வேதங்கள்
கோட்பாடும் உடன்படிக்கைகளும் 72


பாகம் 72

டிசம்பர் 4, 1831ல் ஒஹாயோவின் கர்த்லாந்தில் தீர்க்கதரிசி ஜோசப் ஸ்மித்துக்குக் கொடுக்கப்பட்ட வெளிப்படுத்தல். தங்களுடைய கடமைகளை அறிந்துகொள்ளவும், சபையின் போதனைகளில் கூடுதலாக பக்திவிருத்தியடையவும் ஏராளமான மூப்பர்களும் அங்கத்தினர்களும் கூடினார்கள். இந்தப் பாகம் அதே நாளில் பெறப்பட்ட மூன்று வெளிப்படுத்தல்களின் தொகுப்பு. ஒரு ஆயராக நீவல் கே. விட்னி அழைக்கப்பட்டதை வசனங்கள் 1 லிருந்து 8 வரை தெரியப்படுத்துகிறது. பின்னர் அழைக்கப்பட்டு நியமனம் செய்யப்பட்டார், அதன்பின்னர் ஒரு ஆயரின் கடமைகளாக கூடுதல் தகவல் கொடுக்கப்பட்டு வசனங்கள் 9லிருந்து 23 வரை பெறப்பட்டது. அதன் பின்னர் சீயோனில் கூடிச்சேருதலைக்குறித்த அறிவுரைகளை வழங்குகிற வசனங்கள் 24லிருந்து 26வரை கொடுக்கப்பட்டன.

1–8, தங்களின் உக்கிராணத்துவத்தின் கணக்கை ஆயரிடம் மூப்பர்கள் சமர்ப்பிக்கவேண்டும்; 9–15, பண்டசாலையை ஆயர் பராமரித்து சிறுமையும் எளிமையுமானவர்களை பராமரிக்கிறார்; 16–26, மூப்பர்களின் தகுதியை ஆயர்கள் சான்றளிக்கவேண்டும்.

1 என்னுடைய சபையின் பிரதான ஆசாரியர்களாயிருக்கிற, ராஜ்யமும் அதிகாரமும் கொடுக்கப்பட்டிருக்கிற, ஒன்றாய் கூடியிருக்கிறவர்களே கேளுங்கள், கர்த்தரின் குரலுக்குச் செவிகொடுங்கள்.

2 ஏனெனில் இப்படியாக கர்த்தர் சொல்லுகிறார், கர்த்தரின் திராட்சைத் தோட்டத்தின் இந்த பகுதியில் உங்களுக்கு அல்லது உங்களிலிருந்து சபைக்கு ஒரு ஆயர் நியமிக்கப்படவேண்டுமென்பது எனக்கு அவசியமாயிருக்கிறது.

3 இந்தக் காரியத்தில் மெய்யாகவே நீங்கள் ஞானமாய் செய்தீர்கள், ஏனெனில், இப்போதைக்கும் நித்தியத்திற்கும் ஒவ்வொரு உக்கிராணக்காரனும் அவனுடைய உக்கிராணத்துவத்தின் கணக்கைக் கொடுக்கவேண்டுமென்பது கர்த்தருக்கு அவசியமாயிருக்கிறது.

4 ஏனெனில், சரியான சமயத்தில் உண்மையுள்ளவனாயும் ஞானமாயுமிருக்கிறவன், என்னுடைய பிதாவினால் அவனுக்காக ஆயத்தம்பண்ணப்பட்டிருக்கிற வாசஸ்தலங்களை சுதந்தரித்துக்கொள்ள தகுதியுள்ளவனாக எண்ணப்படுவான்.

5 மெய்யாகவே நான் உங்களுக்குச் சொல்லுகிறேன், என்னுடைய திராட்சைத் தோட்டத்தின் இந்த பகுதியில் சபையின் மூப்பர்கள் தங்களுடைய உக்கிராணத்துவத்தின் கணக்கை என்னுடைய திராட்சைத்தோட்டத்தின் இந்த பகுதியில் என்னால் நியமிக்கப்படவிருக்கிற ஆயருக்கு கொடுக்கவேண்டும்.

6 இந்தக் காரியங்கள் பதிவேட்டில் வைக்கப்பட்டு சீயோனின் ஆயரிடம் ஒப்படைக்கப்படவேண்டும்.

7 கொடுக்கப்பட்ட கட்டளைகளாலும் மாநாட்டின் குரலாலும் ஆயரின் கடமை அறியப்படுத்தப்படும்.

8 இப்பொழுது, மெய்யாகவே நான் உங்களுக்குச் சொல்லுகிறேன், இந்த அதிகாரத்திற்கு நியமிக்கப்பட்டு நியமனம் செய்யப்படுகிற மனுஷன் என்னுடைய ஊழியக்காரனாகிய நீவல் கே. விட்னியே. இதுவே உங்கள் தேவனாகிய கர்த்தரும் உங்கள் மீட்பருமானவரின் சித்தம். அப்படியே ஆகக்கடவது. ஆமென்.

9 மெய்யாகவே இந்த, என்னுடைய திராட்சைத் தோட்டத்தின் இந்த பகுதியில், கொடுக்கப்பட்ட பிரமாணத்துடன் சேர்த்து, சபையில் நியமனம் செய்யப்பட்ட ஆயரின் கடமையையும், கர்த்தரின் வார்த்தை, தெரியப்படுத்தி,

10 கர்த்தரின் பண்டசாலையை பராமரிக்க; திராட்சைத்தோட்டத்தின் இந்த பகுதியான சபையின் நிதிகளைப்பெற;

11 முன்பே கட்டளையிட்டதைப்போல மூப்பர்களின் அறிக்கையை எடுக்க; அவர்கள் பெற்றுக் கொள்கிறவற்றிற்காக, அவர்கள் செலுத்த முடிகிற அளவில், செலுத்துகிற, அவர்களின் தேவைகளை நிவர்த்தி செய்ய;

12 சபையின் நன்மைக்காகவும், தரித்திரருக்கும் வறியோருக்கும், இதுவும் கூட கொடுக்கப்படலாம்.

13 எதனாலும் செலுத்த முடியாதவனின் அறிக்கை பெறப்பட்டு, சீயோனின் ஆயரிடம் ஒப்படைக்கப்படவேண்டும். அவருடைய கைகளில் கர்த்தர் ஒப்படைத்தவற்றிலிருந்து கடனை அவர் செலுத்துவார்.

14 சுவிசேஷத்தையும், ராஜ்யத்தின் காரியங்களையும் சபைக்கும் உலகத்தாருக்கும் நிர்வகிப்பதில், ஆவியின் காரியங்களில் பிரயாசப்படுகிற உண்மையுள்ள உழைப்பாளிகளின் பிரயாசங்கள் மற்றும், கடனைப்பற்றி சீயோனின் ஆயருக்கு தெரிவிப்பார்கள்;

15 இப்படியாக சபை செலுத்துகிறது, ஏனெனில், பிரமாணத்தின்படி சீயோனுக்கு வருகிற எல்லா மனுஷனும், சீயோனின் ஆயருக்கு முன்பாக சகல காரியங்களையும் வைக்கவேண்டும்.

16 இப்பொழுது, மெய்யாகவே நான் உங்களுக்குச் சொல்லுகிறேன், திராட்சைத் தோட்டத்தின் இந்த பகுதியிலுள்ள எல்லா மூப்பரும், அவரது உக்கிராணத்துவத்தின் அறிக்கையை திராட்சைத் தோட்டத்தின் இந்த பகுதியின் ஆயருக்குக் கொடுக்கவேண்டும்,

17 சீயோனின் ஆயருக்கு ஒரு சான்றிதழ், ஒரு சுதந்தரத்திற்காகவும், ஒரு புத்தியுள்ள உக்கிராணக்காரனாகவும், ஒரு உண்மையுள்ள உழைப்பாளியாகவும், ஏற்றுக்கொள்ளப்பட, திராட்சைத் தோட்டத்தின் இந்த பகுதியின் நியாயாதிபதி அல்லது ஆயரிடமிருந்து, எல்லா மனுஷனையும் ஏற்றுக்கொள்ளப்படுபவனாக்கி, சகல காரியங்களுக்கும் பதிலளிக்கிறது;

18 இல்லையெனில் சீயோனின் ஆயரால் அவன் ஏற்றுக் கொள்ளப்படமாட்டான்.

19 இப்பொழுது, மெய்யாகவே நான் உங்களுக்குச் சொல்லுகிறேன், அவன் தன்னை ஒப்படைத்து சகல காரியங்களிலும் அவனுடைய கணக்குகள் ஏற்றுக்கொள்ளப்படத்தக்கதாக, திராட்சைத்தோட்டத்தின் இந்த பகுதியின் ஆயருக்கு ஒரு கணக்கைக் கொடுக்கிற ஒவ்வொரு மூப்பரும் பிரயாசப்படுகிற சபை அல்லது சபைகளால் சிபாரிசு செய்யப்படுவார்களாக.

20 மீண்டும், என்னுடைய சபையின் நேரடியான காரியங்களுக்குமேல் உக்கிராணக்காரர்களாக நியமிக்கப்பட்ட என்னுடைய ஊழியக்காரர்கள் சகல காரியங்களிலும், ஆயர் அல்லது ஆயர்களிடம் உதவி கோருவார்களாக.

21 வெளிப்படுத்தல்கள் வெளியிடப்பட்டு, பூமியின் கடையாந்தரங்கள்வரை போகவும், சகல காரியங்களிலும் சபைக்கு பலனாயிருக்கிற நிதிகளை அவர்கள் பெறவும்;

22 சகல காரியங்களிலும் ஏற்றுக்கொள்ளப்பட தங்களை ஒப்புக்கொடுக்கவும், ஞானமுள்ள உக்கிராணக்காரர்களாக கணக்கிடப்படுவார்களாக.

23 இப்பொழுது, இதோ, என்னுடைய விரிவாக்கப்பட்ட எல்லா சபை கிளைகளும், அவை எந்த தேசத்திலே ஸ்தாபிக்கப்பட்டிருந்தாலும் இது ஒரு மாதிரியாக இருக்கும். இப்பொழுது நான் சொல்கிறவற்றிற்கு ஒரு முடிவை ஏற்படுத்துகிறேன். ஆமென்.

24 ராஜ்யத்தின் பிரமாணங்களுடன் கூடுதலாக பரிசுத்த ஆவியால் சீயோனுக்குப் போக நியமிக்கப்பட்ட, சீயோனுக்குப் போக சிலாக்கியம் பெற்ற, சபையின் அங்கத்தினர்களுக்கு ஒரு சில வார்த்தைகள்,

25 சபையின் மூன்று மூப்பர்களிடமிருந்து ஒரு சான்றிதழை, அல்லது ஆயரிடமிருந்து ஒரு சான்றிதழை, ஆயருக்கு அவர்கள் எடுத்துப்போவார்களாக.

26 இல்லையெனில் சீயோன் தேசத்திற்குப் போகிறவர்கள் ஒரு புத்திசாலியான உக்கிராணக்காரர்களாக கணக்கிடப்படமாட்டார்கள். இதுவும்கூட ஒரு மாதிரி. ஆமென்.