பாவத்தை எதிர்க்கும் தலைமுறை
நீங்கள் பிள்ளைகளுக்குப் போதித்து, வழிநடத்தி, அன்பு செலுத்தும்போது, வீரமிக்க, பாவத்தை எதிர்க்கிற பிள்ளைகளை உருவாக்கி, ஆயுதந்தரிக்க உங்களுக்கு உதவுகிற தனிப்பட்ட வெளிப்படுத்தலை நீங்கள் பெறலாம்.
ஒன்றரை வருடத்துக்கு முன்பு தலைவர் ரசல் எம். நெல்சன் “ஒரு பாவத்தை எதிர்க்கிற தலைமுறைக்கு போதித்து உதவ” வேண்டிய தேவை பற்றி பேசினார்.1 “பாவத்தை எதிர்க்கிற தலைமுறை” என்ற அந்த சொற்றொடர் எனக்குள் ஒரு ஆழமான ஆவிக்குரிய நரம்பை தாக்கியது.
பரிசுத்தமான, கீழ்ப்படிதலுள்ள வாழ்க்கை வாழ்கிற பிள்ளைகளை கௌரவிக்க நாம் முயல்கிறோம். உலகமெங்கிலுமுள்ள அநேக பிள்ளைகளின் பெலனை நான் பார்த்திருக்கிறேன். பல்வேறு சவாலான சூழ்நிலைகளிலும், சுற்றுப்புறங்களிலும் “உறுதியாகவும் அசைக்க முடியாமலும்”2 அவர்கள் தாக்குப்பிடித்து நிற்கிறார்கள். இப்பிள்ளைகள் தங்கள் தெய்வீக அடையாளத்தைப் புரிந்து, அவர்கள் மீது பரலோக பிதாவின் அன்பை உணர்ந்து, அவரது சித்தத்துக்குக் கீழ்ப்படிவதை நாடுகிறார்கள்.
எனினும் “உறுதியாகவும் அசைக்க முடியாமலும்” நிற்கப் போராடுகிற, அவர்களது மென்மையான மனங்கள் காயப்படுத்தப்பட்டிருக்கிற பிள்ளைகள் இருக்கிறார்கள்.3 அவர்கள் அனைத்து திசைகளிலிருந்தும் “சத்துருவின் அக்கினியஸ்திரங்களால்” தாக்கப்பட்டு,4 பெலனும் ஆதரவும் தேவைப்படுகிறார்கள். நமது பிள்ளைகளை கிறிஸ்துவண்டை கொண்டுவருகிற நமது முயற்சியில், பாவத்தை எதிர்த்து நின்று போரிட நமக்கு ஒரு அதிகமான ஊக்கமாக இருக்கிறார்கள்.
கிட்டத்தட்ட 43 வருடங்களுக்கு முன்பு சொல்லப்பட்ட மூப்பர் புருஸ் ஆர், மெக்கான்கியின் வார்த்தைகளைக் கேளுங்கள்:
“சபையாராக நாம் பலத்த கலகத்தில் ஈடுபட்டிருக்கிறோம். நாம் யுத்தத்தில் இருக்கிறோம். லூசிபரை எதிர்த்துப் போரிட கிறிஸ்துவுக்காக நாம் பெயர் சேர்க்கப்பட்டிருக்கிறோம். ...
“எல்லா திசைகளிலிருந்தும் கர்ஜிக்கிற, துரதிர்ஷ்டவசமாக அநேக விபத்துகள் ஏற்பட்டு, சில உயிரிழப்பு ஏற்பட்டுள்ள மகா யுத்தம், புதிதல்ல. ...
இப்போது இந்த யுத்தத்தில் எந்த நடுநிலையாளர்களும் இல்லை.”5
இன்று அதிக உக்கிரத்துடன் இந்த யுத்தம் தொடர்கிறது. யுத்தம் அனைவரையும் பாதிக்கிறது, எதிரிகளை எதிர்கொண்டு நமது பிள்ளைகள் முதல் வரிசையில் இருக்கிறார்கள். அவ்விதமாக நமது ஆவிக்குரிய உபாயங்களை பெலப்படுத்தும் தேவை அதிகரித்திருக்கிறது.
பாவத்தை எதிர்ப்பவர்களாக பிள்ளைகளைப் பெலப்படுத்துவது பெற்றோருக்கும், தாத்தா பாட்டிகளுக்கும், குடும்பத்தினருக்கும், ஆசிரியர்களுக்கும், தலைவர்களுக்கும் ஒரு வேலையும் ஆசீர்வாதமுமாகும். உதவ நம் அனைவருக்கும் பொறுப்பிருக்கிறது. எனினும், “மனந்திரும்புதலின் கோட்பாட்டைப் புரிந்துகொள்ளவும், ஜீவிக்கும் தேவ குமாரனாகிய கிறிஸ்துவிலும், ஞானஸ்நானத்திலும், பரிசுத்த ஆவியின் வரத்திலும் விசுவாசமுடன்,” “ஜெபித்து கர்த்தருக்கு முன்பாக நிமிர்ந்து நடக்கவும், தங்கள் பிள்ளைகளுக்குப் போதிக்கவும், கர்த்தர் குறிப்பாக பெற்றோருக்கு அறிவுறுத்தியிருக்கிறார்.”6
இது ஒவ்வொரு குடும்பத்துக்கும் பிள்ளைக்கும் தனித்துவமானதாக இருப்பதால், எப்படி “பிள்ளைகளை ஒளியிலும் சத்தியத்திலும் வளர்ப்பது”7 என்பது சவால் நிறைந்த கேள்வியாக இருக்கலாம், ஆனால், நமக்கு உதவக்கூடிய உலகளாவிய வழிகாட்டுதல்களை பரலோக பிதா நமக்குக் கொடுத்திருக்கிறார். நமது பிள்ளைகளை நாம் ஆவிக்குரிய பிரகாரமாக, பொருத்துகிற மிகவும் சக்திவாய்ந்த வழிகளில் ஆவி நமக்கு உணர்த்தும்.
தொடங்குவதற்கு, இப்பொறுப்பின் முக்கியத்துவம் பற்றிய பார்வை பெறுவது முக்கியம். அவர்கள் யார், அவர்கள் ஏன் இங்கிருக்கிறார்கள் என நமது பிள்ளைகள் பாரக்க, நாம் உதவுவதற்கு முன், நமது மற்றும் அவர்களது தெய்வீக அடையாளத்தையும் நோக்கத்தையும் புரிந்து கொள்ள வேண்டும். அவர்கள் அன்பான பரலோக பிதாவின் குமாரர்கள், குமாரத்திகள் எனவும், அவர் அவர்களிடம் தெய்வீக எதிர்பார்ப்புகள் வைத்திருக்கிறார் எனவும் கேள்விகள் இல்லாமல் அறிய அவர்களுக்கு உதவ வேண்டும்.
இரண்டாவதாக, மனந்திரும்புதலின் கோட்பாட்டை புரிந்து கொள்ளுதல், பாவத்தை எதிர்க்க முக்கியமானதாகும். பாவத்தை எதிர்த்து நிற்பது என்பது பாவமின்றி இருப்பது என்பதாகாது, ஆனால் தொடர்ந்து மனந்திரும்பி, விழிப்புடனிருந்து, வீரமாக இருப்பதைக் குறிக்கும். ஒருவேளை பாவத்தை எதிர்ப்பவராக இருப்பது, பாவத்தைத் தொடர்ந்து எதிர்ப்பதிலிருந்து வருகிற ஆசீர்வாதமாக இருக்கலாம். யாக்கோபு சொன்னதுபோல, “பிசாசுக்கு எதிர்த்து நில்லுங்கள், அப்பொழுது அவன் உங்களை விட்டு ஓடிப்போவான்.”8
அந்த பராக்கிரம வீரர்கள் “தைரியத்தில் மிகுந்த வீரமுடையவர்களாக இருந்தார்கள். ... ஆனால் இது மாத்திரமல்ல, எல்லா நேரத்திலும் தங்களிடம் ஒப்படைக்கப்பட்ட எக்காரியத்திலும் உண்மையுள்ள மனுஷர்களாயிருந்தனர். ஆம், அவர்கள் தேவனுடைய கற்பனைகளைக் கைக்கொள்ளும்படியும், அவருக்கு முன்பாக செம்மையாய் நடக்கவும் போதிக்கப்பட்டிருந்தார்கள்.”9இந்த இளைஞர்கள் தஙகள் சத்துருக்களுக்கு எதிரான ஆயுதங்களாக கிறிஸ்து போன்ற நற்குணங்களைத் தாங்கி, யுத்தத்துக்குப் போனார்கள். தலைவர் தாமஸ் எஸ். மான்சன் நமக்கு நினைவூட்டினார், தைரியத்துக்கான அழைப்பு நம் ஒவ்வொருவருக்கும் தொடர்ந்து வருகிறது. நமது வாழ்க்கையின் ஒவ்வொரு நாளும் தைரியம் தேவைப்படுகிறது, அந்த நேர நிகழ்வுக்கு மட்டுமல்ல, ஆனால் அடிக்கடி நாம் தீர்மானங்கள் செய்யும்போதும், அல்லது நம்மைச் சுற்றியுள்ள சூழ்நிலைகளுக்கு பதிலளிக்கும்போதும்.10
தனிப்பட்ட அன்றாட சீஷத்துவத்தின் மாதிரிகளை அவர்கள் ஏற்படுத்தும்போது, நமது பிள்ளைகள் ஆவிக்குரிய ஆயுதங்களைத் தரிக்கிறார்கள். ஒருவேளை அன்றாட சீஷத்துவத்தின் கொள்கையை பற்றிப்பிடிக்கும் பிள்ளைகளின் திறமையை நாம் குறைவாக மதிப்பிடலாம். தலைவர் ஹென்றி பி. ஐரிங் “சீக்கிரம் தொடங்கவும் நிதானமாயிருக்கவும்” நமக்கு ஆலோசனையளித்திருக்கிறார்.11 பாவத்தை எதிர்த்து நிற்பவர்களாக ஆக, பிள்ளைகளுக்கு உதவும் மூன்றாவது திறவுகோல் அடிப்படை சுவிசேஷ கோட்பாடுகளையும் கொள்கைகளையும் வேதங்களிலிருந்தும், விசுவாசப்பிரமாணங்களிலிருந்தும், இளைஞர்களின் பெலனுக்காக சிற்றேட்டிலிருந்தும், ஆரம்ப வகுப்பு பாடல்களிலிருந்தும், கீர்த்தனைகளிலிருந்தும், நமது சொந்த சாட்சிகளிலிருந்தும் மிக இளம் வயதிலேயே அவற்றை அன்பாக புகட்ட, ஆரம்பிக்க வேண்டும். அது அவர்களை இரட்சகரை நோக்கி வழிநடத்தும்.
ஜெபம், வேதப்படிப்பு, குடும்ப இல்ல மாலை, ஓய்வு நாள் ஆராதனை போன்ற தொடர் பழக்கங்களை உருவாக்குவது, முழுமைக்கும், உள்ளார்ந்த பக்குவத்துக்கும், பெலமான ஒழுக்க குணங்களுக்கும் , வேறு வார்த்தைகளிலெனில் ஆவிக்குரிய உத்தமத்துக்கு வழிநடத்தும். இன்றைய உலகத்தில் உத்தமம் மறைந்துகொண்டிருக்கும்போது, எது உண்மையான உத்தமம், ஏன் அது அவ்வளவு முக்கியம் என நமது பிள்ளைகள் புரிந்து கொள்ள வேண்டியவர்கள்—விசேஷமாக ஞானஸ்நானம் மற்றும் ஆலய பரிசுத்த உடன்படிக்கைகளைச் செய்து காத்துக் கொள்ளவும் நாம் அவர்களை ஆயத்தம் செய்யும்போது. என் சுவிசேஷத்தைப் பிரசங்கியுங்கள்போதிக்கிறது, “ஒப்புக்கொடுத்தல்களைக் காத்துக் கொள்ளுதல் ஜனங்களை, இளைஞர்கள் உட்பட, பரிசுத்த உடன்படிக்கைகளை செய்து காத்துக்கொள்ள ஆயத்தப்படுத்துகிறது.”12
மூப்பர் ஜெப்ரி ஆர். ஹாலண்ட் போதித்திருக்கிறார், “உடன்படிக்கையைக் காத்துக்கொள்வதைப் பற்றி நாம் பேசும்போது, அநித்தியத்தில் நமது நோக்கத்தின் இதயத்தையும் ஆத்துமாவையும் பற்றி பேசுகிறோம்.”13 நமது பரலோக பிதாவுடன் உடன்படிக்கை செய்து காத்துக்கொள்வதில் அசாதாரண வல்லமை இருக்கிறது. சத்துரு இதை அறிவான். ஆகவே அவன் உடன்படிக்கை செய்யும் கொள்கையை மங்கலாக்கியிருக்கிறான்.14 பாவத்தை எதிர்க்கும் தலைமுறையை உருவாக்குவதில் பிள்ளைகள் பரிசுத்த உடன்படிக்கைகளைப் புரிந்து, செய்து, காத்துக்கொள்ள உதவுவது மற்றொரு முக்கிய காரியமாகும்.
உடன்படிக்கையின் பாதையில் அவர்கள் நுழைந்து முன்னேறும்போது, பரிசுத்த உடன்படிக்கைகளைச் செய்து காத்துக் கொள்ள நாம் எப்படி நமது பிள்ளைகளுக்கு உதவுகிறோம்? அவர்கள் சிறுவர்களாயிருக்கும்போது எளிய வாக்குத்தத்தங்களை காத்துக்கொள்ள பிள்ளைகளுக்குக் கற்பிப்பது, பின்னர் வாழ்க்கையில் பரிசுத்த உடன்படிக்கைகளை காத்துக்கொள்ள அவர்களுக்கு வல்லமையளிக்கும்.
ஒரு எளிய உதாரணத்தைப் பகிர்கிறேன், குடும்ப இல்ல மாலையில் ஒரு அப்பா கேட்டார், “நாம் குடும்பமாக எப்படி வாழ்கிறோம்?” ஐந்து வயது லிஸி தன் அண்ணன் கெவின் அவளை அதிகமாக கிண்டல் செய்வதாகவும், அவளது உணர்வுகளைக் காயப்படுத்துவதாகவும், புகார் கூறினாள். லிஸி சொல்வது சரி என தயங்கி கெவின் ஒத்துக்கொண்டான். தன் சகோதரியோடு நன்றாக இருக்க அவனால் என்ன செய்ய முடியும் என கெவினின் அம்மா கேட்டார். அவளைக் கிணடல் செய்யாமல் ஒரு முழுநாள் இருப்பதாக லிஸிக்கு கெவின் வாக்களிப்பதாக சிந்தித்து முடிவுசெய்தான்.
அடுத்த நாள் முடிவில் அனைவரும் குடும்ப ஜெபத்துக்காக கூடியிருந்தபோது, கெவினின் அப்பா, அவன் என்ன செய்தான் என அவனிடம் கேட்டார். அவனது பதில், “அப்பா, நான் என் வாக்கைக் காப்பாற்றினேன்.” லிஸி மகிழ்ச்சியாய் சம்மதித்தாள் மற்றும் குடும்பத்தினர் கெவினை பாராட்டினர்.
ஒருநாள் அவன் வாக்கை காப்பாற்ற முடியுமானால், அவன் ஏன் இரண்டு நாட்களுக்கு செய்ய முடியாது? என கெவினின் அம்மா ஆலோசனையளித்தார். மீண்டும் முயற்சி செய்ய கெவின் சம்மதித்தான். இரு நாட்கள் கடந்தன, வாக்கைக் காப்பதில் கெவின் வெற்றிபெற்றான், லிஸி அதிக நன்றி தெரிவித்தாள்! ஏன் அவனது வாக்கை நன்கு காப்பாற்றினான் என அவரது அப்பா கேட்டபோது, கெவின் சொன்னான், “நான் செய்வேன் என சொன்னதால் நான் என் வாக்கை காத்துக் கொண்டேன்.”
சிறு வாக்குத்தத்தங்களை வெற்றிகரமாக தொடர்ந்து காத்துக்கொள்வது, உத்தமத்துக்கு வழிநடத்தும். வாக்குத்தத்தத்தைக் காத்துக் கொள்ளும் தொடர்ந்த பயிற்சி, முதல் உடன்படிக்கையாகிய ஞானஸ்நானத்தையும் பரிசுத்த ஆவியின் வரத்தையும் பெற பிள்ளைகளின் ஆவிக்குரிய ஆயத்தமாகும். அப்போது அவர்கள் தேவனுக்கு சேவை செய்யவும், அவரது உடன்படிக்கைகளைக் காத்துக் கொள்ளவும் உடன்படிக்கை செய்கிறார்கள்.15 வாக்குத்தத்தங்களும் உடன்படிக்கைகளும் பிரிக்க முடியாதவை.
தானியேல் புத்தகத்தில் சாத்ராக்கும், மேஷாக்கும், ஆபேத் நேகோவும் நேபுகாத் நேச்சார் இராஜாவின் சிலையை வணங்க மறுத்ததை நாம் கற்கிறேம்.16 அவர்கள் இணங்காவிட்டால், அவர்கள் எரிந்து கொண்டிருக்கிற அக்கினிச் சூளையில் போடப்படுவார்கள், என இராஜா எச்சரித்தான். அவர்கள் மறுத்து சொன்னார்கள்:
“நாங்கள் ஆராதிக்கிற எங்கள் தேவன் எங்களைத் தப்புவிக்க வல்லவராயிருக்கிறார். ...
“அவர் எரிகிற அக்கினிச் சூளைக்கும், இராஜாவாகிய உமது கைக்கும் நீங்கலாக்கி எங்களை விடுவிப்பார்.”17
“விடுவிக்காமற்போனாலும்.” இந்த வார்த்தையின் அர்த்தத்தை கருத்தில் கொள்ளுங்கள், உடன்படிக்கைகளைக் காத்துக் கொள்வதற்கு அவை எப்படி பொருந்துகின்றன. இந்த மூன்று இளைஞர்களும் தங்கள் கீழ்ப்படிதலை விடுவிப்பதன் அடிப்படையில் செய்யவில்லை. அவர்கள் விடுவிக்கப்படாவிட்டாலும், அவர்கள் செய்வோம் என்றதால், கர்த்தருக்கு தங்கள் வாக்குத்தத்தத்தை காப்பார்கள். உடன்படிக்கைகளைக் காத்துக் கொள்வது எப்போதுமே, நமது சூழ்நிலைகளுக்கு சம்மந்தமில்லாதது. இந்த மூன்று இளைஞர்களான பராக்கிரம வீரர்கள்போல, நமது பிள்ளைகள் பாவத்தை எதிர்ப்பதற்கு அற்புதமான உதாரணங்கள்.
இந்த உதாரணங்கள் நமது வீடுகளுக்கும் குடும்பங்களுக்கும், எப்படிப் பொருந்துகின்றன? வரிவரியாயும் கற்பனை கற்பனையாயும்18 நம் பிள்ளைகள் சிறு துண்டுகளாக வெற்றியைச் சுவைக்க நாம் உதவுகிறோம். அவர்கள் வாக்குத்தத்தங்களைக் காத்துக் கொள்ளும்போது, தங்கள் வாழ்க்கையில் ஆவியை உணர்கிறார்கள். மூப்பர் ஜோசப் பி. விர்த்லின் போதித்தார், “உத்தமத்தின் மொத்த பிரதிபலன் பரிசுத்த ஆவியானவரின் தொடர்ந்த தோழமைதான்.”19 பின்பு நமது பிள்ளைகளின் “தன்னம்பிக்கை தேவ சமூகத்தில் வலிமையடையும்.”20 உத்தமத்தின் கிணற்றிலிருந்து வல்லமை பொருந்திய பாவ எதிர்ப்பு தலைமுறை எழும்புகிறது.
சகோதர சகோதரிகளே, உங்கள் அன்றாட மத நடத்தையை அவர்கள் அருகிலிருந்து பார்த்து, உங்கள் வாக்குத்தத்தங்களையும் உடன்படிக்கைகளையும் நீங்கள் காத்துக் கொள்வதை பார்க்குமாறு உங்கள் சிறு பிள்ளைகளை அருகில் வையுங்கள். “பிள்ளைகள் நல்ல பாவனை செய்பவர்கள், ஆகவே அவர்களுக்கு பாவனை செய்ய எதையாவது கொடுங்கள்.”21 வாக்குத்தத்தங்களாலும் உடன்படிக்கைகளாலும், கர்த்தருக்கு ஒரு பாவ எதிர்ப்பு தலைமுறைக்கு கற்பிக்கவும் வளர்க்கவும் நாம் உண்மையாகவே முயற்சி செய்கிறோம்.
இச்சபையை இயேசு கிறிஸ்து வழிநடத்துகிறார், என நான் சாட்சியளிக்கிறேன். இரட்சகரின் வழியில் நீங்கள் பிள்ளைகளுக்குப் போதித்து, வழிநடத்தி, அன்பு செலுத்தும்போது, பராக்கிரம, பாவத்தை எதிர்க்கும் பிள்ளைகளை உருவாக்கி, ஆயுதந்தரிக்க உஙகளுக்கு உதவுகிற தனிப்பட்ட வெளிப்படுத்தல்களை நீங்கள் பெறலாம். நெப்பியின் வார்த்தைகளை நமது பிள்ளைகள் எதிரொலிக்க வேண்டும் என்பதே எனது ஜெபமாகும். “பாவத்தின் தோற்றத்திலேயே நான் நடுங்கும்படி என்னை நீர் செய்தருளுவீரா?”22இரட்சகர் உலகத்தின் பாவங்களுக்காக பாவநிவர்த்தி செய்தார்23 என நான் சாட்சியளிக்கிறேன். அவர் செய்வேன் என்று சொன்னதாலும், அழிவுக்கு ஏதுவான நாம், புரிந்துகொள்ள முடியாத அளவுக்கு அவர் நம்மை நேசிக்கிறார்.24 ஏனெனில் அவர் செய்வேன் என சொன்னார். இயேசு கிறிஸ்துவின் நாமத்தினாலே, ஆமென்.