2010–2019
விசுவாசத்தின் அஸ்திபாரங்கள்
ஏப்ரல் 2017


16:21

விசுவாசத்தின் அஸ்திபாரங்கள்

கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவில் நமது விசுவாசத்தின் அஸ்திபாரங்களை பெலப்படுத்த தேவையான தியாகங்களைச் செய்து தாழ்மை பெற வேண்டுமென்பதே எனது விண்ணப்பமாகும்.

இது ஒரு மகத்தான பொது மாநாடாக இருந்திருக்கிறது. நாம் உண்மையாகவே தெளிவுபடுத்தப்பட்டோம். பொது மாநாட்டின் ஒரு பிரபலமான நோக்கம் இருக்கிறதானால், அது பிதாவாகிய தேவன், மற்றும் நமது இரட்சகரான கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவில் விசுவாசத்தை வளர்ப்பதுதான்.

எனது குறிப்புகள் அந்த விசுவாசத்தின் அஸ்திபாரங்களைக் கலந்துரையாடுகின்றன.

தனிப்பட்ட அஸ்திபாரங்கள் அநேக தகுதியான முயற்சிகள்போல, மெதுவாக, ஒரே நேரத்தில், ஒரு படலம், ஒரு அனுபவம், ஒரு சவால், ஒரு பின்னடைவு, மற்றும் ஒரு வெற்றி என வழக்கமாக கட்டப்படுகிறது. மிகவும் நினைக்கத்தக்க நிதர்சன அனுபவம் குழந்தையின் முதல் அடிகள். அது பார்க்க மகத்துவமானது. அந்த முகத்தில் ஒரு விலைமதிக்க முடியாத காட்சி— தீர்மானம், ஆனந்தம், ஆச்சரியம், சாதனை—உண்மையாகவே மிக முக்கிய நிகழ்வு.

எங்கள் குடும்பத்தில் அப்படிப்பட்ட விசேஷித்த நிகழச்சி ஒன்று இருக்கிறது. எங்கள் இளைய மகன், கிட்டத்தட்ட நான்கு வயதானபோது வீட்டினுள் வந்து, மிகப் பெருமையுடன் மகிழ்ச்சியாக குடும்பத்துக்கு அறிவித்தான், இப்போது நான் எல்லாவற்றையும் செய்ய முடியும். நான் கட்ட முடியும், வண்டி ஓட்ட முடியும், ஜிப்பைப் போட முடியும். அவனால் காலணியின் கயிற்றைக் கட்ட முடியும், அவனுடைய பெரிய சக்கரங்களுடைய மூன்று சக்கர சைக்கிளை ஓட்ட முடியும், கோட்டுக்கு ஜிப் போட முடியும் என சொல்லுகிறான் என நாங்கள் புரிந்துகொண்டோம். நாங்கள் அனைவரும் சிரித்தோம், ஆனால் அவனுக்கு அது பெரிய சாதனை என அறிந்தோம். அவன் தான் முழுவதுமாக வளர்ந்துவிட்டதாக நினைக்கிறான் என நாங்கள் நினைத்தோம்.

சரீர, மன, ஆவிக்குரிய விருத்தி பொதுவானதுதான். சரீர வளர்ச்சி பார்க்க எளிதானது. நாம் குழந்தையாக அடியெடுத்து வைப்பதில் தொடங்கி, அன்றாடம் முன்னேறி, வருடக்கணக்காக முழு சரீர நிலை பெற வளர்ந்து விருத்தியடைகிறோம். ஒவ்வொருவருக்கும் வளர்ச்சி வித்தியாசமானது.

நாம் ஒரு விளையாட்டு அல்லது இசை நிகழ்ச்சியைப் பார்க்கும்போது, அந்த நபர் திறமையானவர் என எப்போதும் சொல்கிறோம், அது வழக்கமாக உண்மைதான். ஆனால் அந்த சாதனை பல ஆண்டுகள் ஆயத்தம் மற்றும் பயிற்சியின் அடிப்படையிலானது. ஒரு பிரபல எழுத்தாளர், மால்கம் க்லாட்வெல் இதை 10,000 மணிநேர விதி என அழைத்தார். விளையாட்டிலும், இசை நிகழ்த்துவதற்கும், படிப்புத் திறமைக்கும், விசேஷித்த வேலைத்திறமைகளுக்கும் மருத்துவ அல்லது சட்ட திறமைக்கும், மற்றும் பிறவற்றுக்கும் இவ்வளவு பயிற்சி தேவை என ஆய்வாளர்கள் தீர்மானித்து விட்டனர். “எதிலும் உலகத் திறன் வாய்ந்தவராயிருப்பது சம்மந்தமான திறன் அளவை எட்ட, பத்தாயிரம் மணி நேர பயிற்சி தேவை,” 1 என ஒரு ஆராய்ச்சி வல்லுநர் உறுதிப்படுத்துகிறார்.

உச்சகட்ட உடல் மற்றும் மன சாதனை அடைய அப்படிப்பட்ட பயிற்சிகள் அவசியம் என அநேகர் அறிகின்றனர்.

துரதிர்ஷ்டவசமாக அதிகமாக மதச்சார்பின்மையாக மாறிக் கொண்டிருக்கிற உலகில், கிறிஸ்துவைப் போல் அதிகமாக ஆகவும், நீடித்த விசுவாசத்துக்கு வழிநடத்துகிற அஸ்திபாரங்களை உருவாக்கவும், ஆவிக்குரிய வளர்ச்சிக்கு தேவையான அளவுக்கு குறைவான அழுத்தமே கொடுக்கப்படுகிறது. உயர்வான ஆவிக்குரிய புரிதலுள்ள தருணங்களை நாம் வலியுறுத்த விழைகிறோம். பரிசுத்த ஆவியானவர் நமது இருதயங்களிலும் மனதிலும் விசேஷித்த ஆவிக்குரிய உள்ளுணர்வுகளை சாட்சியளித்திருக்கிறார் என நாம் அறிகிற இவை விலையேறப்பெற்ற சந்தர்ப்பங்கள். இந்த நிகழ்வுகளில் நாம் களிகூர்கிறோம். அவை எந்த விதத்திலும் குறைக்கப்படக் கூடாது. ஆனால் நீடித்த விசுவாசத்துக்கும், ஆவியின் தொடர்ந்த தோழமை பெற்றிருக்கவும் சரீர, மன விருத்திக்கு ஒத்த, தனிப்பட்ட மத கவனத்துக்கு மாற்று இல்லை. சிலசமயங்களில் முதல் குழந்தை அடிகள் போல தோன்றுகிற இந்த அனுவங்கள் மீது நாம் கட்ட வேண்டும். பரிசுத்த திருவிருந்து கூட்டங்களுக்கும், வேதப்படிப்புக்கும், ஜெபத்துக்கும், அழைக்கப்பட்டபடி சேவை செய்வதற்கும் தூய்மையான ஒப்புக்கொடுத்தலால் நாம் இதைச் செய்கிறோம். 13 பிள்ளைகள் உடைய ஒரு தகப்பனுக்கான இரங்கற் செய்தியில் அண்மையில் கூறப்பட்டது, “அவரது தினசரி ஜெபம் மற்றும் வேதப்படிப்புக்கான அர்ப்பணிப்பு, கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவில் விசுவாசத்தின் அசைக்கமுடியாத அஸ்திபாரமளித்து, அவரது பிள்ளைகளிடம் ஆழ்ந்த செல்வாக்கு ஏற்படுத்தியது.” 2

நான் 15 வயதாக இருந்தபோது, நான் பெற்ற ஒரு அனுபவம் எனக்கு அஸ்திபாரமாக இருநத்து. என் வாழ்க்கையில் எனது விசுவாசமிக்க அம்மா, விசுவாசத்தின் அஸ்திபாரங்களை ஏற்படுத்த எனக்கு உதவ கடுமையாகப் பாடுபட்டார். நான் திருவிருந்து கூட்டத்துக்கும், ஆரம்ப வகுப்புக்கும் பின்னர் வாலிபர் மற்றும் வேதபாட வகுப்புக்கும் சென்றேன். நான் மார்மன் புஸ்தகத்தை வாசித்து, எப்போதும் தனியாக ஜெபித்திருக்கிறேன். அப்போது எனது அன்புக்குரிய மூத்த சகோதரன் ஒரு சாத்தியமிக்க ஊழிய அழைப்பை எதிர்பார்த்துக்கொண்டிருக்கும்போது, ஒரு முக்கிய நிகழ்ச்சி நடந்தது. என் அற்புதமான அப்பா, ஆர்வம் குறைந்த சபை அங்கத்தினர், அவன் கல்வியைத் தொடர வேண்டும், ஊழியம் செய்யக்கூடாது என விரும்பினார். அது ஒரு பிணக்கின் நேரமானது.

ஐந்து வயது அதிகமான, கலந்துரையாடலை நடத்திக்கொண்டிருந்த எனது அண்ணனுடன் முக்கிய கலந்துரையாடலில், ஊழியம் செய்வதா என்ற அவனது முடிவு, மூன்று பிரச்சினைகளைச் சார்ந்தது என நாங்கள் தீர்மானித்தோம்: (1)   இயேசு கிறிஸ்து தெய்வீகமானவரா? (2)   மார்மன் புத்தகம் உண்மையானதா? (3)   ஜோசப் ஸ்மித் மறுஸ்தாபிதத்தின் தீர்க்கதரிசியா?

நான் அன்றிரவு உருக்கமாக ஜெபித்தபோது, மூன்று கேள்விகளும் பற்றிய சத்தியத்தைக் குறித்து ஆவி எனக்கு உறுதியளித்தது. இந்த மூன்று கேள்விகளின் அடிப்படையில்தான், என் வாழ்க்கை முழுவதும் நான் செய்கிற கிட்டத்தட்ட அனைத்து தீர்மானங்களும் இருக்கும் என நான் புரிந்தேன். கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவில் விசுவாசம் முக்கியம் என நான் குறிப்பாக உணர்ந்தேன். அந்த மாலையில், ஆவிக்குரிய உறுதி பெற எனக்காக என் அம்மா அஸ்திபாரங்கள் போட்டார் என குறிப்பாக நான் உணர்ந்தேன். ஏற்கனவே சாட்சி பெற்றிருந்த என் அண்ணன் ஊழியம் செய்ய தீர்மானித்தான். கடைசியாக அப்பாவின் ஆதரவையும் பெற்றான்.

கர்த்தரின் நேரத்திலும் அவரது சித்தப்படியும், தேவைப்படும்போது ஆவிக்குரிய வழிகாட்டுதல் பெறப்படுகிறது. 3 மார்மன் புஸ்தகம் இயேசு கிறிஸ்துவின் மற்றொரு ஏற்பாடு, ஒரு சிறந்த உதாரணம். நான் அண்மையில் ஒரு மார்மன் புஸ்தக முதல் பதிப்பைப் பார்த்தேன். அவர் 23 வயதாயிருந்தபோது ஜோசப் ஸ்மித் மொழிபெயர்ப்பை முடித்தார். அந்த விதத்தையும், அந்த மொழிபெயர்ப்புக்கு அவர் பயன்படுத்திய கருவிகளையும் நாம் அறிவோம். அந்த 1830 பதிப்பில், ஜோசப் ஒரு சிறு முன்னுரையைச் சேர்த்தார், எளிதாகவும் தெளிவாகவும் அது “தேவ வரத்தாலும் வல்லமையாலும்” மொழிபெயர்க்கப்பட்டது என அறிவித்தார். 4 ஊரிம் மற்றும் தும்மிம், தூரதிருஷ்ட்டிக் கல் என்ற மொழிபெயர்ப்புக் கருவிகள் எதற்கு? அவை தேவைப்பட்டதா அல்லது அதிக நேரடி வெளிப்படுத்தல் பெறத் தேவையான விசுவாசத்தை ஜோசப் பிரயோகப்படுத்தும்வரை, அவை பயிற்சிச் சக்கரங்கள் போல இருந்தனவா? 5

1830 மார்மன் புஸ்தக அட்டை
1830 மார்மன் புஸ்தக முன்னுரை

சரீர அல்லது மன திறமை பெற திரும்பத் திரும்ப, இடைவிடா முயற்சி தேவைப்படுவது போல ஆவிக்குரிய காரியங்களுக்கும் அதுவே உண்மை. தகடுகளைப் பெறும் ஆயத்தத்தின்போது நான்கு முறை அதே செய்தியுடன் அதே நபர் மரோனியை ஜோசப் சந்தித்ததை நினைவுகொள்ளுங்கள். பரிசுத்த திருவிருந்துக் கூட்டங்களில் வாராந்திர பங்கேற்பு நாம் புரிந்துகொள்ளாத ஆவிக்குரிய விளைவுகளைக் கொண்டிருக்கின்றன என நான் நம்புகிறேன். அவ்வப்போது வாசிப்பதை விட வேதங்களை ஒழுங்காக சிந்திப்பது, மேலோட்டமான புரிதலை விட நமது விசுவாசத்தின் தூய்மையான வாழ்க்கையை மாற்றுகிற முன்னேற்றத்தால் மாற்றும்.

விசுவாசம் வல்லமையின் கொள்கை. நான் விளக்குகிறேன், 12 வருஷம் இரத்தப்போக்கு உடைய, அவளை குணமாக்க முடியாத மருத்துவர்களிடம் எல்லாவற்றையும் செலவு செய்த பெண் பற்றிய, லூக்கா  8ல் காணப்படுகிற வேதவிவரத்தை ஒரு அற்புதமான விதத்தில் ஒரு மாபெரும் ஊழியத்தலைவர்6 ஒரு இளம் ஊழியக்காரனாக இருந்தபோது எனக்கு அறிமுகம் செய்தார். இந்நாள்வரை அது எனது அபிமான வசனமாக இருந்திருக்கிறது.

அவள் இரட்சகரின் வஸ்திரத்தின் விளிம்பைத் தொட்டால், அவள் குணமாவாள் என்ற நம்பிக்கை அவளுக்கிருந்தது என நீங்கள் நினைவில் வைத்திருப்பீர்கள். அவள் அப்படிச் செய்தபோது, அவள் உடனே குணமாக்கப்பட்டாள். தன் சீஷர்களுடன் நடந்துகொண்டிருந்த இரட்சகர் சொன்னார், “என்னைத் தொட்டது யார்?”

அவருடன் ஒன்றாக நடந்து, அவரை நெருக்கிய அனைவரும், என்பது பேதுருவின் பதிலாக இருந்தது.

“அதற்கு இயேசு, என்னிலிருந்து வல்லமை புறப்பட்டதை அறிந்திருக்கிறேன்.”

நற்குணத்துக்கு வேரான வார்த்தை வல்லமை என எளிதாக மொழிபெயர்க்கப்படலாம். ஸ்பானிஷிலும் போர்ச்சுகீஸிலும் இது “வல்லமை” என மொழிபெயர்க்கப்படுகிறது. இரட்சகர் அவளைப் பார்க்காவிட்டாலும், அவர் அவளுடைய தேவையை நினைக்கவில்லை. வஸ்திரத்தின் விளிம்பைத் தொட்டது, தேவ குமாரனின் குணமாக்கும் வல்லமையை இழுக்குமளவுக்கு அவளது விசுவாசம் அப்படிப்பட்டதாயிருந்தது.

இரட்சகர் அவளிடம் சொன்னது போல, “மகளே திடன் கொள், உன் விசுவாசம் உன்னை இரட்சித்தது, சமாதானத்துடனே போ.” 7

வயது வந்தவனாக என் வாழ்நாள் முழுவதும் இதை சிந்தித்திருக்கிறேன். இயேசு கிறிஸ்துவின் நாமத்தினால், ஒரு அன்பான பரலோக பிதாவிடம் நமது தனிப்பட்ட ஜெபங்களும், விண்ணப்பங்களும், நமது புரிந்துகொள்ளும் திறமைக்கும் அப்பால், நமது வாழ்க்கையில் ஆசீர்வாதங்களைக் கொண்டுவர முடியும் என உணர்கிறேன். இந்தப் பெண் காட்டிய விசுவாசத்தின் அஸ்திவாரமும், விதமும், நமது இருதயங்களின் மாபெரும் வாஞ்சையாக இருக்க வேண்டும்.

எனினும் ஆரம்ப விசுவாச அஸ்திபாரங்கள், ஆவிக்குரிய உறுதிப்பாட்டுடனும் கூட, நாம் சவால்களை சந்திக்க மாட்டோம் என்பதாகாது. சுவிசேஷத்துக்கு மனமாற்றத்தால் நமது பிரச்சினைகள் தீர்க்கப்பட்டுவிடும் என்பதாகாது.

கோட்பாடும் உடன்படிக்கைகளுமில் உள்ள ஆரம்ப சபை வரலாறும் பதிக்கப்பட்ட வெளிப்படுத்தல்களும், விசுவாச அஸ்திபாரங்களை ஏற்படுத்துவதிலும், ஒவ்வொருவரும் சந்திக்கிற மாறும் சூழ்நிலைகளையும் சவால்களையும் கையாள்வதிலும் மிகச்சிறந்த உதாரணங்களைக் கொண்டுள்ளன.

கர்த்லாந்து ஆலயத்தின் பணிநிறைவு முழு சபைக்கும் அஸ்திபாரமாகும். அது ஆவிக்குரிய பிரகாரமான பொழிதல்களுக்கும், கோட்பாட்டு வெளிப்படுத்தல்களுக்கும், சபையை தொடர்ந்து ஸ்தாபிப்பதற்குத் தேவையான திறவுகோல்களை மறுஸ்தாபிதம் செய்தலிலும் இணைக்கப்பட்டது. பெந்தேகோஸ்தே நாளில் பூர்வ கால அப்போஸ்தலர்கள் போலவே, கர்த்லாந்து ஆலய பிரதிஷ்டைக்குத் தொடர்புடைய, அநேக அங்கத்தினர்கள் அற்புதமான ஆவிக்குரிய அனுபவங்களை அனுபவித்தார்கள். 8 ஆனால் நமது வாழ்க்கை போலவே, எதிர்காலத்தில் சவால்களையும் கஷ்டங்களையும் அவர்கள் எதிர்கொள்ளமாட்டார்கள் என்பதல்ல. அவர்களது ஆத்துமாவையே, சோதிக்கப்போகிற அமெரிக்க ஐக்கிய நாட்டு பொருளாதார சிக்கல்—1837ன் குழப்பத்தை அவர்கள் சந்திப்பார்கள் என ஆரம்பகால அங்கத்தினர்கள் அறியவில்லை. 9

இந்த பொருளாதார குழப்பத்துக்கு தொடர்புடைய சவால்களின் ஒரு உதாரணம், மறுஸ்தாபிதத்தின் மாபெரும் தலைவர்களில் ஒருவரான மூப்பர் பார்லி  பி. பிராட்டால் அனுபவிக்கப்பட்டது. அவர் முதல் பன்னிருவர் குழும அங்கத்தினர்களில் ஒருவர். 1837ன் முன் பகுதியில் அவரது அன்பு மனைவி தாங்க்புல் தங்கள் முதல் குழந்தையைப் பெற்றுவிட்டு மரித்தார். பார்லியும் தாங்க்புல்லும் திருமணம் செய்து 10 ஆண்டுகள் ஆகியிருந்தன. அவரது மரணம் அவரை நிர்மூலமாக்கியது.

சில மாதங்களுக்குப்பின் சபை அனுபவித்த மிக கஷ்டமான நேரத்தில் தாம் இருப்பதை மூப்பர் பிராட் கண்டார். நாட்டின் குழப்பங்களுக்கு மத்தியில் உள்ளூர் பிரச்சினைகள்—நில பரிவர்த்தனைகள் மற்றும் ஜோசப் ஸ்மித்தாலும் பிற சபையாராலும் தொடங்கப்பட்ட நிதி நிறுவன போராட்டங்களும் கர்த்லாந்தில் எதிர்ப்பையும் பிணக்கையும் ஏற்படுத்தியது. சபையார் எப்போதுமே ஞானமிக்க உலகப்பிரகார முடிவுகளை தங்கள் சொந்த வாழ்க்கையில் எடுக்கவில்லை. பார்லி குறிப்பிடத்தக்க நிதி இழப்புகளுக்கு உள்ளானார், சிறிது காலத்துக்கு ஜோசப் ஸ்மித் மீதும் வெறுப்படைந்தார். 10 அவர் கடுமையான குற்றச்சாட்டுகளை ஜோசப்புக்கு எழுதினார், ஆலய மேடையிலிருந்தும் அவருக்கு எதிராகப் பேசினார். அதே சமயம் அவர் தொடர்ந்து மார்மன் புஸ்தகத்தையும் கோட்பாடும் உடன்படிக்கைகளையும் நம்புவதாக சொன்னார். 11

மூப்பர் பிராட் தன் மனைவியையும், தன் நிலத்தையும், தன் வீட்டையும் இழந்தார். ஜோசப்பிடம் சொல்லாமல் பார்லி மிசௌரிக்குக் கிளம்பினார். சாலையில், எதிர்பாராமல் கரத்லாந்துக்குத் திரும்பிக்கொண்டிருக்கும் சக அப்போஸ்தலர்களாகிய தாமஸ்  பி. மார்ஷையும் டேவிட் பாட்டனையும் சந்தித்தார். குழுமத்தில் நல்லிணக்கம் இருப்பது மிக அவசியம் என அவர்கள் உணர்ந்து, தங்களுடன் திரும்புமாறு பார்லியை வற்புறுத்தினர். ஜோசப் ஸ்மித்தையும் அவரது குடும்பத்தையும் இழந்தவர்கள் தன்னைவிட யாருமில்லை என உணர்ந்தார்.

பார்லி தீர்க்கதரிசியைத் தேடிச் சென்று, அழுது தான் செய்தது தவறு என அறிக்கையிட்டார். அவருடைய மனைவி தாங்க்புல்லின் மரணத்துக்குப் பிறகு வந்த மாதங்களில், இருளிலிருந்து, பயத்தாலும் விரக்தியாலும் மேற்கொள்ளப்பட்டார். 12 எதிர்ப்புக்கும் சோதனைக்கும் மத்தியில் போராடுவது எப்படியிருக்கும் என அறிந்த ஜோசப் “உண்மையாகவே மன்னித்து” அவருக்காக ஜெபித்து ஆசீர்வதித்தார். 13 விசுவாசத்தில் நிலைத்திருந்த பார்லியும் மற்றவர்களும், கர்த்லாந்து சவால்களிலிருந்து ஆதாயமடைந்தனர். அவர்கள் ஞானத்தில் வளர்ந்து உத்தமமானவர்களாகவும் நற்குணமுடையவர்களாகவும் ஆனார்கள். அந்த அனுபவம் அவர்களது விசுவாசத்தின் அஸ்திபாரமானது.

கஷ்டத்தை, கர்த்தர் சாதகமாக இல்லை எனவோ, அவரது ஆசீர்வாதங்கள் விலகிவிட்டன எனவோ பார்க்கக் கூடாது. எல்லாவற்றிலும் எதிர்ப்பு ஒரு நித்திய செலஸ்டியல் இலக்குக்கு நம்மை ஆயத்தப்படுத்துகிற புடமிடுகிறவனின் அக்கினியின் பகுதியாகும். 14 தீர்க்கதரிசி ஜோசப் லிபர்ட்டி சிறைச்சாலையில் இருந்தபோது, அவருக்கு கர்த்தருடைய வார்த்தைகள், பாடுகள், மற்றும் பொய் குற்றச்சாட்டுகள் உள்ளிட்ட எல்லா விதமான சவால்களையும் விவரித்து முடிக்கிறார்:

“நரகத்தின் தாடைகள் உனக்காக வாயை அகலமாகத் திறந்தால் இவை யாவும் உனக்கு அனுபவம் கொடுக்கும், உனது நன்மைக்கு ஏதுவாகவே இருக்கும், என அறிந்து கொள், என் மகனே.

“இவை அனைத்துக்கும் கீழாக மனுஷ குமாரன் இறங்கினார். நீ அவரை விட உயர்ந்தவனா?” 15

கர்த்தர் இந்த அறிவுரையில் ஜோசப் ஸ்மித்துக்கு, அவரது நாட்கள் அறியப்பட்டிருக்கின்றன, குறைவாக எண்ணப்படாது என தெளிவாக்கினார். கர்த்தர் முடித்தார், “மனுஷன் செய்வதற்காகக் கவலைப்படாதே, உங்களோடு கர்த்தர் என்றென்றும் இருப்பார்.” 16

அப்படியானால் விசுவாசத்தின் ஆசீர்வாதங்கள் யாவை? விசுவாசம் எதைச் சாதிக்கும்? பட்டியல் கிட்டத்தட்ட முடிவற்றது:

கிறிஸ்துவில் விசுவாசத்தினிமித்தம் நமது பாவங்கள் மன்னிக்கப்படலாம். 17

விசவாசமுள்ள அநேகரும் பரிசுத்த ஆவியானவருடன் ஐக்கியம் பெற்றிருக்கின்றனர்.18

கிறிஸ்துவின் நாமத்தில் விசுவாசத்தின் மூலம் இரட்சிப்பு வருகிறது. .19

கிறிஸ்துவில் நமது விசுவாசத்தின்படி நாம் பெலன் பெறுகிறோம். 20

தங்களுடைய விசுவாசத்தினிமித்தம் கிறிஸ்துவின் இரத்தத்தில் தங்கள் வஸ்திரங்களைத் துவைப்பவர்களைத் தவிர ஒருவரும் கர்த்தரின் இளைப்பாறுதலில் பிரவேசிப்பதில்லை. 21

விசுவாசத்தின்படி ஜெபங்கள் பதிலளிக்கப்பட்டன. 22

மனுஷர் மத்தியிலே விசுவாசமில்லையானால், அவர்கள் மத்தியிலே தேவன் அற்புதங்கள் செய்ய முடியாது. 23

முடிவாக, இயேசு கிறிஸ்துவில் நமது விசுவாசம் நமது நித்திய இரட்சிப்புக்கும் மேனமைப்படுதலுக்கும் அத்தியாவசியமான அஸ்திவாரம். ஏலமன் தன் குமாரர்களுக்குக் கற்பிப்பது போல, “தேவ குமாரனாகிய கிறிஸ்து என்கிற நம் மீட்பராகிய கன்மலையின் மேல் நீங்கள் உங்கள் அஸ்திபாரத்தைக் கட்ட வேண்டுமென்று நினைவில் கொள்ளுங்கள் ... , அது மெய்யான அஸ்திபாரமாயிருக்கிறது. அந்த அஸ்திபாரத்தின் மேல் மனுஷர் கட்டினால், அவர்கள் விழுந்து போவதில்லை.” 24

இந்த மாநாட்டிலிருந்து விசுவாசத்தின் அஸ்திபாரங்கள் பலப்படுத்தப்பட்டிருப்பதற்காக நான் நன்றியுடையவனாக இருக்கிறேன். கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவில் நமது விசுவாசத்தின் அஸ்திபாரங்களைப் பலப்படுத்த தேவையான தியாகங்களை செய்து, தாழ்மை பெறவேண்டும் என்பதே எனது ஜெபமாகும். அவர் பற்றி இயேசு கிறிஸ்துவின் நாமத்தினாலே என் உறுதியான சாட்சியை கூறுகிறேன், ஆமென்.

குறிப்புகள்

  1. See Malcolm Gladwell, Outliers: The Story of Success (2008), 40. He is quoting neurologist Daniel Levitin.

  2. Obituary of Bryant Hinckley Wadsworth, Deseret News, Jan. 15, 2017, legacy.com/obituaries/deseretnews.

  3. 2  நெப்பி 28:30 பார்க்கவும். அந்தக் காரியம் பற்றி அல்லது அது சம்மந்தப்பட்ட எல்லா கொள்கைகள் பற்றியும் நாம் முழுமையான அறிவைப் பெறுவதில்லை. தேவைப்படும்போது அவை வருகின்றன. வரிவரியாகவும் கொள்கை மேல் கொள்கையாகவும்.

  4. 1830ல் அச்சிடப்பட்ட மார்மன் புஸ்தக முதல் பதிப்பில், தீர்க்கதரிசி ஜோசப் ஸ்மித் எழுதினார், “தேவனின் வரத்தாலும் வல்லமையாலும், நான் மொழிபெயர்த்தேன் என உங்களுக்குத் தெரிவிக்க விரும்புகிறேன்” (மார்மன் புஸ்தக முன்னுரையைப் பார்க்கவும் [1830]). தொடர்ந்த மார்மன் புஸ்தக பதிப்புகள் அதே வாசகத்தை உள்ளடக்கியுள்ளன: “தகடுகள் ஜோசப் ஸ்மித்திடம் கொடுக்கப்பட்டன, அவர் தேவனின் வரத்தாலும் வல்லமையாலும் அவற்றை மொழிபெயர்த்தார்” (மார்மன் புஸ்தக முன்னுரை [2013] பார்க்கவும்).

  5. ஜோசப் ஸ்மித் புதிய ஏற்பாட்டை மொழிபெயர்த்துக் கொண்டிருந்தபோது, பல சந்தர்ப்பங்களில், தான் இருந்ததாக ஆர்சன் ப்ராட் நினைவுகூர்ந்தார், “அந்த முறையில் அவர் ஏன் ஒரு கருவியைப் பயன்படுத்தவில்லை என ஆச்சரியப்பட்டார். உணர்த்துதலின் ஆவியில் அவர் அனுபவம் பெறாதிருந்தபோது, கர்த்தர் அவருக்கு ஊரிமையும் தும்மிமையும் கொடுத்ததாக, ஜோசப் தன் சிந்தனைகளை வாசித்ததுபோல, மேலே பார்த்து விளக்கினார். ஆனால் இப்போது அந்த ஆவியின் செயல்பாடுகளை புரிந்துகொள்ளும் அளவுக்கு அவர் முன்னேறியிருக்கிறார், அக்கருவியின் உதவி அவருக்குத் தேவைப்படவில்லை.” (“Two Days’ Meeting at Brigham City, June 27 and 28, 1874,” Millennial Star, Aug. 11, 1874, 499; see also Richard E. Turley Jr., Robin S. Jensen, and Mark Ashurst-McGee, “Joseph the Seer,” Liahona, Oct. 2015, 10–17).

  6. அந்த ஊழியத் தலைவர் மூப்பர் மரியன்  டி. ஹாங்க்ஸ், அவர் ஒரு பொது அதிகாரியாகவும் இருந்தார்.

  7. லூக்கா 8:43–48 பார்க்கவும்.

  8. அப்போஸ்தலர் 2பார்க்கவும்.

  9. மோசியா 236–37 பார்க்கவும். see also Henry B. Eyring, “Spiritual Preparedness: Start Early and Be Steady,” Liahona, Nov. 2005, 38: “ஆகவே வாழ்க்கையின் பெரிய சோதனை, வாழ்க்கையின் புயல்களுக்கு மத்தியிலும், தேவனின் கட்டளைகளுக்கு நாம் செவிகொடுத்து, கீழ்ப்படிகிறோமா எனப் பார்ப்பதுதான். புயல்களைத் தாங்குவதல்ல, ஆனால் அவை கர்ஜிக்கும்போது சரியானதைத் தேரந்தெடுப்பது ஆகும். வாழ்க்கையின் சோகம் அந்த சோதனையில் தோற்பதுதான், மற்றும் ஆகவே நமது பரலோக வீட்டுக்கு மகிமையுடன் திரும்ப தகுதி பெற தவறுகிறோம்.”

  10. See Terryl L. Givens and Matthew J. Grow, Parley P. Pratt: The Apostle Paul of Mormonism (2011), 91–98; volume introduction and introduction to part 5, The Joseph Smith Papers, Documents, Volume 5: October 1835–January 1838, ed. Brent M. Rogers and others (2017), xxviii–xxxi, 285–93.

  11. See “Letter from Parley P. Pratt, 23 May 1837,” in The Joseph Smith Papers, Documents, Volume 5: October 1835–January 1838, 386–91.

  12. See “History of John Taylor by Himself,” 15, in Histories of the Twelve, 1856–1858, 1861, Church History Library; Givens and Grow, Parley P. Pratt, 101–2.

  13. See The Autobiography of Parley P. Pratt, ed. Parley P. Pratt Jr. (1874), 183–84.

  14. 2  நெப்பி 2:11 பார்க்கவும்.

  15. கோட்பாடும் உடன்படிக்கைகளும 122:7–8.

  16. கோட்பாடும் உடன்படிக்கைகளும 122:9.

  17. ஏனோஸ் 1:5–8 பார்க்கவும்.

  18. யாரோம் 1:4 பார்க்கவும்.

  19. மரோனி 7:26, 38 பார்க்கவும்.

  20. ஆல்மா 14:26 பார்க்கவும்.

  21. 3  நெப்பி 27:19 பார்க்கவும்.

  22. மரோனி 7:26 பார்க்கவும்.

  23. ஏத்தேர் 12:12 பார்க்கவும்..

  24. ஏலமன் 5:12.