தெய்வீகமாக உணர்த்தப்பட்ட நமது அரசியலமைப்பு சட்டத்தை பாதுகாத்தல்
தெய்வீக உணர்த்துதல் மீதான நமது நம்பிக்கை, பிற்காலப் பரிசுத்தவான்களுக்கு அமெரிக்க ஐக்கிய நாடுகளின் அரசியலமைப்பையும் அரசியலமைப்புவாதத்தின் கொள்கைகளையும் நிலைநிறுத்துவதற்கும் பாதுகாப்பதற்கும் ஒரு தனித்துவமான பொறுப்பை அளிக்கிறது.
இந்த சிக்கலான நேரத்தில், அமெரிக்காவின் உணர்த்தப்பட்ட அரசியலமைப்புச் சட்டத்தைப்பற்றி பேச நான் உணர்த்தப்பட்டேன். இந்த அரசியலமைப்பு சட்டம் அமெரிக்க ஐக்கிய நாட்டில் உள்ள நமது உறுப்பினர்களுக்கு சிறப்பான முக்கியத்துவம் வாய்ந்தது, ஆனால் இது உலகெங்கிலும் உள்ள அரசியலமைப்புகளுக்கும் பொதுவான பாரம்பரியமாகும்.
I.
ஒரு அரசியலமைப்பு என்பது அரசாங்கத்தின் அடித்தளமாகும். இது அரசாங்க அதிகாரங்களைப் பயன்படுத்துவதற்கான கட்டமைப்பு மற்றும் வரம்புகளை வழங்குகிறது. அமெரிக்க அரசியலமைப்பு என்பது இன்றும் நடைமுறையில் உள்ள மிகப் பழமையான எழுதப்பட்ட அரசியலமைப்பாகும். முதலில் குறைந்த எண்ணிக்கையிலான காலனிகளால் மட்டுமே ஏற்றுக்கொள்ளப்பட்டாலும், அது விரைவில் உலகளவில் ஒரு மாதிரியாக மாறியது. இன்று, மூன்று தவிர ஒவ்வொரு தேசமும் எழுதப்பட்ட அரசியலமைப்புகளை ஏற்றுக்கொண்டுள்ளன.1
இந்த கருத்துக்களில் நான் எந்த அரசியல் கட்சிக்காகவோ அல்லது வேறு குழுவிற்காகவோ பேசவில்லை. நான் 60 ஆண்டுகளுக்கும் மேலாக படித்த அமெரிக்க ஐக்கிய நாட்டு அரசியலமைப்பிற்காக பேசுகிறேன். நான் ஒரு சட்ட குமாஸ்தாவாக இருந்த அனுபவத்திலிருந்து அமெரிக்க ஐக்கிய நாட்டின் உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதிபதி வரையாலான எனது அனுபவத்திலிருந்து பேசுகிறேன். எனது 15 ஆண்டு சட்டப் பேராசிரியராகவும், யூட்டா உச்சநீதிமன்றத்தில் நீதிபதியாக 3½ ஆண்டு அனுபவத்தாலும் பேசுகிறேன். மிக முக்கியமாக, அவருடைய மறுஸ்தாபிதம் செய்யப்பட்ட சபையின் பணிக்கு, தெய்வீகமாக உணர்த்தப்பட்ட அமெரிக்க ஐக்கிய நாட்டின் அரசியலமைப்பு சட்டத்தின் அர்த்தத்தை ஆய்வு செய்ய வேண்டிய பொறுப்புடன், 37 ஆண்டுகளாக நான் இயேசு கிறிஸ்துவின் அப்போஸ்தலராக பேசுகிறேன்.
அமெரிக்க ஐக்கிய நாட்டு அரசியலமைப்பு தனித்துவமானது, ஏனென்றால் “எல்லா மாம்சங்களின் உரிமைகளுக்கும் பாதுகாப்பிற்கும்,”அவர் அதை “நிறுவினார்” ( கோட்பாடும் உடன்படிக்கைகளும் 101:77) ( வசனம் 80ஐயும் பார்க்கவும்). அதனால்தான் இந்த அரசியலமைப்பு உலகெங்கிலும் உள்ள பிற்காலப் பரிசுத்தவான்களின் இயேசு கிறிஸ்து சபை மீது சிறப்பான அக்கறை கொண்டுள்ளது. உலகின் பிற நாடுகளில் அதன் கொள்கைகள் பயன்படுத்தப்பட வேண்டுமா அல்லது எவ்வாறு பயன்படுத்தப்பட வேண்டும் என்பதை தீர்மானிக்க வேண்டியது அவர்கள்தான்.
அமெரிக்க ஐக்கிய நாட்டின் அரசியலமைப்பை நிறுவுவதில் தேவனின் நோக்கம் என்ன? ஒழுக்க சுயாதீன கோட்பாட்டில் அதை நாம் காண்கிறோம். மறுஸ்தாபிதம் செய்யப்பட்ட சபையின் முதல் தசாப்தத்தில், மேற்கு எல்லையில் உள்ள அதன் உறுப்பினர்கள் தனியார் மற்றும் பொதுமக்களின் துன்புறுத்தலுக்கு உள்ளாயினர். ஓரளவுக்கு இது அமெரிக்க ஐக்கிய நாட்டில் இருந்த மனித அடிமைத்தனத்திற்கு அவர்கள் எதிர்ப்பு தெரிவித்ததால்தான். இந்த துர்பாக்கிய சூழ்நிலைகளில், தேவன் தீர்க்கதரிசி ஜோசப் ஸ்மித் மூலம் தனது கோட்பாடுபற்றிய நித்திய சத்தியங்களை வெளிப்படுத்தினார்.
தேவன் தனது பிள்ளைகளுக்கு, தீர்மானிக்க மற்றும் செயல்படும் அதிகாரமான ஒழுக்க சுயாதீனத்தை வழங்கியுள்ளார். அந்த சுயாதீனத்தின் பிரயோகத்திற்கு மிகவும் விரும்பத்தக்க நிபந்தனை ஆண்களுக்கும் பெண்களுக்கும் அவர்களின் தனிப்பட்ட விருப்பங்களின்படி செயல்பட அதிகபட்ச சுதந்திரமாகும். பின்னர், வெளிப்படுத்துதல் விளக்குகிறது, “நியாயத்தீர்ப்பு நாளில் ஒவ்வொரு மனிதனும் தன் பாவங்களுக்கு பொறுப்பேற்க வேண்டும்” ( கோட்பாடும் உடன்படிக்கைகளும் 101: 78 ). “ஆகையால், எந்தவொரு மனிதனும் ஒருவருக்கொருவர் அடிமைத்தனத்தில் இருப்பது சரியல்ல” என்று கர்த்தர் வெளிப்படுத்தினார்.( கோட்பாடும் உடன்படிக்கைகளும் 101: 79). இதற்கு மனித அடிமைத்தனம் தவறு என்று வெளிப்படையாக அர்த்தம். அதே கொள்கையின்படி, குடிமக்கள் தங்கள் ஆட்சியாளர்களைத் தேர்ந்தெடுப்பதில் அல்லது தங்களின் சட்டங்களை உருவாக்குவதில் அவர்களது குரல் இல்லாமலிருப்பது தவறு.
II.
அமெரிக்க ஐக்கிய நாட்டு அரசியலமைப்பு தெய்வீகமாக உணர்த்தப்பட்டிருக்கிறது என்ற நமது நம்பிக்கை, ஒவ்வொரு மாநிலத்திலிருந்தும் பிரதிநிதிகளின் எண்ணிக்கையை ஒதுக்கும் விதிகள் அல்லது ஒவ்வொன்றின் குறைந்தபட்ச வயது போன்ற ஒவ்வொரு வார்த்தையையும் சொற்றொடரையும் தெய்வீக வெளிப்பாடு கட்டளையிட்டது என்று அர்த்தமல்ல.2 அரசியலமைப்பு “முழுமையாக வளர்ந்த ஆவணம்” அல்ல என்று தலைவர் ஜே. ரூபன் கிளார்க் கூறினார். “மாறாக, முன்னேறும் உலகின் மாறிவரும் தேவைகளைப் பூர்த்தி செய்ய அது வளர்ந்து விருத்தியடைய வேண்டும் என்று நாம் நம்புகிறோம்” என்று அவர் விளக்கினார்.3 உதாரணமாக, உணர்த்தப்பட்ட திருத்தங்கள் அடிமைத்தனத்தை ஒழித்தன மற்றும் பெண்களுக்கு வாக்களிக்கும் உரிமையை வழங்கின. இருப்பினும், அரசியலமைப்பை விளக்கும் ஒவ்வொரு உச்சநீதிமன்ற தீர்ப்பிலும் நாம் உணர்த்துதலைக் காண்பதில்லை.
அமெரிக்க ஐக்கிய நாட்டு அரசியலமைப்பில் குறைந்தது ஐந்து தெய்வீகமாக உணர்த்தப்பட்ட கொள்கைகள் உள்ளன என்று நான் நம்புகிறேன்.4
முதலாவது அரசாங்க அதிகாரத்தின் ஆதாரம் மக்கள்தான் என்ற கொள்கை. இறையாண்மை அதிகாரம் என்பது அரசர்களின் தெய்வீக உரிமையிலிருந்து அல்லது இராணுவ ஆற்றலிலிருந்து வந்ததாக உலகளவில் கருதப்பட்ட ஒரு காலத்தில், மக்களுக்கு இறையாண்மையின் வல்லமையைக் கொடுப்பது புரட்சிகரமானது. தத்துவவாதிகள் இதை பரிந்துரைத்தனர், ஆனால் அமெரிக்க ஐக்கிய நாட்டு அரசியலமைப்பு முதலில் அதைப் பயன்படுத்தியது. மக்களில் இறையாண்மை என்பது கும்பல் அல்லது பிற மக்கள் குழுக்கள் அரசாங்க நடவடிக்கைகளை அச்சுறுத்துவதற்கு அல்லது கட்டாயப்படுத்த தலையிடலாம் என்பது அல்ல. அரசியலமைப்பு உறுதியான ஒரு அரசியலமைப்பின்படியான ஜனநாயக குடியரசு, அங்கு மக்கள் தங்கள் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள் மூலம் தங்கள் அதிகாரத்தை பயன்படுத்துகின்றனர்.
இரண்டாவது உணர்த்தப்பட்ட கொள்கையானது, தேசத்துக்கும் அதன் துணை மாநிலங்களுக்கும் இடையில் ஒப்படைக்கப்பட்ட அதிகாரத்தைப் பிரிப்பதாகும். நமது கூட்டாட்சி அமைப்பில், இந்த முன்பு நடந்திராத கொள்கை சில நேரங்களில் அடிமைத்தனத்தை ஒழித்தல் மற்றும் பெண்களுக்கு வாக்களிக்கும் உரிமைகளை விரிவுபடுத்துதல் போன்ற உணர்த்தப்பட்ட திருத்தங்களால் மாற்றப்பட்டுள்ளது. குறிப்பிடத்தக்க வகையில், அமெரிக்க ஐக்கிய நாட்டு அரசியலமைப்பு தேசிய அரசாங்கத்தை வெளிப்படையாக அல்லது மறைமுகமாக வழங்கப்பட்ட அதிகாரங்களைப் பயன்படுத்துவதற்கு மட்டுப்படுத்துகிறது, மேலும் இது மற்ற அனைத்து அரசாங்க அதிகாரங்களையும் “முறையே மாநிலங்களுக்கு அல்லது மக்களுக்கு” ஒதுக்கியுள்ளது.5
மற்றொரு உணர்த்தப்பட்ட கொள்கை அதிகாரங்களைப் பிரிப்பது. 1787 அரசியலமைப்பு சட்ட மாநாட்டிற்கு ஒரு நூற்றாண்டுக்கு முன்னர், இங்கிலாந்து பாராளுமன்றம் ராஜாவிடமிருந்து சில அதிகாரங்களை பறித்தபோது, சட்ட மற்றும் செயலாக்க அதிகாரத்தை பிரிப்பதில் முன்னோடியாக இருந்தது. அமெரிக்க மாநாட்டின் உணர்த்துதல் சுதந்தர செயலாக்க, சட்டமன்ற மற்றும் நீதித்துறை அதிகாரங்களை ஒப்படைப்பதாகும், எனவே இந்த மூன்று கிளைகளும் ஒருவருக்கொருவர் சோதிக்க முடியும்.
அரசியலமைப்பு சட்டம் நடைமுறைக்கு வந்த மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு, உரிமைகள் மசோதாவில் தனிநபர் உரிமைகள் மற்றும் அரசாங்க அதிகாரத்தின் மீதான குறிப்பிட்ட வரம்புகள் குறித்த முக்கிய உத்தரவாதங்களின் தொகுப்பில், நான்காவது உணர்த்தப்பட்ட கொள்கை உள்ளது. உரிமைகள் மசோதா புதியதல்ல. இங்கே, மாக்னா கார்ட்டாவில் தொடங்கி இங்கிலாந்தில் முன்னோடியாகக் கொண்ட கொள்கைகளின் நடைமுறைச் செயல்பாட்டில் உணர்த்துதல் இருந்தது. அரசியலமைப்பின் எழுத்தாளர்கள் இவற்றை நன்கு அறிந்திருந்தனர், ஏனெனில் சில காலனி சாசனங்களுக்கு இத்தகைய உத்தரவாதங்கள் இருந்தன.
உரிமை மசோதா இல்லாமல், மூன்று தசாப்தங்களுக்குப் பிறகு தொடங்கிய சுவிசேஷத்தை மறுஸ்தாபிதம் செய்வதற்கான புரவலர் நாடாக அமெரிக்கா இருந்திருக்க முடியாது. பொது அலுவலுக்கு மத சோதனை இருக்கக்கூடாது என்ற அசல் ஏற்பாட்டில் தெய்வீக உணர்த்துதல் இருந்தது,6 ஆனால் முதல் திருத்தத்தில் மத சுதந்திரம் மற்றும் அரசுக்கு எதிரான உத்தரவாதங்களை சேர்த்தல் முக்கியமானதாக இருந்தது. முதல் திருத்தத்தின் பேச்சு மற்றும் பத்திரிகை சுதந்திரத்திலும், குற்றவியல் வழக்கு விசாரணை போன்ற பிற திருத்தங்களில் பொதிந்துள்ள தனிப்பட்ட பாதுகாப்புகளிலும் தெய்வீக உணர்த்துதலைக் காண்கிறோம்.
ஐந்தாவது மற்றும் இறுதியாக, முழு அரசியலமைப்பின் முக்கிய நோக்கத்தில் தெய்வீக உணர்த்துதலை நான் காண்கிறேன். நாம் சட்டத்தால் ஆளப்பட வேண்டும், தனிநபர்களால் அல்ல, நமது விசுவாசம் அரசியலமைப்பு மற்றும் அதன் கொள்கைகள் மற்றும் செயல்முறைகளுக்குத்தான், எந்த அலுவலில் இருப்பவருக்கும் அல்ல. இந்த வழியில், அனைத்து நபர்களும் சட்டத்தின் முன் சமமாக இருக்க வேண்டும். இந்த கொள்கைகள் சில நாடுகளில் ஜனநாயகத்தை சிதைத்த எதேச்சதிகார அபிலாஷைகளைத் தடுக்கின்றன. அரசாங்கத்தின் மூன்று கிளைகளில் எதுவுமே மற்றவற்றின் மீது ஆதிக்கம் செலுத்தக்கூடாது அல்லது மற்றவர்கள் ஒருவருக்கொருவர் சரிபார்க்க சரியான அரசியலமைப்பு செயல்பாடுகளைச் செய்வதைத் தடுக்க கூடாது என்றும் அவை கூறுகின்றன.
III.
அமெரிக்க ஐக்கிய நாட்டு அரசியலமைப்பின் தெய்வீகமாக உணர்த்தப்பட்ட கொள்கைகள் இருந்தபோதிலும், குறைகளுள்ள மனிதர்களால் பயன்படுத்தப்படும்போது அவற்றின் எதிர்பார்க்கப்பட்ட விளைவுகள் எப்போதும் அடையப்படுவதில்லை. குடும்ப உறவுகளை ஆளுகை செய்யும் சில சட்டங்கள் போன்ற சட்டங்களை உருவாக்கும் முக்கியமான விஷயங்கள் மாநிலங்களிடமிருந்து மத்திய அரசால் பறிக்கப்பட்டுள்ளன. பேச்சுரிமை முதல் திருத்த உத்தரவாதம் சில சமயங்களில் பிரசித்தமற்ற பேச்சை அடக்குவதன் மூலம் நீர்த்துப்போகச் செய்யப்படுகிறது. அதிகாரங்களைப் பிரிப்பதற்கான கொள்கை எப்போதுமே அரசாங்கத்தின் ஒரு கிளையின் உந்துதல் மற்றும் செயல் ஆகியவற்றின் அழுத்தத்திற்கு எப்பொழுதும் உட்பட்டிருந்திருக்கிறது.
அமெரிக்க அரசியலமைப்பின் உணர்த்தப்பட்ட கொள்கைகளை குறைவாக மதிப்பிடும் பிற அச்சுறுத்தல்கள் உள்ளன. சுதந்திரம் மற்றும் சுய-அரசாங்கத்திற்கு பதிலாக, தற்போதைய சமூகப் போக்குகளை அதன் ஸ்தாபனத்திற்கான காரணியாக மாற்றுவதற்கான முயற்சிகளால் அரசியலமைப்பின் நிலை குறைகிறது. வேட்பாளர்கள் அல்லது அதிகாரிகள் அதன் கொள்கைகளை புறக்கணிக்கும்போது அரசியலமைப்பின் அதிகாரம் அற்பமாக்கப்படுகிறது. அரசியலமைப்பின் கவுரவமும் சக்தியும் அதை ஒரு விசுவாச சோதனை அல்லது அரசியல் கோஷம் என்று குறிப்பிடுபவர்களால் அதன் உயர்ந்த நிலைக்கு பதிலாக அங்கீகாரத்தின் ஆதாரமாகவும் அரசாங்க அதிகாரத்திற்கான வரம்புகளாகவும் குறைக்கப்படுகின்றன.
IV.
தெய்வீக உத்வேகம் குறித்த நமது நம்பிக்கை, நாம் எங்கு வாழ்ந்தாலும் அமெரிக்க ஐக்கிய நாட்டின் அரசியலமைப்பையும் அரசியலமைப்புவாதத்தின் கொள்கைகளையும் நிலைநிறுத்துவதற்கும் பாதுகாப்பதற்கும் ஒரு தனித்துவமான பொறுப்பை பிற்காலப் பரிசுத்தவான்களுக்கு வழங்குகிறது. நாம் கர்த்தர் மீது நம்பிக்கை வைத்து இந்த நாட்டின் எதிர்காலம் குறித்து நேர்மறை எண்ணத்துடன் இருக்க வேண்டும்.
விசுவாசமுள்ள பிற்காலப் பரிசுத்தவான்கள் வேறு என்ன செய்ய வேண்டும்? எல்லா தேசங்களையும் அதன் தலைவர்களையும் கர்த்தர் வழிநடத்தவும் ஆசீர்வதிக்கவும் நாம் ஜெபிக்க வேண்டும். இது நமது விசுவாசப் பிரமாணத்தின் ஒரு பகுதியாகும். ஜனாதிபதிகள் அல்லது ஆட்சியாளர்களுக்குக் கட்டுப்பட வேண்டும்,7 தனிப்பட்ட சட்டங்கள் அல்லது கொள்கைகளை எதிர்ப்பதற்கு நிச்சயமாக எந்த தடையும் இல்லை. நமது அரசியலமைப்புகள் மற்றும் பொருந்தக்கூடிய சட்டங்களின் கட்டமைப்பிற்குள் நமது செல்வாக்கை நாகரீகமாகவும் அமைதியாகவும் பயன்படுத்துவது தேவைப்படுகிறது. போட்டியுள்ள சிக்கல்களில், நாம் மிதமாக்க மற்றும் ஒன்றிணைக்க முயல வேண்டும்.
உணர்த்தப்பட்ட அரசியலமைப்பை நிலைநிறுத்துவதன் ஒரு பகுதியாக மற்ற கடமைகள் உள்ளன. அரசியலமைப்பின் உணர்த்தப்பட்ட கொள்கைகளை நாம் கற்றுக் கொண்டு பரிந்துரைக்க வேண்டும். அவர்களின் கொள்கைகளில் அவர்களின் பொது நடவடிக்கைகளில் அந்த கொள்கைகளுக்கு ஆதரவளிக்கும் ஞானமுள்ள, நல்லவர்களை நாம் தேட வேண்டும், ஆதரிக்க வேண்டும்.8 பொது விவகாரங்களில் நமது செல்வாக்கை உணர வைப்பதில் தீவிரமாக செயல்படும் அறிவுள்ள குடிமக்களாக இருக்க வேண்டும்.
அமெரிக்க ஐக்கிய நாடுகள் மற்றும் பிற ஜனநாயக நாடுகளில், பதவிக்கு போட்டியிடுவதன் மூலமும் (நாம் அதை ஊக்குவிக்கிறோம்), வாக்களிப்பதன் மூலமும், நிதி ஆதரவினாலும், அரசியல் கட்சிகளில் உறுப்பினராவதாலும் மற்றும் சேவைசெய்வதாலும், அதிகாரிகள், கட்சிகள் மற்றும் வேட்பாளர்களுடன் தொடர்ந்து தொடர்புகொள்வதன் மூலமும் அரசியல் செல்வாக்கு பயன்படுத்தப்படுகிறது. சிறப்பாக செயல்பட, ஒரு ஜனநாயகத்திற்கு இவை அனைத்தும் தேவை, ஆனால் மனசாட்சியுள்ள குடிமகன் அவை அனைத்தையும் வழங்க தேவையில்லை.
பல அரசியல் பிரச்சினைகள் உள்ளன, எந்தவொரு கட்சி, தளம் அல்லது தனிப்பட்ட வேட்பாளர் அனைத்து தனிப்பட்ட விருப்பங்களையும் பூர்த்தி செய்ய முடியாது. எனவே ஒவ்வொரு குடிமகனும் எந்த குறிப்பிட்ட நேரத்தில் அவனுக்கு அல்லது அவளுக்கு எந்த பிரச்சினைகள் மிக முக்கியமானவை என்பதை தீர்மானிக்க வேண்டும். பின்னர் உறுப்பினர்கள் தங்கள் தனிப்பட்ட முன்னுரிமைகளுக்கு ஏற்ப தங்கள் செல்வாக்கை எவ்வாறு பயன்படுத்துவது என்பதில் உணர்த்துதலை நாட வேண்டும். இந்த முறை எளிதாயிருக்காது. தேர்தலுக்கு தேர்தல் கூட கட்சி ஆதரவு அல்லது வேட்பாளர் தேர்ந்தெடுப்புளை மாற்ற வேண்டியிருக்கலாம்.
இத்தகைய சுதந்திரமான நடவடிக்கைகள் சில சமயங்களில் வாக்காளர்கள், அவர்களது பிற நிலைகளை தாங்கள் அங்கீகரிக்க முடியாத, வேட்பாளர்கள் அல்லது அரசியல் கட்சிகள் அல்லது தளங்களை ஆதரிக்க வேண்டியிருக்கும்.9 அரசியல் விஷயங்களில் ஒருவருக்கொருவர் தீர்ப்பளிப்பதைத் தவிர்க்க நமது உறுப்பினர்களை ஊக்குவிப்பதற்கு இது ஒரு காரணம். ஒரு விசுவாசமான பிற்காலப் பரிசுத்தவான் ஒரு குறிப்பிட்ட கட்சியைச் சேர்ந்தவராக இருக்க முடியாது அல்லது ஒரு குறிப்பிட்ட வேட்பாளருக்கு வாக்களிக்க முடியாது என்று நாம் ஒருபோதும் வலியுறுத்தக்கூடாது. நாங்கள் சரியான கொள்கைகளை கற்பிக்கிறோம், அவ்வப்போது முன்வைக்கப்படும் சிக்கல்களில் அந்தக் கொள்கைகளுக்கு எவ்வாறு முன்னுரிமை அளிப்பது மற்றும் பயன்படுத்துவது என்பதைத் தேர்ந்தெடுப்பதை நமது உறுப்பினர்களிடம் விட்டு விடுகிறோம். நமது சபை கூட்டங்களில் எந்தவொரு அரசியல் தேர்ந்தெடுப்புகளும், இணைப்புகளும், போதனைகள் அல்லது பரிந்துரைகளுக்கு உட்பட்டவை அல்ல என்று நாங்கள் வலியுறுத்துகிறோம், நமது உள்ளூர் தலைவர்களை வலியுறுத்துமாறு கேட்கிறோம்.
பிற்காலப் பரிசுத்தவான்களின் இயேசு கிறிஸ்து சபை, நிச்சயமாக, மதத்தின் சுதந்தரமான பயன்பாடு அல்லது சபை அமைப்புகளின் அத்தியாவசிய நலன்களை பாதிக்கும் என்று நாங்கள் நம்புகின்ற குறிப்பிட்ட சட்ட முன்மொழிவுகளை அங்கீகரிக்க அல்லது எதிர்ப்பதற்கான உரிமையைப் பயன்படுத்துவோம்.
அமெரிக்க ஐக்கிய நாட்டின் தெய்வீகமாக உணர்த்தப்பட்ட அரசியலமைப்பைப்பற்றி நான் சாட்சியளிக்கிறேன், தெய்வீகமானவரை அங்கீகரித்து அதை உணர்த்தியவர்கள் எப்போதும் அதன் சிறந்த கொள்கைகளை நிலைநிறுத்தி பாதுகாப்போம் என்று ஜெபிக்கிறேன். இயேசு கிறிஸ்துவின், நாமத்தினாலே, ஆமென்.