2010–2019
நமது வெளிச்சம் தேசங்களுக்கு ஒரு அடையாளமாயிருக்கும்படிக்கு
ஏப்ரல் 2017


11:9

நமது வெளிச்சம் தேசங்களுக்கு ஒரு அடையாளமாயிருக்கும்படிக்கு

நமது வெளிச்சம் தேசங்களுக்கு ஒரு அடையாளமாயிருக்கும்படியாக, இரட்சகரின் சுவிசேஷமும், அவருடைய மறுஸ்தாபிதம் செய்யப்பட்ட சபையும், நமக்கு அநேக சந்தர்ப்பங்களைக் கொடுக்கிறது.

சில ஆண்டுகளுக்கு முன்பு, வேதபாட ஆசிரியராக நான் ஊழியம் செய்துகொண்டிருந்தபோது, பின்வரும் கேள்விக்கு பதிலளிக்குமாறு என்னுடைய சகபணியாளர்களில் ஒருவர் தன்னுடைய மாணவர்களைக் கேட்டதாக நான் அறிந்தேன்: இரட்சகரின் காலத்தில் நீங்கள் வாழ்ந்திருந்தால் அவருடைய சீஷர்களில் ஒருவராக நீங்கள் அவரைப் பின்பற்றியிருப்பீர்களென நீங்கள் ஏன் நினைக்கிறீர்கள்? தற்காலத்தில் இரட்சகரைப் பின்பற்றுகிறவர்கள், அவருடைய சீஷர்களாக இருக்க முயற்சிக்கிறவர்கள் அப்போதும் ஒருவேளை அப்படியே செய்திருப்பார்களென அவர்கள் ஒரு முடிவுக்கு வந்தனர்.

அப்போதிலிருந்து அந்தக் கேள்வியையும் அவர்களுடைய முடிவையும் நான் சிந்தித்துக் கொண்டிருந்தேன். மலைப்பிரசங்கத்தில் பின்வருபவற்றை இரட்சகரே சொன்னபோது நான் எவ்வாறு உணர்ந்திருப்பேனென அடிக்கடி நான் வியப்புறுகிறேன்.

“நீங்கள் உலகத்துக்கு வெளிச்சமாயிருக்கிறீர்கள், மலையின்மேல் இருக்கிற பட்டணம் மறைந்திருக்கமாட்டாது.

“விளக்கைக் கொளுத்தி மரக்காலால் மூடிவைக்காமல், விளக்குத்தண்டின்மேல் வைப்பார்கள். அப்பொழுது அது வீட்டிலுள்ள யாவருக்கும் வெளிச்சம் கொடுக்கும்.

“இவ்விதமாய், மனுஷர் உங்கள் நற்கிரியைகளைக்கண்டு பரலோகத்திலிருக்கிற உங்கள் பிதாவை மகிமைப்படுத்தும்படி உங்கள் வெளிச்சம் அவர்கள் முன்பாகப் பிரகாசிக்கக்கடவது” (மத்தேயு 5:14–16)

இரட்சகரின் குரலைக் கேட்கும்போது நீங்கள் எப்படி உணர்ந்திருப்பீர்களென உங்களால் கற்பனை செய்யமுடிகிறதா? உண்மையில் நாம் கற்பனை செய்யத்தேவையில்லை. கர்த்தரின் குரலைக் கேட்பது நமக்கு ஒரு நிரந்தர அனுபவமாகிவிட்டது, ஏனெனில் அவருடைய ஊழியக்காரர்களின் குரலை நாம் கேட்கும்போது, அதுவும் அப்படியே இருக்கிறது.

1838வது ஆண்டில், ஒரு செய்தியில் மலைப் பிரசங்கத்தில் கொடுக்கப்பட்டதைப் போன்று தீர்க்கதரிசி ஜோசப் ஸ்மித் மூலமாக பின்வருபவற்றை கர்த்தர் அறிவித்தார்.

“ஏனெனில் கடைசி நாட்களில் என்னுடைய சபை இப்படியாக, பிற்காலப் பரிசுத்தவான்களின் இயேசு கிறிஸ்து சபை என அழைக்கப்படும்.

“மெய்யாகவே உங்கள் யாவருக்கும் நான் சொல்லுகிறேன், உங்களுடைய வெளிச்சம் தேசங்களுக்கு ஒரு அடையாளமாயிருக்கும்படியாக எழுந்து பிரகாசியுங்கள்” (கோ.உ 115:4–5).

தீர்க்கதரிசி ஏசாயாவுக்கு ஒரு தரிசனமாக அவை காட்டப்பட்டபடி, நம்முடைய நாட்கள் மிகுந்த சிறப்பானதாயிருக்கின்றன. “ஜாதிகளுக்கு ஒரு கொடியை ஏற்றி, இஸ்ரவேலில் துரத்துண்டவர்களைச் சேர்த்து, யூதாவில் சிதறடிக்கப்பட்டவர்களை பூமியின் நான்கு திசைகளிலுமிருந்து கூட்டுவார்” (ஏசாயா 11:12) எனச் சொல்லி அவனும்கூட இந்த நாளைக் குறித்த, இயேசு கிறிஸ்து சபையின் மறுஸ்தாபிதத்தையும் அதன் நோக்கத்தையும் கண்டு தீர்க்கதரிசனமுரைத்தான்.

வேத கருத்தில், ஒரு கொடி அல்லது ஒரு அடையாளம் என்பது ஒற்றுமையின் நோக்கத்தில் ஒரு கொடியைச் சுற்றி மக்கள் கூடிவருவதே. பூர்வகாலத்தில், யுத்தத்தில் வீரர்கள் அணிவகுப்பிற்கு ஒரு அடையாளமாயிருந்தது. அடையாளமாகச் சொன்னால், மார்மன் புஸ்தகமும் மறுஸ்தாபிதம் செய்யப்பட்ட இயேசு கிறிஸ்துவின் சபையும் எல்லா தேசங்களுக்கும் அடையாளங்கள். (See Guide to the Scriptures, “Ensign,” scriptures.lds.org.)

சந்தேகமில்லாமல், “மனுஷனின் அழியாமையையும் நித்திய ஜீவனையும் கொண்டுவர” (மோசே 1:39) தொடர்ந்து அறிவிக்கப்படுகிற நமது பரலோக பிதாவின் மகத்தான பணியும் திட்டமுமான இந்த பொது மாநாடே இந்த பிற்காலங்களின் மகத்தான அடையாளங்களில் ஒன்று.

பிற்காலப் பரிசுத்தவான்களாக, “தேவன் வெளிப்படுத்திய சகலத்தையும், இப்பொழுது அவர் வெளிப்படுத்துகிற சகலத்தையும் நாங்கள் விசுவாசிக்கிறோம், இன்னும் அவர் வெளிப்படுத்தப்போகிற தேவ இராஜ்ஜியத்திற்கு சம்பந்தப்பட்ட அநேக மகத்தான முக்கியமான காரியங்களையும் நாங்கள் விசுவாசிக்கிறோம்” (விசுவாசப் பிரமாணங்கள் 1:9) என்ற உண்மையில் தொடர்ந்து பொது மாநாட்டை நடத்துவது அந்த உண்மைக்கு ஒரு மகத்தான சாட்சி.

தேசங்களுக்கு நமது ஒளி ஒரு அடையாளமாக தொடர்ந்து இருக்க வேண்டும் என, பின்னர் தலைவர் தாமஸ்  எஸ். மான்சன் மூலமாக கர்த்தர் வெளிப்படுத்தியிருப்பது என்ன? சீயோனைக்கட்டுவதிலும் இஸ்ரவேலைக் கூட்டிச்சேர்ப்பதிலும் இந்த அருமையான நேரத்தில் செய்யவேண்டிய சில முக்கியமான காரியங்கள் எவை?

“வரி வரியாயும், கற்பனை கற்பனையாகவும், இங்கே கொஞ்சம் அங்கே கொஞ்சமாக” அவருடைய சித்தத்தை கர்த்தர் எப்போதுமே நமக்கு வெளிப்படுத்தியிருக்கிறார், (2  நெப்பி 28:30). ஆகவே அவர்களுடைய எளிய திரும்பத் திரும்பச் செய்கிற தன்மையினால் சிறிய காரியங்களாகத் தோன்றுவதால் நாம் ஆச்சரியப்படக்கூடாது, “ஏனெனில் என் கற்பனைக்குச் செவிகொடுத்து, என் ஆலோசனைக்குச் செவிகொடுப்பவர்கள் பாக்கியவான்கள். ஏனெனில் அவர்கள் ஞானத்தைக் கற்றுக்கொள்வார்கள், ஏற்றுக்கொள்ளுகிறவனுக்கு நான் அதிகமாய்க் கொடுப்பேன்” (2  நேபி 28:30) என நமக்குக் கூறியதில் கர்த்தர் நமக்கு ஏற்கனவே ஆலோசனையளித்திருக்கிறார்.

“வரி வரியாயும், கற்பனை கற்பனையாகவும், இங்கே கொஞ்சம் அங்கே கொஞ்சமாகவும்” கற்பதால் நமது தலைவர்களின் ஆலோசனைக்குச் செவிகொடுப்பதில் நமது விளக்குகளுக்கு எண்ணைவிட்டு, நமது கர்த்தர் நமக்குக் கட்டளையிட்டதைப்போல மற்றவர்களுக்கு ஒளி கொடுப்போம் என நான் சாட்சியளிக்கிறேன்.

பிறருக்கு ஒளியாகவும் அடையாளமாகவும்  நம்மால் செய்யமுடிகிற அநேக காரியங்களிருந்தாலும், பின்வரும் மூன்று காரியங்களுக்கு முக்கியத்துவம் கொடுக்க நான் விரும்புகிறேன்: ஓய்வுநாளை ஆசரித்தல், திரையின் இரண்டு பக்கங்களிலும் இரட்சிப்பின் பணிக்கு துரிதப்படுத்துதல், இரட்சகரின் வழியில் போதித்தல்.

நாம் பேசிக்கொண்டிருக்கிற ஒளி, சபையிலும் அப்படியே வீட்டிலும் ஓய்வுநாளை ஆசரிப்பதற்கு நாம் கொடுக்கிற அர்ப்பணிப்பிலிருந்து வருகிறது, உலகத்திலிருந்து நம்மைக் கறைபடியாமல் வைத்திருப்பதால் வருகிற ஒளி, அவருடைய பரிசுத்த நாளில் நமது திருவிருந்துகளை ஏற்பதினாலும் மிக உன்னதமானவருக்கு நமது அர்ப்பணிப்பைச் செலுத்துகிறதிலிருந்தும் வருகிற ஒளி, எப்போதும் அவருடைய ஆவி நம்முடனேயிருக்க இவை எல்லாம் நமக்கு சாத்தியமாக்குகிறது. இந்த ஒளியே வளர்ந்து மன்னிப்பின் உணர்வோடு நாம் வீட்டிற்குத் திரும்பும்போது பார்க்கும்படியாகிறது. தலைவர் ஹென்றி  பி. ஐரிங் இதைப்பற்றி கடந்த அக்டோபர் பொது மாநாட்டில் பேசினார். “திருவிருந்தில் நாம் பங்கேற்கும்போது வருகிற மன்னிப்பின் உணர்வே, நாம் கணக்கிடுகிற எல்லா ஆசீர்வாதங்களிலும் மகத்தானது. பாவத்திலிருந்து நம்மைச் சுத்தப்படுத்த சாத்தியமாக்குகிற அளவிடமுடியாத தியாகம் செய்த இரட்சகரிடத்தில் நமக்கு அதிக அன்பையும் பாராட்டுதலையும் உணர்வோம்” (“Gratitude on the Sabbath Day,Liahona, Nov. 2016, 100).என அவர் சொன்னார்.

ஓய்வுநாளை நாம் பரிசுத்தமாய் ஆசரித்து திருவிருந்தில் பங்கேற்கும்போது, நாம் சுத்தமாகிறது மாத்திரமல்ல, நமது ஒளியும் பிரகாசமாக வளர்கிறது.

நமது முன்னோர்களின் பெயர்களைக் கண்டுபிடித்து, அவர்களுடைய பெயர்களை ஆலயத்திற்கு எடுத்துச் சென்று, இதையே செய்ய நமது குடும்பத்தினருக்கும் மற்றவர்களுக்கும் போதிப்பதற்கு நேரத்தை அர்ப்பணித்து ஒதுக்கும்போது நமது ஒளியும்கூட வளர்கிறது.

திரையின் இரண்டு பக்கங்களிலும் பரிசுத்தவான்களோடு நாம் பகிர்ந்துகொள்கிற இந்த பரிசுத்தமான ஆலய மற்றும் குடும்ப வரலாற்றின் பணி, கர்த்தரின் ஆலயங்கள் கட்டப்பட்டுக் கொண்டிருக்கும்போது எப்போதையும்விட அதிகமாய் முன்னேறிச் செல்கிறது. தங்களுடைய சொந்தக் குடும்ப பெயர் அட்டைகளுடன் வருகிற குடும்ப குழுக்களுக்காக இப்போது ஆலயங்களில் விசேஷித்த நேரங்கள் கொடுக்கப்பட்டிருக்கின்றன. எங்களுடைய பிள்ளைகளுடனும் பேரப்பிள்ளைகளுடனும் ஆலயத்தில் ஒன்றுகூடி நாங்கள் பணியாற்றியபோது எனது மனைவிக்கும் எனக்கும் ஆனந்தமான அனுபவங்கள் கிடைத்தன.

நாங்கள் பெயர்களைக் கண்டுபிடித்து ஆலயத்திற்கு எடுத்துச் சென்று அப்படியே அதை எப்படிச் செய்வதென்று மற்றவர்களுக்கு போதிக்கும்போது ஒரு அடையாளமாக அல்லது தரமாக நாம் ஒன்றாக பிரகாசிக்கிறோம்.

இரட்சகர் போதித்ததைப்போல போதிக்கக் கற்றுக்கொள்ளுதல், நாம் எழுந்து பிரகாசிக்க மற்றொரு வழி. இரட்சகரின் வழியில் எவ்வாறு போதிப்பதென்பதை கற்றுக்கொண்ட ஒவ்வொருவருடனும் நான் களிகூர்கிறேன். புதிய போதனைக் கையேட்டிலிருந்து படிக்க என்னை அனுமதியுங்கள்: “இரட்சகரிடத்தில் தங்கள் விசுவாசத்தை வளர்க்கவும் அவரைப் போலாகவும் தேவனுடைய பிள்ளைகளுக்கு உதவ ஆவியால் சுவிசேஷத்தின் தூய கோட்பாட்டை ஒவ்வொரு சுவிசேஷ ஆசிரியரும், ஒவ்வொரு பெற்றோரும், முறையாக ஆசிரியராக அழைக்கப்பட்ட ஒவ்வொருவரும், ஒவ்வொரு வீட்டுப்போதகரும், விசாரிப்புப் போதகரும், கிற்ஸதுவைப் பின்பற்றுகிற ஒவ்வொருவரும் போதிப்பதே நோக்கம்.” (Teaching in the Savior’s Way [2016])

இப்போது ஆயிரக்கணக்கான நமது விசுவாசமுள்ள ஆசிரியர்கள் இரட்சகரின் வழியில் எப்படிப் போதிப்பதென்பதைக் கற்றுக்கொண்டு ஒரு ஒளியை ஏந்திக்கொண்டிருக்கின்றனர். இந்த வகையில், கிறிஸ்துவின் கோட்பாட்டின் அடையாளத்தைச் சுற்றி மாணவர்கள் சந்திக்கும்போது புதிய ஆசிரியர் ஆலோசனைக்கூட்டம் எழுந்து பிரகாசிக்க, ஒரு வழியாயிருக்கிறது. ஏனெனில் “இரட்சகர் போதித்ததைப்போல போதிப்பதற்கு முக்கியமானது, இரட்சகர் வாழ்ந்ததைப்போல வாழ்வதே,” (Teaching in the Savior’s Way4).

அவரது  வழியில் நாம் அனைவரும் போதித்துக் கற்றுக்கொள்ளும்போது, அவரைப் போலாகும்போது, நமது ஒளி பிரகாசமாக பிரகாசித்து மறைக்கப்பட முடியாமலாகி, இரட்சகரின் ஒளியைத் தேடுகிறவர்களுக்கு ஒரு அடையாளமாகிறது.

என்னுடைய அன்பான சகோதர சகோதரிகளே நமது ஒளியை நாம் மறைக்கக்கூடாது. நமது ஒளி குன்றின் மேலுள்ள ஒரு பட்டணத்தைப்போலவும் மெழுகுவர்த்தி தண்டிலிருந்து வரும் ஒளியைப்போலவும் பிரகாசிக்க விடும்படி நமது இரட்சகர் நமக்குக் கட்டளையிட்டிருக்கிறார். நாம் அப்படிச் செய்யும்போது பரலோகத்திலுள்ள நமது பிதாவை நாம் மகிமைப்படுத்துகிறோம். தேசங்களுக்கு மகத்தான அடையாளத்தின் ஒரு பகுதியாயிருக்க இரட்சகரின் சுவிசேஷமும் அவரது மறுஸ்தாபிதம் செய்யப்பட்ட சபையும் நமக்கு அநேக சந்தர்ப்பங்களைக் கொடுக்கிறது.

நாம் பிரதிபலிக்க வேண்டிய ஒளி இயேசு கிறிஸ்துவே என நான் சாட்சியளிக்கிறேன். இயேசு கிறிஸ்துவின் நாமத்திலே, ஆமென்.