என்னைப் பின்பற்றி வாருங்கள் 2024
ஜூலை 29–ஆகஸ்ட் 4: “தேவனைப் பார்த்து பிழைத்திரு” ஆல்மா 36–38


“ஜூலை 29–ஆகஸ்ட் 4: ‘தேவனைப் பார்த்து பிழைத்திரு’ ஆல்மா 36–38,” என்னைப் பின்பற்றி வாருங்கள்—வீடு மற்றும் சபைக்காக: மார்மன் புஸ்தகம் 2024 (2023)

“ஜூலை 29–ஆகஸ்டு 4. ஆல்மா 36–38,”என்னைப் பின்பற்றி வாருங்கள்—வீடு மற்றும் சபைக்காக: 2024(2023)

பெண் ஜெபித்தல்

Woman (பெண்) - ஜென் டால்மென், பிரதி எடுக்கப்படக்கூடாது

ஜூலை 29–ஆகஸ்ட் 4: “தேவனைப் பார்த்து பிழைத்திரு”

ஆல்மா 36–38

தன்னைச் சுற்றிலும் துன்மார்க்கத்தை ஆல்மா கண்டபோது, அவன் ஆழ்ந்த “வருத்தத்தாலும்,” “பாடுகளாலும்” “ஆத்தும வியாகுலம்” அடைந்தான் (ஆல்மா 8:14). சோரமியரைப்பற்றி அவன் சொன்னான், “இந்த ஜனத்துக்குள்ளே இருக்கிற துன்மார்க்கம், என் ஆத்துமாவை வேதனைப்படுத்துகிறது” (ஆல்மா 31:30). சோரமியர்களிடம் அவனுடைய ஊழியத்திலிருந்து திரும்பி வந்த பிறகு, அது போன்ற ஒன்றை அவன் உணர்ந்தான். நேபியர் அநேகரின் இருதயங்கள் “கடினப்பட துவங்கி, வார்த்தையின் கண்டிப்பினிமித்தம் அவர்கள் புண்படத் துவங்கியதையும்” அவன் கண்டான், “இது அவனது இருதயத்தை மிகவும் துக்கித்தது” (ஆல்மா 35:15). அவன் கண்டதுக்காகவும் உணர்ந்ததுக்காகவும் ஆல்மா என்ன செய்தான்? அவன் வெறுமனே அதைரியமடையவோ அல்லது உலகத்தின் நிலைமை குறித்து இழிவாகவோ நினைக்கவில்லை. மாறாக “தன் குமாரர்களை ஏகமாய்க் கூடும்படி செய்து,” “நீதிக்கேற்ற காரியங்களைக் குறித்து அவர்களுக்கு” போதித்தான் (ஆல்மா 35:16). அவன் அவர்களுக்கு போதித்ததாவது, “மனுஷன் கிறிஸ்துவினாலும் அவர் மூலமுமேயன்றி வேறெந்த வழியினாலும் முறையினாலும் இரட்சிக்கப்பட முடியாது. … இதோ, அவரே சத்தியம் மற்றும் நீதியின் வார்த்தையானவர்” (ஆல்மா 38:9).

வீட்டிலும் சபையிலும் கற்றுக்கொள்வதற்கான ஆலோசனைகள்

ஆல்மா 36; 38:5–6

நான் தேவனால் பிறக்கமுடியும்.

ஆல்மாவின் மனமாற்றம் போன்ற வியத்தகு அனுபவங்கள் சிலருக்கு இருக்கும். ஆனால், இது பொதுவாக படிப்படியாக நடக்கிறதாயிருந்தாலும், ஒவ்வொருவரும் “தேவனால் பிறந்தவர்களாக” இருக்க வேண்டும் (ஆல்மா 36; 38:6). நீங்கள் ஆல்மா 36 வாசிக்கும்போது, தேவனால் பிறப்பது என்றால் என்ன என்பதைப்பற்றி சிந்தியுங்கள். உதாரணமாக, தேவனால் பிறக்கும் செயல்பாட்டில், பாவத்தைப்பற்றி, இயேசு கிறிஸ்துவைப்பற்றி நீங்கள் எப்படி உணருகிறீர்கள்? தேவனில் பிறத்தல் உங்கள் சொந்த தவறுகளுக்கு நீங்கள் செய்யும் செயலை எவ்வாறு பாதிக்கிறது? உங்கள் நம்பிக்கைகள் மற்றும் செயல்களில் வேறு என்ன மாற்றங்கள் நிகழ்கின்றன? இந்த மாற்றங்களை நீங்கள் எப்படி அனுபவிக்கிறீர்கள் என்று சிந்தியுங்கள்.

மோசியா 5:7; 27:25–26; ஆல்மா 5:14; 22:15; ஏலமன் 3:35 பார்க்கவும்.

11:32

Alma the Younger Is Converted unto the Lord | Mosiah 27; Alma 36

ஆல்மா 36:12–24; 38:8–9

இயேசு கிறிஸ்து துக்கத்தை மகிழ்ச்சியாக மாற்றுகிறார்.

சில நேரங்களில் மனந்திரும்புதலை பாவத்திற்கான வேதனையான தண்டனையாக ஜனங்கள் கண்டு மனந்திரும்புவதற்கு பயப்படுகிறார்கள். ஆல்மா அதைப் பற்றி என்ன சொல்வான் என்று நினைக்கிறீர்கள்? ஆல்மாவின் வாழ்க்கை மனந்திரும்புவதற்கு முன்பு எப்படி இருந்தது என்பதை அறிய, அவன் மனந்திரும்புவதற்கு முன்பு (ஆல்மா 36:6–17 பார்க்கவும்), அவன் மனந்திரும்பிய பிறகு தன்னைப் பற்றிய அவனது விளக்கத்துடன் (வசனங்கள் 18–27 பார்க்கவும்) நீங்கள் வேறுபடுத்திப் பார்க்கலாம். ஆல்மா 36:17–18ன் படி, இந்த மன்னிப்பை ஆல்மா எப்படி பெற்றான்?

மாத்யூ எஸ். ஹாலன்ட், “குமாரனாகிய நேர்த்தியான பரிசு,” லியஹோனா, நவ். 2020, 45–47ஐயும் பார்க்கவும்.

ஆல்மா 37

வேதங்கள் “ஒரு ஞானமான நோக்கத்துக்காக” பாதுகாக்கப்பட்டுள்ளன.

இன்று வேதம் கிடைத்திருப்பதே அற்புதம் மற்றும் ஆசீர்வாதம் என்பதைக் கருத்தில் கொள்ளவும்! நீங்கள் ஆல்மா 37 வாசிக்கும்போது, வேதங்களைப் பெற்றிருப்பதால் வரும் ஆசீர்வாதங்களைத் தேடுங்கள் (உதாரணமாக, வசனங்கள் 7–10, 18–19, 44–45).

ஆல்மா 37:38–47ல், ஆல்மா “கிறிஸ்துவின் வார்த்தையை” லியஹோனாவுக்கு ஒப்பிடுகிறான். இந்த ஒப்பீட்டைப்பற்றி நீங்கள் சிந்திக்கும்போது, “நாளுக்கு நாள்” கிறிஸ்துவின் போதனைகளின் அற்புதம் மற்றும் வல்லமையை நீங்கள் அனுபவித்த வழிகளைப்பற்றி சிந்தியுங்கள் (ஆல்மா 37:40).

7:9

Alma Testifies to His Son Helaman | Alma 36–37

பெண் வேதம் வாசித்தல்

தேவனை எப்படி பின்பற்றலாம் என வேதங்கள் நமக்கு போதிக்கின்றன.

ஆல்மா 37:1-14

seminary icon
“அற்பமும் சொற்பமுமானவைகளைக் கொண்டுதான் பெரிய காரியங்கள் செய்யப்படுகின்றன”.

நமது பிரச்சினைகள் மிகப்பெரிதும் குழப்பமானதுமாக இருக்கலாம், எனவே தீர்வுகளும் பெரியதாயும் குழப்பமானதாகவும் இருக்கவேண்டுமென சிலசமயங்களில் நாம் உணரலாம். ஆனால் அதுவே எப்போதும் கர்த்தரின் வழி அல்ல. ஆல்மா 37:1–14 நீங்கள் வாசிக்கும்போது, அவர் தனது பணியை எப்படிச் செய்கிறார் என்பதில் உங்களைக் கவர்ந்ததைக் கவனியுங்கள். உங்கள் வாழ்க்கையில் இந்தக் கொள்கையைப் பார்த்த விதங்களை நீங்கள் சிந்தித்துப் பதிவு செய்யலாம்.

இந்தக் கொள்கையை நீங்கள் யாருக்காவது கற்பிக்கப் போகிறீர்கள் என்றால், இயற்கை அல்லது அன்றாட வாழ்க்கையிலிருந்து என்ன உதாரணங்களைப் பயன்படுத்தி அதை விளக்குவீர்கள்? தலைவர் டாலின் எச். ஓக்ஸின் செய்தியில் சிலவற்றை நீங்கள் காணலாம் “அற்பமும் சொற்பமுமானவைகள்,” (லியஹோனா, மே 2018, 89–92).

பரலோக பிதா மற்றும் இயேசு கிறிஸ்துவிடம் உங்களை நெருக்கமாகக் கொண்டுவரும் சில அற்பமும் சொற்பமுமானவை யாவை?

பெரும்பாலும், நமது “அற்பமும் சொற்பமுமான” தேர்வுகள் நம் வாழ்வில் பெரிய மாற்றங்களை ஏற்படுத்துகின்றன. அதிக அமைதி மற்றும் மகிழ்ச்சிக்கு வழிவகுக்கும் சிறிய மற்றும் எளிய மாற்றங்களை நான் என்ன செய்ய முடியும்?

மைக்கல் ஏ. டன், “ஒரு சதவீதம் சிறந்தது,” லியஹோனா, நவ. 2021, 106–8; ஐயும் பார்க்கவும்.

சிறிய மற்றும் எளிய காரியங்களைப் பயன்படுத்துங்கள். வாழ்க்கையில் பல விஷயங்களைப் போலவே, சுவிசேஷம் கற்பித்தல் மற்றும் கற்றல் சிறிய மற்றும் எளிமையான வழிகளில் செய்யப்படலாம். உதாரணமாக, சிறிய மற்றும் எளிமையான விஷயங்களின் வல்லமையைக் கற்பிக்க சிறிது உப்பு அல்லது ஈஸ்ட் எவ்வாறு பயன்படுத்தப்படலாம்? (மத்தேயு 5:13; 13:33 பார்க்கவும்).

ஆல்மா 37:35–37

“கர்த்தரிடத்தில் ஆலோசி.”

ஆல்மா 37:35–37 இல், ஆல்மா தனது குமாரனாகிய ஏலமனுக்கு அழைப்பு விடுத்துள்ளதைத் தேடுங்கள். இவற்றில் எந்த அழைப்பு செயல்படத் தூண்டியதாக உணர்கிறீர்கள்? உதாரணமாக, “கர்த்தருடன் ஆலோசனை” (வசனம் 37) என்றால் என்ன என்று நீங்கள் சிந்திக்கலாம். இதை எப்படிச் செய்ய முயற்சித்தீர்கள்? அவர் உங்களை எவ்வாறு நன்மைக்கு வழிநடத்தினார்?

ஆல்மா 38

இயேசு கிறிஸ்துவைப் பற்றிய எனது சாட்சியைப் பகிர்ந்துகொள்வது, நான் நேசிக்கும் மக்களைப் பலப்படுத்தும்.

ஆல்மா தனது குமாரனாகிய சிப்லோனிடம் கூறிய வார்த்தைகள், சுவிசேஷத்தின்படி வாழ்வதில் நாம் விரும்பும் மக்களை எவ்வாறு பலப்படுத்துகிறது மற்றும் ஊக்கப்படுத்துகிறது என்பதற்கு ஒரு சிறந்த உதாரணத்தை வழங்குகிறது. ஆல்மா 38 படிப்பது, குடும்ப உறுப்பினர்கள் மற்றும் நண்பர்களுக்கு இயேசு கிறிஸ்துவில் பலத்தைக் கண்டறிய உதவும் சில யோசனைகளைத் தரக்கூடும். நீங்கள் காண்பவற்றை எழுதவும்.

பிள்ளைகளுக்கு போதிப்பதற்கான ஆலோசனைகள்

ஆல்மா 36:6–24

மனந்திரும்புதல் இயேசு கிறிஸ்துவில் எனக்கு மகிழ்ச்சியைத் தருகிறது.

  • மனந்திரும்புதல் மகிழ்ச்சியைத் தருகிறது என்பதை உங்கள் பிள்ளைகளுக்குப் புரியவைக்க, ஒரு பக்கம் மகிழ்ச்சியான முகத்துடனும் மறுபுறம் சோகமான முகத்துடனும் படமுள்ள ஒரு துண்டு காகிதத்தைக் கொடுக்கலாம். ஆல்மா 36:13, 17–20 வாசிக்கும்போது அல்லது சுருக்கமாகச் சொல்லும்போது கேட்கும்படி அவர்களிடம் கேளுங்கள், ஆல்மா எப்படி உணர்ந்தான் என்பதைக் காட்ட முகங்களில் ஒன்றை காண்பிக்கச்சொல்லுங்கள். பெரிய குழந்தைகள் அவன் எப்படி உணர்ந்தான் என்பதை விவரிக்கும் வார்த்தைகள் அல்லது சொற்றொடர்களை எழுதலாம். ஆல்மாவை சோகமாக்கியது எது, அவனுக்கு எது மகிழ்ச்சியைத் தந்தது? பின்னர் நீங்கள் மனந்திரும்பும்போது நீங்கள் அனுபவிக்கும் மகிழ்ச்சியைப் பற்றி அவர்களிடம் சொல்லலாம்.

ஆல்மா 37:6–7

“அற்பமும் சொற்பமுமானவைகளைக் கொண்டுதான் பெரிய காரியங்கள் செய்யப்படுகின்றன”.

  • உங்கள் பிள்ளைகள் பெரிய காரியங்களைச் செய்யும் சிறிய பொருட்களைக் கண்டு மகிழ்வார்கள். பேட்டரி, கார் சாவி அல்லது அவர்களுக்கு விருப்பமான பொம்மை போன்றவை உதாரணங்களாக இருக்கலாம். நீங்கள் ஆல்மா 37:6–7 ஒன்றாக வாசித்து, தேவன் நாம் செய்ய விரும்பும் சில அற்பமும் சொற்பமுமானவற்றை பற்றி சிந்திக்கலாம். இந்த சிறிய அல்லது எளிமையான கட்டளைகளுக்கு நாம் கீழ்ப்படிந்தால் என்ன பெரிய விஷயங்கள் நடக்கும்?

  • உங்கள் பிள்ளைகளும் இதைப் போன்றவற்றை முயற்சி செய்யலாம்: ஒரு கோப்பையில் துளி துளியாக தண்ணீரை நிரப்பத் தொடங்குங்கள். இது ஆல்மா 37:6–7 உடன் எவ்வாறு தொடர்புடையது? தினமும் வேதத்தைப் படிப்பது போன்ற கர்த்தரின் “அற்பமும் சொற்பமுமானவை” ஒரு கோப்பையில் உள்ள நீர்த்துளிகள் போன்றது என்பதைப் பற்றி நீங்கள் பேசலாம்.

  • உங்கள் பிள்ளைகள் வீடு, பள்ளி அல்லது சபையில் பெரிய விஷயங்களைக் கொண்டு வரும் வழிகளைப் பற்றி சிந்திக்க உதவுங்கள்.

ஆல்மா 37:38–47

ஒவ்வொரு நாளும் வேதங்கள் எனக்கு உதவக்கூடும்.

  • ஏலமனுக்கு ஆல்மா செய்ததைப் போல, தேவனுடைய வார்த்தையின் மீது அன்பை வளர்க்க உங்கள் பிள்ளைகளுக்கு நீங்கள் எப்படி உதவலாம்? அவர்களுக்கு லியஹோனாவின் படத்தைக் காட்டவும் , அல்லது அதைப் பற்றி அவர்கள் அறிந்ததைப் பகிர்ந்து கொள்ளும்போது ஒன்றை வரைவதற்கு அவர்களை அழைக்கவும் (ஆல்மா 37:38–47; 1 நேபி 16:10, 28–29 பார்க்கவும். ) லியஹோனா போல வேதங்கள் எப்படி இருக்கின்றன?

ஆல்மாவுக்கும் மோசியாவின் குமாரர்களுக்கும் தூதன் தோன்றுதல்

Angel Appears to Alma and the Sons of Mosiah (ஆல்மாவுக்கும் மோசியாவின் குமாரர்களுக்கும் தூதன் தோன்றுதல்) – க்ளார்க் கெல்லி ப்ரைஸ்