என்னைப் பின்பற்றி வாருங்கள் 2024
செப்டம்பர் 9–15: “மிகுந்த மகிழ்ச்சியை உண்டாக்குகிற நற்செய்தி” ஏலமன் 13–16


செப்டம்பர் 9–15: “மிகுந்த மகிழ்ச்சியை உண்டாக்குகிற நற்செய்தி” ஏலமன் 13-16: என்னைப் பின்பற்றி வாருங்கள்— வீடு மற்றும் சபைக்காக: மார்மன் புஸ்தகம் 2024 (2023)

“செப்டம்பர் 9–15. ஏலமன் 13-16,” என்னைப் பின்பற்றி வாருங்கள்—வீடு மற்றும் சபைக்காக: 2024 (2023)

படம்
மதில்மேல் நின்று லாமானியனான சாமுவேல் போதித்தல்

Samuel the Lamanite on the Wall (மதில்மேல் லாமானியனான சாமுவேல்) – அர்னால்ட் ப்ரிபெர்க்

செப்டம்பர் 9–15: “மிகுந்த மகிழ்ச்சியை உண்டாக்குகிற நற்செய்தி”

ஏலமன் 13–16

சாரகெம்லாவில் “மகிழ்ச்சியான நற்செய்தியை” முதல் முறை லாமானியனான சாமுவேல் பகிர முயன்றபோது (ஏலமன் 13:7), அவன் புறக்கணிக்கப்பட்டு, கடின இருதயமுள்ள நேபியர்களால் வெளியே தள்ளப்பட்டான். சாமுவேலின் செய்தியைப் பெறுவதிலிருந்து அவர்களைத் தடுக்க ஊடுருவ முடியாத சுவற்றை அவர்களது இருதயங்களைச் சுற்றிலும் அவர்கள் கட்டியுள்ளது போலவுள்ளதாக நீங்கள் சொல்லலாம். தான் அளித்த செய்தியின் முக்கியத்துவத்தை சாமுவேல் புரிந்துகொண்டான் மற்றும் “அவன் மீண்டும் திரும்பிவந்து தீர்க்கதரிசனம் சொல்ல வேண்டும்” என்ற தேவனின் கட்டளையைப் பின்பற்றியதால் விசுவாசத்தைக் காட்டினான் (ஏலமன் 13:3). “கர்த்தருடைய வழியை ஆயத்தப்படுத்தும்போதும்” (ஏலமன் 14:9) அவரது தீர்க்கதரிசிகளை பின்பற்ற முயற்சிக்கும்போதும் சாமுவேலைப் போல, நாம் சுவர்களை எதிர்கொள்கிறோம். சாமுவேலைப் போல, “நிச்சயமாக வரப்போகிற,” இயேசு கிறிஸ்துவைப்பற்றி நாமும் சாட்சியளித்து, “அவரது நாமத்தை நம்ப” அனைவரையும் அழைக்கிறோம் (ஏலமன் 13:6; 14:13). எல்லோரும் கேட்க மாட்டார்கள், சிலர் நம்மை தீவிரமாக எதிர்க்கலாம். ஆனால் கிறிஸ்துவில் விசுவாசத்துடன் இச்செய்தியை நம்புகிறவர்கள், இது உண்மையாகவே “மிகுந்த மகிழ்ச்சியை உண்டாக்குகிற நற்செய்தி” என காண்கிறார்கள் (ஏலமன் 16:14).

வீட்டிலும் சபையிலும் கற்றுக்கொள்வதற்கான ஆலோசனைகள்

ஏலமன் 13

கர்த்தர் தன் தீர்க்கதரிசிகள் மூலம் எச்சரிக்கைகளைக் கொடுக்கிறார்.

வேதங்களில், சுவற்றின் மீது அல்லது கோபுரத்தில் நின்று அபாயங்களைப்பற்றி எச்சரிக்கிற, காவல்காரர்களுக்கு தீர்க்கதரிசிகள் சில சமயங்களில் ஒப்பிடப்படுகின்றனர். (ஏசாயா 62:6; எசேக்கியேல் 33:1–7 பார்க்கவும்). ஏலமன் 13ல் உள்ள சாமுவேலின் வார்த்தைகளை நீங்கள் படிக்கும்போது, அவன் உங்களுக்கு எப்படி ஒரு காவலாளியாக இருக்கிறான் என்பதைக் கருத்தில் கொள்ளுங்கள். நம் காலத்துக்குப் பொருத்தமானதாகத் தோன்றுவது குறித்து அவன் என்ன சொன்னான்? (குறிப்பாக வசனங்கள் 8, 21–22, 26–29, 31, மற்றும் 38 பார்க்கவும்). உதாரணமாக, மனந்திரும்புதலைப்பற்றி, தாழ்மை மற்றும் செல்வம் “அக்கிரமம் செய்வதில்” மகிழ்ச்சியைத் தேடுவது பற்றி அவன் என்ன போதித்தான்?

தற்கால தீர்க்கதரிசிகள் மூலம் கர்த்தர் கொடுத்த இதே போன்ற எச்சரிக்கைகளை நீங்கள் சமீபத்திய மாநாட்டு செய்திகளிலும் தேடலாம். இந்த எச்சரிக்கைகளைப் பற்றி நீங்கள் என்ன செய்ய தூண்டப்பட்டதாக உணர்கிறீர்கள்?

மாதிரிகளைத் தேடுங்கள். ஒரு மாதிரி என்பது ஒரு பணியை நிறைவேற்றுவதற்கான வழிகாட்டியாகப் பயன்படுத்தக்கூடிய ஒரு திட்டம் அல்லது மாதிரி. வேதங்களில், ஜனங்களை எச்சரிக்க தம் ஊழியர்களை அனுப்புதல் போன்று, கர்த்தர் தன் பணியை எப்படி நிறைவேற்றுகிறார் என காட்டுகிற மாதிரிகளை நாம் காண்கிறோம்.

படம்
குடும்பத்தினர் பொது மாநாடு பார்த்தல்

தீர்க்கதரிசிகளுக்கு நாம் செவிசாய்க்கும்போது, அவர்கள் நம்மை இயேசு கிறிஸ்துவிடம் சுட்டிக்காட்டுவார்கள்.

ஏலமன் 13–15

படம்
seminary icon
தேவன் என்னை மனந்திரும்ப அழைக்கிறார்.

தேவனின் நியாயத்தீர்ப்புகளைப் பற்றிய சாமுவேலின் எச்சரிக்கைகள், தொடர்ந்து மனந்திரும்புவதற்கான இரக்கமுள்ள அழைப்பை உள்ளடக்கியது. ஏலமன் 13–15 முழுவதும் இந்த அழைப்புகளைத் தேடுங்கள் (குறிப்பாக ஏலமன் 13:6–11; 14:15–19; 15:7–8 பார்க்கவும்). இந்த வசனங்களிலிருந்து மனந்திரும்புதலைப்பற்றி நீங்கள் என்ன கற்கிறீர்கள்? சிலர் மனந்திரும்புதலை ஒரு கடுமையான தண்டனையாக பார்க்கிறார்கள்—தவிர்க்க வேண்டிய ஒன்றானதாக உங்கள் கருத்துப்படி, நேபியர்கள், மனந்திரும்புவதை எப்படிப் பார்க்கவேண்டுமென்றுசாமுவேல் விரும்பினான்?

மனந்திரும்புதலை அவன் எவ்வாறு வரையறுக்கிறான்? அவருடைய செய்தியில் நீங்கள் உண்மையான மனந்திரும்புதலின் என்ன ஆசீர்வாதங்களைக் காண்கிறீர்கள்? தீர்க்கதரிசி எங்களை மாற்ற அழைத்த குறிப்பிட்ட விஷயங்களையும் நீங்கள் தேடலாம். நீங்கள் மாற வேண்டும் என்று பரிசுத்த ஆவியானவர் உங்களுக்கு என்ன சொல்கிறார்? நீங்கள் பெறும் தனிப்பட்ட வெளிப்பாட்டை எழுதுவதைக் கருத்தில் கொள்ளவும்.

உங்கள் நடத்தையை மாற்றுவதை விட மனந்திரும்புதல் எவ்வாறு வேறுபட்டது? மனந்திரும்புவதற்கான தேவனின் அழைப்பை ஏற்றுக்கொள்வது ஏன் முக்கியம்?

ஏலமன் 14; 16:13–23

இரட்சகரின் பிறப்பு மற்றும் இறப்புக்கு சாட்சியமளிக்க தேவன் அடையாளங்களையும் அற்புதங்களையும் அனுப்பினார்.

ஜனங்கள் “அவரது வருகையை அறியும்படியும்” “அவரது நாமத்தை நம்பும்படியும்” இரட்சகரின் பிறப்பு மற்றும் இறப்புக்கான அடையாளங்களை கர்த்தர் வழங்கியுள்ளார் என்று ஏலமன் 14ல், சாமுவேல் விளக்கினான் (ஏலமன் 14:12). நீங்கள் ஏலமன் 14 படிக்கும்போது, வசனங்கள் 1–8ல், இரட்சகரின் பிறப்பின் அடையாளங்கள் மற்றும் வசனங்கள் 20–28ல் அவரது இறப்பைப்பற்றிய அடையாளங்களையும் கவனிக்கவும். இயேசு கிறிஸ்துவின் பிறப்பு மற்றும் இறப்பைக் குறிக்க, இந்த அடையாளங்கள் சிறந்த வழிகளாயிருக்கும் என நீங்கள் ஏன் நினைக்கிறீர்கள்?

பிற மிகத் தனிப்பட்ட மற்றும் குறைவான வியத்தகு அடையாளங்கள் “[இரட்சகரின்] நாமத்தை நம்புவதற்கு” நமக்கு உதவும். அவர் மீதான உங்கள் நம்பிக்கையை வலுப்படுத்த அவர் என்ன செய்தார்?

ஏலமன் 16:13–23ல் அடையாளங்களைப்பற்றி என்ன எச்சரிக்கை கொடுக்கப்பட்டிருக்கிறது? இந்த வசனங்களில் விவரிக்கப்பட்டுள்ள ஜனங்களின் மனோபாவத்தை நீங்கள் எவ்வாறு தவிர்க்கலாம்?

ஆல்மா 30:43–52;ஐயும் பார்க்கவும்).

ஏலமன் 15:3

கர்த்தரிடமிருந்து கண்டிப்பு என்பது அவருடைய அன்பின் அடையாளம்.

சாமுவேலின் வார்த்தைகளில் பல கடுமையான கண்டிப்புக்கள் உள்ளன, ஆனால் ஏலமன் 15:3 கர்த்தரிடமிருந்து கண்டிப்பைப் பெறுவதைப் பற்றிய பார்வையை நமக்குத் தருகிறது. கர்த்தரின் கண்டிப்பு எவ்வாறு அவருடைய அன்பின் அடையாளமாக இருக்கும்? சாமுவேலின் தீர்க்கதரிசனங்களிலும் எச்சரிக்கைகளிலும் கர்த்தருடைய அன்பு மற்றும் இரக்கத்துக்கு என்ன ஆதாரம் இருக்கிறது?

உங்கள் வாழ்க்கையில் தேவன் இந்த வழிகளில் செயல்படுவதை நீங்கள் எப்போது பார்த்தீர்கள்?

ஏலமன் 16

தீர்க்கதரிசிகள் எனக்கு இயேசு கிறிஸ்துவை சுட்டிக் காட்டுகிறார்கள்.

ஏலமன் 16ல் சாமுவேலின் போதனைகளை ஏற்றுக்கொண்டவர்களிடமிருந்து நீங்கள் என்ன கற்றுக்கொள்கிறீர்கள்? அவரை நிராகரித்தவர்களிடமிருந்து நீங்கள் என்ன கற்றுக்கொள்கிறீர்கள்? ஜீவிக்கிற தீர்க்கதரிசிகளைப் பின்பற்றுவது, இயேசு கிறிஸ்துவிடம் நெருங்கி வர உங்களுக்கு எப்படி உதவியது என்பதைப் பற்றி சிந்தியுங்கள்.

பிள்ளைகளுக்கு போதிப்பதற்கான ஆலோசனைகள்

ஏலமன் 13:2–5

தேவன் என் இருதயத்தில் என்னுடன் பேச முடியும்.

  • சாமுவேலுக்காகப் பேசியது போல், தேவன் நம் இருதயத்தோடு பேச முடியும் என்பதை உங்கள் பிள்ளைகளுக்கு எப்படிக் கற்பிக்க முடியும்? வார்த்தைகள் இல்லாமல் (சைகைகள் அல்லது முகபாவனைகள் போன்றவை) தொடர்புகொள்வதற்கான வெவ்வேறு வழிகளைக் காட்டும்படி அவர்களிடம் நீங்கள் கேட்கலாம். பரலோக பிதா நம்முடன் தொடர்பு கொள்ளும் பல்வேறு வழிகளைப் பற்றிய கலந்துரையாடல்களுக்கு இது வழிவகுக்கும். இந்த கலந்துரையாடலின் ஒரு பகுதியாக, நீங்களும் உங்கள் குழந்தைகளும் லாமானியனான சாமுவேலின் படத்தைப் பார்க்கவும் (இந்த குறிப்பில் இரண்டு உள்ளது) மற்றும் சாமுவேலிடம் என்ன சொல்ல வேண்டும் என தேவன் சொன்னதை உங்கள் பிள்ளைகள் கேட்கையில் ஏலமன் 13:2–5 வாசிக்கவும்.

  • நம்மில் பலருக்கு, குறிப்பாக குழந்தைகளுக்கு, தேவன் எப்படி, எப்போது நம்மிடம் பேசுகிறார் என்பதை அறிய கற்றுக்கொள்வதற்கு உதவி தேவை. நீங்கள் என்ன செய்ய வேண்டும் அல்லது சொல்ல வேண்டும் என்று தேவன் விரும்புகிறார் என்பதை உங்கள் இருதயத்தில் அறிய பரிசுத்த ஆவியானவர் உங்களுக்கு உதவிய ஒரு காலத்தைப் பற்றி உங்கள் பிள்ளைகளுக்குச் சொல்லலாம். தேவன் உங்களுடன் தொடர்பு கொள்கிறார் என்பதை நீங்கள் எப்படி அறிந்தீர்கள் என்பதை விளக்குங்கள். ஒருவேளை உங்கள் பிள்ளைகளும் இதே போன்ற அவர்கள் பெற்ற அனுபவங்களைப் பகிர்ந்து கொள்ளலாம்.

ஏலமன் 14:2–7, 20–25

தீர்க்கதரிசிகள் இயேசு கிறிஸ்துவைப்பற்றி போதிக்கிறார்கள்.

  • இரட்சகரைப் பற்றி சாமுவேல் என்ன கற்பித்தான்? தற்கால தீர்க்கதரிசிகள் அவரைப் பற்றி என்ன கற்பிக்கிறார்கள் என்பதை நீங்கள் பகிர்ந்து கொள்ளலாம். அவர்களுடைய வார்த்தைகள் அவர்மீது நம் நம்பிக்கையை எவ்வாறு வளர்க்கிறது?

ஏலமன் 16:1–6

நான் தீர்க்கதரிசிகளைப் பின்பற்றும்போது நான் ஆசீர்வதிக்கப்படுகிறேன்.

  • உண்மையுள்ள நபர்களின் உதாரணங்களைக் காட்டுவதன் மூலம் தீர்க்கதரிசியின் மீது உங்கள் பிள்ளைகளின் நம்பிக்கையை நீங்கள் வளர்க்கலாம். இவற்றில் சில ஏலமன் 16:1, 5 ல் காணப்படுகின்றன. நீங்கள் வாசிக்கும்போது, சாமுவேலின் வார்த்தைகளை நம்பி மக்கள் செய்ததை உங்கள் பிள்ளைகள் கேட்கும்போது எழுந்து நிற்க முடியும். பிறகு, நீங்கள் 2 மற்றும் 6 வசனங்களை வாசிக்கும்போது, மக்கள் நம்பாதபோது அவர்கள் செய்ததைக் கேட்டு உங்கள் பிள்ளைகள் உட்கார முடியும். ஜீவிக்கும் தீர்க்கதரிசியின் வார்த்தைகளை நாம் நம்புகிறோம் என்பதை எப்படிக் காட்டலாம்? அவருடைய தீர்க்கதரிசிகள் மூலம் கர்த்தருடைய ஆலோசனையைப் பின்பற்றும்போது நீங்கள் எப்படி ஆசீர்வதிக்கப்பட்டீர்கள் என்பதை குழந்தைகளுக்குச் சொல்லுங்கள்.

படம்
லாமானியனாகிய சாமுவேல்

Samuel the Lamanite (லாமானியனாகிய சாமுவேல்) - லெஸ்டர் யோகம்

அச்சிடவும்