பரிசுத்தத்தின் அழகு
அவர் பரிசுத்தராயிருப்பது போல நாமும் பரிசுத்தர்களாக ஆகும்படிக்கு, நமது பரலோக பிதா தேவையான அனைத்தையும் நமக்கு கொடுத்திருக்கிறார்.
நான் இக்கூட்டத்துக்கு ஆயத்தம் செய்துகொண்டிருந்தபோது, அருகாமையிலும், தூரத்திலும் இருக்கிற நான் சந்நித்திருக்கிற அநேக விசுவாசமிக்க சகோதரிகளிடம் என் இருதயம் திரும்பியது. என்னைப் பொருத்தவரையில், அவர்கள் தாவீது இராஜா நன்றி செலுத்துகிற சங்கீதத்தில் அவர்கள் மிகச் சிறப்பாக விவரிக்கப்பட்டுள்ளார்கள்: “கர்த்தருக்கு அவருடைய நாமத்திற்குரிய மகிமையைச் செலுத்தி, காணிக்கைகளைக் கொண்டுவந்து, அவருடைய சந்நிதியில் பரவேசியுங்கள், பரிசுத்த அலங்காரத்துடனே கர்த்தரைத் தொழுதுகொள்ளுங்கள்.”1
நன்மையானவற்றில் அவர்களது இருதயம் மையங்கொண்டுள்ள, அதிகமாக இரட்சகரைப்போல ஆக விரும்புகிற, சகோதரிகளிடம் பரிசுத்தத்தின் அழகை நான் பார்க்கிறேன். அவர்கள் அன்றாடம் வாழ்கிற விதத்தில் அவர்கள் தங்கள் முழு ஆத்துமாக்களையும், இருதயங்களையும், மனதையும், பெலனையும் கர்த்தருக்குக் கொடுக்கிறார்கள்.2 பரிசுத்தம் என்பது கட்டளைகளைக் கைக்கொள்வதிலும், நாம் தேவனுடன் செய்து கொண்ட உடன்படிக்கைகளைக் கனம்பண்ணுவதிலும் முயற்சியிலும் போராட்டத்திலும் இருக்கிறது. பரிசுத்தம் என்பது பரிசுத்த ஆவியானவரை நம்முடன் வைத்துக்கொள்ள தேர்வுகள் செய்வது ஆகும்.3 நமது சுபாவ குணங்களை ஒதுக்கிவைத்துவிட்டு கர்த்தராகிய கிறிஸ்துவின் பாவநிவர்த்தி மூலம் பரிசுத்தவானவதே பரிசுத்தம். 4 “நமது வாழ்க்கையின் ஒவ்வொரு கணமும் கர்த்தருக்கு பரிசுத்தமாக இருக்க வேண்டும்.” 5
பரலோகத்தின் தேவன் இஸ்ரவேல் புத்திரருக்குக் கட்டளையிட்டார் “நான் உங்கள் தேவனாகிய கர்த்தர், நான் பரிசுத்தர், கையால் உங்களைத் தீட்டுப்படுத்தாமல், உங்களைப் பரிசுத்தமாக்கிக் கொண்டு பரிசுத்தராயிருப்பீர்களாக.”6
மூப்பர் டி. டாட் க்றிஸ்டோபர்சன் போதித்திருக்கிறார்: “நமது பரலோக பிதா உயர்வான எதிர்பார்ப்பின் தேவன். … நாம் ‘செலஸ்டியல் மகிமையில் இருக்கும்படியாக’ நம்மை பரிசுத்தமாக்கவும் (கோ.உ 88:22), மற்றும் அவரது சமூகத்தில் தரித்திருக்கும்படியாகவும்.(மோசே 6:57).”7அவர் கூறுகிறார். விசுவாசம் பற்றிய விரிவுரைகள் விளக்குகின்றன, “அவரது பரிபூரணத்தையும் பரிசுத்தத்தையும் கொண்டிராமல் எந்த உயிரினமும் அவரது மகிமையை அனுபவிக்க முடியாது.”8 நமது பரலோக பிதா நம்மை அறிகிறார். அவர் நம்மை நேசிக்கிறார், அவர் பரிசுத்தராயிருப்பது போல நாமும் அவரைப் போல பரிசுத்தமாக ஆக தேவையான அனைத்தையும் அவர் கொடுத்திருக்கிறார்.
நாம் பரலோக பிதாவின் குமாரத்திகள், நம் ஒவ்வொருவருக்கும் ஒரு பரிசுத்த பாரம்பரியம் உண்டு. பரலோக பிதா அறிவித்திருக்கிறார், “இதோ நானே தேவன், பரிசுத்தர் என்பது என் நாமம்.”9 அநித்தியத்துக்கு முந்தய ஜீவியத்தில், நாம் நமது பிதாவை நேசித்து அவரை ஆராதித்தோம். நாம் அவரைப்போலிருக்க வாஞ்சித்தோம். தகப்பனுக்குரிய பரிபூரண அன்பினிமித்தம் நமது இரட்சகராகவும் மீட்பராகவும் இருக்க அவரது நேசக்குமாரனாகிய இயேசு கிறிஸ்துவை தந்தார். அவர் பரிசுத்தமானவரின் குமாரன்.10 அவர் நாமம் பரிசுத்தர்,11 இஸ்ரவேலின் பரிசுத்தர். 12
நமது பரிசுத்தம் கிறிஸ்துவையும், அவரது இரக்கத்தையும், அவரது கிருபையையும் மையமாகக் கொண்டிருக்கிறது. இயேசு கிறிஸ்துவிலும் அவரது பாவநிவர்த்தியிலும் நம்பிக்கையுடன், நாம் அனைத்து தேவதன்மையற்றவைகளையும் மறுதலித்து,13 உண்மையாக மனந்திரும்பும்போது, நாம் அழுக்கின்றி சுத்தமாகலாம். பாவங்களிலிருந்து விடுபட நாம் தண்ணீரால் ஞானஸ்நானம் கொடுக்கப்படுகிறோம். நாம் திறந்த மனத்துடன் பரிசுத்த ஆவியைப் பெற்றுக்கொள்ளும்போது, நமது ஆத்துமாக்கள் பரிசுத்தமாகின்றன. வாரந்தோறும் நாம் திருவிருந்து நியமத்தில் பங்கேற்கிறோம். நீதிக்கான உண்மையான வாஞ்சையுடன் மனந்திரும்புதலின் ஆவியோடு, கிறிஸ்துவின் நாமத்தை நம்மீது தரித்துக்கொள்ளவும், அவரை நினைக்கவும், நம்மோடு அவரது ஆவியை எப்போதும் கொண்டிருக்கவும், அவரது கட்டளைகளைக் கைகொள்ளவும் நாம் உடன்படிக்கை செய்கிறோம். காலப்போக்கில் நாம் பிதாவுடனும் குமாரனுடனும், பரிசுத்தாவியுடனும் ஒன்றாக தொடர்ந்து முயலும்போது, நாம் அவர்களது தெய்வீக தன்மையின் பங்காளிகளாகிறோம்.14
பரிசுத்தம் என்பது கட்டளைகளைக் கைக்கொள்வது ஆகும்
தேவ சமூகத்தில் நற்குணத்துடனும், போற்றத்தக்கதாயும் உள்ளவற்றிலிருந்து நம்மை வெளியே இழுக்கக் கூடிய திரளான பரிசோதனைகளையும், சோதனைகளையும், பாடுகளையும் அடையாளம் காண்கிறோம். ஆனால் நமது உலக அனுபவங்கள் பரிசுத்தத்தை தெரிந்துகொள்ள நமக்கு சந்தரப்பம் அளிக்கின்றன. அடிக்கடி நமது உடன்படிக்கைகளைக் காத்துக் கொள்ள நாம் செய்யும் தியாகங்கள் நம்மைப் பரிசுத்தப்படுத்துகின்றன, மற்றும் சுத்தமாக்குகின்றன.
கானாவிலுள்ள 13 வயது சிறுமி இவாஞ்சலினின் முகரூபத்தில் பரிசுத்தத்தை நான் பார்த்தேன். அவள் தனது உடன்படிக்கைகளைக் காத்துக் கொள்கிற வழிகளில் ஒன்று, பீஹைவ் வகுப்புத் தலைவியாக தனது அழைப்பை சிறப்பிக்கிறாள். ஆர்வம் குறைந்த இளம்பெண்களை சபைக்கு வர அனுமதிக்க பெற்றோர்களிடம் கேட்க தன் சிநேகிதிகளின் வீட்டுக்கு அவள் போவதாக தாழ்மையாய் விளக்கினாள். ஞாயிற்றுக்கிழமை பிள்ளைகள் வீட்டு வேலைகளைச் செய்ய வேண்டியிருப்பதால், அது கடினம் என பெற்றோர் அவளிடம் சொல்கிறார்கள். ஆகவே இவாஞ்சலின் சென்று வேலைகளைச் செய்கிறாள், அவளது முயற்சிகளால் அவளது நண்பர்கள் அடிக்கடி சபைக்குச் செல்ல அனுமதிக்கப்படுகிறார்கள்.
தொடர்புடைய உடன்படிக்கைகளை நாம் காத்துக்கொண்டால், பரிசுத்த ஆசாரியத்துவ நியமங்கள் நம்மை மாற்றும், பரிசுத்தப்படுத்தும், கர்த்தரின் சமூகத்தில் நாம் நுழைய நம்மை அனுமதிக்கும். 15 ஆகவே நாம் ஒருவருக்கொருவரின் பாரத்தை சுமக்கிறோம், நாம் ஒருவருக்கொருவரை பெலப்படுத்துகிறோம். வறியோருக்கும், பசியிலிருப்போருக்கும், பிணியாளிகளுக்கும், ஆவிக்குரிய மற்றும் உலகப்பிரகார நிவாரணங்களை நாம் கொடுக்கும்போது, நாம் பாவத்தை விட்டுவிடுவதை தக்க வைக்கிறோம். 16 நாம் ஓய்வுநாளைக் காத்துக்கொள்ளும்போதும், கர்த்தரின் பரிசுத்த நாளில் திருவிருந்தை தகுதியுடன் பெறும்போதும் நாம் உலகத்திலிருந்து கறையற்றவர்களாக காத்துக்கொள்கிறோம்.17
நாம் அவர்களது குடும்பங்களையும் ஆசீர்வதித்து நமது வீடுகளை பரிசுத்த ஸ்தலங்களாக ஆக்குகிறோம். பரிசுத்தமான நீடித்த அன்பால் நாம் நிறைக்கப்படும்படிக்கு நாம் நமது இச்சைகளுக்கு கடிவாளம் இடுகிறோம். 18 நாம் தயவாயும், மனதுருக்கத்துடனும், பிறரை நாடிச் சென்று தேவனின் சாட்சிகளாக நிற்கிறோம். ஒரே இருதயமும் ஒரே மனதும் உள்ள ஜனமாக ஒற்றுமையிலும் நீதியிலும் தரித்திருக்கிற பரிசுத்த ஜனமாக நாம் சீயோனின் ஜனங்களாகிறோம்.19 “ஏனெனில் சீயோன் அழகிலும் பரிசுத்தத்திலும் வளர வேண்டும்.”20
சகோதரிகளே ஆலயத்துக்கு வாருங்கள். அவரது வருகையில் இரட்சகரை வரவேற்க ஆயத்தமாயிருக்கிற பரிசுத்த ஜனமாக வேண்டுமானால், நாம் எழுந்து நமது அழகான வஸ்திரத்தை உடுத்திக்கொள்ள வேண்டும்.21 பெலனோடும் மரியாதையுடனும், நாம் உலகத்தின் வழிகளை விட்டுவிட்டு, “நாம் பரிசுத்தத்தினாலும் நீதியின் வஸ்திரத்தினாலும் உடுத்தப்பட்டவர்களாய்,” நமது உடன்படிக்கைகளைக் காத்துக்கொள்ள வேண்டும்.22
பரிசுத்தம் என்பது பரிசுத்த ஆவியானவரை நமது வழிகாட்டியாக கொள்வதாகும்
பரிசுத்தம் ஆவியின் வரமாகும். நமது வாழ்க்கையில் பரிசுத்த ஆவியானவரின் பரிசுத்தமாக்கும் வல்லமையை அதிகரிக்கும் இக்காரியங்களை நாம் செய்யத் தெரிந்துகொள்ளும்போது, நாம் இந்த வரத்தை ஏற்றுக்கொள்கிறோம்.
மார்த்தாள் இயேசு கிறிஸ்துவை தன் வீட்டுக்குள் வரவேற்றபோது, அவள் தன் முழுத் திறமையோடு கர்த்தருக்கு ஊழியம் செய்ய அதிக வாஞ்சையை உணர்ந்தாள். அவரது வார்த்தையைக் கேட்க அவளது சகோதரி மரியாள் “இயேசுவின் பாதத்தில்” அமரத் தெரிந்துகொண்டாள். உதவியின்றி வேலைசெய்யும் பாரத்தை உணர்ந்தபோது, அவள் புகார் சொன்னாள், “ஆண்டவரே, நான் தனியே வேலை செய்யும்படி, என் சகோதரி என்னை விட்டு வந்திருக்கிறதைக் குறித்து உமக்குக் கவலையில்லையா?”
நான் கற்பனை செய்யக்கூடிய மிக மென்மையான கடிந்து கொள்ளும் வார்த்தைகளை நான் விரும்புகிறேன். பரிபூரண அன்புடனும் எல்லையில்லா மனதுருக்கத்துடனும் இரட்சகர் புத்தி சொன்னார்:
“மார்த்தாளே, மார்த்தாளே, நீ அநேக காரியங்களைக் குறித்து கவலைப்பட்டு கலங்குகிறாய்:
“தேவையானது ஒன்றே, மரியாள் தன்னை விட்டெடுபடாத நல்ல பங்கைத் தெரிந்துகொண்டாள்.”23
சகோதரிகளே, நாம் பரிசுத்தமாக இருக்க வேண்டுமானால் நாம் இஸ்ரவேலின் பரிசுத்தரின் பாதத்தில் அமர்ந்து, பரிசுத்தத்துக்கு நேரமளிக்க வேண்டும். நாம் தொலைபேசியையும், ஒருபோதும் முடியாத வேலைப்பட்டியலையும், உலகத்தின் அக்கரைகளையும் ஒதுக்கி வைத்துவிடுகிறோமா? ஜெபம், படிப்பு, தேவ வார்த்தைக்குச் செவிகொடுத்தல் நாம் தேவ குணமாக்கும் மற்றும் சுத்திகரிக்கும் அன்பை நமது ஆத்துமாக்களுக்குள் வரவழைக்கிறது. அவரது பரிசுத்த சுத்திகரிக்கும் ஆவியால் நாம் நிரப்பப்படவும், பரிசுத்தமாய் இருக்கவும் நேரம் எடுத்துக்கொள்வோமாக. பரிசுத்த ஆவியானவர் நமது வழிகாட்டியாக பரிசுத்தத்தின் அழகில் நாம் இரட்சகரை வரவேற்க ஆயத்தப்பட்டிருப்போம். 24
பரிசுத்தம் என்பது இயேசு கிறிஸ்துவின் பாவநிவர்த்தி மூலம் பரிசுத்தவான் ஆவதாகும்
பென்யமீன் இராஜாவின் உணர்த்தப்பட்ட வார்த்தைகளின்படி, இயேசு கிறிஸ்துவின் பாவநிவர்த்தி மூலம் பரிசுத்தவான்கள் ஆகிறவர்கள், இரட்சகரைப் போல கீழ்ப்படிதலுள்ள, சாந்தமான, தாழ்மையான, பொறுமையான மற்றும் அன்பு நிறைந்தவர்கள்.25 “இராஜரீகம் பண்ணுகிறவராகிய சர்வவல்ல கர்த்தர், நித்திய நித்தியமாய் இருந்தவரும், இருக்கிறவரும், மனுபுத்திரர் மத்தியில் இறங்கி வரப்போகிறவருமான இயேசு கிறிஸ்து, மண்ணாலான கூடாரத்தில் வாசம் செய்வார்,” என அவர் தீர்க்கதரிசனமுரைத்தார். பிணியாளிகளையும், முடவரையும், குருடரையும் ஆசீர்வதிக்கவும், மரித்தோரை உயிரோடெழுப்பவும் அவர் வந்தார். ஆயினும் “மரணத்திற்குட்படாமல் மனுஷன் படக்கூடிய துன்பங்களைக் காட்டிலும் அதிகமாக அவர் பாடனுபவித்தார்.”26 இரட்சிப்பு அவர் மூலமே வரக்கூடியதானாலும், அவர் பரியாசம் பண்ணப்பட்டு, அடிக்கப்பட்டு, சிலுவையிலடிக்கப்பட்டார். நாம் அனைவரும் மரணத்தை மேற்கொள்ளும்படிக்கு, தேவ குமாரன் கல்லறையிலிருந்து எழுந்தார். நீதியில் உலகத்தை நியாயந்தீர்க்கப் போகிறவர் அவர் ஒருவரே. நம்மை மீட்கப்போகிறவர் அவரே. அவரே இஸ்ரவேலின் பரிசுத்தர். இயேசு கிறிஸ்துவே பரிசுத்தத்தின் அழகு.
பென்யமீன் இராஜாவின் ஜனங்கள் இந்த வார்த்தைகளைக் கேட்டபோது, அவர்கள் தரையிலே விழுந்தார்கள். நமது தேவனுடைய கிருபை மற்றும் மகிமை மீது அவர்களது தாழ்மையும் பயபக்தியும் அப்படிப்பட்டதாய் இருந்தது. அவர்கள் தங்களுடைய மாம்ச தன்மையை அடையாளம் கண்டனர். நமது கர்த்தராகிய கிறிஸ்துவின் கிருபை மீதும் இரக்கத்தின் மீதும் நாம் நமது முழு சார்ந்திருத்தலைக் காண்கிறோமா? ஒவ்வொரு உலகப்பிரகார மற்றும் ஆவிக்குரிய நல்ல வரமும் கிறிஸ்துவின் மூலம் வருகிறது என அடையாளம் காண்கிறோமா? பிதாவின் நித்திய திட்டப்படி, இந்த வாழ்க்கையில் சமாதானமும், நித்தியத்தின் மகிமைகளும் அவரது பரிசுத்த குமாரனாலேயே நமதாகும் என நாம் நினைவுகொள்கிறோமா?
ஒரே குரலில் சத்தமாக கூக்குரலிட்ட பென்யமீன் இராஜாவின் ஜனங்களோடு நாம் சேர்ந்து கொள்ளலாமா, “நாங்கள் எங்கள் பாவங்களுக்கென்று மன்னிப்பைப் பெற்று, எங்களுடைய இருதயம் சுத்திகரிக்கப்படும்பொருட்டு, கிறிஸ்துவின் பாவநிவர்த்தியாக்கும் இரத்தத்தைப் பூச இரக்கமாயிரும்; ஏனெனில் வானத்தையும பூமியையும் சகலவற்றையும் படைத்தவரும், தேவ குமாரனுமாகிய இயேசு கிறிஸ்துவின் மேல் நாங்கள் நம்பிக்கையாயிருக்கிறோம்.”27
நாம் இஸ்ரவேலின் பரிசுத்தரிடம் வரும்போது, நாம் ஆனந்தத்தால் நிரப்பப்படும்படிக்கு, பாவத்திலிருந்து விடுதலையும் மனசாட்சியின் சமாதானமும் பெறும்படியாக அவரது ஆவி நம்மீது வருவார் என நான் சாட்சியளிக்கிறேன்..
பரிசுத்தமாகும் தகுதியை பரலோக பிதா நம் ஒவ்வொருவருக்கும் கொடுத்திருக்கிறார். நாம் நமது உடன்படிக்கைகளைக் காத்துக்கொள்ளவும், பரிசுத்த ஆவியானவரை நமது வழிகாட்டியாகக் கொள்ளவும் நம்மால் இயன்றதைச் செய்வோமாக. இயேசு கிறிஸ்து மீது விசுவாசத்துடன் அவரது பாவநிவர்த்தி மூலம் நாம் அழியாமையும் நித்திய ஜீவனும் பெற்று நாம் நமது பிதாவாகிய தேவனுக்கு அவரது நாமத்துக்குரிய மகிமையைக் கொடுத்து, அவரது பாவ நிவர்த்தி மூலம் நாம் பரிசுத்தவான்கள் ஆகிறோம். நாம் கர்த்தரின் முன்பு பரிசுத்தத்தின் அழகுடன் நிற்கும்போது, நமது ஜீவியங்கள் எப்போதும் பரிசுத்தமான காணிக்கைகள் ஆவதாக. இயேசு கிறிஸ்துவின் நாமத்தினாலே, ஆமென்.