அவசியமான உரையாடல்கள்
மனமாற்றம் நம் பிள்ளைகளுக்கு வெறுமனே நிகழும் வரை நாம் காத்திருக்க முடியாது. தற்செயலான மனமாற்றம், இயேசு கிறிஸ்துவின் சுவிசேஷத்தின் கொள்கை அல்ல.
நாம் ஏன் ஆரம்ப வகுப்பை “ஆரம்ப வகுப்பு” என்று அழைக்கிறோம் என்று நீங்கள் எப்போதாவது வியந்திருக்கிறீர்களா? ஆரம்ப காலங்களில் பிள்ளைகள் பெறும் ஆவிக்குரிய கற்றுக்கொள்ளுதலை இந்தப் பெயர் குறிப்பிடுகிறது, என்னைப் பொறுத்தவரை இது ஒரு வல்லமையான சத்தியத்தை நினைவூட்டுவதும் ஆகும். நமது பரலோக பிதாவுக்கு, பிள்ளைகள் ஒருபோதும் இரண்டாம் பட்சமாய் இருந்ததில்லை, அவர்கள் எப்போதும் “முதன்மையாகவே,” இருந்திருக்கிறார்கள்1
தேவனின் பிள்ளைகளாக அவர்களை மதிக்கவும், மரியாதை கொடுக்கவும், பாதுகாக்கவும் அவர் நம்மை நம்புகிறார். அதாவது, பதட்டங்களும் அழுத்தங்களும் அதிகமாக இருக்கும்போது கூட, நாம் அவர்களுக்கு உடல், வாய்மொழி அல்லது உணர்ச்சி ரீதியாக எந்த வகையிலும் தீங்கு விளைவிப்பதில்லை. அதற்கு பதிலாக நாம் பிள்ளைகளை மதித்து, துஷ்பிரயோகத்தின் தீமைகளை எதிர்த்துப் போராட நம்மால் முடிந்த அனைத்தையும் செய்கிறோம். அவர்களை கவனிப்பது நமக்கு முதன்மையானது, அது அவரைப் போலவே.2
ஒரு இளம் தாயும் தந்தையும் தங்கள் சமையலறை மேசையில் அமர்ந்து தங்கள் நாளை மறுபரிசீலனை செய்தனர். முன்னறையிலிருந்து, அவர்கள் ஒரு சத்தத்தைக் கேட்டனர். “அது என்ன?” என்று அம்மா கேட்டாள்.
அப்போது அவர்களின் நான்கு வயது மகனின் படுக்கையறையிலிருந்து ஒரு மென்மையான அழுகுரலை அவர்கள் கேட்டனர். அவர்கள் முன்னறையிலிருந்து விரைந்தனர். அங்கே அவன் படுக்கைக்கு அருகில் தரையில் படுத்துக் கிடந்தான். அம்மா சிறு பையனை தூக்கிக்கொண்டு என்ன நடந்தது என்று அவனை கேட்டாள்.
அவன், “நான் படுக்கையில் இருந்து விழுந்து விட்டேன்” என்றான்.
அவள் சொன்னாள், “நீ ஏன் படுக்கையில் இருந்து விழுந்தாய்?”
அவன் கூச்சலிட்டு, சொன்னான், “எனக்குத் தெரியாது. நான் போதுமான அளவுக்கு படுக்கையின் மத்தியில் படுக்கவில்லை என்று நினைக்கிறேன்“.
“போதுமானபடி உள்ளே” என்பதுபற்றி இந்த காலையில் நான் பேச விரும்புகிறேன். இயேசு கிறிஸ்துவின் சுவிசேஷத்தை “போதுமானபடி பெற” பிள்ளைகளுக்கு உதவுவது நமது சிலாக்கியமும் பொறுப்பும் ஆகும். நாம் மிக விரைவில் தொடங்க முடியாது.
சாத்தானின் செல்வாக்கிலிருந்து அவர்கள் பாதுகாக்கப்படும்போது பிள்ளைகளின் வாழ்க்கையில் ஒரு தனித்துவமான சிறந்த நேரம் இருக்கிறது. அவர்கள் நிரபராதிகளாகவும் மற்றும் பாவம் இல்லாதவர்களாகவும் இருக்கும் காலம் இது.3 இது பெற்றோருக்கும் பிள்ளைக்கும் ஒரு பரிசுத்தமான நேரம். பிள்ளைகள் “தேவனுக்கு முன்பாக பொறுப்பேற்கும் வயதுக்கு வந்துவிட்டார்கள்” என்பதற்கு முன்னும் பின்னும், வார்த்தையினாலும் உதாரணத்தினாலும் பிள்ளைகள் கற்பிக்கப்பட வேண்டும்.4
தலைவர் ஹென்றி பி. ஐரிங் போதித்தார்: “இளைஞர்களுடன் நமக்கு மிகப்பெரிய வாய்ப்பு உள்ளது. இளம் வயதிலேயே கற்பிப்பதற்கான சிறந்த நேரம், பிள்ளைகள் [அந்த] பூலோக சத்துருவின் சோதனைக்கு விடுபட்டிருக்கும்போது, சத்திய வார்த்தைகள் அவர்களின் தனிப்பட்ட போராட்டங்களின் சத்தத்தில் கேட்க கடினமாக இருக்கும்போதே.”5 இத்தகைய போதனை, அவர்களுடைய தெய்வீக அடையாளத்தையும், அவர்களின் நோக்கத்தையும், பரிசுத்த உடன்படிக்கைகளைச் செய்து, உடன்படிக்கைப் பாதையில் நியமங்களை பெறும்போது அவர்களுக்கு காத்திருக்கும் ஏராளமான ஆசீர்வாதங்களையும் உணர உதவும்.
மனமாற்றம் நம் பிள்ளைகளுக்கு வெறுமனே நிகழும் வரை நாம் காத்திருக்க முடியாது. தற்செயலான மாற்றம் இயேசு கிறிஸ்துவின் சுவிசேஷத்தின் கொள்கை அல்ல. நமது இரட்சகர் போல மாறுவது தோராயமாக நடக்காது. நாமாகவே நேசித்தல், கற்பித்தல் மற்றும் சாட்சியளிப்பது பிள்ளைகளுக்கு சிறு வயதிலிருந்தே பரிசுத்த ஆவியின் செல்வாக்கை உணர உதவும். நம்முடைய பிள்ளைகளின் இயேசு கிறிஸ்து குறித்த சாட்சியம் மற்றும் மனமாற்றத்துக்கு பரிசுத்த ஆவி அவசியம்; “அவருடைய ஆவியை எப்பொழுதும் தங்களோடே கொண்டிருக்கும்படி, அவரை நினைவு கூரவும்” நாம் விரும்புகிறோம்.6
இயேசு கிறிஸ்துவின் சுவிசேஷத்தைப்பற்றிய, அவசியமான ஆவியானவரை அழைக்கக்கூடிய உரையாடல்களின் மதிப்பைக் கருத்தில் கொள்ளுங்கள். நமது பிள்ளைகளுடன் இதுபோன்ற உரையாடல்களை நடத்தும்போது, ஒரு அடித்தளத்தை உருவாக்க அவர்களுக்கு உதவுகிறோம், “அது உறுதியான அஸ்திபாரமாயிருக்கிறது, அந்த அஸ்திபாரத்தின் மேல் மனுஷர் கட்டினால் [அவர்கள்] விழுந்து போவதில்லை.”7 நாம் ஒரு பிள்ளையை பலப்படுத்தும்போது, குடும்பத்தை பலப்படுத்துகிறோம்.
இந்த முக்கியமான விவாதங்கள் பிள்ளைகளை நடத்திச் செல்லும் காரியங்கள்:
-
மனந்திரும்புதலின் கோட்பாட்டைப் புரிந்து கொள்ளுதல்.
-
ஜீவனுள்ள தேவனுடைய குமாரனாகிய கிறிஸ்துவை விசுவாசித்தல்.
-
எட்டு வயதாகும்போது ஞானஸ்நானத்தையும் பரிசுத்த ஆவியின் வரத்தையும் தேர்ந்தெடுத்தல்.
-
“கர்த்தருக்கு முன்பாக ஜெபிக்கவும் நேர்மையாக” நடக்கவும்.9
இரட்சகர் வலியுறுத்தினார், “ஆகையால், இந்த விஷயங்களை சுதந்திரமாக உங்கள் பிள்ளைகளுக்குக் கற்பிக்க நான் உங்களுக்கு ஒரு கட்டளை தருகிறேன்.”10 நாம் என்ன சுதந்திரமாக கற்பிக்க வேண்டும் என்று அவர் விரும்பினார்?
-
ஆதாமின் வீழ்ச்சி
-
இயேசு கிறிஸ்துவின் பாவ நிவர்த்தி
-
மீண்டும் பிறப்பதன் முக்கியத்துவம்11
மூப்பர் டி. டாட் கிறிஸ்டாபர்சன் கூறினார், “பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளுக்கு கிறிஸ்துவை விசுவாசிக்கவும், ஆவிக்குரிய விதமாக மீண்டும் பிறக்கவும் கற்பிப்பதையும் பயிற்சியளிப்பதையும் புறக்கணிக்கும்போது நிச்சயமாக சத்துரு மகிழ்ச்சியடைகிறான்.12
மாறாக, “நன்மை செய்ய, உன்னை வழி நடத்துகிற அந்த ஆவியின் மேல் [அவர்களது] நம்பிக்கையை வைக்க,” இரட்சகர் பிள்ளைகளுக்கு உதவுவார்.13 அவ்வாறு செய்ய, பிள்ளைகள் ஆவியானவரை உணரும்போது அவரை அடையாளம் காணவும், ஆவியானவர் வெளியேற என்னென்ன செயல்கள் காரணமாகின்றன என்பதைக் கண்டறியவும் அவர்களுக்கு உதவலாம். இவ்வாறு அவர்கள் மனந்திரும்பவும் இயேசு கிறிஸ்துவின் பாவநிவர்த்தியின் மூலம் வெளிச்சத்திற்குத் திரும்பவும் கற்றுக்கொள்கிறார்கள். இது ஆவிக்குரிய உறுதியை ஊக்குவிக்க உதவுகிறது.
எந்த வயதிலும் ஆவிக்குரிய உறுதிப்பாட்டை உருவாக்க நம் பிள்ளைகளுக்கு உதவுவதில் நாம் ரசிக்க முடியும். இது சிக்கலானதாகவோ அல்லது நேரம் எடுப்பதாகவோ இருக்க வேண்டியதில்லை. எளிமையான, அக்கறையுள்ள உரையாடல்கள் பிள்ளைகளுக்கு என்ன என்பதை அவர்கள் நம்பலாம், என்பதற்கு வழிநடத்துவது மட்டுமின்றி, ஆனால் மிக முக்கியமானது, ஏன் அவர்கள் அதை நம்புகிறார்கள் என்பது. அக்கறை மிக்க உரையாடல்கள், இயல்பாகவும் தொடர்ச்சியாகவும் நடப்பது சிறந்த புரிதலுக்கும் பதில்களுக்கும் வழிவகுக்கும். மின்னணு சாதனங்களின் வசதியானது, நம் பிள்ளைகளுக்கு கற்பிப்பதிலிருந்தும், கேட்பதிலிருந்தும், அவர்களின் கண்களைப் பார்ப்பதிலிருந்தும் நம்மைத் தடுக்க அனுமதிக்காமல் இருப்போமாக.
அவசியமான உரையாடல்களுக்கான கூடுதல் வாய்ப்புகள் நடித்து காட்டுவதன் மூலம் ஏற்படலாம். மோசமான தேர்ந்தெடுப்புக்காக குடும்ப உறுப்பினர்கள் ஆசைப்படும் அல்லது அழுத்தம் கொடுக்கப்படும் சூழ்நிலைகளை நடித்துக் காட்டலாம். இத்தகைய பயிற்சி பிள்ளைகளை ஒரு சவாலான அமைப்பில் தயார் செய்ய பலப்படுத்தும். எடுத்துக்காட்டாக, நாம் என்ன செய்ய வேண்டும் என்று பிள்ளைகளிடம் கேட்கும்போது அதை நடித்துக் காட்டலாம், பின்னர் அதைப் பேசலாம்:
-
அவர்கள் ஞான வார்த்தையை உடைக்க சோதிக்கப்பட்டால்.
-
அவர்கள் ஆபாச படம் பார்க்க வசதியிருந்தால்.
-
அவர்கள் பொய் சொல்லவோ, திருடவோ, ஏமாற்றவோ சோதிக்கப்பட்டால்.
-
பள்ளியில் ஒரு நண்பர் அல்லது ஆசிரியரிடமிருந்து அவர்கள் எதையாவது கேட்டால், அது அவர்களின் நம்பிக்கைகள் அல்லது மதிப்புகளுக்கு விரோதமாயிருந்தால்.
ஒரு விரோதமான நண்பர் குழு அமைப்பில் ஆயத்தமாகாமல் பிடிக்கப்படுவதை விட, அவர்கள் அதைச் செயல்படுத்தி, பின்னர் அதைப் பேசும்போது, “பொல்லாங்கன் எய்யும் அக்கினியஸ்திரங்களை எல்லாம் [அவர்கள்] அவித்துப்போடத்தக்கதாய், விசுவாசமென்னும் கேடகத்தைப் பிடித்துக்கொண்டவர்களாய்,” பிள்ளைகள் ஆயுதம் தரிக்கலாம்.14
ஒரு நெருங்கிய தனிப்பட்ட நண்பர் இந்த முக்கியமான பாடத்தை 18 வயதானவராக கற்றுக்கொண்டார். அமெரிக்க ஐக்கிய நாட்டுக்கும் வியட்நாமிற்கும் இடையிலான மோதலின் போது அமெரிக்க ஐக்கிய நாட்டு இராணுவத்தில் அவர் சேர்ந்தார். காலாட்படையில் ஒரு சிப்பாய் ஆக அடிப்படை பயிற்சிக்கு அவர் பணிக்கப்பட்டார். பயிற்சி கடுமையானது என்று அவர் விளக்கினார். அவர் தனது உடற்பயிற்சி பயிற்றுவிப்பாளரை கொடூரமான மற்றும் மனிதாபிமானமற்றவர் என்று விவரித்தார்.
ஒரு குறிப்பிட்ட நாள் அவரது அணி முழு போர் ஆயுதம் அணிந்திருந்தது, வெப்பத்தை அதிகரித்தது. உடற்பயிற்சி பயிற்றுவிப்பாளர் திடீரென்று தரையில் விழுந்து, அசைய வேண்டாம் என்று கட்டளையிட்டார். பயிற்றுவிப்பாளர் சிறிதளவு அசைவைக் கூட கவனித்துக் கொண்டிருந்தார். எந்தவொரு அசைவும் பின்னர் கடுமையான விளைவுகளை ஏற்படுத்தும். இந்த அணி இரண்டு மணி நேரத்திற்கும் மேலாக வெப்பத்தில் தங்கள் தலைவருக்கு எதிரான கோபத்தையும் ஆத்திரத்தையும் அடைந்தது.
பல மாதங்களுக்குப் பிறகு, எங்கள் நண்பர் வியட்நாமின் காடுகள் வழியாக தனது அணியை வழிநடத்தினார். இது பயிற்சியல்ல, உண்மையானது. சுற்றியுள்ள மரங்களில் உயரத்திலிருந்து துப்பாக்கிச் சூடு ஒலிக்கத் தொடங்கியது. முழு குழுவும் உடனடியாக தரையில் விழுந்தது.
எதிரிகள் எதைத் தேடிக்கொண்டிருந்தனர்? அசைவு. எந்தவொரு அசைவும் துப்பாக்கிச் சூட்டை ஈர்க்கும். என் நண்பர் சொன்னார், அவர் காட்டில் தரையில் வியர்த்தலுடன், அசைவில்லாமல், பல நீண்ட மணி நேரஙகள் இருட்டிற்காகக் காத்திருந்தபோது, அவரது எண்ணங்கள் அடிப்படை பயிற்சியை மீண்டும் பிரதிபலித்தன. அவர் தனது உடற்பயிற்சி பயிற்றுவிப்பாளரிடம் கொண்டிருந்த தீவிர வெறுப்பை நினைவு கூர்ந்தார். அவர் தனக்குக் கற்பித்ததற்கும், இந்த நெருக்கடியான சூழ்நிலைக்கு அவரை எவ்வாறு தயார்படுத்தினார் என்பதற்கும் இப்போது, அவர் அதிக நன்றியை உணர்ந்தார். உடற்பயிற்சி பயிற்றுவிப்பாளர் எங்கள் நண்பரையும் அவரது குழுவினரையும் போர் வரும்போது என்ன செய்வது என்று தெரிந்து கொள்ளும் திறனுடன் புத்திசாலித்தனமாக பழக்கியிருந்தார். அவர் எங்கள் நண்பரின் உயிரைக் காப்பாற்றினார்.
ஆவிக்குரிய ரீதியில் நம் பிள்ளைகளுக்கு அதை நாம் எப்படிச் செய்ய முடியும்? அவர்கள் வாழ்க்கையின் போர்க்களத்திற்குள் நுழைவதற்கு நீண்ட காலத்திற்கு முன்பே, அவர்களுக்குக் கற்பிக்கவும், பலப்படுத்தவும், தயார் செய்யவும் நாம் எவ்வாறு முழுமையாக முயற்சி செய்யலாம்?15 “போதுமான அளவு பெற” அவர்களை எவ்வாறு அழைக்க முடியும்? வாழ்க்கையின் போர்க்களங்களில் இரத்தம் சிந்துவதை விட, வீட்டின் பாதுகாப்பான கற்றுக்கொள்ளுதல் சூழலில் அவர்களை “வியர்வை சிந்த” வைத்திருப்போம் அல்லவா?
நான் திரும்பிப் பார்க்கும்போது, எங்கள் பிள்ளைகள் இயேசு கிறிஸ்துவின் சுவிசேஷத்தின்படி வாழ உதவுவதற்காக என் கணவரும் நானும் எங்கள் ஆர்வத்தில் பயிற்றுவிப்பாளர்களைப் போல உணர்ந்த நேரங்கள் இருந்தன. யாக்கோபு தீர்க்கதரிசி “நான் உங்களுடைய ஆத்தும நலனுக்காக வாஞ்சிக்கிறேன்,” என சொன்னபோது இதே உணர்வுகளுக்கு குரல் கொடுத்ததாக தோன்றுகிறது. ஆம், உங்களின் நிமித்தம் என் கவலை பெரிதாய் உள்ளது. அது என்றென்றைக்கும் இவ்வண்ணமாகவே இருந்திருக்கிறது.”16
பிள்ளைகள் கற்றுக் கொண்டு முன்னேறும்போது, அவர்களின் நம்பிக்கைகளுக்கு சவால் விடப்படும். ஆனால் அவை ஒழுங்காக ஆயத்தப்பட்டிருப்பதால், அவர்கள் கடுமையான எதிர்ப்பின் மத்தியில் கூட விசுவாசம், தைரியம் மற்றும் தன்னம்பிக்கையுடன் வளர முடியும்.
ஆல்மா, “பிள்ளைகளின் மனதை ஆயத்தப்படுத்துமாறு” நமக்குப் போதித்தான்.17 “என்றுமுள்ள மரணத்தின் வழி அது நித்திய ஜீவனன் வழியைத் தேர்ந்தெடுக்க தங்களுக்காக செயல்பட [அவர்கள்] சுயாதீனர்களாக இருக்கிறார்கள் என்பதை நினைவுகூருங்கள்,” என விசுவாசத்தின் எதிர்கால பாதுகாவலர்களாக, புரிந்துகொள்ள, வளர்ந்து வரும் தலைமுறையை நாம் ஆயத்தம் செய்கிறோம் 18 இந்த பெரிய உண்மையை பிள்ளைகள் புரிந்து கொள்ள தகுதியானவர்கள்: நித்தியம் என்பது தவறாக இருக்க வேண்டிய தவறான விஷயம்.
நம் பிள்ளைகளுடனான நமது இன்றியமையாத மற்றும் எளிமையான உரையாடல்கள் இப்போது “நித்திய ஜீவ வார்த்தைகளை” அனுபவிக்க அவர்களுக்கு உதவட்டும், இப்போது இதனால் அவர்கள் “வரவிருக்கும் உலகில் நித்திய ஜீவனை, அழியாத மகிமையை” அனுபவிக்கக்கூடும்.19
நாம் நமது பிள்ளைகளை வளர்த்து, ஆயத்தம் செய்யும்போது, நாம் அவர்களின் சுயாதீனத்தை அனுமதிக்கிறோம், நாம் அவர்களை முழு மனதுடன் நேசிக்கிறோம், தேவனின் கட்டளைகளையும் மனந்திரும்புதலுக்கான வரத்தையும் அவர்களுக்குக் கற்பிக்கிறோம், எப்போதும், ஒருபோதும் அவர்கள் மீது நம்பிக்கை இழக்க மாட்டோம். எல்லாவற்றிற்கும் மேலாக, இது நம் ஒவ்வொருவருக்கும் கர்த்தரின் வழி அல்லவா?
“நம்பிக்கையின் பரிபூரண பிரகாசத்தை” நாம் பெற முடியும் என்பதை அறிந்து, அன்பான இரட்சகர் மூலம் “கிறிஸ்துவில் உறுதியுடன் நமது முன்னேறுவோம்.”20
எப்போதும் அவர்தான் பதில் என நான் சாட்சியளிக்கிறேன். இயேசு கிறிஸ்துவின் பரிசுத்த நாமத்தில், ஆமென்.