வேதங்கள்
1 நேபி 6


அதிகாரம் 6

நேபி தேவ காரியங்களை எழுதுதல் – மனுஷரை ஆபிரகாமின் தேவனிடத்தில் வந்து, இரட்சிக்கப்பட இணங்கச்செய்தலே நேபியின் நோக்கமாக உள்ளது. ஏறக்குறைய கி.மு. 600–592.

1 இப்பொழுது நேபியாகிய நான் இந்தப் பதிவேட்டின் பகுதியில், என் பிதாக்களின் வம்சவரலாற்றைக் கொடுப்பதில்லை; பின்னரும் எந்தச் சமயத்திலும் நான் எழுதிக்கொண்டிருக்கும் இந்தத் தகடுகளின்மேல் கொடுக்கப்போவதுமில்லை; ஏனெனில் என் தகப்பன் வைத்துள்ள பதிவேடுகளில் அவைகள் கொடுக்கப்பட்டுள்ளன; ஆகையால் இந்தப் பதிவுகளில் அவற்றை நான் எழுதுவதில்லை.

2 ஏனெனில் நாங்கள் யோசேப்பின் சந்ததி என்று சொல்லுவது எனக்கு போதுமானதாயிருக்கிறது.

3 என் தகப்பனைக்குறித்த எல்லாக் காரியங்களின் முழு விவரத்தையும் முக்கியமாக இந்தத் தகடுகளின்மேல் எழுதவேண்டும் என்பது எனக்கு ஒரு பொருட்டல்ல. ஏனெனில் அவைகளை இந்தத் தகட்டின் மேல் எழுத முடியாது, ஏனெனில் தேவ காரியங்களை நான் எழுதும்படி அவைகளில் இடமிருக்க நான் வாஞ்சிக்கிறேன்.

4 ஏனெனில் மனுஷர்களை, ஆபிரகாமின் தேவனும், ஈசாக்கின் தேவனும், யாக்கோபின் தேவனுமாயிருக்கிறவரிடம் வர இசையச் செய்து, அவர்கள் இவ்விதம் இரட்சிக்கப்படவேண்டும் என்பதே என் முழுமையான நோக்கமாயிருக்கிறது.

5 ஆகையால் உலகத்திற்கு பிரியமாயிருக்கிற காரியங்களை நான் எழுதுவதில்லை, ஆனால் தேவனுக்கும், உலகப்பிரகாரமாய் இல்லாதவர்களுக்கும் பிரியமாயிருக்கிற காரியங்களை நான் எழுதுகிறேன்.

6 ஆகையால், மனுபுத்திரருக்கு உபயோகமில்லாத காரியங்களால் இந்தத் தகடுகளை நிரப்பக்கூடாது என என் சந்ததியாருக்கு நான் கட்டளையிடுவேன்.