வேதங்கள்
கோட்பாடும் உடன்படிக்கைகளும் 22


பாகம் 22

ஏப்ரல் 16, 1830ல் நியூயார்க்கின் மான்செஸ்டரில் தீர்க்கதரிசி ஜோசப் ஸ்மித் மூலமாகக் கொடுக்கப்பட்ட வெளிப்படுத்தல். முன்பு ஞானஸ்நானம் பெற்று, மறுஞானஸ்நானமில்லாமல் சபையுடன் இணைவதற்கு சிலர் வாஞ்சித்ததன் விளைவாக சபைக்கு இந்த வெளிப்படுத்தல் கொடுக்கப்பட்டது.

1, ஞானஸ்நானம் ஒரு புதிய மற்றும் நித்திய உடன்படிக்கை; 2–4, அதிகாரப்பூர்வமான ஞானஸ்நானம் அவசியமாயிருக்கிறது.

1 இதோ, இந்தக் காரியத்தோடு நான் செய்த பழைய உடன்படிக்கைகளெல்லாம் மாற்றப்பட வேண்டும்; ஆரம்பத்திலிருந்தே இருக்கிற இது ஒரு புதிய மற்றும் நித்திய உடன்படிக்கையுமாயிருக்கிறது என நான் உங்களுக்குச் சொல்கிறேன்.

2 ஆகவே, ஒரு நூறு முறைகள் ஒரு மனுஷன் ஞானஸ்நானம் பெற்றாலும் அது அவனுக்கு எதையும் பெற்றுத்தராது, ஏனெனில் மோசேயின் நியாயப்பிரமாணங்களாலோ உனது செத்த கிரியைகளாலோ நீ இடுக்கமான வாசலில் பிரவேசிக்கமுடியாது.

3 ஏனெனில் உனது செத்த கிரியைகளினிமித்தம் இந்த கடைசி உடன்படிக்கையை நான் செய்தேன், மேலும் இந்த சபை, எனக்கு பூர்வ நாட்களைப்போல கட்டப்படவேண்டும்.

4 ஆகவே, நான் உனக்கு கட்டளையிட்ட வாசல் வழியாக பிரவேசி, உனது தேவனுக்கு ஆலோசனையளிக்க நாடாதே. ஆமென்.