2010–2019
தயவு, தயாளம், அன்பு
ஏப்ரல் 2017


NaN:NaN

தயவு, தயாளம், அன்பு

நாம் நமது வாழ்க்கையை பரிசோதித்து, தயவாகவும், அன்பாகவும், தயாளத்துடனும் இருந்து இரட்சகரின் உதாரணத்தைப் பின்பற்ற தீர்மானிப்போமாக.

என் அன்பான சகோதரரே, தேவனின் ஆசாரியத்துவத்தை விசுவாசத்துடன் தரித்திருப்பவர்களான இந்த உலகளாவிய கூடுகையில் உங்களிடம் உரையாற்றும் சிலாக்கியத்தால் நான் கௌரவமடைகிறேன். இந்த மாலையில் நான் முன்பு பேசின ஒரு தலைப்பைப்பற்றி குறிப்பிடுகிறேன்.

அவருடைய சீஷர்களால் முயற்சி செய்யப்படவிருக்கிற இரட்சகரின் முக்கியத் தன்மைகளில் ஒன்றை மார்மன் தீர்க்கதரிசி குறிப்பிட்டான். அவன் சொன்னான்:

“சாந்தமாயும், இருதயத்தில் தாழ்மையாயுமிருந்து, இயேசுவே கிறிஸ்து என்று பரிசுத்த ஆவியானவராலே அறிக்கைபண்ணுகிறவன் நிச்சயமாய் தயாளத்துவத்தைப் பெற்றிருக்கவேண்டும், ஏனெனில் அவன் தயாளத்துவத்தைப் பெற்றிராவிட்டால், அவன் ஒன்றுமில்லை, அவன் நிச்சயமாய் தயாளத்துவத்தைப் பெறவேண்டும்.

“தயாளத்துவம் நீடிய பொறுமையும் தயவுமுள்ளது, பொறாமைப்படாது. இறுமாப்பு அடையாது. சுயமாய் நாடாது, எளிதில் கோபப்படாது.   . . .

“ஆகையால் எனக்குப் பிரியமான சகோதரரே, உங்களுக்கு தயாளத்துவம் இல்லையெனில் நீங்கள் ஒன்றுமில்லை. ஏனெனில் தயாளத்துவம் ஒருக்காலும் ஒழியாது. ஆதலால் சகலத்திலும் மேன்மையான தயாளத்துவத்தைப் பற்றிக்கொள்ளுங்கள், ஏனெனில் சகலமும் ஒழிந்துபோகும்.

“தயாளத்துவம் கிறிஸ்துவின் தூய அன்பாய் இருக்கிறது. அது என்றென்றும் சகித்திருக்கும். கடைசி நாளின்போது அதை உடையவனாய்க் காணப்படுகிற எவனும் நன்மையை அடைவான்.” 1

சகோதரரே, நாம் மற்றவர்களிடத்தில் இரக்கமாயில்லாவிட்டால் தேவனின் ஆசாரியத்துவத்தை நாம் கனப்படுத்துவதில்லை.

என்னுடைய அன்பான நண்பரும், உடன் ஊழியருமான மூப்பர் ஜோசப்  பி. விர்த்லின் உண்மையிலேயே ஒரு அன்பான மனிதர். அவர் சொன்னார்:

“தயவு சிலஸ்டியல் வாழ்க்கையின் சாரமாயிருக்கிறது. மற்றவர்களை எப்படி கிறிஸ்துவைப்போன்ற ஒரு நபர் நடத்துகிறாரென்பதே தயவு. நமது வேலையிலும், பள்ளிக்கூடத்திலும், சபையிலும், விசேஷமாக நமது வீடுகளிலும் நமது வார்த்தைகளையும், செயல்களையும் தயவு ஊடுருவ வேண்டும்.

“நமது இரட்சகரான இயேசு தயவு மற்றும் மனதுருக்கத்தின் சாராம்சமாயிருந்தார்” 2

தயவு, தயாளம், மற்றும் அன்பின் கொள்கைகளில் நமது வாழ்க்கையை வாழுவதைப் பொறுத்து ஆசாரியத்துவத்தின் நீதியான பிரயோகம் இருக்கிறது. கோட்பாடும் உடன்படக்கைகளுமில் நாம் படிக்கிறோம்:

“ஆசாரியத்துவத்தை சாதகமாக்கி எந்த வல்லமையும் அல்லது செல்வாக்கும் பாதுகாக்கப்பட முடியாது அல்லது பாதுகாக்கப்பட வேண்டுமென்றில்லை, விடாமுயற்சியாலும்,   மென்மையாலும், சாந்தமாயும் மாறாத அன்பாலும் மட்டுமே.

“மாய்மாலமில்லாமலும், குற்றமில்லாமலும் ஆத்துமாவை பெரிதாய் விரிவுபடுத்துகிற தயவாலும், தூய ஞானத்தாலுமே”. 3

சகோதரரே, நாம் நமது வாழ்க்கையைப் பரிசோதித்து, தயவாயிருப்பதாலும், அன்பாயிருப்பதாலும், தயாளமாயிருப்பதாலும் இரட்சகரின் எடுத்துக்காட்டைப் பின்பற்ற தீர்மானிப்போமாக. நாம் அப்படிச் செய்யும்போது, நமக்காகவும், நமது குடும்பங்களுக்காகவும், நமது பரலோக வீட்டிற்குத் திரும்பிப்போக சிலசமயங்களில் கடினமாயிருக்கிற இந்த பயணத்தின் சகபயணிகளுக்காகவும் பரலோகத்தின் வல்லமைகளைக் கீழே கொண்டுவர நாம் ஒரு சிறப்பான இடத்திலிருப்போம். அப்படியே கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் நான் ஜெபிக்கிறேன், ஆமென்.