வேதங்கள்
மரோனி 1


மரோனியின் புஸ்தகம்

அதிகாரம் 1

லாமானியரின் நலனுக்காக மரோனி எழுதுதல் – கிறிஸ்துவை மறுதலிக்காத நேபியர் மரணத்திற்குள்ளாக்கப்படுதல். ஏறக்குறைய கி.பி. 401–421.

1 இப்பொழுது மரோனியாகிய நான், யாரேதின் ஜனங்களுடைய விவரத்தைச் சுருக்கமாக எழுதி முடித்த பின்பு, நான் அதிகமாக எழுதியதாக எண்ணவில்லை. ஆனால் நானோ இன்னும் அழியாதிருக்கிறேன்; லாமானியர் என்னை அழிக்காதபடிக்கு, நான் என்னை அவர்களுக்குக் காண்பிப்பதில்லை.

2 இதோ, அவர்களுடைய யுத்தங்கள் அவர்களுக்குள்ளே தீவிரப்பட்டிருக்கிறது. அவர்களுடைய வெறுப்பினிமித்தம் அவர்கள் கிறிஸ்துவை மறுதலிக்காத ஒவ்வொரு நேபியனையும் மரணத்திற்குள்ளாக்குகிறார்கள்.

3 மரோனியாகிய நான் கிறிஸ்துவை மறுதலிப்பதில்லை; ஆதலால் என் சொந்த ஜீவனின் பாதுகாப்பிற்காக அங்கேயும் இங்கேயுமாக அலைகிறேன்.

4 ஆகவே நான் எண்ணியதற்கு மாறாக, நான் இன்னும் சில காரியங்களை எழுதுகிறேன்; ஏனெனில் நான் இன்னும் அதிகம் எழுதக்கூடாதென்று நினைத்திருந்தேன்; ஆனால் எதிர்காலத்தில் எப்போதாவது, கர்த்தருடைய சித்தத்தின்படி, என் சகோதரர்களாகிய லாமானியர்களுக்குப் பிரயோஜனமாயிருக்கும் பொருட்டு, இன்னும் சிலவற்றை எழுதுகிறேன்.