கோரிகோர் என்னும் அந்திக்-கிறிஸ்து, கிறிஸ்துவையும், பாவநிவர்த்தியையும், தீர்க்கதரிசன ஆவியையும் ஏளனம் செய்தல் – அவன் தேவனில்லையென்றும், மனித வீழ்ச்சியில்லையென்றும், பாவத்திற்குத் தண்டனையில்லையென்றும், கிறிஸ்து இல்லையென்றும் போதித்தல் – கிறிஸ்து வருவாரென்றும், சகல காரியங்களும் தேவன் ஒருவர் உண்டென்று புலப்படுத்துகிறதென்றும் ஆல்மா சாட்சி கொடுத்தல் – கோரிகோர் ஒரு அறிகுறியைக் கோருதலும், அவன் ஊமையாக்கப்படுதலும் – கோரிகோரினிடத்தில் பிசாசு ஒரு தூதனைப்போலத் தோன்றி, சொல்லவேண்டியதென்ன என்று அவனுக்கு சொல்லிக் கொடுத்திருந்தான் – கோரிகோர் மிதிபட்டு மரித்துப்போகுதல். ஏறக்குறைய கி.மு. 76–74.