என்னைப் பின்பற்றி வாருங்கள் 2024
ஜூன் 17–23: “தன்னுடைய ஜனங்களை மீட்பதற்காக இயேசு கிறிஸ்து வருவார்.” ஆல்மா 8–12


“ஜூன் 17–23: ‘தன்னுடைய ஜனங்களை மீட்பதற்காக இயேசு கிறிஸ்து வருவார்.’ ஆல்மா 8–12,” என்னைப் பின்பற்றி வாருங்கள்—வீடு மற்றும் சபைக்காக: மார்மன் புஸ்தகம் 2024 (2024)

“ஜூன் 17–23. ஆல்மா 8–12,” என்னைப் பின்பற்றி வாருங்கள்—வீடு மற்றும் சபைக்காக: 2024(2024)

படம்
ஆல்மா பிரசங்கித்தல்

Teaching True Doctrine (உண்மையான கோட்பாட்டை போதித்தல்) – மைக்கேல் டி. மாம்

ஜூன் 17–23: தன்னுடைய ஜனங்களை மீட்பதற்காக இயேசு கிறிஸ்து வருவார்

ஆல்மா 8–12

தேவனின் கிரியை தோற்றுப்போகாது. ஆனால் அவருடைய பணிக்கு உதவும் நமது முயற்சிகள் சிலசமயங்களில் தோற்றுப்போவதாகத் தோன்றுகிறது, குறைந்தபட்சம், நாம் நம்பிக்கொண்டிருக்கிற விளைவுகளை உடனடியாக நாம் பார்க்காதிருக்கலாம். அம்மோனிகாவில் ஆல்மா சுவிசேஷத்தைப் பிரசங்கித்தபோது, நிராகரிக்கப்பட்டவனாக, உமிழப்பட்டவனாக, வெளியேற்றப்பட்டவனாக அவன் உணர்ந்ததைப்போல சிலநேரங்களில், சிறிது நாம் உணரக்கூடும். இருப்பினும் திரும்பிப்போய் மீண்டும் முயற்சிக்க ஒரு தூதன் அறிவுறுத்தியபோது ஆல்மா தைரியத்துடன் “துரிதமாக திரும்பிப்போனான்” (ஆல்மா 8:18) அவனுக்கு முன்பாக தேவன் வழியை ஆயத்தப்படுத்தினார். உண்ணுவதற்கு உணவையும், தங்குவதற்கு ஒரு இடத்தையும் மட்டுமே ஆல்மாவுக்கு அவர் கொடுக்கவில்லை, ஆனால், ஒரு சக வேலைக்காரனாகவும், சுவிசேஷத்தின் ஒரு கடுமையான பாதுகாவலனாகவும், ஒரு உண்மையுள்ள நண்பனாகவும் மாறின அமுலேக்கையும் அவர் ஆயத்தப்படுத்தினார். கர்த்தருடைய இராஜ்ஜியத்தில் நாம் சேவை செய்துகொண்டிருக்கும்போது, பின்னடைவுகளையும் ஏமாற்றங்களையும் நாம் எதிர்கொள்ளும்போது, தேவன் எவ்வாறு ஆல்மாவை ஆதரித்து அவனை நடத்தினார் என்பதை நாம் நினைவுகூரலாம், கடினமான சூழ்நிலைகளிலும் தேவன் நம்மை ஆதரிப்பார், நடத்துவார் என்று நாம் நம்பலாம்.

வீட்டிலும் சபையிலும் கற்றுக் கொள்வதற்கான ஆலோசனைகள்

படம்
வேத பாட வகுப்பு சின்னம்

ஆல்மா 8

இயேசு கிறிஸ்துவின் சுவிசேஷத்தைப் பகிர்ந்து கொள்வதற்கான எனது முயற்சிகளுக்கு பொறுமை தேவைப்படலாம்.

நீங்கள் எப்போதாவது இயேசு கிறிஸ்துவின் சுவிசேஷத்தை யாரிடமாவது பகிர்ந்து கொள்ள முயற்சித்திருக்கிறீர்களா, ஆனால் உங்கள் அழைப்பு நிராகரிக்கப்பட்டதா? ஆல்மா அதையும் அனுபவித்தான். சவால்கள் மற்றும் எதிர்ப்புகள் இருந்தபோதிலும் சுவிசேஷத்தைப் பகிர்ந்துகொள்வது பற்றி ஆல்மா 8:13–16ல் அவனிடமிருந்து நீங்கள் என்ன கற்றுக்கொள்கிறீர்கள்? 17–32 வசனங்களை தொடர்ந்து படித்து, நீங்கள் வெற்றியடைவதாகத் தோன்றாதபோதும், தொடர்ந்து சுவிசேஷத்தைப் பகிர்ந்துகொள்ள உங்களுக்கு உணர்த்தும் சொற்றொடர்களைத் தேடுங்கள்.

தீர்க்கதரிசிகள் மற்றும் அப்போஸ்தலர்கள் கிறிஸ்துவின் விசேஷித்த சாட்சிகள், எனவே அவரைப் பற்றி சாட்சியமளிப்பதைப் பற்றி பகிர்ந்து கொள்ள அவர்களுக்கு நிறைய உணர்த்தப்பட்ட ஆலோசனைகள் உள்ளன. மூப்பர் டியட்டர் எப். உக்டர்ப் “ஆனால், கடினமாயிருந்தால் என்ன?” (ஊழியப்பணியின் ஒரு பகுதியிலிருந்து “உங்கள் இருதயத்தில் உள்ளவைகளை பகிர்ந்து கொள்ளுதல் என்ற ,” லியகோனா, மே 2019, 18) விலோ அல்லது மூப்பர் காரி இ. ஸ்டீவென்சன் “நேசிக்கவும், பகிரவும், அழைக்கவும் என்ற,” (லியகோனா, மே 2022, 84–87)விலோ பகிர்ந்துகொண்டவைகளிலிருந்து என்ன சொன்னார்கள் என்று பார்க்கவும். சுவிசேஷத்தைப் பகிர்ந்துகொள்வதில் மனச்சோர்வடையத் தொடங்கும் ஒருவருக்கு உதவக்கூடியது அங்கு என்ன உள்ளது?

நீங்கள் இங்கு படித்த அனைத்தையும் சுவிசேஷத்தைப் பகிர்ந்துகொள்வது பற்றிய உணர்த்தும் ஒன்று அல்லது இரண்டு வாசகங்களை எவ்வாறு சுருக்கமாகக் கூறுவீர்கள்? தொடர்ந்து முயற்சி செய்ய உங்களுக்கு (மற்றும் பிறருக்கு) உணர்த்தும் ஒரு சுவரொட்டி அல்லது நினைவுச்சின்னத்தை உருவாக்கவும்.

ஆல்மா 9:14–23

தேவனின் ஆசீர்வாதம் பெரும் பொறுப்புடன் வருகிறது.

அம்மோனிகாவில், கர்த்தருடைய ஊழியக்காரர்களை நேபியர்கள் நடத்திய விதத்தைப்பற்றி வாசிக்கும்போது, ஒருசமயம் அவர்கள் சுவிசேஷத்தின்படி வாழ்ந்தவர்கள் என்பதையும் “கர்த்தருக்கு மிகவும் பிரியமான ஜனங்களாயிருந்தார்கள்” (ஆல்மா 9:20) என்பதையும் மறப்பது எளிது. நேபியின் ஜனங்களுக்கு தேவன் கொடுத்த பெரிய ஆசீர்வாதங்களைப்பற்றி (விசேஷமாக ஆல்மா 9:14–23 பார்க்கவும்) நீங்கள் வாசிக்கும்போது உங்களுக்கு அவர் கொடுத்திருக்கிற பெரிய ஆசீர்வாதங்களைப்பற்றி சிந்திக்கவும். இந்த ஆசீர்வாதங்களுடன் என்ன பொறுப்புகள் வருகின்றன? இந்த ஆசீர்வாதங்களுக்கு உண்மையாயிருக்க நீங்கள் என்ன செய்துகொண்டிருக்கிறீர்கள்?

கோட்பாடும் உடன்படிக்கைகளும் 50:24; 82:3; 93:39 ஐயும் பார்க்கவும்.

ஆல்மா 11–12

தேவனுடைய திட்டம் மீட்பின் திட்டம்.

ஆல்மா11–12ல் ஆல்மாவும் அமுலேக்கும் தேவனின் திட்டத்தை மீட்பின் திட்டமாக குறிப்பிட்டார்கள். இந்த அதிகாரங்களை நீங்கள் வாசிக்கும்போது தேவனின் திட்டத்தை விவரிக்க மீட்பு என்ற வார்த்தை ஏன் பயன்படுத்தப்பட்டது என சிந்திக்கவும். திட்டத்தின் பின்வரும் அம்சங்களைப்பற்றி ஆல்மாவும் அமுலேக்கும் என்ன போதித்தார்கள் என்பதை ஒரு சுருக்க தொகுப்பாக நீங்கள் எழுதுவதைக் கருத்தில் கொள்ளலாம்.

  • வீழ்ச்சி

  • மீட்பர்

  • மனந்திரும்புதல்

  • மரணம்

  • உயிர்த்தெழுதல்

  • நியாயத்தீர்ப்பு

ஜனங்கள்மேல் அமுலேக்கின் வார்த்தைகள் ஏற்படுத்திய தாக்கத்தை கவனிக்கவும் (ஆல்மா 11:46 பார்க்கவும்). தேவனின் திட்டத்தைப்பற்றி அறிவது உங்களுக்கு என்ன தாக்கத்தை ஏற்படுத்தியது.

டாலின் எச். ஓக்ஸ், “மாபெரும் திட்டம்,” லியஹோனா, மே 2020, 93–96 பார்க்கவும்.

ஆல்மா 12:8–18.

என்னுடைய இருதயத்தை நான் கடினப்படுத்தாதிருந்தால், கூடுதலான தேவ வார்த்தைகளை நான் பெறமுடியும்.

ஏன் பரலோக பிதா சகலகாரியங்களையும் நாம் அறிந்துகொள்ளாமல் வைத்திருக்கிறார் என சில ஜனங்கள் ஆச்சரியப்படலாம். ஒரு சாத்தியமான காரணத்தைப்பற்றி ஆல்மா 12:9–14ல், ஆல்மா விளக்கினான். அவன் போதித்தவைகளை நீங்கள் சிந்திக்க இந்த கேள்விகள் உங்களுக்கு உதவமுடியும்:

  • உங்கள் இருதயங்களைக் கடினப்படுத்துதல் என்றால் அர்த்தமென்ன? கடினமான இருதயம் பெற்றிருப்பதன் விளைவுகள் என்ன? (மேலும் ஆல்மா 8:9–11; 9:5, 30–31; மற்றும் 10:6, 25 பார்க்கவும்).

  • உங்கள் இருதயத்தை தேவனிடம் திருப்ப நீங்கள் என்ன செய்யலாம்? (எரேமியா 24:7; ஆல்மா 16:16; ஏலமன் 3:35).

  • தேவனுடைய வார்த்தை “[உங்களில்] காணப்படுகிறதென்பதை” உறுதிப்படுத்த உங்களால் என்ன செய்யமுடியும்? (ஆல்மா 12:13). உங்களில் தேவ வார்த்தையிருக்கும்போது, உங்களுடைய “வார்த்தைகளில்”, “செயல்களில்”, “சிந்தனைகளில்” அது என்ன தாக்கத்தை ஏற்படுத்தும்? (ஆல்மா 12:14).

மென்மையான இருதயம் இருப்பதன் ஆசீர்வாதங்களைப் பற்றி அமுலேக்கின் அனுபவம் உங்களுக்கு என்ன போதிக்கிறது? ( ஆல்மா 10:1–11 பார்க்கவும்).

பிள்ளைகளுக்கு போதிப்பதற்கான ஆலோசனைகள்

ஆல்மா 8–10

இயேசு கிறிஸ்துவின் சுவிசேஷத்தை என்னால் பகிர்ந்து கொள்ள முடியும்.

  • உங்கள் குழந்தைகளுக்கான ஆல்மா 8–10ல் உள்ள நிகழ்வுகளை சுருக்கமாகச் சொல்ல இந்த வார நிகழ்ச்சி பக்கம் உங்களுக்கு உதவும். ஆல்மாவையும் அமுலேக்கையும் நல்ல ஊழியக்காரர்களாக மாற்றிய கொள்கைகளைக் கண்டறிய அவர்களுக்கு உதவ நீங்கள் விரும்பலாம். உதாரணமாக, அவர்கள் தைரியமிழக்கவில்லை (ஆல்மா 8:8–13 ஐப் பார்க்கவும்), அவர்கள் கிறிஸ்துவைப் பற்றி சாட்சியமளித்தனர் (ஆல்மா 9:26–27 ஐப் பார்க்கவும்), அவர்கள் ஒன்றாக வேலை செய்தனர் (ஆல்மா 10:12 ஐப் பார்க்கவும்).

  • அவர்கள் கண்டறிந்த யோசனைகள் மற்றும் அவர்கள் சுவிசேஷத்தைப் பகிர்ந்து கொள்ளக்கூடிய நபர்களை பட்டியலிட அவர்களை அழைக்கவும். அவர்கள் என்ன சொல்லலாம் அல்லது என்ன செய்யலாம் என்பதை அவர்கள் நடிக்க நீங்கள் அனுமதிக்கலாம்

பங்கேற்றலை ஊக்குவிக்கவும். நீங்கள் கற்பிக்கத் தயாராகும்போது, சொல்ல வேண்டிய விஷயங்களைத் திட்டமிடுவதற்குப் பதிலாக, “குழந்தைகள் கற்றுக்கொள்ள என்ன செய்வார்கள்?” என்று உங்களை நீங்களே கேட்டுக்கொள்ளுங்கள். அவர்கள் தீவிரமாக பங்கேற்கும்போது குழந்தைகள் சிறப்பாகக் கற்றுக் கொள்வார்கள் மற்றும் நீண்ட காலம் நினைவில் கொள்வார்கள்.

ஆல்மா 11–12

தேவனுடைய திட்டம் மீட்பின் திட்டம்.

  • ஆதாம் மற்றும் ஏவாளின் வீழ்ச்சி, இயேசு கிறிஸ்துவின் பாவநிவர்த்தி, மனந்திரும்புதல், மரணம், உயிர்த்தெழுதல் மற்றும் நியாயத்தீர்ப்பு போன்ற மீட்புத் திட்டத்தின் கொள்கைகளைக் குறிக்கும் ஒரு படத்தை உங்கள் பிள்ளைகள் வரையலாம். இந்த கொள்கைகளைப் பற்றி கற்பிக்கும் ஆல்மா 11–12 வசனங்களுடன் அவர்களின் படங்களை பொருத்த நீங்கள் அவர்களுக்கு உதவலாம்.

ஆல்மா 8:18–22.

நான் நல்ல நண்பனாக இருக்க முடியும்.

  • நீங்கள் ஆல்மா 8:18–22 இல் உள்ள கதையை சொல்லும்போது ஒரு குழந்தையை அமுலேக் போலவும் மற்றொரு குழந்தையை ஆல்மாவாகவும் நடிக்க அழைக்கலாம். அமுலேக் எப்படி ஆல்மாவுக்கு நல்ல நண்பனாக இருந்தான்? அப்போது உங்கள் பிள்ளைகள் ஒருவர் தங்களுக்கு எப்படி நண்பராக இருந்தார் என்பதையும் அந்த அனுபவம் அவர்களுக்கு எப்படி இருந்தது என்பதையும் பகிர்ந்து கொள்ளலாம்.

  • ஒருவேளை நீங்கள் ஒரு நட்பு புதிரை உருவாக்கலாம்: நட்பைக் குறிக்கும் ஒரு படத்தைக் கண்டுபிடித்து அல்லது வரைந்து அதை புதிர் துண்டுகளாக வெட்டுங்கள். ஒவ்வொரு பகுதியின் பின்புறத்திலும், ஆல்மா மற்றும் அமுலேக் செய்த விஷயங்கள் உட்பட, ஒரு நல்ல நண்பராக இருக்க நாம் செய்யக்கூடிய ஒன்றை எழுதுங்கள். உங்கள் பிள்ளைகள் மாறி மாறி ஒரு பகுதியைத் தேர்ந்தெடுத்து, பின்னால் எழுதப்பட்டதை வாசிக்கும்போது புதிரில் சேர்க்கலாம். நமது நட்பு யாருக்குத் தேவையாயிருக்கிறது?

படம்
இரு சிறுமிகள் சிரித்தல்

நாம் மற்றவர்களுக்கு நல்ல நண்பர்களாக இருக்க முடியும்.

ஆல்மா 11:43–44.

இயேசு கிறிஸ்துவின் நிமித்தம், நான் உயிர்த்தெழுப்பப்படுவேன்.

  • உயிர்த்தெழுதலைப் பற்றி கற்பிக்க இது போன்ற ஒரு பொருள்சார் பாடத்தைக் கருத்தில் கொள்ளவும்: உங்கள் கை உங்கள் ஆவியைக் குறிக்கும், மேலும் ஒரு கையுறை உங்கள் உடலைக் குறிக்கும். மரணத்தின் போது நமது ஆவிகளும் உடலும் பிரிக்கப்படும் என்பதைக் காட்ட கையுறையிலிருந்து உங்கள் கையை வெளியிலெடுங்கள். உயிர்த்தெழுதலில் நமது ஆவிகளும் உடலும் மீண்டும் ஒன்றாக இணைக்கப்படும் என்பதைக் காட்ட உங்கள் கையை மீண்டும் கையுறைக்குள் வைக்கவும். நீங்கள் ஆல்மா 11:43ஐ வாசிக்கும்போது உங்கள் பிள்ளைகள் கையுறையை மாறி மாறி போடவும் கழற்றவும் செய்யட்டும்.

படம்
அமுலேக்குடன் ஆல்மா உணவருந்துதல்

Illustration of Alma eating with Amulek (அமுலேக்குடன் ஆல்மா உணவருந்துதலின் சித்தரிப்பு) – டான் பர்

அச்சிடவும்