வேதங்கள்
கோட்பாடும் உடன்படிக்கைகளும் 44


பாகம் 44

பிப்ருவரி 1831ன் பிற்பகுதியில் ஒஹாயோவின் கர்த்லாந்தில் தீர்க்கதரிசி ஜோசப் ஸ்மித்துக்கும் சிட்னி ரிக்டனுக்கும் கொடுக்கப்பட்ட வெளிப்படுத்தல். இங்கே தீர்மானத்தின் தேவைக்கு ஏற்றபடி, பின்வருகிற ஜூன் மாதத்தின் ஆரம்பத்தில் ஒரு மாநாடு நடைபெற சபை ஏற்பாடு செய்தது.

1–3, மாநாட்டில் மூப்பர்கள் கூடிவரவேண்டும்; 4–6, தேசத்தின் சட்டங்களின்படியும் தரித்திரரை கவனித்துக் கொள்ளும்படியாகவும் அவைகள் அமைக்கப்படவேண்டும்.

1 இதோ, இப்படியாக எனது ஊழியக்காரர்களாகிய உங்களுக்குக் கர்த்தர் சொல்லுகிறார், கடிதம் மூலமாகவோ அல்லது வேறு சிலவழியிலோ, கிழக்கிலும் மேற்கிலும் வடக்கிலும் தெற்கிலுமிருந்து எனது சபையின் மூப்பர்கள் ஒன்றுகூட அழைக்கப்படவேண்டுமென்பது எனக்கு அவசியமாயிருக்கிறது.

2 அவர்கள் எவ்வளவுக்கெவ்வளவாய் விசுவாசமுள்ளவர்களாயிருந்து என்னில் விசுவாசம் வைக்கிறார்களோ, அவ்வளவாய் அவர்கள் ஒன்றுகூடும் நாளில் அவர்கள் மேல் என் ஆவியை நான் ஊற்றுவேன்.

3 அவர்கள் சுற்றிலுமுள்ள பகுதிகளுக்குப் போய் ஜனங்களிடத்தில் மனந்திரும்புதலைப் பிரசங்கிப்பார்கள்.

4 அநேகர் மனம்மாறி மனுஷர்களின் சட்டத்தின்படி உங்களை அமைத்துக்கொள்ளுமளவுக்கு நீங்கள் அதிகாரம் பெறுவீர்கள்.

5 உங்கள் சத்துருக்கள் உங்களை மேற்கொள்ள அதிகாரம் பெறாதபடிக்கு சகல காரியங்களிலும் நீங்கள் பாதுகாக்கப்படும்படியாக எனது நியாயப்பிரமாணங்களை கைக்கொள்ள நீங்கள் திறமைபெறும்படியாக எனது ஜனத்தை அழிக்க சத்துரு வகைதேடுகிற அனைத்துக் கட்டுக்களும் உடைக்கப்படும்.

6 இதோ, நான் உங்களுக்குச் சொல்லுகிறேன், நீங்கள் பெற்ற எனது பிரமாணத்தின்படி சகல காரியங்களும் அவர்களுக்குக் கிடைக்கும்வரை சிறுமையும் எளிமையுமானவர்களை நீங்கள் சந்தித்து அவர்களின் நிவாரணத்துக்கு பணிவிடை செய்யவேண்டும். ஆமென்.