“மனதில் கொள்ள வேண்டிய எண்ணங்கள்: இஸ்ரவேல் வீட்டார்,” என்னைப் பின்பற்றி வாருங்கள்—தனிநபர்களுக்கும் குடும்பங்களுக்கும்: பழைய ஏற்பாடு2022 (2021)
“மனதில் கொள்ள வேண்டிய எண்ணங்கள்: இஸ்ரவேல் வீட்டார்,”என்னைப் பின்பற்றி வாருங்கள்—தனிநபர்களுக்கும் குடும்பங்களுக்கும்: 2022
மனதில் கொள்ள வேண்டிய எண்ணங்கள்
இஸ்ரவேல் வீட்டார்
கானானுக்கு கிழக்கே எங்கோ வனாந்தரத்தில், யாக்கோபு தனது இரட்டை சகோதரன் ஏசாவுடன் ஒரு சந்திப்புக்காக பதற்றத்துடன் காத்திருந்தான். 20 வருடங்களுக்கு முன்பு ஏசாவை கடைசியாக யாக்கோபு பார்த்தபோது, ஏசா அவனைக் கொலை செய்வதாக மிரட்டினான். தேவனிடமிருந்து ஆசீர்வாதத்தைத் தேடிக்கொண்டு, யாக்கோபு இரவு முழுவதும் யுத்தம் செய்து வனாந்தரத்தில் கழித்திருந்தான். யாக்கோபின் விசுவாசம், விடாமுயற்சி மற்றும் உறுதியின் விளைவாக, தேவன் அவனுடைய ஜெபங்களுக்கு பதிலளித்தார். அன்றிரவு யாக்கோபின் பெயர் இஸ்ரவேல் என மாற்றப்பட்டது, இதன் அர்த்தம் “அவன் தேவனோடு இருக்கிறான்” (ஆதியாகமம் 32:28, அடிக்குறிப்பு b; மற்றும் ஆதியாகமம் 32:24–32).1
வேதாகமத்தில் இஸ்ரவேல் என்ற பெயர் தோன்றுவது இதுவே முதல் முறை, இது புத்தகம் முழுவதும் மற்றும் வரலாறு முழுவதும் விடாமல் வருகிறது. இந்த பெயர் விரைவில், ஒரு மனிதனை விட அதிகமானவர்களைக் குறிக்கலானது. இஸ்ரவேலுக்கு 12 குமாரர்கள் இருந்தனர், அவர்களுடைய சந்ததியினர் கூட்டாக “இஸ்ரவேல் வீடு”, “இஸ்ரவேலின் கோத்திரங்கள்”, “இஸ்ரவேல் புத்திரர்” அல்லது “இஸ்ரவேலர்” என்று அழைக்கப்பட்டனர்.
வரலாறு முழுவதும், இஸ்ரவேலின் பன்னிரண்டு கோத்திரங்களில் ஒன்றிலிருந்து வந்தவர்களுக்கு இஸ்ரவேல் புத்திரர் பெரும் முக்கியத்துவத்தை அளித்தனர். அவர்களின் வம்சாவளி அவர்களின் உடன்படிக்கையின் அடையாளத்தின் ஒரு முக்கிய பகுதியாக இருந்தது. தான் “பென்யமீன் கோத்திரத்தைச் சேர்ந்தவன்” என்று அப்போஸ்தலனாகிய பவுல் அறிவித்தான் (ரோமர் 11:1). பித்தளைத் தகடுகளை மீட்டெடுக்க லேகி தனது குமாரர்களை எருசலேமுக்கு அனுப்பிய ஒரு காரணம், அந்தத் தகடுகளில் “அவனது பிதாக்களின் வம்சாவளி” இருந்ததுதான் (1 நேபி 5:14; 1 நேபி 3:3 ஐயும் பார்க்கவும்). தான் யோசேப்பின் வழித்தோன்றல் என்று லேகி கண்டுபிடித்தான், மேலும் இஸ்ரவேல் குடும்பத்துடனான அவர்களின் தொடர்பைப்பற்றிய அவனது சந்ததியினரின் புரிதல் அடுத்த ஆண்டுகளில் அவர்களுக்கு முக்கியமானது என்பதை நிரூபித்தது (ஆல்மா 26:36; 3 நேபி 20:25).
இன்று சபையில், “இஸ்ரவேலைக் கூட்டிச்சேர்ப்பது” போன்ற தெரிவித்தல்களில் இஸ்ரவேலைப்பற்றி நீங்கள் கேள்விப்படலாம். “இஸ்ரவேலின் மீட்பர்”, “இஸ்ரவேலின் நம்பிக்கை” மற்றும் “இஸ்ரவேலின் மூப்பர்களைப்பற்றிப்” பாடுகிறோம். 2 இந்த சந்தர்ப்பங்களில், நாம் பண்டைய இஸ்ரவேல் ராஜ்யம் அல்லது இஸ்ரேல் என்று அழைக்கப்படும் நவீன தேசத்தைப்பற்றி மட்டுமே பேசவோ பாடவோ இல்லை. மாறாக, உலக நாடுகளிலிருந்து இயேசு கிறிஸ்துவின் சபையில் கூடிவந்தவர்களை நாம் குறிப்பிடுகிறோம். தேவனோடு விடாமுயற்சியுடன் செயல்படும், அவருடைய ஆசீர்வாதங்களை ஆவலுடன் தேடும், ஞானஸ்நானத்தின் மூலம் அவருடைய உடன்படிக்கை ஜனங்களாக மாறியவர்களை நாம் குறிப்பிடுகிறோம்.
உங்கள் கோத்திர பிதா ஆசீர்வாதம் இஸ்ரவேல் வம்சத்தின் ஒரு கோத்திரத்துடனான உங்கள் தொடர்பை அறிவிக்கிறது. இது குடும்ப வரலாற்று தகவலின் சுவாரஸ்யமான பகுதியை விட அதிகம். இஸ்ரவேல் வம்சத்தின் ஒரு பகுதியாக இருப்பது என்பது பரலோக பிதாவுடனும் இயேசு கிறிஸ்துவுடனும் உங்களுக்கு உடன்படிக்கை உறவு இருக்கிறது என்பதாகும். ஆபிரகாமைப் போலவே நீங்களும் தேவனின் குழந்தைகளுக்கு “ஆசீர்வாதமாக” இருக்க வேண்டும் என்பதாகும் (ஆதியாகமம் 12:2; ஆபிரகாம் 2:9–11). பேதுருவின் வார்த்தைகளில், “உங்களை அந்தகாரத்தில் இருந்து தம்முடைய ஆச்சரியமான ஒளியினிடத்துக்கு வரவழைத்தவருடைய புகழ்ச்சிகளைக் காட்டும்படி நீங்கள் தெரிந்துகொள்ளப்பட்ட சந்ததி, ராஜரீகமான ஆசாரியத்துவம், பரிசுத்த ஜாதி, அவருக்குச் சொந்தமான ஜனம்; ”(1 பேதுரு 2:9) என அர்த்தமாகிறது. நீங்கள் அவருடனான உங்கள் உடன்படிக்கைகளை மதிக்கும்போது “தேவனோடு எப்போதும்” இருப்பவர் என்று பொருள்.