பொது மாநாடு
இயேசு உயிர்த்தெழுந்தார்; அவரில் விசுவாசம் பர்வதங்களை நகர்த்தும்
ஏப்ரல் 2021 பொது மாநாடு


இயேசு உயிர்த்தெழுந்தார்; அவரில் விசுவாசம் பர்வதங்களை நகர்த்தும்

இயேசு கிறிஸ்துவை விசுவாசிப்பது இந்த வாழ்க்கையில் நமக்குக் கிடைக்கும் மிகப்பெரிய வல்லமை. நம்புவர்களுக்கு எல்லாமே சாத்தியம்.

என் அன்பான சகோதர சகோதரிகளே, இந்த ஈஸ்டர் ஞாயிற்றுக்கிழமை உங்களுடன் பேசும் சிலாக்கியத்திற்கு நான் நன்றியுள்ளவனாக இருக்கிறேன்.1 இயேசு கிறிஸ்துவின் பாவநிவாரண பலியும் உயிர்த்தெழுதலும் நம் ஒவ்வொருவரின் வாழ்க்கையையும் என்றென்றைக்குமாக மாற்றியது. நாம் அவரை நேசிக்கிறோம், அவரையும் நம்முடைய பரலோக பிதாவையும் நன்றியுடன் ஆராதிக்கிறோம்.

கடந்த ஆறு மாதங்களில், உலகளாவிய தொற்றுநோயுடன் நாம் தொடர்ந்து சிக்கிக் கொண்டிருக்கிறோம். நோய், இழப்பு மற்றும் தனிமை ஆகியவற்றோடு உங்கள் மனஉறுதி மற்றும் ஆவிக்குரிய வலிமையைப்பற்றி நான் ஆச்சரியப்படுகிறேன். நான் தொடர்ந்து ஜெபிக்கிறேன், இதன் மூலம், உங்கள்மீது கர்த்தரின் மாறாத அன்பை நீங்கள் உணருவீர்கள். உங்கள் சோதனைகளுக்கு நீங்கள் வலுவான சீஷத்துவத்துடன் பதிலளித்திருந்தால், இந்த கடந்த ஆண்டு வீணாக இருந்திருக்காது.

இன்று காலை, பூமியில் ஜனங்கள் வசிக்கும் ஒவ்வொரு கண்டத்திலிருந்தும் வரும் சபைத் தலைவர்கள் பேசக் கேட்டோம். உண்மையிலேயே, சுவிசேஷத்தின் ஆசீர்வாதம் ஒவ்வொரு இனம், மொழி மற்றும் ஜனத்துக்குமாகும். இயேசு கிறிஸ்துவின் சபை ஒரு உலகளாவிய சபை ஆகும். இயேசு கிறிஸ்து நமது தலைவர்.

நன்றிகூறும் விதமாக, ஒரு தொற்றுநோயால் கூட அவருடைய சத்தியத்தின் முன்னேற்றத்தை மெதுவாக்க முடியவில்லை. குழப்பமான, சர்ச்சைக்குரிய, சோர்வுற்ற இந்த உலகில் சரியாக இயேசு கிறிஸ்துவின் சுவிசேஷம்தான் தேவை.

தேவனின் ஒவ்வொரு பிள்ளையும் இயேசு கிறிஸ்துவின் குணப்படுத்தும், மீட்கும் செய்தியைக் கேட்கவும் ஏற்றுக்கொள்ளவும் சந்தர்ப்பம் பெறத் தகுதியானவர். இப்போதைக்கும் எப்போதைக்கும், வேறு எந்த செய்தியும் நம் மகிழ்ச்சிக்கு மிக இன்றியமையாததல்ல.2 வேறு எந்த செய்தியும் நம்பிக்கையால் அதிகமாக நிரப்பப்படவில்லை. வேறு எந்த செய்தியும் நம் சமூகத்தில் உள்ள பிணக்கை அகற்ற முடியாது.

இயேசு கிறிஸ்துவில் உள்ள விசுவாசம் எல்லா நம்பிக்கையின் அடித்தளமாகவும், தெய்வீக வல்லமையின் வாய்க்காலாகவும் இருக்கிறது. அப்போஸ்தலனாகிய பவுலின் கூற்றுப்படி, “விசுவாசமில்லாமல் [தேவனுக்குப்] பிரியமாயிருப்பது கூடாதகாரியம்; ஏனென்றால், தேவனிடத்தில் சேருகிறவன் அவர் உண்டென்றும், அவர் தம்மைத் தேடுகிறவர்களுக்குப் பலன் அளிக்கிறவரென்றும் விசுவாசிக்கவேண்டும்.” 3

நித்திய முக்கியத்துவத்தின் ஒவ்வொரு சாத்தியமான ஆசீர்வாதமுமாகிய, வாழ்க்கையில் நல்லது யாவும் விசுவாசத்தோடு தொடங்குகிறது. தேவன் நம் வாழ்வில் ஜெயம்பெற அனுமதிப்பது, அவர் நமக்கு வழிகாட்ட சித்தமாக இருக்கிறார் என்ற விசுவாசத்துடன் தொடங்குகிறது. நம்மை சுத்திகரிக்கவும், குணப்படுத்தவும், பலப்படுத்தவும் இயேசு கிறிஸ்துவுக்கு வல்லமை இருக்கிறது என்ற விசுவாசத்துடன் உண்மையான மனந்திரும்புதல் தொடங்குகிறது.4

“தேவ வல்லமையை மறுதலிக்க வேண்டாம்” என்று மரோனி தீர்க்கதரிசி அறிவித்தான், “அவர் மனுபுத்திரரின்விசுவாசத்துக்குத்தக்கதாக வல்லமையால் கிரியை செய்கிறார்.”5 நம்முடைய வாழ்க்கையில் தேவனின் வல்லமையைத் திறப்பது நமது விசுவாசமே.

இன்னும், விசுவாசத்தைப் பயன்படுத்துவது அதிகப்படியானதாகத் தோன்றலாம். நமக்கு மிகவும் தேவைப்படும் ஆசீர்வாதங்களைப் பெறுவதற்கு போதுமான விசுவாசத்தைத் திரட்ட முடியுமா என்று சில சமயங்களில் நாம் ஆச்சரியப்படலாம். இருப்பினும், மார்மன் புஸ்தக தீர்க்கதரிசி ஆல்மாவின் புத்தகத்தின் மூலம் கர்த்தர் அந்த அச்சங்களை நிறுத்தினார்.

கடுகு விதை தானியம்

ஆல்மா வார்த்தையை பரீட்சிக்கவும் “விசுவாசத்தின் துகளைப் பிரயோகிக்கவும் மட்டும் கேட்கிறான், ஆம், [நாம்] நம்ப விரும்புவதை விட அதிகமாக இல்லாவிட்டாலும் கூட.”6 “விசுவாசத்தின் துகள்” என்ற சொற்றொடர் கர்த்தரின் வேதாகம வாக்குறுதியை நினைவூட்டுகிறது,“கடுகு விதை அளவுக்கு விசுவாசம் இருந்தால், நாம் “இந்த மலையைப் பார்த்து, இவ்விடம் விட்டு அப்புறம்போ என்று சொல்ல அது அப்புறம் போம்;“ நமக்கு எதுவும் சாத்தியமில்லாமல் இருக்காது.”7

கடுகு விதைகளினூடே பறவை

நம்முடைய உலகப்பிரகார பலவீனத்தை கர்த்தர் புரிந்து கொள்கிறார். நாம் அனைவரும் சில சமயங்களில் தடுமாறுகிறோம். ஆனால் நம்முடைய மாபெரும் ஆற்றலையும் அவர் அறிகிறார். கடுகு விதை சிறியதாக வளரத் தொடங்குகிறது, ஆனால் அதன் கிளைகளில் பறவைகள் கூடு கட்டும் அளவுக்கு பெரிய மரமாக வளர்கிறது. கடுகு விதை சிறியது ஆனால் வளர்ந்து வரும் விசுவாசத்தைக் குறிக்கிறது.8

அவருடைய பரிபூரண வல்லமையைப் பெறுவதற்கு கர்த்தருக்கு பரிபூரண விசுவாசம் தேவையில்லை. ஆனால் அவர் நம்மை நம்பச் சொல்கிறார்.

என் அன்பான சகோதர சகோதரிகளே, இந்த ஈஸ்டர் காலையில் உங்களுக்கு எனது அழைப்பு, உங்கள் விசுவாசத்தை அதிகரிக்க, இன்று தொடங்கவும். உங்கள் விசுவாசத்தின் மூலம், இயேசு கிறிஸ்து உங்கள் வாழ்க்கையில் மலைகளை நகர்த்துவதற்கான உங்கள் திறனை அதிகரிப்பார்,9 உங்கள் தனிப்பட்ட சவால்கள் எவரெஸ்ட் சிகரத்தைப் போல பெரியதாக இருந்தாலும் கூட.

உங்கள் மலைகள் தனிமை, சந்தேகம், நோய் அல்லது பிற தனிப்பட்ட பிரச்சினைகளாக இருக்கலாம். உங்கள் மலைகள் மாறுபடும், ஆனால் உங்கள் ஒவ்வொரு சவாலுக்கும் பதில் உங்கள் நம்பிக்கையை அதிகரிப்பதாகும். அதற்கு பிரயாசம் தேவை. சோம்பேறியான கற்பவர்களும், தளர்வான சீஷர்களும் விசுவாசத்தின் ஒரு துகளைக் கூட சேகரிக்க எப்போதும் போராடுவார்கள்.

எதையும் நன்றாக செய்ய முயற்சி தேவை. இயேசு கிறிஸ்துவின் உண்மையான சீஷராக மாறுவதும் விதிவிலக்கல்ல. உங்கள் விசுவாசத்தையும் அவர் மீதுள்ள நம்பிக்கையையும் அதிகரிக்க முயற்சி தேவை. அந்த விசுவாசத்தையும் நம்பிக்கையையும் வளர்க்க உதவும் ஆறு ஆலோசனைகளை நான் வழங்குவேன்.

முதலாவது படியுங்கள். ஈடுபாட்டுடன் கற்பவராக மாறுங்கள். கிறிஸ்துவின் பணி மற்றும் ஊழியத்தை நன்கு புரிந்துகொள்ள வேதங்களில் மூழ்கிவிடுங்கள். இதனால் உங்கள் வாழ்க்கைக்கான அதன் வல்லமையை நீங்கள் புரிந்துகொள்ளும்படியாக கிறிஸ்துவின் கோட்பாட்டை அறிந்து கொள்ளுங்கள். இயேசு கிறிஸ்துவின் பாவநிவர்த்தி உங்களுக்கும்பொருந்தும் என்ற உண்மையை உள்வாங்கிக் கொள்ளுங்கள். அவர் தம்மீது உங்கள் துர்பாக்கியம், உங்கள் தவறுகள், உங்கள் பலவீனம், மற்றும் உங்கள் பாவங்களையும் எடுத்துக் கொண்டார். அவர் ஈடுசெய்யும் விலையைச் செலுத்தி, நீங்கள் எதிர்கொள்ளும் ஒவ்வொரு மலையையும் நகர்த்துவதற்கான வல்லமையை வழங்கினார். உங்கள் விசுவாசம், நம்பிக்கை மற்றும் அவரைப் பின்பற்ற விருப்பத்துடன் அந்த வல்லமையைப் பெறுகிறீர்கள்.

உங்கள் மலைகளை நகர்த்துவதற்கு ஒரு அற்புதம் தேவைப்படலாம். அற்புதங்களைப் பற்றி அறியுங்கள். கர்த்தர் மீதான உங்கள் விசுவாசத்தின்படி அற்புதங்கள் வருகின்றன. அந்த விசுவாசத்தின் மையமானது நீங்கள் விரும்பும் அற்புதமான உதவியால் அவர் எப்படி, எப்போது ஆசீர்வதிப்பார் என்ற அவருடைய விருப்பத்தையும் கால அட்டவணையையும் நம்புவதாகும். உங்கள் அவநம்பிக்கை மட்டுமே, உங்கள் வாழ்க்கையில் மலைகளை நகர்த்த அற்புதங்களால் தேவன் உங்களுக்கு ஆசீர்வாதம் வழங்காமல் தடுக்கும்10

இரட்சகரைப்பற்றி நீங்கள் எவ்வளவு அதிகமாகக் கற்றுக்கொள்கிறீர்களோ, அவருடைய இரக்கம், அவருடைய எல்லையற்ற அன்பு மற்றும் அவருடைய பலப்படுத்துதல், குணப்படுத்துதல், மீட்பதற்கான வல்லமை ஆகியவற்றில் நம்பிக்கை வைப்பது எளிதாக இருக்கும். நீங்கள் விசுவாசத்தோடு ஒரு மலையை எதிர்கொள்ளும்போது அல்லது ஏறும் போதைவிட இரட்சகர் உங்களுக்கு ஒருபோதும் நெருக்கமாக இருக்க மாட்டார்.

இரண்டாவதாக, இயேசு கிறிஸ்துவை நம்ப தேர்ந்தெடுங்கள். பிதாவாகிய தேவன் மற்றும் அவருடைய நேச குமாரனைப்பற்றி உங்களுக்கு சந்தேகம் இருந்தால், அல்லது மறுஸ்தாபிதத்தின் செல்லுபடியாகும் அல்லது ஒரு தீர்க்கதரிசியாக ஜோசப் ஸ்மித்தின் தெய்வீக அழைப்பின் உண்மைத்தன்மையை, நம்பத் தெரிந்து கொள்ளுங்கள்11, விசுவாசத்தில் நிலைத்திருங்கள். உங்கள் கேள்விகளை கர்த்தரிடத்திலும் மற்ற உண்மையுள்ள ஆதாரங்களிடத்திலும் எடுத்துச் செல்லுங்கள். ஒரு தீர்க்கதரிசியின் வாழ்க்கையின் பாதையில் ஒரு குறைபாட்டை அல்லது வேதவசனங்களில் ஒரு முரண்பாட்டைக் காணலாம் என்ற நம்பிக்கையுடன் அல்லாமல் நம்புவதற்கான விருப்பத்துடன் படிக்கவும். உங்கள் சந்தேகங்களை மற்ற சந்தேகப்படுபவர்களுடன் திரும்பவும் சொல்வதை அதிகரிப்பதை நிறுத்துங்கள். ஆவிக்குரிய கண்டுபிடிப்புக்கான உங்கள் பயணத்தில் உங்களை வழிநடத்த கர்த்தரை அனுமதிக்கவும்.

மூன்றாவது, விசுவாசத்தில் செயல்படுங்கள். உங்களுக்கு அதிக விசுவாசம் இருந்தால் நீங்கள் என்ன செய்வீர்கள்? இதைப்பற்றி சிந்தியுங்கள். இதைப்பற்றி எழுதுங்கள். பின்பு, விசுவாசம்அதிகம் தேவைப்படும் ஒன்றைச் செய்வதால், விசுவாசத்தை அதிகமாக பெறுங்கள்.

நான்காவதாக, தகுதியுடன் பரிசுத்த நியமங்களில் பங்கு பெறுங்கள். நியமங்கள் உங்கள் வாழ்க்கைக்கு தேவனின் வல்லமையைத் திறக்கின்றன.12

ஐந்தாவது, உங்கள் பரலோக பிதாவிடம் இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் உதவி கேட்கவும்.

விசுவாசத்துக்கு பிரயாசம் தேவை. வெளிப்பாட்டைப் பெறுவதற்கும் பிரயாசம் தேவை. ஆனால் “கேட்கிறவன் எவனும் பெற்றுக் கொள்கிறான்: தேடுகிறவன் கண்டடைகிறான்: தட்டுகிறவனுக்குத் திறக்கப்படும்.” 13 உங்கள் விசுவாசம் வளர எது உதவும் என்பதை தேவன் அறிவார். கேளுங்கள், பின்னர் மீண்டும் கேளுங்கள்.

விசுவாசம் பலவீனமானவர்களுக்கு என்று ஒரு நம்பிக்கையற்றவர் சொல்லக்கூடும். ஆனால் இந்த கூற்று விசுவாசத்தின் வல்லமையை மீறுகிறது. அவரை சந்தேகித்திருந்தால், இரட்சகரின் அப்போஸ்தலர்கள் அவருடைய மரணத்திற்குப் பிறகு, தங்கள் வாழ்க்கையின் ஆபத்தில், அவருடைய கோட்பாட்டை தொடர்ந்து போதித்திருப்பார்களா?14 அது உண்மை என உறுதியான சாட்சியத்தைப் பெறாவிட்டால் கர்த்தரின் சபையின் மறுஸ்தாபிதத்தைக் காப்பதில் ஜோசப் மற்றும் ஹைரம் ஸ்மித் இரத்த சாட்சி மரணங்களை அனுபவித்திருப்பார்களா? இயேசு கிறிஸ்துவின் சுவிசேஷம் மறுஸ்தாபிதம் செய்யப்பட்டது என்பதில் அவர்களுக்கு ஏதேனும் விசுவாசம் இல்லாதிருந்தால் முன்னோடி பாதையில் கிட்டத்தட்ட 2,000 பரிசுத்தவான்கள் மரித்திருப்பார்களா?15 உண்மையிலேயே, விசுவாசம் என்பது சாத்தியமற்றதை நிறைவேற்ற சாத்தியப்படுத்தும் வல்லமையாகும்.

உங்களுக்கு ஏற்கனவே இருக்கும் நம்பிக்கையை குறைக்க வேண்டாம். சபையில் சேரவும் உண்மையாக இருக்கவும் விசுவாசம் தேவை. பண்டிதர்களையும் பிரசித்தமான கருத்தையும் விட தீர்க்கதரிசிகளைப் பின்பற்ற விசுவாசம் தேவை. ஒரு தொற்றுநோயின் போது ஒரு ஊழிய சேவை செய்ய விசுவாசம் தேவை. தேவனின் கற்புடைமை நியாயப்பிரமாணத்தை இப்போது காலாவதியானது என்று உலகம் கத்தும்போது கற்புடைய வாழ்க்கை வாழ விசுவாசம் தேவை. ஒரு மதச்சார்பற்ற உலகில் பிள்ளைகளுக்கு சுவிசேஷத்தை கற்பிக்க விசுவாசம் தேவை. அன்புக்குரியவரின் உயிருக்காக மன்றாடுவதற்கு விசுவாசமும், ஏமாற்றமளிக்கும் பதிலை ஏற்றுக்கொள்வதற்கு இன்னும் அதிக விசுவாசமும் தேவை.

இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு, சகோதரி நெல்சனும் நானும் சமோவா, டோங்கா, பிஜி மற்றும் டஹிடி ஆகிய இடங்களுக்குச் சென்றோம். அந்த தீவு நாடுகள் ஒவ்வொன்றும் பல நாட்களாக பலத்த மழை பெற்றிருந்தன. உறுப்பினர்கள் தங்கள் வெளிப்புற கூட்டங்கள் மழையிலிருந்து பாதுகாக்கப்பட வேண்டும் என்று உபவாசம் இருந்து ஜெபித்தார்கள்.

சமோவா, பிஜி மற்றும் டஹிடியில், கூட்டங்கள் தொடங்கியபோதே, மழை நின்றது. ஆனால் டோங்காவில் மழை நிற்கவில்லை. ஆயினும், 13,000 விசுவாசமுள்ள பரிசுத்தவான்கள் ஒரு இடத்தைப் பெறுவதற்கு சில மணிநேரங்களுக்கு முன்பே வந்து, சீரான மழை பெய்து கொண்டிருக்கும்போது பொறுமையாகக் காத்திருந்தனர், பின்னர் மிகவும் ஈரமான இரண்டு மணிநேர கூட்டத்தில் இறுதிவரை அமர்ந்தனர்.

மழையில் டொங்கன் பரிசுத்தவான்கள்

அந்த தீவுவாசிகள் ஒவ்வொருவரிடமும் துடிப்பான விசுவாசத்தை நாங்கள் கண்டோம், மழையைத் தடுக்க போதுமான விசுவாசம், மழை நிற்காதபோது விடாமுயற்சியுடன் விசுவாசம்.

நம் வாழ்வில் உள்ள மலைகள் எப்போதுமே எப்படி அல்லது எப்போது என நாம் விரும்புகிறோம் என்பதைப் பொருத்து நகர்வதில்லை. ஆனால் நமது விசுவாசம் எப்போதும் நம்மை முன்னோக்கி செலுத்தும். விசுவாசம் எப்போதும் தெய்வீக வல்லமை பெறுதலை அதிகரிக்கிறது.

தயவுசெய்து இதை அறிந்து கொள்ளுங்கள்: உலகில் நீங்கள் நம்பும் எல்லாமும், எல்லோரும் கைவிட்டாலும், இயேசு கிறிஸ்துவும் அவருடைய சபையும் ஒருபோதும் உங்களைக் கைவிடாது. கர்த்தர் ஒருபோதும் உறங்குவதில்லை, தூங்குவதில்லை.16 அவர் “நேற்றும், இன்றும், [நாளையும்] மாறாதவராயிருக்கிறார்.”17 அவர் தன் உடன்படிக்கைகளையும் 18 அவரது வாக்குத்தத்தங்களையும், தன் ஜனத்தின் மீதான அன்பையும் கைவிடார். அவர் இன்று அற்புதங்களைச் செய்கிறார், அவர் நாளையும் அற்புதங்களைச் செய்வார்.19

இயேசு கிறிஸ்துவில் விசுவாசம் இந்த வாழ்க்கையில் நமக்குக் கிடைக்கும் மிகப்பெரிய வல்லமை. நம்புபவர்களுக்கு எல்லாமே சாத்தியம்.20

அவர் மீதுள்ள உங்கள் வளர்ந்து வரும் விசுவாசம் மலைகளை, பூமியை அழகுபடுத்தும் மலையின் பாறையை அல்ல, ஆனால் உங்கள் வாழ்க்கையில் துன்பத்தின் மலைகளை நகர்த்தும். உங்கள் செழிப்பான விசுவாசம் சவால்களை இணையற்ற வளர்ச்சி மற்றும் வாய்ப்பாக மாற்ற உதவும்.

இந்த ஈஸ்டர் ஞாயிற்றுக்கிழமை, அன்பு மற்றும் நன்றியுணர்வின் ஆழ்ந்த உணர்வுகளுடன், இயேசு கிறிஸ்து உண்மையாகவே உயிர்த்தெழுந்தார்,” என என் சாட்சியத்தை அறிவிக்கிறேன். அவர் தனது சபையை வழிநடத்த உயிர்த்தெழுந்தார். தேவனின் எல்லா பிள்ளைகளின் வாழ்க்கையையும், அவர்கள் எங்கு வாழ்ந்தாலும் அவர்களை ஆசீர்வதிப்பதற்காக அவர் உயிர்த்தெழுந்தார். அவர் மீதுள்ள விசுவாசத்துடன், நம் வாழ்வில் மலைகளை நகர்த்த முடியும். அப்படியே இயேசு கிறிஸ்துவின் பரிசுத்த நாமத்தில் நான் சாட்சியளிக்கிறேன், ஆமென்.

குறிப்புகள்

  1. உலகின் சில பகுதிகளில், ஈஸ்டர் காலையில் வாழ்த்துக்களை பரிமாறிக்கொள்ள ஒரு தனித்துவமான மற்றும் சிறப்பு வழியை மக்கள் பயன்படுத்துகிறார்கள். அவர்களின் உள்ளூர் மொழியில், வாழ்த்துபவர், “கிறிஸ்து உயிர்த்தெழுந்தார்!” என்று கூறுவார்கள். வாழ்த்தப்பட்ட நபர் பின்னர், “உண்மையிலேயே! அவர் உயிர்த்தெழுந்தார்!. எடுத்துக்காட்டாக, ரஷ்யமொழி பேசுபவர்களால் ஈஸ்டர் வாழ்த்துக்கள் பரிமாற்றம் தொடங்குகிறது “Христос воскрес” (Christ is risen [resurrected]!), answered by “Воистину! воскрес!” (உண்மையாகவே! அவர் உயிர்த்தெழுந்தார்!).

  2. மோசியா 2:41 பார்க்கவும்.

  3. எபிரெயர் 11:6. Lectures on Faithவிசுவாசம் “எல்லாவற்றின் மீதும் வல்லமை, ஆதிக்கம் மற்றும் அதிகாரம் கொண்ட முதல் பெரிய ஆளுகை செய்யும் கொள்கையாகும்” என்று கூறுகிறது([1985], 5).

  4. மத்தேயு 11:28–30, ஆல்மா 7:12–13, ஏத்தேர் 12:27 பார்க்கவும்.

  5. மரோனி 10:7; முக்கியத்துவம் சேர்க்கப்பட்டுள்ளது.

  6. ஆல்மா 32:27; முக்கியத்துவம் சேர்க்கப்பட்டுள்ளது.

  7. மத்தேயு 17:20; முக்கியத்துவம் சேர்க்கப்பட்டுள்ளது; ஏலமன் 12:9, 13ஐயும் பார்க்கவும்.

  8. கோட்பாடும் உடன்படிக்கைகளும் 78:17–18 பார்க்கவும். சுபாவ மனிதனை விட்டு விடுவதற்கான வெகுமதி “கர்த்தராகிய கிறிஸ்துவின் பாவநிவர்த்தி மூலம் ஒரு பரிசுத்தவானாக” மாறுவது (மோசியா 3:19).

  9. 1 நேபி 7:12 பார்க்கவும்.

  10. மார்மன் 9:19–21; ஏத்தேர் 12:30 பார்க்கவும்.

  11. 2 நேபி 33:10–11 பார்க்கவும்.

  12. கோட்பாடும் உடன்படிக்கைகளும் 84:20 பார்க்கவும்.

  13. மத்தேயு 7:8.

  14. விசுவாசத்தின் வல்லமை இல்லாவிட்டால், சத்தியம் என்று தனக்குத் தெரிந்ததை மறுக்க மறுத்ததற்காக அபிநாதி நெருப்பால் மரணத்தை அனுபவித்திருப்பானா?(மோசியா 17:7–20 பார்க்கவும்). அந்த வல்லமை இல்லாவிட்டால், ஏத்தேர் ஒரு பாறையின் குழிக்குள் மறைந்திருப்பானா ( ஏத்தேர் 13:13–14 பார்க்கவும்) மற்றும் மரோனி பல ஆண்டுகளாக தனிமையைத் தாங்கினான்( மரோனி 1:1–3 பார்க்கவும்.) அவர்கள் நம்பியதை மட்டுமே அவர்கள் கண்டனம் செய்திருந்தால் அவர்களின் வாழ்க்கை மிகவும் வசதியாக இருந்திருக்கும்?

  15. Melvin L. Bashore, H. Dennis Tolley, and the BYU Pioneer Mortality Team, “Mortality on the Mormon Trail, 1847–1868,” BYU Studies, vol. 53, no. 4 (2014), 115 பார்க்கவும்.

  16. சங்கீதம் 121:4 பார்க்கவும்.

  17. மார்மன் 9:9.

  18. ஏசாயா 54:10; 3 நேபி 22:10 பார்க்கவும்.

  19. (மார்மன் 9:10–11, 15 ) பார்க்கவும்.

  20. மாற்கு 9:23 பார்க்கவும்.