2010–2019
நண்பர்களுக்கும் சபையை விசாரிப்பவர்களுக்கும்
ஏப்ரல் 2017


10:3

நண்பர்களுக்கும் சபையை விசாரிப்பவர்களுக்கும்

வெளிப்படுத்தலின் விலையை நீங்கள் கொடுத்தால், உங்களைத் தாழ்த்தி, வாசித்து, ஜெபித்து, மனந்திரும்புங்கள், பரலோகங்கள் திறக்கும் இயேசுவே கிறிஸ்து என நீங்கள் அறிவீர்கள்.

ஒரு வெள்ளிக்கிழமை மாலை, செப்டம்பர்  16, 1988ல் அர்ஜெண்டினாவின் போனஸ் அயர்ஸ், வின்சென்ட் லோபஸ் தொகுதி கூடுமிடத்தில் நான் பிற்காலப் பரிசுத்தவான்களின் இயேசு கிறிஸ்து சபையின் அங்கத்தினராக ஞானஸ்நானம் கொடுக்கப்பட்டேன். அன்று ஒரு நல்ல நண்பன் ஆலின் ஸ்பானாஸ் எனக்கு ஞானஸ்நானம் கொடுத்தான், நான் சந்தோஷமாயும், இலேசாகவும், அதிகம் கற்க வேண்டும் எனவும் உணர்ந்தேன்.

மூப்பர் கோஸ்டாவின் ஞானஸ்நானம்

எனது ஞானஸ்நானப் பாதையில் நான் கற்ற பாடங்களை, சபையின் அங்கத்தினர்களல்லாமல் இருப்பினும் கேட்டுக்கொண்டிருக்கிற உங்களுக்கு உதவக்கூடியதாக நான் நம்பக்கூடிய பாடங்களைப் பகிர்ந்து கொள்ளலாம் என நான் இன்று விரும்புகிறேன். என்னைப்போல ஆவியானவரால் உங்கள் இருதயங்களும் தொடப்பட வேண்டும் என நான் ஜெபிக்கிறேன்.

முதலாவது, ஊழியக்காரர்களைச் சந்தித்தல்

கட்டாயப்படுத்தும் சவால்கள், தேவைகள் அல்லது கேள்விகள் இல்லாமல் ஒருவர் ஏன் ஊழியக்காரர்களைச் சந்தித்து, அவர்களது பாடங்களைக் கேட்க வேண்டும் என்னைப் பொருத்தவரையில் அது காதல்—ஒரு பெண்ணின் மீது காதல், ரீனி என்ற பெயருடைய பெண். நான் அவள் மீது காதலில் வீழ்ந்தேன், அவளை மணக்க விரும்பினேன். அவள் வித்தியாசமானவள், எனக்குத் தெரிந்த அதிகமான இளம்பெண்களை விட வித்தியாசமான தரங்கள் உடையவள். நான் அவளை நேசித்தேன், என்னை மணந்து கொள்ளுமாறு அவளிடம் கேட்டேன்—அவள் முடியாது என்றாள்!

மூப்பர் மற்றும் சகோதரி கோஸ்டா

நான் குழப்பமடைந்தேன். நான் மதிப்பு மிக்கவன் என நான் நினைத்தேன்! நான் அழகானவன், 24 வயதுள்ளவன், நல்ல வேலையுடைய கல்லூரி பட்டதாரி. அவள் தன் இலக்குகளைப் பற்றி பேசிளாள்—அவளை ஆலயத்துக்கு அழைத்துச் செல்லும் ஒருவரைத்தான் திருமணம் செய்வது, ஒரு நித்திய குடும்பம் பெறுவது—அவள் என் விருப்பத்தை மறுத்தாள். நான் அந்த உறவைத் தொடர விரும்பினேன், ஆகவே ஊழியக்காரர்களுக்குச் செவி கொடுக்க ஒப்புக்கொண்டேன். ஊழியக்காரர்களைச் சந்திக்க இது ஒரு நல்ல காரணமா. எனக்கு அது நல்லது.

நான் முதலில் ஊழியக்காரர்களைச் சந்தித்தபோது அவர்கள் சொன்ன அதிகமானவற்றை நான் புரிந்துகொள்ளவில்லை. உங்களிடம் உண்மையைச் சொல்ல வேண்டுமானால், நான் அவர்களிடம் அதிக கவனம் செலுத்தவில்லை. ஒரு புதிய மதத்துக்கு எனது இருதயம் அடைக்கப்பட்டது. அவர்கள் சொல்வது தவறு என நிரூபித்து, எவ்விதத்திலும் ரீனி என்னைத் திருமணம் செய்ய சம்மதிக்க வைக்க நேரம் கிடைப்பதே எனக்குத் தேவை.

இன்று என் பிள்ளைகள் ஊழியம் செய்திருக்கிறார்கள், செய்துகொண்டிருக்கிறார்கள். இயேசு கிறிஸ்துவின் சுவிசேஷத்தைப் போதிக்க இந்த இளம் ஆண்கள் மற்றும் இளம் பெண்களின் தியாகத்தை நான் புரிந்துகொள்கிறேன். இப்போது எனக்குப் போதித்த அற்புதமான ஊழியக்காரர்களான மூப்பர் ரிச்சர்ட்சன், மூப்பர் பாரல், மூப்பர் ஹைலாண்ட்க்கு அதிக கவனம் செலுத்தியிருக்க வேண்டும் என நினைக்கிறேன்.

ஆகவே எனது முதல் பாடத்திலிருந்து, நண்பர்களுக்கும் சபையை விசாரிப்பவர்களுக்கும் சொல்லுகிறேன்: நீங்கள் ஊழியக்காரர்களைச் சந்தித்து விட்டீர்களானால், கவனமாகக் கேளுங்கள். உங்களுக்காகவே அவர்கள் வாழ்க்கையின் முக்கிய ஆண்டுகளை விட்டுக்கொடுக்கிறார்கள்.

இரண்டாவது, சபைக்குச் செல்லுதல்

நான் சபைக் கூட்டத்துக்குச் சென்ற முதல் முறை, நான் ஏற்றுக்கொள்ளாத அநேக வார்த்தைகளை நான் கேட்டேன். பீஹைவ்ஸ் யார்? ஆரோனிய ஆசாரியத்துவம் என்றால் என்ன? ஒத்தாசைச் சங்கம்?

நீங்கள் சபைக்கூட்டத்துக்கு வந்திருப்பது இதுதான் முதல்முறை என்றால், உங்களுக்குப் புரியாததால் குழப்பமாக உணர்ந்தால் கவலைப்படாதீர்கள்! ஆனால் நான் அனுபவித்த உணர்ச்சிகளையும் புதுமையான சமாதான உணர்வுகளையும் ஆனந்தத்தையும் இன்னும் நினைவுகொள்ளுகிறேன். அப்போது நான் அதை அறியவில்லை, ஆனால் பரிசுத்த ஆவியானவர் எனது செவிகளுக்கும் இருதயத்துக்கும் கிசுகிசுத்தார், “அது சரி.”

ஆகவே இப்பாடத்தை ஒரே வரியில் சொல்லுகிறேன்: நீங்கள் குழம்பினால் கவலைப்படாதீர்கள்: நீங்கள் அனுபவித்த உணர்வுகளை நினைவில் வைத்திருங்கள். அவை தேவனிடத்திலிருந்து வருகின்றன.

மூன்றாவது, மார்மன் புத்தகத்தை வாசித்தல்

ஊழியக்காரர்களுடன் பல சந்திப்புகளுக்குப் பிறகு, நான் அதிக முன்னேற்றம் அடையவில்லை. சுவிசேஷத்தின் உண்மை பற்றிய உறுதியை நான் பெறவில்லை என நான் உணர்ந்தேன்.

ஒருநாள், ரீனி என்னிடம் கேட்டாள், “மார்மன் புத்தகம் வாசிக்கிறாயா?”

நான் பதில் சொன்னேன், “இல்லை.” ஊழியக்காரர்கள் சொல்வதைக் கேட்டேன், அது போதாதா?

அவளது கண்களில் கண்ணீருடன் மார்மன் புத்தகம் உண்மையானது என அவள் அறிவதாக உறுதியளித்து விளக்கினாள், அது உண்மை என நான் அறிய வேண்டுமானால் ஒரே வழி—யூகியுங்கள்—அதை வாசித்தல்! பின்னர் கேட்டல்!

உங்கள் இருதயங்களில் வாசித்து சிந்தியுங்கள், மார்மன் புத்தகம் உண்மையானதா, சபை உண்மையானதா என, கிறிஸ்துவின் நாமத்தில் நித்திய பிதாவாகிய தேவனிடத்தில்,... உண்மையான இருதயத்தோடும், முழு நோக்கத்தோடும் கிறிஸ்துவில் விசுவாசம் வைத்துக் கேளுங்கள். (மரோனி10:4).

ஆகவே, ஒரே வாக்கியத்தில் மூன்றாவது பாடம்: நீங்கள் இவற்றைப் பெறும்போது—மார்மன் புத்தகம்—அவை உண்மையானவையா என வாசித்து தேவனைக் கேட்க நீங்கள் புத்திமதி சொல்லப்பட்டால், தயவுசெய்து அதைச் செய்யுங்கள்!

கடைசியாக, மனந்திரும்புதல்

நான் பகிர்ந்துகொள்ள விரும்பும் கடைசி அனுபவம் மனந்திரும்புதல் பற்றியது. அனைத்து ஊழியக்கார பாடங்களையும் கேட்டு முடித்த பிறகு, என் வாழ்க்கையில் எதையாவது மாற்ற வேண்டுமா என நான் இன்னும் திருப்தியாகவில்லை. கொஞ்சம் ஸ்பானிஷ் தெரிந்த, தன்னம்பிக்கையுடைய இளம் ஊழியக்காரர், மூப்பர் கட்லர் ஒருநாள் சொன்னார், “ஜோவாக்கிம், நாம் ஒன்றாக ஆல்மா 42, வாசிப்போம், வாசிக்கும்போது உங்கள் பெயரைச் சேர்த்துக் கொள்வோம்.”

இது முட்டாள்தனம் என நான் நினைத்தேன், ஆனால் மூப்பர் சொன்னதுபோல் செய்து வசனம்  1ல் வாசித்தேன்: “இப்பொழுதும் என் குமாரனே [ஜோவாக்கிம்] நீ புரிந்து கொள்ள முடியாத சில காரியங்கள் உன் மனதை சஞ்சலப்படுத்துகின்றன என உணர்கிறேன்.” அப்புத்தகம் என்னிடம் பேசியது.

நாங்கள் வசனம்  2ல் வாசித்தோம்: “இப்பொழுதும் இதோ என் குமாரனே, [ஜோவாக்கிம்] இந்தக் காரியத்தை உனக்கு விளங்கச் செய்கிறேன், பின்பு ஆதாமின் வீழ்ச்சி விவரிக்கப்பட்டது.

பின்பு 4ம் வசனத்தில் : “இப்படியாக [ஜோவாக்கிம்] மனந்திரும்புதலுக்கு ஒரு காலம் அளிக்கப்பட்டிருக்கிறதைப் பார்க்கிறோம்.”

ஒவ்வொரு வசனமாக தொடர்ந்து மெதுவாக கடைசி மூன்று வசனங்கள் வரும்வரை வாசித்தோம். அப்போது ஒரு வல்லமையான சக்தியால் நான் தாக்கப்பட்டேன். அப்புஸ்தகம் என்னிடம் நேரடியாகப் பேசியது, நான் வாசித்தபோது அழ ஆரம்பித்தேன்: “இப்பொழுதும் என் குமாரன் [ஜோவாக்கிம்] இக்காரியங்கள் இனி ஒருபோதும் உன்னை சஞ்சலப்படுத்தக்கூடாதென்று விரும்புகிறேன். உன் பாவங்கள் மாத்திரம் உன்னை சஞ்சலப்படுத்துவதாக, அந்தச் சஞ்சலத்தினிமித்தம் நீ மனந்திரும்புதலுக்குள்ளாகக் கொண்டு வரப்படுவாய்.” (வசனம்  29)

விலை கொடுக்காமல் வெளிப்படுத்தல் பெற நான் எதிர்பார்த்திருக்கிறேன் என நான் உணர்கிறேன். அப்போது வரை நான் தேவனோடு உண்மையாகப் பேசவில்லை, இல்லாத ஒருவரிடம் பேசுவது முட்டாள்தனம் போலத் தோன்றியது. என் உலகப்பிரகார மனதுக்கு முட்டாள்தனமாகத் தோன்றினாலும், நான் என்னைத் தாழ்த்தி நான் செய்யுமாறு சொல்லப்பட்டவைகளைச் செய்ய வேண்டியிருந்தது.

அன்று என் இருதயத்தை ஆவிக்குத் திறந்தேன், மனந்திரும்ப விரும்பினேன், ஞானஸ்நானம் பெற விரும்பினேன். அந்த கணத்துக்கு முன்பு, மனந்திரும்புதல் எதிர்மறையானது, பாவத்தோடும் தவறோடும் சம்மந்தப்பட்டது என நினைத்திருந்தேன். ஆனால் உடனடியே வேறொரு ஒளியில் பார்த்தேன்—வளர்ச்சிக்கும் சந்தோஷத்துக்கும் பாதையை செம்மையாக்கிய நேர்மறையான ஒன்றைப் பார்த்தேன்.

மூப்பர் கட்லர் இன்று இங்கிருக்கிறார், என் கண்களைத் திறந்ததற்காக அவருக்கு நான் நன்றி சொல்ல விரும்புகிறேன். அப்போதிருந்து என் வாழக்கையில் நான் எடுத்த ஒவ்வொரு முடிவும் நான் என்னைத் தாழ்த்தி மன்னிப்புக்காக எனக்காக இயேசு கிறிஸ்துவின் பாவ நிவர்த்திக்காக ஜெபித்த, அந்தக் கண செல்வாக்கு பெற்றது, என் வாழ்க்கையின் பாகமானது.

எனவே கடைசிப் பாடம் ஒரு வரியில்: மனந்திரும்புதலை அனுபவியுங்கள், மாற நினைக்கும் வாஞ்சையை விட கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவுக்கு நெருக்கமாக ஒன்றும் கொண்டு செல்வதில்லை.

என் அருமை விசாரிப்பவரே, சபையின் நண்பரே, நீங்கள் இன்று கேட்டுக் கொண்டிருந்தால், மாபெரும் ஆனந்தம் அடைவதற்கு மிக அருகில் நீங்கள் இருக்கிறீர்கள். நீங்கள் அருகிலிருக்கிறீர்கள்!

என் இருதயத்தின் முழு ஆற்றலோடும், என் உள்ளத்தின் ஆழத்திலிருந்து நான் உங்களை அழைக்கிறேன், போய் ஞானஸ்நானம் பெறுங்கள்! நீங்கள் எப்போதும் செய்யக்கூடிய மிகச் சிறந்த காரியம் இதுவே. உங்களது வாழ்க்கையை மாத்திரமல்ல, உங்கள் பிள்ளைகள் மற்றும் உங்கள் பேரப்பிள்ளைகளின் வாழ்க்கையையும் அது மாற்றும்.

மூப்பர் மற்றும் சகோதரி கோஸ்டாவின் திருமண நாள்

கர்த்தர் ஒரு குடும்பத்துடன் என்னை ஆசீர்வதித்திருக்கிறார். நான் ரீனியை மணந்தேன், எங்களுக்கு நான்கு அழகிய பிள்ளைகள் இருக்கிறார்கள். ஞானஸ்நானத்தினிமித்தம் பழங்கால தீர்க்கதரிசி லேகி போல தேவ அன்பாகிய ஜீவ விருட்சத்தின் கனியைப் புசிக்க அவர்களை அழைக்க என்னால் முடியும். (1  நெப்பி 8:15; 11:25 பார்க்கவும்) கிறிஸ்துவிடம் வர நான் அவர்களுக்கு உதவ முடியும்.

ஆகவே எனது அனுபவங்களைக் கருத்தில்கொண்டு, (1)   ஊழியக்காரர்களை முக்கியமானவர்களாகக் கருதுங்கள். (2)   சபைக்குச் சென்று ஆவிக்குரிய உணர்ச்சிகளை நினைவுகொள்ளுங்கள். (3)   மார்மன் புஸ்தகத்தை வாசித்து, அது உண்மையானதா எனக் கேளுங்கள். (4)   மனந்திரும்புதலை அனுபவித்து ஞானஸ்நானம் பெறுங்கள்.

வெளிப்படுத்தலின் விலையை நீங்கள் செலுத்துவீர்களானால், உங்களைத் தாழ்த்துங்கள், வாசியுங்கள், ஜெபியுங்கள், மனந்திரும்புங்கள், பரலோகங்கள் திறக்கும், நீங்கள் அறிவீர்கள், இயேசுவே கிறிஸ்து, அவரே என்னுடைய மற்றும் உங்களுடைய இரட்சகர் என நான் சாட்சியளிக்கிறேன். இயேசு கிறிஸ்துவின் நாமத்தினாலே, ஆமென்.