பொது மாநாடு
சமாதானத்தின் சுவிசேஷத்தைப் பிரசங்கித்தல்
ஏப்ரல் 2022 பொது மாநாடு


5:34

சமாதானத்தின் சுவிசேஷத்தைப் பிரசங்கித்தல்

செவிசாய்க்கிற அனைவருக்கும், இயேசு கிறிஸ்துவின் வல்லமையையும் சமாதானத்தையும் பகிர்ந்து கொள்ளும் பரிசுத்தமான பொறுப்பு நமக்கு இருக்கிறது.

என் அன்புள்ள சகோதர சகோதரிகளே, பொது மாநாட்டுக்கு வரவேற்கிறோம்! மிகுந்த எதிர்பார்ப்புடன் இந்த நாளை நான் எதிர்பார்த்துக் கொண்டிருந்தேன். ஒவ்வொரு நாளும் உங்களுக்காக நான் ஜெபிக்கிறேன். இந்த மாநாடு உங்கள் ஒவ்வொருவருக்கும் ஆவிக்குரிய புத்துணர்ச்சி அளிக்கும் நேரமாக அமைய வேண்டும் என்றும் நான் ஜெபித்தேன்.

கடந்த மாநாட்டிலிருந்து, உலகில் சிரமங்கள் தொடர்கின்றன. உலகளாவிய தொற்றுநோய் இன்னும் நம் வாழ்க்கையை பாதிக்கிறது. இப்போது மில்லியன் கணக்கான அப்பாவி ஆண்கள், பெண்கள் மற்றும் பிள்ளைகள் மீது பயங்கரமாக பொழியும் ஒரு மோதலால் உலகம் உலுக்கப்பட்டுள்ளது.

நமது நாளில் யுத்தங்களும், யுத்தங்களைப்பற்றிய வதந்திகளும் ஏற்படும் என்றும், பூமி முழுவதுமே குழப்பமடையும் என்றும், தீர்க்கதரிசிகள் முன்னறிவித்திருக்கிறார்கள்.1 இயேசு கிறிஸ்துவைப் பின்பற்றுபவர்களாக, தங்கள் வேறுபாடுகளுக்கு அமைதியான தீர்வைக் காணுமாறு நாடுகளின் தலைவர்களிடம் கெஞ்சுகிறோம். தேவைப்படுபவர்களுக்காக ஜெபிக்கவும், துன்பப்படுபவர்களுக்கு உதவ தங்களால் இயன்றதைச் செய்யவும், ஏதேனும் பெரிய மோதல்களை முடிவுக்குக் கொண்டுவர கர்த்தருடைய உதவியை நாடவும் எல்லா இடங்களிலும் உள்ள மக்களை நாங்கள் அழைக்கிறோம்.

சகோதர சகோதரிகளே, இயேசு கிறிஸ்துவின் சுவிசேஷம் இன்றைவிட எப்போதும் அதிகமாக தேவைப்பட்டதில்லை. இரட்சகர் கொண்டிருந்த, கற்பித்த அனைத்தையும் பிணக்கு மீறுகிறது. நான் கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவை நேசிக்கிறேன், அவருடைய சுவிசேஷமே சமாதானத்திற்கான ஒரே நிலையான தீர்வு என்று சாட்சி கூறுகிறேன். அவரது சுவிசேஷம் ஒரு சமாதானத்தின் சுவிசேஷம்.2

உலகில் பலர் அச்சத்தால் திகைத்து நிற்கும் போது அவருடைய சுவிசேஷம் ஒன்றே பதில்.3உலகமெங்கும் போய்சர்வ சிருஷ்டிக்கும் சுவிசேஷத்தைப் பிரசங்கியுங்கள்”4 என்று கர்த்தர் தம் சீடர்களுக்குக் கொடுத்த அறிவுரையை நாம் பின்பற்ற வேண்டிய அவசரத் தேவையை இது அடிக்கோடிட்டுக் காட்டுகிறது. செவிசாய்த்து, தங்கள் வாழ்வில் தேவன் மேலோங்க அனுமதிக்கும் அனைவருக்கும், இயேசு கிறிஸ்துவின் வல்லமையையும் சமாதானத்தையும் பகிர்ந்து கொள்ளும் பரிசுத்தமான பொறுப்பு நமக்கு இருக்கிறது.

தேவனுடன் உடன்படிக்கை செய்த ஒவ்வொரு நபரும், மற்றவர்களைப்பற்றி அக்கறை கொள்வதாகவும், தேவைப்படுபவர்களுக்கு சேவை செய்வதாகவும் வாக்குறுதி அளித்துள்ளனர். நாம் தேவன் மீதுள்ள விசுவாசத்தை வெளிப்படுத்தலாம் மற்றும் “[நம்மில்] இருக்கும் நம்பிக்கையைப்பற்றிக் கேட்பவர்களுக்குப் பதிலளிக்க எப்போதும் தயாராக இருக்க முடியும்.”5 இஸ்ரவேலின் கூடுகையில் செயல்பட நம் ஒவ்வொருவருக்கும் ஒரு பங்கு உண்டு.

தகுதியான, திறமையான ஒவ்வொரு இளைஞனையும் ஒரு ஊழியத்திற்கு ஆயத்தம் செய்து சேவை செய்யும்படி கர்த்தர் கேட்டுக் கொண்டுள்ளார் என்பதை இன்று நான் உறுதியாக உறுதிப்படுத்துகிறேன். பிற்காலப் பரிசுத்தவான் இளைஞர்களுக்கு, ஊழிய சேவை ஒரு ஆசாரியத்துவ பொறுப்பு. இஸ்ரவேலின் வாக்குத்தத்தத்தின் கூடுகை நடைபெறும் போது இந்தக் காலத்திற்காக வாலிபர்களாகிய நீங்கள், வைக்கப்பட்டிருக்கிறீர்கள். நீங்கள் ஊழியங்களைச் செய்யும்போது, இந்த முன் நிகழாத நிகழ்வில் நீங்கள் ஒரு முக்கியப் பங்கை வகிக்கிறீர்கள்!

இளம் மற்றும் திறமையான சகோதரிகளாகிய உங்களுக்கு, ஒரு ஊழியம் என்பது ஒரு ஆற்றல்மிக்க, ஆனால் கட்டாயமற்ற, வாய்ப்பாகும். சகோதரி ஊழியக்காரர்களை நாங்கள் நேசிக்கிறோம், அவர்களை முழு மனதுடன் வரவேற்கிறோம். இந்த பணிக்கு நீங்கள் அளித்த பங்களிப்பு மகத்துவமானது! நீங்கள் ஒரு ஊழியத்தைச் செய்ய கர்த்தர் உங்களை அனுமதிப்பாரா என்பதை அறிய ஜெபியுங்கள், பரிசுத்த ஆவியானவர் உங்கள் இருதயத்திற்கும் மனதிற்கும் பதிலளிப்பார்.

அன்பான இளம் நண்பர்களே, நீங்கள் ஒவ்வொருவரும் கர்த்தருக்கு இன்றியமையாதவர்கள். இஸ்ரவேலைக் கூட்டிச் சேர்ப்பதற்காக அவர் உங்களை இது வரையில் இருப்பில் வைத்திருக்கிறார். மனமாற்றம் செய்தாலும் அல்லது ஊழியப் பணியாக இருந்தாலும், ஒரு ஊழியத்திற்கு சேவை செய்வதற்கான உங்கள் முடிவு உங்களையும் அநேகரையும் ஆசீர்வதிக்கும். அவர்களின் சூழ்நிலைகள் அனுமதிக்கும் போது சேவை செய்ய மூத்த தம்பதிகளையும் நாங்கள் வரவேற்கிறோம். அவர்களின் முயற்சிகள் வெறுமனே ஈடுசெய்ய முடியாதவை.

அனைத்து ஊழியக்காரர்களும் இரட்சகரைப்பற்றி போதிக்கிறார்கள் மற்றும் சாட்சியமளிக்கிறார்கள். உலகில் உள்ள ஆவிக்குரிய இருள் இயேசு கிறிஸ்துவின் ஒளி எப்போதையும்விட அதிகமாக அவசியப்படுத்துகிறது. இயேசு கிறிஸ்துவின் மறுஸ்தாபிதம் செய்யப்பட்ட சுவிசேஷத்தைப்பற்றி அறிந்து கொள்ளும் வாய்ப்பு அனைவருக்கும் தகுதியானது. “எல்லாப் புத்திக்கும் மேலான”6 சமாதானத்தை [கடந்து செல்லும்] அவர்கள் நம்பிக்கையையும் சமாதானத்தையும் எங்கு காணலாம் என்பதை ஒவ்வொரு நபரும் அறியத் தகுதியானவர்.

இந்த மாநாடு உங்களுக்கு சமாதானம் மற்றும் ஆவிக்குரிய விருந்தின் நேரமாக அமையட்டும். இந்த கூட்டங்களின் போது நீங்கள் தனிப்பட்ட வெளிப்பாட்டைத் தேடவும் பெறவும், நான் இயேசு கிறிஸ்துவின் பரிசுத்த நாமத்தில் ஜெபிக்கிறேன், ஆமென்.