உதாரணமான பிற்காலப் பரிசுத்தவான்கள் ஆகுதல்
நீங்கள் கர்த்தரின் வார்த்தையை ருசித்து, அவரது போதனைகளை உங்கள் சொந்த வாழ்க்கையில் பிரயோகிக்க வேண்டும் என என் அன்பையும் ஆசீர்வாதத்தையும் உங்களுக்குக் கொடுக்கிறேன்.
இது ஒரு உணர்த்தப்பட்ட மற்றும் வரலாற்றுச் சிறப்பு மிக்க மாநாடாக இருந்திருக்கிறது. நாம் உற்சாகத்துடன் எதிர்காலத்தை நோக்குகிறோம். சிறப்பாகச் செய்யவும், சிறப்பாக இருக்கவும் நாம் ஊக்குவிக்கப்பட்டிருக்கிறோம். நமது பொது அதிகாரிகளாலும் பொது அலுவலர்களாலும் இந்த பீடத்திலிருந்து கொடுக்கப்பட்ட அற்புதமான செய்திகளும் இசையும் மாட்சிமை பொருந்தியதாக இருந்திருக்கிறது. இந்த வாரத்திலிருந்தே தொடங்கி இந்த செய்திகளை படிக்குமாறு நான் வலியுறுத்துகிறேன். 1 அவை இன்று தன் ஜனத்துக்கு கர்த்தரின் மனதையும் சித்தத்தையும் தெரிவிக்கின்றன.
விசுவாசத்தின் புகலிடமாக தங்கள் வீட்டை மாற்ற ஒவ்வொரு குடும்பமும் விழிப்புடனும் கவனமாகவும், பின்பற்றும்போது, குடும்பங்களின் வல்லமையை கட்டவிழ்க்க வீட்டை மையமாகக்கொண்ட, சபையால் ஆதரிக்கப்படுகிற பாடத்திட்டம் திறனுடையது. சுவிசேஷம் கற்கும் இடமாக உங்கள் வீட்டை மாற்றியமைக்க நீங்கள் கருத்தாக உழைக்கும்போது, காலப்போக்கில் உங்கள் ஓய்வு நாட்கள் உண்மையாகவே மகிழ்ச்சியின் நாட்களாக இருக்கும். இரட்சகரின் போதனைகளைக் கற்கவும் பின்பற்றவும் உங்கள் பிள்ளைகள் உற்சாகமடைவர், உங்கள் வாழ்க்கையிலும் உங்கள் வீட்டிலும் சத்துருவின் செல்வாக்கு குறையும். உங்கள் குடும்பத்தில் மாற்றங்கள் உண்டாகி நிலைத்திருக்கும்
அவரது சபையைக் குறிப்பிடும் ஒவ்வொரு முறையும் கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவைக் கனம்பண்ண தேவையான முயற்சிகளை செயலாக்க நமது தீர்மானத்தை இந்த மாநாட்டின்போது நாம் பலப்படுத்தியிருக்கிறோம். இரட்சகரின் சபை மற்றும் அதன் அங்கத்தினர்களின் சரியான பெயரை பயன்படுத்த நமது ஆழ்ந்த கவனம் அதிகரித்த விசுவாசத்துக்கும், அவரது சபையின் அங்கத்தினர்களுக்கு மகத்தான ஆவிக்குரிய வல்லமைக்கும் வழிநடத்தும் என நான் உங்களுக்கு வாக்குத்தத்தம் செய்கிறேன்.
இப்போது நாம் ஆலயம் என்கிற தலைப்புக்குத் திரும்புவோம். நாம் மற்றும் நமது குடும்பத்தினரின் இரட்சிப்புக்கும், மேன்மைப்படுதலுக்கும் ஆலயத்தில் நாமிருக்கும் நேரம் முக்கியம் என நாம் அறிவோம்.
நாம் நமது சொந்த நியமங்களைப் பெற்று தேவனுடன் பரிசுத்த உடன்படிக்கைகள் செய்த பிறகு, கர்த்தரின் வீட்டில் மட்டுமே சாத்தியமாகிற தொடர்ந்த ஆவிக்குரிய பெலப்படுத்தலும் படிப்பித்தலும் நம் ஒவ்வொருவருக்கும் தேவை. அவர்களுக்காக நாம் பதிலியாக இருப்பது நமது முன்னோர்களுக்குத் தேவை.
உலகத்தின் அஸ்திவாரம் போடப்படுவதற்கு முன்பே சுவிசேஷ அறிவின்றி மரித்தவர்களுக்கு ஆலய ஆசீர்வாதங்களைக் கொடுக்க ஒரு வழி ஏற்படுத்திய தேவனின் மாபெரும் இரக்கத்தையும் நன்மையையும் கருத்தில் கொள்ளுங்கள். இந்த பரிசுத்த சடங்குகள் பூர்வகாலத்தவை. எனக்கு அந்த பழமை மகிழச்சியளிக்கிறது மற்றும் அவற்றின் அதிகார பூர்வத்துக்கு சான்றாகின்றது. 2
என் அன்பு சகோதர சகோதரிகளே, சத்துருவின் தாக்குதல்கள் ஆற்றலிலும் விதத்திலும் அதிவேகமாக அதிகரிக்கிறது. 3 வழக்கமான முறையில் ஆலயத்தில் இருக்கும் நமது தேவை ஒருபோதும் இவ்வளவு அதிகமாக இருக்கவில்லை. நீங்கள் எப்படி நேரத்தை செலவு செய்கிறீர்கள் என ஜெபத்துடன் பார்க்க வேண்டுமென நான் உங்களைக் கேட்கிறேன். உங்கள் மற்றும் உங்கள் குடும்ப எதிர் காலத்துக்காக நேரம் செலவு செய்யுங்கள். நீங்கள் ஆலயம் செல்ல போதுமான சாத்தியங்கள் இருந்தால், கர்த்தருடன் வழக்கமான நேரம் செலவிட ஒரு வழி கண்டுபிடிக்கவும், அவரது பரிசுத்த வீட்டில் இருக்கவும், பின்பு அந்த நேரத்தை சரியாகவும் சந்தோஷமானதாகவும் ஆக்க நான் உங்களை வலியுறுத்துகிறேன். அவரது ஆலயங்களில் சேவை செய்யவும் ஆராதிக்கவும், நீங்கள் தியாகங்கள் செய்யும்போது, உங்களுக்குத் தேவை என அவர் அறிகிற, அற்புதங்களைக் கர்த்தர் கொண்டு வருவார் என நான் வாக்குத்தத்தம் செய்கிறேன்.
தற்போது பிரதிஷ்டை செய்யப்பட்ட 159 ஆலயங்கள் இருக்கின்றன. அந்த ஆலயங்களின் முறையான கவனிப்பும் பராமரிப்பும் நமக்கு மிக முக்கியம். காலம் கடந்து போகும்போது, புத்துணர்வுக்கும் புதுப்பித்தலுக்கும் தவிர்க்கமுடியாதபடி தேவைப்படுகின்றன. அதன்படி, சால்ட் லேக் ஆலயத்தையும் பிற முன்னோடி சந்ததிகளின் ஆலயங்களையும், புதுப்பித்து காலமாற்றம் செய்ய திட்டங்கள் தீட்டப்பட்டுள்ளன. அவை விருத்தி செய்யப்படும்போது இத்திட்டங்களின் விவரங்கள் பகிர்ந்து கொள்ளப்படும்.
கூடுதலாக 12 ஆலயங்களைக் கட்ட திட்டங்களை அறிவிப்பதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம். பின்வரும் இடங்களில் இந்த ஆலயங்கள் கட்டப்படும். மெண்டோசா, அர்ஜெண்டினா; சால்வடோர், பிரேசில்; யூபா சிட்டி, கலிபோர்னியா; நாம்பென், கம்போடியா; ப்ரையா, கேப் வெர்டே; யிகோ, குவாம்; பீப்லோ, மெக்சிகோ; ஆக்லாந்து, நியூசிலாந்து; லாகோஸ், நைஜீரியா; டாவோ, பிலிப்பைன்ஸ்; சான் ஜுவான், போர்ட்டா ரிக்கா மற்றும் வாஷிங்டன் கௌண்டி, யூட்டா.
ஆலயங்கள் கட்டுவதும் பராமரிப்பதும், உங்கள் வாழ்க்கையை மாற்றாது, ஆனால் ஆலயத்தில் உங்கள் நேரத்தை செலவு செய்தல் மாற்றும். ஆலயத்துக்கு நீண்ட நாட்கள் செல்லாதவர்களுக்கு, கூடிய சீக்கிரத்தில் ஆயத்தம் செய்து திரும்பவும் வர நான் உங்களை ஊக்குவிக்கிறேன். இந்த பரிசுத்த கால வரையரையற்ற பணியை அவர் வழிநடத்துகிறார் என்ற உங்கள் சொந்த சாட்சியை நீங்கள் ஒவ்வொருவரும் பெறும்படிக்கு, ஆலயத்தில் ஆராதிக்கவும், உங்கள் மீது இரட்சகரின் எல்லையற்ற அன்பை ஆழமாக உணரவும் நான் உங்களை வரவேற்கிறேன். 4
சகோதர சகோதரிகளே, உங்கள் விசுவாசத்துக்காகவும், தொடர்ந்த முயற்சிகளுக்காகவும், நான் நன்றி சொல்லுகிறேன். நீங்கள் கர்த்தரின் வார்த்தையை ருசித்து, உங்கள் தனிப்பட்ட வாழ்வில் அவரது போனைகளை பிரயோகிக்க வேண்டும் என என் அன்பையும் ஆசீர்வாதத்தையும் உங்களுக்கு கொடுக்கிறேன். சபையில் வெளிப்படுத்தல் தொடர்ந்து கொண்டிருக்கிறது, தேவனின் நோக்கங்கள் நிறைவேறும் மட்டும், மாட்சிமை மிக்க யெகோவா பணி செய்யப்பட்டுவிட்டது என சொல்லுமட்டும், தொடரும் எனவும் நான் உறுதியளிக்கிறேன். 5
வாழ்க்கையில் உங்கள் சொந்த சவால்களில் விசுவாசத்துடனும் பொறுமையுடனும், நிலைத்திருக்க, அவரிலும் அவரது பணியிலும் அதிக விசுவாசத்துடன் உங்களை ஆசீர்வதிக்கிறேன். நீங்கள் உதாரணமான பிற்காலப் பரிசுத்தவான்களாக நான் உங்களை ஆசீர்வதிக்கிறேன். நான் உங்களை ஆசீர்வதித்து, தேவன் ஜீவிக்கிறார் என்ற என் சாட்சியைச் சொல்லுகிறேன்! இயேசுவே கிறிஸ்து! இது அவரது சபை! நாம் அவரது ஜனம். இயேசு கிறிஸ்துவின் நாமத்தினாலே, ஆமென்.