வேதபாட வகுப்பும் முதிர்வேதபாட வகுப்பும்
இரட்சகரின் வழியில் போதித்தலின் நோக்கம்


இரட்சகரின் வழியில் போதித்தலின் நோக்கம்,” இரட்சகரின் வழியில் போதித்தல்: வீட்டிலும் சபையிலும் கற்பிக்கிற அனைவருக்கும் (2022)

“இரட்சகரின் வழியில் போதித்தலின் நோக்கம்,” இரட்சகரின் வழியில் போதித்தல்

இரட்சகரின் வழியில் போதித்தலின் நோக்கம்

இந்த ஆதாரத்தில் விவரிக்கப்பட்டுள்ள கொள்கைகள், இரட்சகரின் வழியில் கற்பிக்க ஒவ்வொரு சுவிசேஷ ஆசிரியருக்கும் உதவ முடியும். அதில் பெற்றோர்கள், ஊழியம் செய்யும் சகோதர சகோதரிகள், வேதபாட மற்றும் வேதபாட முதிர்வகுப்பு ஆசிரியர்கள் மற்றும் கற்பிக்க சபை அழைப்பு அவர்களுக்கு வாய்ப்பளிக்கிற எவரும் அதில் அடங்குவார்கள்.

இந்த ஆதாரத்தை நீங்கள் சொந்தமாகப் படிக்கலாம் அல்லது சிறந்த ஆசிரியராக எப்படி மாறுவது என்பதைப்பற்றி மற்றவர்களுடன் கலந்துரையாடுவதற்கு வழிகாட்ட அதைப் பயன்படுத்தலாம். எடுத்துக்காட்டாக, இல்ல மாலைகள், தலைமை கூட்டங்கள், தொகுதி அல்லது பிணைய ஆலோசனைக் கூட்டங்கள், வேதபாட மற்றும் வேதபாட முதிர் வகுப்பு கற்பிப்போர் கூட்டங்கள் மற்றும் ஆசிரியர் ஆலோசனைக்குழு கூட்டங்களில் இந்த ஆதாரம் பயன்படுத்தப்படலாம் (“For Leaders—Helping Teachers Succeed” பார்க்கவும்).

இந்த ஆதாரம் எவ்வாறு ஒழுங்கமைக்கப்படுகிறது

பகுதி 1 இயேசு கிறிஸ்துவின் சுவிசேஷத்தின் கொள்கைகளை நாம் கற்பிக்கும் போதெல்லாம் அவர் மீது கவனம் செலுத்துவதன் முக்கியத்துவத்தை வலியுறுத்துகிறது. நாம் எதைக் கற்பிக்கிறோம் என்பதை இந்த பாகம் விவரிக்கிறது.

பகுதி 2 கிறிஸ்துவைப் போல போதிப்பதன் கொள்கைகளை வலியுறுத்துகிறது. எவ்வாறு நாம் கற்பிக்கிறோம் என்பதை இந்த பாகம் விவரிக்கிறது.

பகுதி 3 கிறிஸ்துவைப் போன்ற போதனையின் கொள்கைகளைப் பிரயோகிப்பதற்கு ஆசிரியர்களுக்கு உதவ, நடைமுறை ஆலோசனைகளை வழங்குகிறது.