பொது மாநாடு
ஒளி ஒளியுடன் இசைந்திருக்கிறது
ஏப்ரல் 2021 பொது மாநாடு


ஒளி ஒளியுடன் இசைந்திருக்கிறது

கிறிஸ்துவில் நம்முடைய விசுவாசத்தை நாம் தீவிரப்படுத்தும்போது, இருளை எல்லாம் அகற்றும் வரை, தீவிரமான அளவிலேயே வெளிச்சத்தை நாம் பெறுகிறோம்.

எனக்கன்பான சகோதர சகோதரிகளே, நம்முடைய கர்த்தரும் இரட்சகருமாகிய இயேசு கிறிஸ்துவின் உயிர்த்தெழுதலுடன் பூமியில் உதித்த மகிமையான ஒளியைப்பற்றி சிந்திப்பதில் இந்த ஆசீர்வதிக்கப்பட்ட ஈஸ்டர் ஞாயிற்றுக்கிழமை உங்களுடன் நான் மகிழ்ச்சியடைகிறேன்.

அவருடைய பூலோக ஊழியத்தில் இயேசு அறிவித்தார், “நான் உலகத்திற்கு ஒளியாயிருக்கிறேன், என்னைப் பின்பற்றுகிறவன் இருளிலே நடவாமல் ஜீவஒளியை அடைந்திருப்பான்”1 கிறிஸ்துவின் ஆவி “சகலவற்றிலுமிருக்கிற, சகலவற்றுக்கும் ஜீவன் கொடுக்கிறது.”2 இல்லையெனில் நம்மைச் சூழ்ந்திருக்கும் இருளை அது வெல்கிறது.

பல ஆண்டுகளுக்கு முன்பு, சாகசத்தைத் தேடி, நானும் எனது இரண்டு மகன்களும் ஒரு இளைஞர்களின் குழுவுடன், ஒரு நேரத்தில் அதன் வாயிலிருந்து எதிரொலிக்கும் ஒரு ஒலிக்கு பெயரிடப்பட்ட, மோனிங் கேவர்னுக்குச் சென்றோம். கலிபோர்னியாவின் மிகப்பெரிய ஒற்றை குகை அறையான, 180 அடி ஆழமான (55 மீ) செங்குத்து அறைக்குள் திறக்கிற குகை என்பது ஒரு புகைபோக்கி குகை.

மோனிங் காவர்ன்

கீழே செல்ல இரண்டு வழிகள் மட்டுமே உள்ளன: பாதுகாப்பான வட்டமான படிக்கட்டு அல்லது குகையின் தளத்திற்கு வழுக்கிச் செல்வது; நானும் என் மகன்களும் வழுக்கிச்செல்வதைத் தேர்ந்தெடுத்தோம். நாங்கள் ஒன்றாக இறங்கும்படியாக, நானும் என் இளைய மகனும் வேண்டுமென்றே கடைசியாக சென்றபோது என் மூத்த மகன் முதலில் சென்றான்.

எங்கள் வழிகாட்டிகள் அறிவுறுத்தி, ஒரு வலுவான கயிற்றில் சேணம் மற்றும் வளைந்த கியர் மூலம் எங்களுக்கு பாதுகாத்த பின்பு, திரும்புவதற்கான கடைசி இடமாகவும், குகையின் வாயிலிருந்து சூரிய ஒளியைப் பார்க்க முடிகிற கடைசி இடமாகவுமிருந்ததால் நாங்கள் ஒரு சிறிய கயிற்றில் நின்று எங்கள் நம்பிக்கையை பெறும்வரை நாங்கள் பின்னோக்கிச் சென்றோம்.

எங்கள் பின்னோக்கிய அடுத்த படி எங்களை முழு சுதந்திர சிலையையும் விழுங்கக்கூடிய, மிகவும் உயரமான மற்றும் அகலமான ஒரு கதீட்ரல் குகைக்குள் மூழ்கடித்தது. இருளுக்கு எங்கள் கண்கள் அனுசரித்ததால் மெதுவான சுழற்சியில் நாங்கள் தொங்கினோம். நாங்கள் எங்கள் இறங்குதலைத் தொடர்ந்தபோது, மின்சார விளக்குகள் பளபளக்கும் சரிவான பாதைகளையும் சுண்ணாம்புச் சுவரையும் அற்புதமாக ஒளிரச் செய்தது.

எந்த எச்சரிக்கையும் இல்லாமல் திடீரென விளக்குகள் அனைத்தும் அணைந்துபோயின. படுகுழிக்கு மேலே தொங்கிக் கொண்டிருந்தோம், எங்களுக்கு முன்னால் கயிறுகளின் மேலிருந்த எங்கள் கைகளைக் கூட பார்க்க முடியாத அளவுக்கு ஆழமான இருளில் மூழ்கிவிட்டோம். திடீரென ஒரு குரல் கூப்பிட்டது, “அப்பா, அப்பா நீங்கள் அங்கிருக்கிறீர்களா?”

“நான் இங்கே இருக்கிறேன், மகனே, நான் இங்கேதான் இருக்கிறேன்” என்று பதிலளித்தேன்.

எதிர்பாராத ஒளியின் இழப்பு, மின்சாரம் இல்லாமல், குகையின் இருள் ஈடுசெய்ய முடியாதது என்பதைக் காட்ட வடிவமைக்கப்பட்டுள்ளது. அது வென்றது; நாங்கள் இருளை “உணர்ந்தோம்” விளக்குகளின் ஒளி திரும்பி வந்தபோது, இருள் உடனடியாக சரணடைந்தது, ஏனெனில் மங்கலான வெளிச்சத்திற்கு கூட, இருள் எப்போதும் சரணடைய வேண்டும். என் மகன்களும் நானும் ஒருபோதும் அறியாத ஒரு இருளின் நினைவிலும், எங்களால் ஒருபோதும் மறக்க முடியாத ஒளியைப்பற்றிய ஒரு பெரிய பாராட்டிலும், மேலும் நாம் அனைவரும் ஒருபோதும் இருளில் தனியாக இருக்க மாட்டோம் என்ற உறுதியுடனும் விடப்பட்டோம்.

அந்த குகைக்குள் நாம் இறங்குவது சில வழிகளில் அநித்தியத்தின் வழியாக நமது பயணத்திற்கு இணையாகும். பரலோகத்தின் மகிமையான ஒளியிலிருந்து புறப்பட்டு, மறதியின் திரை வழியாக ஒரு இருண்ட உலகத்திற்கு இறங்கினோம். நம்முடைய பரலோக பிதா நம்மை இருளுக்குள் விடவில்லை, ஆனால் அவருடைய நேச குமாரனாகிய இயேசு கிறிஸ்துவின் மூலமாக நம்முடைய பயணத்திற்கு வெளிச்சத்தை வாக்களித்தார்.

பூமியிலுள்ள எல்லா உயிர்களுக்கும் சூரிய ஒளி முக்கியமானது என்பதை நாம் அறிவோம். நம்முடைய ஆவிக்குரிய வாழ்க்கைக்கு சமமாக நம்முடைய இரட்சகரிடமிருந்து வெளிப்படுகிற ஒளி முக்கியமானது. அவர்கள் “தீமையிலிருந்து நன்மையை அறிந்துகொள்ளும்படியாக”4 தொடர்ந்து நன்மை செய்ய உணர்த்தப்படும்படியாக5அவருடைய பரிபூரண அன்பில் “உலகத்திற்குள் வருகிற”3 கிறிஸ்துவின் ஒளியை ஒவ்வொருவருக்கும் தேவன் வழங்குகிறார். அந்த ஒளி, நம் மனசாட்சியை நாம் அடிக்கடி அழைப்பதன் மூலம் தன்னை வெளிப்படுத்துகிறது, எப்போதும் செயல்படவும் சிறப்பாக இருக்கவும், நம்முடைய சிறந்த சுயமாக இருக்கவும் நம்மை அழைக்கிறது.

கிறிஸ்துவில் நம்முடைய விசுவாசத்தை நாம் தீவிரப்படுத்தும்போது, நம்மைச் சுற்றியுள்ள இருளை எல்லாம் அகற்றும் வரை, தீவிரமான அளவிலேயே வெளிச்சத்தைப் பெறுகிறோம். “தேவனிடமிருந்து வருகிறவை ஒளியாயிருக்கிறது; ஒளியைப் பெற்று தேவனில் தொடர்ந்திருப்பவன், கூடுதலான ஒளியைப் பெறுகிறான்; அந்த ஒளி பரிபூரணமான நாள் வரைக்கும் அதிகமதிகமாய் பிரகாசிக்கும்.”6

பரிசுத்த ஆவியின் ஊழிய செல்வாக்கைப் பெற கிறிஸ்துவின் ஒளி நம்மை ஆயத்தப்படுத்துகிறது, இது “தேவனின் உறுதியான வல்லமை”… சுவிசேஷத்தின் சத்தியம்”7 தேவத்துவத்தின் மூன்றாம் அங்கத்தினரான பரிசுத்த ஆவி “ஆவி நபர்.”8 அநித்தியத்தில் உங்களுக்கு வழங்குகிற பரலோக பிதாவின் மிகப்பெரிய ஒளியின் ஆதாரம், பரிசுத்த ஆவியின் மூலமாக வருகிற, அதன் செல்வாக்கு “உங்கள் மனதை தெளிவுபடுத்தும், உங்களின் ஆத்துமாவை சந்தோஷத்தால் நிரப்பும்”9

பிற்காலப் பரிசுத்தவான்களின் இயேசு கிறிஸ்து சபையில், மறுஸ்தாபிதம் செய்யப்பட்ட ஆசாரியத்துவ அதிகாரத்தின்மூலம், பாவ மீட்பிற்காக நீங்கள் முழுக்கு ஞானஸ்நானம் பெறுகிறீர்கள். பின்னர், உங்கள் தலையின்மேல் கை வைக்கப்பட்டு, பரிசுத்த ஆவியின் இந்த அற்புதமான “சொல்ல முடியாத வரம்” உங்கள்மேல் அருளப்படுகிறது.10

அதன்பிறகு, உங்கள் விருப்பங்களும் செயல்களும் உடன்படிக்கை பாதையில் மையமாக இருக்கும்போது, பரிசுத்த ஆவியானவர் உங்களுக்குள் ஒரு வெளிச்சமாக சத்தியத்தை வெளிப்படுத்தி சாட்சியளிப்பார்11, உங்கள் ஆத்துமாவுக்கு, அபாயத்தின் எச்சரிக்கை, ஆறுதல் 12 மற்றும் கழுவுதல்13 மற்றும் சமாதானம் கொடுப்பார்.14

“ஒளி ஒளியுடன் இசைந்திருப்பதால்”15 ஒளியில் உங்களை வைக்க முனைகிற பரிசுத்த ஆவியின் நிரந்தர தோழமை தேர்ந்தெடுப்புகளைச் செய்ய உங்களை நடத்தும், மாறாக, பரிசுத்த ஆவியின் செல்வாக்கில்லாமல் செய்யப்பட்ட தேர்ந்தெடுப்புகள், நிழல்களிலும் இருளிலும் உங்களை நடத்த முனையும். மூப்பர் ராபர்ட் டி. ஹேல்ஸ் போதித்தார்: “ஒளி இருக்கும்போது இருள் முறியடிக்கப்பட்டு வெளியேறவேண்டும். பரிசுத்த ஆவியின் ஆவிக்குரிய ஒளி இருக்கும்போது சாத்தானின் இருள் வெளியேறுகிறது.”16

உங்களை நீங்களே கேட்டுக்கொள்ள வேண்டிய நேரம் இது என்று நான் பரிந்துரைக்கிறேன்: என் வாழ்க்கையில் அந்த ஒளி எனக்கு இருக்கிறதா? இல்லையென்றால், கடைசியாக நான் எப்போது செய்தேன்?

வாழ்க்கையை புதுப்பிக்கவும் பராமரிக்கவும் சூரிய ஒளி தினமும் பூமியைக் குளிக்க வைப்பதைப் போலவே, நீங்கள் இயேசு கிறிஸ்துவான அவரைப் பின்பற்றத் தேர்ந்தெடுக்கும்போது தினமும் உங்களுக்குள் இருக்கும் ஒளியை நீங்கள் பிரகாசமாக்கலாம்.

ஜெபத்தில் நீங்கள் தேவனை தேடுகிற ஒவ்வொரு முறையும் சூரிய ஒளியின் ஒரு துளி சேர்க்கப்படுகிறது, “அவருக்குச் செவிகொடுக்க” வேதங்களைப் படியுங்கள்17, நமது ஜீவிக்கிற தீர்க்கதரிசிகளிடமிருந்து வழிகாட்டுதலிலும் வெளிப்படுத்துதலிலும் செயல்படுங்கள், “கர்த்தருடைய நியமங்களில் நடக்க” கட்டளைகளுக்குக் கீழ்ப்படிந்து அவற்றைக் கைக்கொள்ளுங்கள்.”18

நீங்கள் மனந்திரும்பும் ஒவ்வொரு முறையும் ஆவிக்குரிய சூரிய ஒளியை உங்கள் ஆத்துமாவுக்குள்ளும், உங்கள் வாழ்க்கையில் சமாதானத்தையும் நீங்கள் அழைப்பீர்கள். இரட்சகரின் நாமத்தை உங்கள்மீது எடுத்துக்கொள்வதற்கும், எப்போதும் அவரை நினைவில் வைத்துக் கொள்வதற்கும், அவருடைய கட்டளைகளைக் கைக்கொள்ளுவதற்கும் ஒவ்வொரு வாரமும் நீங்கள் திருவிருந்தில் பங்கேற்கும்போது, அவருடைய ஒளி உங்களுக்குள் பிரகாசிக்கும்.

ஒவ்வொரு முறையும் நீங்கள் சுவிசேஷத்தைப் பகிர்ந்துகொண்டு உங்கள் சாட்சியை கூறும்போது உங்கள் ஆத்துமாவில் சூரிய ஒளி இருக்கிறது. இரட்சகர் செய்ததைப் போல நீங்கள் ஒருவருக்கொருவர் சேவை செய்யும் ஒவ்வொரு முறையும், அவருடைய அரவணைப்பு உங்கள் இருதயத்தில் உணரப்படுகிறது. பரலோக பிதாவின் ஒளி எப்போதும் அவருடைய பரிசுத்த ஆலயத்திற்குள்ளும், கர்த்தருடைய வீட்டில் தாங்கள் வரும் அனைவரின் மீதும் தங்குகிறது. இரக்கம், பொறுமை, மன்னிப்பு, தயாளம் போன்ற உங்கள் செயல்களால் உங்களில் அவருடைய வெளிச்சம் அதிகரிக்கிறது, உங்கள் மகிழ்ச்சியான முகரூபத்தில் தன்னைக் காட்டுகிறது. மறுபுறம், நாம் கோபத்திற்கு மிக விரைவாக, அல்லது மன்னிக்க மிக தாமதப்படும்போது நாம் நிழல்களில் நடக்கிறோம். “உங்கள் முகத்தை சூரிய ஒளியை நோக்கி வைத்திருக்கும்போது, நிழல்களால் ஒன்றும் செய்ய முடியாது, ஆனால் உங்கள் பின்னால் விழும்”19

பரிசுத்த ஆவியின் தோழமைக்கு தகுதியாக நீங்கள் வாழும்போது, “வெளிப்படுத்தலைப் பெற உங்களுடைய ஆவிக்குரிய திறனை உண்மையில் நீங்கள் அதிகரிக்கிறீர்கள்”20

வாழ்க்கை, சவால்களையும் பின்னடைவுகளையும் கொடுக்கிறது, நாம் அனைவரும் சில இருண்ட நாட்களையும் புயல்களையும் எதிர்கொள்ள வேண்டும். இவை அனைத்தினாலும், “தேவன் நம் வாழ்வில் வெற்றிபெற அனுமதித்தால்” 21 நம் சோதனைகளில் நோக்கமும் அர்த்தமும் இருப்பதை பரிசுத்த ஆவியின் ஒளி வெளிப்படுத்தும், மேலும் நம்முடைய இருண்ட நாட்களில் தேவன் நம்முடன் இருக்கிறார் என்பதை அறிந்து, அவை இறுதியில் கிறிஸ்துவில் உறுதியான நம்பிக்கையுடனும் பிரகாசமான நம்பிக்கையுடனும் சிறந்த, முழுமையான நபர்களாக நம்மை மாற்றும். தலைவர் ரசல் எம்.நெல்சன் ஆலோசனையளித்ததைப்போல, “உபத்திரவத்துடன் இணைந்திருக்கிற, அதிகரித்து வரும் இருள், இயேசு கிறிஸ்துவின் ஒளியை எப்போதும் பிரகாசமாக பிரகாசிக்க வைக்கிறது.”22

நம் வாழ்வின் பருவங்கள் எதிர்பாராத மற்றும் விரும்பத்தகாத இடங்களுக்கு நம்மை அழைத்துச் செல்லலாம். பாவம் உங்களை அங்கே அழைத்துச் சென்றிருந்தால், இருளின் திரையை பின்னால் இழுத்து, நொறுங்கிய இருதயத்தோடும், நருங்குண்ட ஆவியோடும் மனந்திரும்புதலுடன் உங்கள் பரலோக பிதாவை தாழ்மையாக அணுகத் தொடங்குங்கள். உங்களுடைய உருக்கமான ஜெபத்தை அவர் கேட்பார். இன்று தைரியத்துடன், “[அவரிடம்] நெருங்கி வாருங்கள், [அவர்] உங்களிடம் நெருங்கி வருவார்.” 23 இயேசு கிறிஸ்துவின் பாவநிவர்த்தியின் குணப்படுத்தும் வல்லமைக்கு நீங்கள் ஒருபோதும் அப்பாற்பட்டவர் அல்ல.

இயேசு கிறிஸ்துவின் ஒளியையும், அவருடைய சுவிசேஷத்தையும் ஏற்றுக்கொண்ட, நற்கீர்த்தி பெற்ற பெற்றோரிடமிருந்தும், உண்மையுள்ள மூதாதையர்களிடமிருந்தும் நான் வந்திருக்கிறேன், அது அவர்களின் வாழ்க்கையையும் ஆவிக்குரிய உறுதியுடன் வந்த தலைமுறைகளையும் ஆசீர்வதித்தது. என் அப்பா அடிக்கடி தனது தகப்பன் மிலோ டி. டைசெஸைப்பற்றிப் பேசினார், மேலும் தேவன்மீது அவருக்கு இருந்த விசுவாசம் இரவும் பகலும் அவருக்கு எவ்வாறு ஒரு ஒளியாக இருந்தது என பகிர்ந்துகொண்டார். தாத்தா ஒரு வன அதிகாரி மற்றும் தேவனின் வழிநடத்துதலையும் கவனிப்பையும் கேள்வி கேட்காமல் தனது வாழ்க்கையை ஒப்படைத்து, பெரும்பாலும் மலைகளில் தனியாக சவாரி செய்தார்,

ஒரு இலையுதிர்காலப் பிற்பகுதியில், தாத்தா உயரமான மலைகளில் தனியாக இருந்தார். தனது விருப்பமான குதிரைகளில் ஒன்றான வயதான பிரின்ஸில் சேணம் கட்டி, மரத்தடிகள் வெட்டப்படுவதற்கு முன்பு மரங்களை அளவிடுவதற்கு ஒரு மர அறுவை ஆலைக்குச் சவாரி செய்தபோது குளிர்காலம் ஏற்கனவே ஆரம்பித்திருந்தது.

அந்தி வேளையில், அவர் தனது வேலையை முடித்துவிட்டு மீண்டும் குதிரையில் ஏறினார். அதற்குள், வெப்பநிலை வீழ்ச்சியடைந்தது, கடுமையான குளிர்கால பனிப்புயல் மலையை சூழ்ந்து கொண்டிருந்தது. அவரை வழிநடத்த வெளிச்சமோ பாதையோ இல்லாததால், அவர்களை வன இலாகா நிலையத்திற்கு அழைத்துச் செல்லும் என்று நினைத்த திசையில் பிரின்ஸைத் திருப்பினார்.

மிலோ டைசெஸ் ஒரு புயலில் பயணித்தல்

இருட்டில் பல மைல்கள் பயணித்த பின்பு பிரின்ஸ் மெதுவாகச் சென்று பின்னர் நின்றது. மீண்டும் மீண்டும் பிரின்ஸை முன்னோக்கிச் செல்ல தாத்தா வற்புறுத்தினார், ஆனால் குதிரை மறுத்துவிட்டது. கண்மூடித்தனமாக பனி அவர்களைச் சுற்றி வருவதால், தேவனின் உதவி தேவை என்பதை தாத்தா உணர்ந்தார். அவருடைய வாழ்க்கை முழுவதிலும் அவர் செய்ததைப்போல, அடக்கத்துடன் அவர் “விசுவாசத்தில் எவ்வளவாகிலும் சந்தேகப்படாமல் கேட்டார்”.24 ஒரு அமைதியான சிறிய குரல், “மிலோ, பிரின்ஸ் தலையை தளர்த்து” என்று பதிலளித்தது. தாத்தா கீழ்ப்படிந்து, தனது கடிவாள கட்டுப்பாட்டைக் குறைத்தார், பிரின்ஸ் கழுத்தை சுழற்றி, வேறு திசையில் சென்றது. பல மணி நேரத்திற்குப் பின்னர், பிரின்ஸ் மீண்டும் நின்று, அதன் தலையை தொங்கப் போட்டது. பனி வழியாக சவாரித்து, அவர்கள் பாதுகாப்பாக வனஇலாக்கா நிலையத்தின் வாயிலுக்கு வந்திருப்பதை தாத்தா கண்டார்.

காலை சூரியனில், பனியில் பிரின்ஸின் மங்கலான தடங்களை தாத்தா திரும்பப் பார்த்தார். பிரின்ஸின் தலையை தளர்த்திய இடத்தைக் கண்டதும் அவர் ஆழ்ந்த மூச்சை இழுத்துவிட்டார்: இது ஒரு உயரமான மலைக் குன்றின் விளிம்பாக இருந்தது, அங்கு ஒரு படி எடுத்து வைத்தாலும் குதிரை மற்றும் சவாரி செய்பவர் இருவரும் கடினமான பாறைகளிலிருந்து விழுந்து மோதி மரித்திருப்பார்கள்.

அந்த அனுபவத்தின் அடிப்படையிலும், பிற பலவற்றிலிருந்தும் தாத்தா ஆலோசனையளித்தார், “உனக்கு எப்போதுமிருக்கிற சிறந்த பெரிய பங்காளி உன்னுடைய பரலோகத்திலிருக்கிற பிதாவே.” தாத்தாவின் கதையை என் அப்பா சொல்லும்போது, அவர் வேதங்களிலிருந்து மேற்கோள் காட்டுவார் என்பதை நினைவில் கொள்கிறேன்:

“உன் சுயபுத்தியின்மேல் சாயாமல், உன் முழுஇருதயத்தோடும், கர்த்தரில் நம்பிக்கையாயிருந்து,

“உன் வழிகளெல்லாம் அவரை நினைத்துக்கொள், அப்பொழுது அவர் உன் பாதைகளைச் செவ்வைப்படுத்துவார்”.25

இரட்சகர் ஒரு விளக்கைப் பிடித்திருத்தல்

இன்னமும் “இருளிலே பிரகாசிக்கிற”26 நித்திய ஒளி, இயேசு கிறிஸ்து என நான் சாட்சியளிக்கிறேன். அந்த ஒளியை அடக்கவோ, அணைக்கவோ, வெல்லவோ, தோற்கடிக்கவோ எந்த இருளும் இல்லை. அந்த ஒளியை நமது பரலோக பிதா உங்களுக்கு இலவசமாக வழங்குகிறார். நீங்கள் ஒருபோதும் தனிமையிலில்லை. ஒவ்வொரு ஜெபத்தையும் அவர் கேட்கிறார், பதிலளிக்கிறார். அவர் “உங்களை அந்தகாரத்தினின்று தம்முடைய ஆச்சரியமான ஒளியினிடத்திற்கு அழைக்கிறார்.”27 “அப்பா, அப்பா, நீர் அங்கிருக்கிறீரா?” என நீங்கள் கேட்கும்போது, அவர் எப்போதும் பதிலளிப்பார், “நான் இங்கே இருக்கிறேன், என்னுடைய மகனே, நான் இங்கு இருக்கிறேன்.”

நம்முடைய இரட்சகராகவும், மீட்பராகவும் பரலோக பிதாவின் திட்டத்தை இயேசு கிறிஸ்து நிறைவேற்றினார் என்பதற்கு நான் சாட்சி கூறுகிறேன்28 அவருடைய ஒளி ஒருபோதும் மங்காது, 29 அவருடைய மகிமை ஒருபோதும் நின்றுவிடாது, நேற்று, இன்று, என்றென்றும் உங்கள்மீது அவர் வைத்திருக்கும் அன்பு நித்தியமானது. இயேசு கிறிஸ்துவின், நாமத்தினாலே, ஆமென்.