவியத்தைப் பயன்படுத்தலாம். அப்போது, அவரை நினைவுகூரத் தாங்கள் செய்யக்கூடிய விஷயங்களைப் பற்றி அவர்கள் சிந்திக்கலாம். அவர்கள் தங்கள் எண்ணங்களைப் பகிர்ந்து கொள்ளும்போது, இரட்சகரின் படம் வெளிப்படும் வரை ஓவியங்களை ஒவ்வொன்றாக எடுக்கலாம்.
தீர்க்கதரிசிகள் இயேசு கிறிஸ்துவைப்பற்றி சாட்சியமளிக்கிறார்கள்.
-
இயேசு கிறிஸ்துவைப் பற்றி போதித்த தீர்க்கதரிசிகளின் பெயர்களைக் கண்டறிய, உங்கள் பிள்ளைகளுக்கு ஏலமன் 8:13–23ஐத் தேட உதவுங்கள். இயேசுவின் படத்தைக் கண்டுபிடிக்கும் ஒவ்வொரு முறையும் அவர்கள் அதைப் பிறரிடம் கொடுக்கலாம். ஜீவிக்கும் தீர்க்கதரிசி இரட்சகரைப்பற்றி நமக்கு என்ன போதித்திருக்கிறார்?
-
ஒருவேளை நீங்களும் உங்கள் குழந்தைகளும் பாடலில் இருந்து ஒரு முக்கிய சொற்றொடரைத் தேர்ந்தெடுத்து, பல காகித கால்தடங்களில் ஒவ்வொரு சொற்றொடரிலிருந்து ஒரு வார்த்தையை எழுதலாம். பின்னர் நீங்கள் மீட்பரின் படத்திற்கு வழிகாட்டும் கால்தடங்களை தரையில் வைக்கலாம், மேலும் உங்கள் குழந்தைகள் படத்தை நோக்கி கால்தடங்களைப் பின்பற்றலாம். தீர்க்கதரிசியைப் பின்பற்றுவது எப்படி இயேசு கிறிஸ்துவிடம் நம்மை அழைத்துச் சென்றது?
தேவனுடைய வார்த்தைகளை சிந்திப்பது வெளிப்படுத்தலை அழைக்கிறது.
-
சிந்திப்பதைப் போன்ற வேறு சில சொற்கள் யாவை? ஒருவேளை நீங்கள் ஏலமன் 10:1–3ஐ ஒன்றாகப் படித்து, சிந்திப்பது என்ற வார்த்தையை மற்ற வார்த்தைகளுடன் மாற்றலாம். உங்கள் பிள்ளைகள் தங்கள் வேதப் படிப்பின் ஒரு பகுதியாக சிந்தித்துப் பார்ப்பதற்கான வழிகளைப் பற்றி அவர்களிடம் பேசுங்கள்.
நான் பரலோக பிதாவுக்குக் கீழ்ப்படிவேன்.
-
நேபி கடினமான காரியத்தைச் செய்யும்போதும் பரலோக பிதாவுக்குக் கீழ்ப்படிந்தான். இதற்கு உதாரணமாக, நீங்களும் உங்கள் குழந்தைகளும் ஏலமன் 10:2, 11–12 வாசிக்கலாம். ஒருவேளை உங்கள் பிள்ளைகள் நேபி செய்தது போல் நடித்துக் காட்டலாம்—அறையின் ஒரு பக்கத்திலிருந்து (அவர்கள் வீட்டிற்குச் செல்வது போல்), நிறுத்தி, திரும்பி, அறையின் மறுபுறம் (மக்களுக்குக் கற்பிக்கத் திரும்புவது போல) நடந்து செல்லலாம். நாம் செய்ய பரலோக பிதா விரும்பும் சில விஷயங்கள் யாவை?