என்னைப் பின்பற்றி வாருங்கள் 2024
ஜூன் 24–30: “கர்த்தருடைய இளைப்பாறுதலிலே பிரவேசியுங்கள்” ஆல்மா 13–16


“ஜூன் 24–30: ‘கர்த்தருடைய இளைப்பாறுதலிலே பிரவேசியுங்கள்’ ஆல்மா 13-16,” என்னைப் பின்பற்றி வாருங்கள்—வீடு மற்றும் சபைக்காக: மார்மன் புஸ்தகம் 2024 (2023)

“ஜூன் 24–30. ஆல்மா 13-16,” என்னைப் பின்பற்றி வாருங்கள்—வீடு மற்றும் சபைக்காக: 2024(2023)

படம்
ஆல்மாவும் அமுலேக்கும் சிறையிலிருந்து வெளியேறி நடத்தல்

ஆல்மாவும் அமுலேக்கும் சிறையிலிருந்து விடுதலையாக்கப்படுதலின் விளக்கப்படம் – ஆண்ட்ரூ போஸ்லி

ஜூன் 24–30: “கர்த்தருடைய இளைப்பாறுதலிலே பிரவேசியுங்கள்”

ஆல்மா 13–16

பல வழிகளில் அமுலேக்குக்கும் சீஸ்ரமுக்கும் அம்மோனிகாவில் வாழ்க்கை நன்றாக இருந்திருக்கிறது. அமுலேக்கு “ நன்மதிப்பு பெற்ற,” “அநேக உறவினர்களும், சிநேகிதர்களுமுடைய,” “அதிக ஐஸ்வர்யம் பெற்றவன்” (ஆல்மா 10:4). சீஸ்ரம் திறமைவாய்ந்த நியாயசாஸ்திரியும் “மிகுந்த காரியங்களை புரிபவனுமாயிருந்தான்”(ஆல்மா 10:31). பின்னர் ஆல்மா மனந்திரும்புமாறும், “கர்த்தருடைய இளைப்பாறுதலினுள் பிரவேசிக்கவும்” ஒரு தெய்வீக அழைப்புடன் அம்மோனிகாவுக்கு வந்து சேர்ந்தான் (ஆல்மா 13:16). அமுலேக்குக்கும், சீஸ்ரமுக்கும், பிறருக்கும் இந்த அழைப்பை ஏற்பதற்கு தியாகம் தேவைப்பட்டது, கிட்டத்தட்ட தாங்க முடியாத எதிர்ப்புக்கும் கூட வழிநடத்தியது.

ஆனால் உண்மையில் கதை அங்கு முடியவில்லை. ஆல்மா 13–16ல், “இரட்சிப்புக்கேதுவான கிறிஸ்துவின் வல்லமையை” நம்புவர்களுக்கு முடிவாக என்ன நிகழ்கிறது என நாம் அறிகிறோம் (ஆல்மா 15:6). சிலசமயங்களில் விடுதலையிருக்கிறது, சிலசமயங்களில் குணமாக்குதலிருக்கிறது, சிலசமயங்களில் இந்த வாழ்க்கையில் காரியங்கள் எளிதாயிருப்பதில்லை. ஆனால் எப்போதும், “கர்த்தர் [தன் ஜனத்தை] மகிமையில் தம்முடன் ஏற்றுக்கொள்கிறார்” (ஆல்மா 14:11). எப்போதும், கர்த்தர், “கிறிஸ்துவிலே வைத்த [நமது] விசுவாசத்துக்குத் தக்கதாக வல்லமையை” அருளுகிறார் (ஆல்மா 14:28) எப்போதும் விசுவாசம், “[நாம்] நித்திய ஜீவனைப் பெறுவோம்” என்ற நம்பிக்கையை நமக்குக் கொடுக்கிறது (ஆல்மா 13:29). இந்த அதிகாரங்களை நீங்கள் வாசிக்கும்போது, இந்த வாக்குத்தத்தங்களில் நீங்கள் ஆறுதல் பெறலாம், “கர்த்தருடைய இளைப்பாறுதலைப்பற்றி” ஆல்மா பேசியபோது அவன் என்ன சொன்னான் என்பதை நீங்கள் நன்கு புரிந்துகொள்ளலாம். (ஆல்மா 13:16).

வீட்டிலும் சபையிலும் கற்றுக் கொள்வதற்கான ஆலோசனைகள்

ஆல்மா 13:1–19

படம்
வேத பாட வகுப்பு சின்னம்
ஆசாரியத்துவ நியமங்கள் மீட்பிற்காக எனக்கு இயேசு கிறிஸ்துவை சுட்டிக்காட்டுகின்றன.

“கர்த்தரின் இளைப்பாறுதல்” அல்லது நித்திய ஜீவனுக்குள் நுழைவதற்கு நம்மை தயார்படுத்துவதற்காக ஆல்மா 13லுள்ள ஆல்மாவின் வார்த்தைகள் தேவனின் ஆசாரியத்துவம் மற்றும் அதன் நோக்கத்தைப்பற்றிய ஆற்றல்மிக்க சத்தியங்களை வெளிப்படுத்துகின்றன, (ஆல்மா 13:16). ஒருவேளை ஆல்மா 13:1–9ல் ஒரு வசனத்துக்கு குறைந்தது ஒரு சத்தியத்தையாவது நீங்கள் எழுத முயற்சிக்கலாம். நீங்கள் தொடங்க இங்கே சில ஆலோசனைகள்:

வசனம் 1.ஆசாரியத்துவம் “[தேவ]குமாரனின் முறைமை” எனவும் அழைக்கப்படுகிறது (கோட்பாடும் உடன்படிக்கைகளும் 107:1–4 ஐயும் பார்க்கவும்).

வசனம் 2.மீட்புக்காக தன் குமாரனை நோக்கிப்பார்க்க ஜனங்களுக்கு உதவ தேவன் ஆசாரியர்களை நியமிக்கிறார்.

வேறு எதை நீங்கள் காண்கிறீர்கள்? இந்த சத்தியங்களைப்பற்றி நீங்கள் சிந்திக்கும்போது ஆசாரியத்துவத்தைப்பற்றி நீங்கள் எவ்வாறு உணர்கிறீர்கள்?

“மீட்படைவதற்காக அவருடைய குமாரனை எதிர் நோக்குவது” தேவனிடமிருந்து கிடைத்த வரம் என நீங்கள் எப்போதாவது யோசித்திருக்கிறீர்களா? (வசனம் 2; வசனம் 16ஐயும் பார்க்கவும்). ஞானஸ்நானம், திடப்படுத்தல், திருவிருந்து, அழைப்பிற்காக பணித்தல், ஆறுதல் அல்லது குணப்படுத்துதலுக்கான ஆசீர்வாதம், கோத்திரபிதா ஆசீர்வாதம் மற்றும் ஆலய நியமங்கள் போன்ற நீங்கள் பெற்ற கட்டளைகளின் பட்டியலை நீங்கள் செய்யலாம். இது போன்ற நியமங்களுடன் உங்கள் அனுபவங்களை சிந்தித்துப் பாருங்கள். இதில் உள்ள அடையாளத்தையும் நீங்கள் உணர்ந்த ஆவியையும் கருத்தில் கொள்ளுங்கள். இந்த நியமங்கள் ஒவ்வொன்றும் மீட்பிற்காக இயேசு கிறிஸ்துவை உங்களுக்கு எவ்வாறு சுட்டிக்காட்டுகிறது?

கட்டளைகள் மற்றும் அவற்றை நிறைவேற்ற ஆசாரியத்துவ அதிகாரம் தேவையில்லை என்று சிலர் தவறாக நம்புகிறார்கள். அந்த யோசனைக்கு நீங்கள் எவ்வாறு பதிலளிப்பீர்கள்? உங்கள் சிந்தனையைத் தெரிவிக்கக்கூடிய இரண்டு பொது மாநாட்டுச் செய்திகள் இங்கே உள்ளன; ஒன்றைத் தேர்ந்தெடுத்து, உங்களுக்கு வரும் பதில்களை எழுதுங்கள்: ரசல் எம். நெல்சன், “ஆவிக்குரிய பொக்கிஷங்கள்,” லியஹோனா, நவ. 2019, 76–79; டேல் ஜி. ரென்லண்ட், “ஆசாரியத்துவமும் இரட்சகரின் பாவநிவர்த்தியின் வல்லமையும்,” லியஹோனா, நவ. 2017, 64–67.

கோட்பாடும் உடன்படிக்கைகளும் 84:19–22; ஐயும் பார்க்கவும்

படம்
திருவிருந்து மேஜையில் வாலிபர்கள்

மீட்புக்காக இயேசு கிறிஸ்துவை நோக்கிப்பார்க்க ஆசாரியத்துவ நியமங்கள் நமக்கு உதவுகின்றன.

ஆல்மா 13

அவரது இளைப்பாறுதலில் பிரவேசிக்க கர்த்தர் என்னை அழைக்கிறார்.

“கர்த்தருடைய இளைப்பாறுதலில் பிரவேசிப்பதற்கான” அழைப்பு (ஆல்மா 13:16) ஆல்மா 13ல் அடிக்கடி மீண்டும் கூறப்பட்டுள்ளது. “ஓய்வு” என்ற வார்த்தை தோன்றும் ஒவ்வொரு வசனத்தையும் நீங்கள் தேடலாம் மற்றும் “கர்த்தரின் இளைப்பாறுதலுக்குள்” எதைக் குறிக்கலாம் என்பதைப் பற்றி ஒவ்வொரு வசனமும் உங்களுக்கு என்ன கற்பிக்கிறது என்பதைப் பற்றி சிந்திக்கலாம். இது சரீர இளைப்பாறுதலிலிருந்து எவ்வாறு வித்தியாசமாயிருக்கிறது? அதை நாம் எவ்வாறு கண்டுபிடிக்கிறோம்?

ரசல் எம். நெல்சன், “உலகத்தை ஜெயித்து இளைப்பாறுதல் காணுங்கள்,” லியஹோனா, நவ. 2022, 95–98;

ஆல்மா 14

துன்பக் காலங்களில் நாம் கர்த்தரை நம்ப வேண்டும்.

நீதியாக வாழ முயற்சிப்பவர்களுக்கு ஏன் பயங்கரமான காரியங்கள் நடைபெறுகின்றன என அநேகரைப்போல நீங்கள் ஆச்சரியப்படலாம். ஆல்மா 14ல் இந்த கஷ்டமான கேள்விக்கு நீங்கள் பதில்கள் அனைத்தையும் கண்டுபிடிக்க முடியாமல் போகலாம், ஆனால் அவர்கள் எதிர்கொண்ட சோகங்களுக்கு ஆல்மாவும் அமுலேக்கும் பதிலளித்த விதத்திலிருந்து அறிந்துகொள்ள அதிகமிருக்கிறது. நீதிமான்கள் கஷ்டப்பட கர்த்தர் சில சமயங்களில் ஏன் அனுமதிக்கிறார் என்பதைப்பற்றி அவர்களது வார்த்தைகளும் செயல்களும் உங்களுக்கு என்ன போதிக்கின்றன? நாம் கடினமான சோதனைகளை சந்திக்கும் போது ஆல்மாவும் அமுலேக்கும் நமக்கு என்ன அறிவுரை வழங்கலாம்?

ரோமர் 8:35–39; 1 பேதுரு 4:12–14; கோட்பாடும் உடன்படிக்கைகளும் 122:5–9; டேல் ஜி. ரென்லண்ட், “கோபமூட்டும் அநீதி,” லியஹோனா, மே 2021, 41–45.

எப்போதும் தயாராயிருங்கள். போதிக்கும் தருணங்கள் விரைவாக கடந்து போகும், ஆகவே அவை எழும்போது சாதகமாக்கிக் கொள்ளுங்கள். உலகத்தின் ஒரு துயரம், உதாரணமாக, கர்த்தர் ஏன் சில சமயங்களில் மாசற்றவர்களை கஷ்டப்பட அனுமதிக்கிறார் என்பதைப்பற்றி, ஆல்மா 14லிருந்து, கொள்கைகளைப் பகிர ஒரு சந்தர்ப்பமாயிருக்கலாம்.

ஆல்மா 15:16, 18

சீஷத்துவத்துக்கு தியாகம் தேவைப்படுகிறது.

சுவிசேஷத்தை தழுவ அமுலேக் விட்டுவிட்ட காரியங்களைப் பட்டியலிடுவது ரசிக்கத்தக்கதாயிருக்கும் (ஆல்மா 10:4–5; 15:16 பார்க்கவும்), அவன் பெற்றவற்றின் பட்டியலை அதனுடன் ஒப்பிடவும் (ஆல்மா 15:18; 16:13–15; 34:8 பார்க்கவும்). இயேசு கிறிஸ்துவின் மிகவும் விசுவாசமிக்க சீஷனாக இருக்கும்படியாக நீங்கள் எதை தியாகம் செய்ய விருப்பமாயிருக்கிறீர்கள்?

பிள்ளைகளுக்கு போதிப்பதற்கான ஆலோசனைகள்

இந்த ஞாயிற்றுக்கிழமை மாதத்தின் ஐந்தாவது ஞாயிற்றுக்கிழமை என்பதால், ஆரம்ப வகுப்பு ஆசிரியர்கள் “பிற்சேர்க்கை B: தேவனின் உடன்படிக்கைப் பாதையில் வாழ்நாள் முழுவதற்குமாக குழந்தைகளைத் தயார்படுத்துதல்” இல் கற்றல் நிகழ்ச்சிகளைப் பயன்படுத்த ஊக்குவிக்கப்படுகிறார்கள்.

ஆல்மா 13:1–2, 16.

கிறிஸ்துவண்டை வர ஆசாரியத்துவ வல்லமை எனக்கு உதவுகிறது.

  • இயேசு தம்முடைய வல்லமையைப் பயன்படுத்திய விதங்களைப் பற்றி சிந்திக்க உங்கள் பிள்ளைகள் உங்களுக்கு உதவலாம் (உதாரணமாக, மத்தேயு 26:26–28; மாற்கு 5:22–24, 35-43 38–41). பிறகு, நீங்கள் ஆல்மா 13:2ஐ ஒன்றாகப் படித்து, “[தேவனின்] குமாரனை எதிர்பார்த்து” அவரைப் போலவே ஆவதற்கு ஆசாரியத்துவ வல்லமை எவ்வாறு உதவுகிறது என்பதைப் பற்றி பேசலாம்.

    படம்
    ஞானஸ்நானம்
    படம்
    இயேசு அப்போஸ்தலர்களை நியமித்தல்
  • தேவன் ஏன் நமக்கு ஆசாரியத்துவ நியமங்கள் கொடுக்கிறார்? ஆல்மா 13:16ல் பதிலைக் கண்டறிய உங்கள் பிள்ளைகளுக்கு உதவுங்கள். நியமம் என்பது என்ன என அறிய அவர்களுக்கு உதவி தேவைப்பட்டால், பொது கையேடு, 18.1 மற்றும் 18.2 ஆகியவற்றில் பட்டியல்கள் உள்ளன. ஒருவேளை நீங்களும் உங்கள் குழந்தைகளும் இந்த நியமங்களைப் பெற்ற அனுபவங்களைப் பற்றி பேசலாம். “[நம்முடைய] பாவங்களின் மன்னிப்புக்காக [இயேசு கிறிஸ்துவை] எதிர்நோக்க” அவை எவ்வாறு நமக்கு உதவுகின்றன?

ஆல்மா 13:10–12

என்னை சுத்தமாக்க இயேசு கிறிஸ்துவால் முடியும்.

  • இந்த வசனங்களை ஒன்றாகப் வாசித்த பிறகு, உங்கள் பிள்ளைகள் கற்பிப்பதைக் கற்பனை செய்து பார்க்க அவர்களுக்கு உதவுவதற்கான வழிகளைக் கருத்தில் கொள்ளுங்கள். ஒருவேளை நீங்கள் ஒன்றாக ஏதாவது கழுவலாம். நாம் அழுக்காக இருக்கும்போது நாம் எவ்வாறு உணர்கிறோம்? நாம் மீண்டும் சுத்தமாகும்போது, நாம் எவ்வாறு உணர்கிறோம்? இரட்சகரின் பாவநிவர்த்தியின் மூலம் நாம் பாவம் செய்து, மனந்திரும்பி, சுத்தமடையும் போது நாம் உணரும் உணர்வுகளுக்கு இந்த உணர்வுகள் எவ்வாறு ஒத்திருக்கின்றன?

ஆல்மா 14:18–29.

நான் இயேசு கிறிஸ்துவில் விசுவாசம் வைக்கும் போது பரலோக பிதா என்னை பலப்படுத்துகிறார்.

  • ஆல்மா 14:18–29 இல் உள்ள கதையைச் சொல்ல, இந்த வாரநிகழ்ச்சி பக்கம் உங்களுக்கோ அல்லது உங்கள் குழந்தைகளுக்கோ உதவும். ஆல்மா மற்றும் அமுலேக் அவர்கள் “கிறிஸ்துவின்மேல் [இருக்கும்] விசுவாசத்தின்” காரணமாக பலம் பெற்றனர் என்பதை வலியுறுத்துங்கள்.(ஆல்மா 14:26) “[உங்கள்] விசுவாசத்துக்கேற்ற” பெலத்தை தேவன் உங்களுக்குத் தந்த நேரத்தைப் பற்றியும் நீங்கள் பேசலாம். நாம் எப்படி ஆல்மா மற்றும் அமுலேக்கைப் போல இருக்க முடியும்?

ஆல்மா 15:3–12

இயேசு கிறிஸ்து இருதயங்களை மாற்றமுடியும்.

  • இயேசு கிறிஸ்துவின் மூலம் சீஸ்ரோமின் மனமாற்றம் உணர்த்துகிறது. சீஸ்ரோம் பற்றி உங்கள் பிள்ளைகள் கடந்த வாரம் கற்றுக்கொண்டதை மதிப்பாய்வு செய்வதைக் கருத்தில் கொள்ளவும். அவன் எப்படி மாறினான் என்பதைக் கண்டறிய நீங்கள் ஆல்மா 15:3–12ஐ ஒன்றாக வாசிக்கலாம். கர்த்தரின் வல்லமைபற்றி சீஸ்ரோமின் அனுபவத்திலிருந்து நாம் என்ன கற்றுக்கொள்கிறோம்? (“சீஸ்ரோம் குணமடைந்து ஞானஸ்நானம் பெற்றான்” [காணொலி], சுவிசேஷ நூலகம் பார்க்கவும்).

படம்
சிறையில் ஆல்மாவும் அமுலேக்கும்

Alma and Amulek in Prison (சிறையில் ஆல்மாவும் அமுலேக்கும்) – காரி எல். காப்

அச்சிடவும்