வேதங்கள்
1 நேபி 8


அதிகாரம் 8

ஜீவவிருட்ச தரிசனத்தை லேகி காணுதல் – அதன் கனியை அவன் புசித்து, தன் குடும்பத்தாரும் அவ்வாறே செய்ய ஆசைப்படுதல் – அவன் ஒரு இருப்புக்கோலையும், இடுக்கமும் நெருக்கமுமான பாதையையும் மற்றும் மனுஷர்களை மூடும் இருள் மூடுபனியையும் காணுதல் – சரயா, நேபி, சாம் கனியைப் புசித்தல், ஆனால் லாமானும் லெமுவேலும் மறுத்தல். ஏறக்குறைய கி.மு. 600–592.

1 நாங்கள் எல்லாபிரகாரமான ஒவ்வொரு வகையிலுள்ள விதைகளையும், ஒவ்வொரு தானிய வகையிலும் மற்றும் ஒவ்வொரு கனி வகையிலுள்ள விதைகளையும் சேர்த்து வைத்திருந்தோம்.

2 என் தகப்பன் வனாந்தரத்தில் தங்கியிருந்தபொழுது அவர் எங்களை நோக்கி, இதோ, நான் ஒரு சொப்பனம் கண்டேன், வேறு வார்த்தைகளிலெனில், நான் ஒரு தரிசனத்தைக் கண்டேன் என்றார்.

3 இதோ, நான் கண்ட காரியத்தினிமித்தம், நேபி மற்றும் சாமைப்பற்றி கர்த்தரில் களிகூருவதற்கு எனக்குக் காரணமுண்டு, அதனால் அவர்களும் அவர்களின் பல சந்ததியாரும் இரட்சிக்கப்படுவார்கள், என நான் எண்ணக் காரணமுண்டு.

4 ஆனால் இதோ, லாமான் மற்றும் லெமுவேலே, உங்களைக் குறித்து நான் மிகவும் அஞ்சுகிறேன், ஏனெனில் இதோ, நான் என் சொப்பனத்திலே ஒரு மந்தாரமான இருண்ட வனாந்தரத்தைக் கண்டேன் என நினைக்கிறேன்.

5 நான் ஒரு மனுஷனைக் கண்டேன். அவர் வெள்ளை அங்கியை அணிந்திருந்தார். பின்பு அவர் வந்து எனக்கு முன்பாக நின்றார்.

6 அவர் என்னிடம் பேசினார் மற்றும் நான் அவரைப் பின்தொடர்ந்து செல்ல அழைத்தார்.

7 நான் அவரைப் பின்தொடர்ந்தபோது, ஒரு இருண்ட, மந்தாரமான பாழ் நிலத்தில் நிற்பதை நான் பார்த்தேன்.

8 நான் பலமணி நேரங்களாக, இருளில் பயணம் செய்த பின்னர், அவருடைய உருக்கமான, திரளான இரக்கங்களின்படியே என்மீது இரக்கமாயிரும் என கர்த்தரிடத்தில் நான் ஜெபிக்க ஆரம்பித்தேன்.

9 நான் கர்த்தரிடத்தில் ஜெபித்த பின்னர், நான் ஒரு பரந்த விசாலமான வெளியைக் கண்டேன்.

10 நான் ஒரு விருட்சத்தைக் கண்டேன். அதன் கனி ஒருவரை மகிழ்விக்கக்கூடியதாய் இருந்தது.

11 நான் போய் அதிலிருந்த கனியைப் புசித்தேன்; நான் முன்னால் சுவைத்த எல்லாவற்றைக் காட்டிலும் அது மிக மதுரமாய் இருந்ததைக் கண்டேன். ஆம் அதிலிருந்த கனி வெண்மையாய், நான் என்றைக்கும் கண்ட எல்லா வெண்மையையும் மிஞ்சுவதாய் இருக்கக் கண்டேன்.

12 நான் அதிலிருந்த கனியைப் புசித்தபொழுது, அது என் ஆத்துமாவை மிகுந்த மகிழ்ச்சியால் நிறைத்தது; ஆகையால் என் குடும்பத்தினரும் அதைப் புசிக்கவேண்டும் என்று வாஞ்சிக்கத் தொடங்கினேன்; ஏனெனில் அது மற்ற எல்லாக் கனிகளையும்விட விரும்பத்தக்கது என்று நான் அறிவேன்.

13 என் குடும்பத்தாரை ஒருவேளை கண்டுபிடிக்கலாம் என்று என் கண்களைச் சுற்றிலும் ஏறெடுத்ததில், நான் தண்ணீருள்ள ஒரு நதியைக் கண்டேன்; அது நெடுக ஓடிற்று, மேலும் நான் புசித்துக்கொண்டிருந்த கனியிருந்த விருட்சத்தின் பக்கத்திலே அது இருந்தது.

14 அது எங்கிருந்து வந்தது என்று கண்டுபிடிக்க நான் பார்த்தேன்; கொஞ்ச தூரத்துக்கு அப்பால், அதனுடைய ஊற்றுக்கண்ணைக் கண்டேன்; மேலும் அதனுடைய ஊற்றுக்கண் அருகிலே, உன்னுடைய தாய் சரயா, சாம் மற்றும் நேபியைக் கண்டேன்; மேலும் அவர்கள் எங்கே போகவேண்டுமென்று தெரியாதவர்களைப்போல நின்றுகொண்டிருந்தார்கள்.

15 நான் அவர்களிடத்தில் சைகை காட்டினேன்; மேலும் அவர்கள் என்னிடத்தில் வந்து எல்லாக் கனிகளையும் விட, விரும்பத்தக்க இந்தக் கனியைப் புசிக்கவேண்டும் என்று உரத்த குரலிலும் அவர்களிடத்தில் சொன்னேன்.

16 அவர்கள் என்னிடம் வந்து அந்தக் கனியைப் புசித்தார்கள்.

17 லாமானும் லெமுவேலும் வந்து கனியைப் புசிக்கவேண்டுமென நான் ஆசைப்பட்டேன்; ஆகையால் அவர்களை ஒருவேளை பார்க்கலாமென்று, என் கண்களை ஆற்றின் ஊற்றுக்கண்ணை நோக்கி ஏறெடுத்தேன்.

18 நான் அவர்களைக் கண்டேன், ஆனால் அவர்கள் என்னிடம் வந்து கனியைப் புசிக்கவில்லை.

19 ஒரு இருப்புக்கோலை நான் கண்டு, அது நதியின் கரையோரமாக நீண்டு, நான் நின்றுகொண்டிருந்த விருட்சத்திற்கு நடத்திச் சென்றது.

20 நான் அருகில் நின்றுகொண்டிருந்த விருட்சம்வரைக்கும், இருப்புக்கோல் அருகிலே வந்த, இடுக்கமும், நெருக்கமுமான பாதை, நெடுக வருவதை நான் கண்டேன்; அது மேலும் ஊற்றுக்கண் பக்கத்தில், ஒரு உலகம்போல் இருந்த ஒரு பரந்த விசாலமான நிலத்திற்கு வழிநடத்தியது.

21 நான் எண்ணிலடங்கா ஜனக்கூட்டத்தைக் கண்டேன், அதில் பலர், நான் நின்றுகொண்டிருந்த விருட்சத்திற்கு நடத்திச்சென்ற பாதையை அடையவேண்டுமென்பதற்காக அவர்கள் முன்னேறிச் சென்றனர்.

22 அவர்கள் வந்து, விருட்சத்திற்கு நடத்திச்சென்ற பாதையில் செல்லத்தொடங்கினர்.

23 அங்கே ஒரு இருள் மூடுபனி எழும்பியது; ஆம், அந்த மிகப் பெரிய மூடுபனி, அந்தப் பாதையில் செல்லத்தொடங்கினவர்கள், தங்கள் வழிதவறி, அலைந்துபோய், காணாமற் போகுமளவிற்கு இருந்தது.

24 மற்றவர்கள், முன்னேறிச் செல்வதை நான் கண்டேன், மேலும் அவர்கள் வந்து இருப்புக்கோலின் நுனியைப் பிடித்தார்கள்; அவர்கள் முன்னேறிச் சென்று, விருட்சத்தின் கனியைப் புசிக்கும் மட்டும் இருப்புக்கோலைப் பற்றிப்பிடித்து, இருளின் மூடுபனியில் முன்னேறினார்கள்.

25 அவர்கள் விருட்சத்தின் கனியைப் புசித்த பிறகு அவர்கள் வெட்கப்பட்டவர்கள் போலாகி, அவர்கள் தங்கள் கண்களை ஏறெடுத்தார்கள்.

26 என் கண்களை நான் சுற்றுமுற்றிலும் ஏறெடுத்து, ஒரு பெரிய விசாலமான கட்டிடத்தை நீருள்ள நதிக்கு மறு பக்கத்தில் கண்டேன்; மேலும் அது உயர்ந்து, பூமிக்கு மேலே காற்றில் இருப்பதைப்போல அது நின்றது.

27 அது, முதியோரும், இளைஞரும், ஆண்களும், பெண்களுமாய் ஜனத்தால் நிரப்பப்பட்டிருந்தது; மேலும் அவர்களின் ஆடைகளின் தன்மை மிகவும் அருமையாய் இருந்தது; மேலும் வந்து கனியைப் புசிக்கிறவர்களுக்கு நேராக தங்கள் விரல்களை நீட்டி, பரிகாசம் செய்யும் மனநிலையில் அவர்கள் இருந்தனர்.

28 அவர்களை நிந்தித்தவர்களினிமித்தம் கனியை ருசி பார்த்த பின்பும், அவர்கள் வெட்கம்கொண்டவர்களாகி, அவர்கள் தவிர்க்கப்பட்ட பாதைகளில் தவறிச்சென்று, காணாமற்போனார்கள்.

29 இப்பொழுது நேபியாகிய நான், என் தகப்பனின் எல்லா வார்த்தைகளையும் சொல்லப்போவதில்லை.

30 ஆனால், சுருக்கமாக எழுத வேண்டுமெனில், இதோ, மற்ற திரளான ஜனங்கள் முன்னேறுவதை அவர் கண்டார்; அவர்கள் முன்பாக வந்து, இருப்புக்கோலின் நுனியைப் பிடித்துக் கொண்டார்கள்; மேலும் அவர்கள் வந்து கீழே விழுந்து, விருட்சத்தின் கனியைப் புசிக்கும் மட்டும் தொடர்ந்து இருப்புக்கோலை இறுக்கமாகப் பிடித்து, அவர்கள் தங்கள் வழியில் முன்னேறிச் சென்றனர்.

31 மற்ற திரளான ஜனங்கள் அந்தப் பெரிய விசாலமான கட்டிடத்துக்கு நேராகத் தங்கள் வழியை உணர்வதை அவர் கண்டார்.

32 பலர் நீரூற்றின் ஆழங்களிலே அமிழ்ந்து போனார்கள்; மேலும் அவர் பார்வையிலிருந்து பலர் காணாமற்போய், அறியாத பாதைகளில் அலைந்தனர்.

33 அந்த விசித்திரமான கட்டிடத்திற்குள் நுழைந்த கூட்டமோ மிகப் பெரியதாய் இருந்தது. மேலும் அவர்கள் அந்தக் கட்டிடத்தில் நுழைந்த பின்னர், என்னையும் கனியைப் புசித்துக்கொண்டிருந்தவர்களையும் இகழும்படியாய் விரல்களைக் காண்பித்தனர்; ஆனால் நாங்கள் அவர்கள்மேல் கவனம் செலுத்தவில்லை.

34 இவைகளே என்னுடைய தகப்பனின் வார்த்தைகள், அவற்றிற்கு செவிகொடுத்தவர்கள் அனைவரும் வழி தவறினர்.

35 லாமானும் லெமுவேலும் கனியைப் புசிக்கவில்லை என்று என் தகப்பன் சொன்னார்.

36 தன்னுடைய சொப்பனம் அல்லது தரிசனத்தின் வார்த்தைகள் அனைத்தையும் என் தகப்பன் பேசிய பின்பு, ஒரு தரிசனத்திலே அவர் கண்ட காரியங்களினிமித்தம் லாமான் லெமுவேலுக்காக அவர் மிகவும் பயந்தார் என்று எங்களிடத்தில் அவர் சொன்னார்; ஆம், அவர்கள் கர்த்தரின் பிரசன்னத்திலிருந்து தள்ளப்படக்கூடுமே என்று அவர் பயந்தார்.

37 அவரின் வார்த்தைகளுக்கு அவர்கள் செவிகொடுக்கவேண்டும் என்றும், ஒருவேளை கர்த்தர் அவர்களுக்கு இரக்கமாயிருந்து அவர்களை தள்ளிவிடமாட்டாரென்று, ஒரு உருக்கமான பெற்றோரின் எல்லா உணர்ச்சிகளையும்கொண்டு, அவர்களுக்கு அவர் புத்திசொன்னார்; ஆம், என் தகப்பன் அவர்களிடத்தில் பிரசங்கம் செய்தார்.

38 அவர்களிடத்தில் அவர் பிரசங்கித்து, பல காரியங்களைக் குறித்து தீர்க்கதரிசனம் உரைத்த பின்பு, அவர்களைக் கர்த்தரின் கட்டளைகளைக் கைக்கொள்ளுமாறு கட்டளையிட்டார்; பின்னர் அவர்களிடத்தில் பேசுவதை நிறுத்தினார்.