இன்று தெரிந்துகொள்ளுங்கள்
நமது நித்திய சந்தோஷத்தின் அளவு ஜீவனுள்ள தேவனைத் தேர்ந்தெடுப்பதையும் அவருடைய பணியில் அவரோடு சேருவதையும் பொருத்தது.
மந்திரம் செய்கிற கற்பனைப் பாத்திரமான மேரி பாப்பின்ஸ் ஒரு வழக்கமான ஆங்கிலப் பாட்டி. 1 எட்வர்ட் காலத்து லண்டனின், எண் 17, செர்ரி ட்ரீ லேனிலுள்ள பதற்றமான பேங்ஸ் குடும்பத்திற்கு உதவ கிழக்கு புயலை அவள் ஊதுகிறாள். பிள்ளைகள் ஜேன் மற்றும் மைக்கேல் அவளின் பொறுப்பில் விடப்பட்டார்கள். ஒரு உறுதியான ஆனால் இரக்கமான முறையில், மயக்கும் விதத்தில் மதிப்புள்ள பாடங்களை கற்றுக்கொடுக்க அவள் ஆரம்பிக்கிறாள்.
ஜேனும் மைக்கேலும் கணிசமாக முன்னேறுகிறார்கள் ஆனால் அங்கிருந்து போவதற்கு இதுதான் நேரமென மேரி தீர்மானிக்கிறாள். நாடக மேடை தயாரிப்பில் மேரியின் புகைபோக்கி சுத்தமாக்குகிற நண்பன் பெர்ட், அவள் போவதைத் தடுக்க முயற்சிக்கிறான். “ஆனால் மேரி, அவர்கள் நல்ல பிள்ளைகள்” என அவன் வாதாடுகிறான்.
“இல்லையென்றால் நான் அவர்களைப்பற்றிக் கவலைப்படுவேனா? ஆனால் அவர்கள் என்னை விடவில்லையென்றால் நான் அவர்களுக்குதவ முடியாது, பிள்ளை எல்லாவற்றையும் அறிந்திருக்கிறபடியால் கடினமாகப் போதிக்க யாருமே இல்லை” என மேரி பதிலளிக்கிறாள்.
“ஆகவே?” பெர்ட் கேட்கிறான்
“அடுத்த கொஞ்சத்தை தாங்களாகவே அவர்கள் செய்யவேண்டும்” 2 என மேரி பதிலளித்தாள்.
சகோதர, சகோதரிகளே, ஜேன், மைக்கேல் பேங்ஸைப்போல அக்கறை காட்டப்பட நாம் தகுதியுள்ள பிள்ளைகள். நமது பரலோக பிதா நமக்கு உதவவும் ஆசீர்வதிக்கவும் விரும்புகிறார், ஆனால் எப்போதுமே நாம் அவரை அனுமதிப்பதில்லை. சிலநேரங்களில், எல்லாவற்றையும் ஏற்கனவே நாம் அறிந்திருப்பதாகக் கூட நாம் செயல்படுகிறோம். நாமும்கூட “அடுத்த கொஞ்சத்தை” நாமே செய்யவேண்டும். அதனால்தான் அநித்தியத்திற்கு முந்தைய பரலோக வீட்டிலிருந்து நாம் பூமிக்கு வந்தோம். நமது “கொஞ்சமென்பது” தேர்ந்தெடுப்புகள் செய்வதை அடக்கியிருக்கிறது.
பெற்றோராயிருப்பதில் நமது பரலோக பிதாவின் இலக்கு சரியென்பதை அவருடைய பிள்ளைகள் செய்வதைத் தடுப்பது அல்ல, செய்வதற்கு எது சரியென்பதை அவருடைய பிள்ளைகள் தேர்ந்தெடுத்து, இறுதியாக அவரைப்போலாகுவதாகும். கீழ்ப்படிதலுள்ளவர்களாக மட்டும் நாமிருக்க அவர் விரும்பினால், நமது நடத்தைகளில் செல்வாக்கு ஏற்படுத்த உடனடி வெகுமதிகளையும் தண்டனைகளையும் அவர் பயன்படுத்துவார்.
ஆனால் பயிற்சி பெற்று சிலஸ்டியல் அறையில் அவருடைய காலணிகளை தின்னாதிருக்கிற கீழ்ப்படிதலுள்ள “செல்லப்பிராணிகளாக” அவருடைய பிள்ளைகளிருக்க அவர் விரும்பவில்லை.3 இல்லை, அவருடைய பிள்ளைகள் ஆவிக்குரிய பிரகாரமாக வளர்ந்து அவருடைய பணியில் அவரோடு சேர தேவன் விரும்புகிறார்.
அவருடைய இராஜ்ஜியத்தில் சுதந்தரவாளிகளாகவும், அவரைப்போலாகவும், அவருக்கிருந்த விதமான வாழ்க்கையைக் கொண்டிருக்கவும், அவருடைய பிரசன்னத்தில் குடும்பங்களாக என்றென்றும் வாழவும் நடத்துகிற ஒரு உடன்படிக்கையின் பாதையான ஒரு திட்டத்தை தேவன் நிறுவியிருக்கிறார். 4 நமது நித்தியத்திற்கு முந்தைய ஜீவியத்தில் நாம் கற்றுக்கொண்ட தனிப்பட்ட தேர்ந்தெடுப்பு இந்த திட்டத்திற்கு முக்கியமானதாயிருந்தது, இருக்கிறது. நாம் இந்த திட்டத்தை ஏற்றுக்கொண்டு, பூமிக்கு வர தேர்ந்தெடுத்தோம்.
நாம் விசுவாசத்தை பிரயோகிக்கவும், நமது சுயாதீனத்தை சரியாகப் பயன்படுத்த கற்றுக்கொள்வோமென்பதையும் உறுதிசெய்ய, தேவனின் திட்டத்தை நாம் நினைவுகூராதிருக்க நமது மனங்களுக்கு மேலே மறதி என்ற திரை போடப்பட்டது. அந்த திரையில்லாமல் தேவனின் நோக்கங்கள் அடைய முடியாததாயிருக்கிறது, ஏனெனில் அவர் விரும்புகிறபடி நாம் இருக்க, முன்னேற மாட்டோம் மற்றும் நம்பிக்கையுள்ள சுதந்தரவாளிகளாக நாம் மாறமாட்டோம்.
தீர்க்கதரிசி லேகி சொன்னான், “ஆகையால், கர்த்தராகிய தேவன் மனுஷன் தானாகவே செயல்படும்படிக்கு அருளினார். அதினிமித்தம் மனுஷன் ஒன்றாலோ அல்லது மற்றொன்றாலோ சோதிக்கப்பட்டாலொழிய அவன் தனக்கென்று கிரியை செய்யமுடியாது.” 5 ஒரு அடிப்படை நிலையில், பிதாவின் முதற்பேறானவரான இயேசு கிறிஸ்து பிரதிநிதியாவது ஒரு சாத்தியம். சுயாதீனத்தை அழித்து, அதிகாரத்தை அபகரிக்க விரும்புகிற, மற்றொரு சாத்தியம் சாத்தானின் பிரதிநிதியாயிருக்கிற லூசிபர். 6
இயேசு கிறிஸ்துவில் “பிதாவுடன் பரிந்து பேசுகிறவர் ஒருவர் நமக்கிருக்கிறார்.”7 அவருடைய பாவநிவர்த்தியின் பலியை நிறைவேற்றிய பின்னர் இயேசு “மனுபுத்திரர் மேல் வைத்திருந்த தம்முடைய இரக்க உரிமைகளைப் பிதாவினிடத்திலிருந்து கோரத்தக்கதாக அவர் பரலோகத்திற்கு ஏறினார்.” இரக்க உரிமைகளைக் கோரி “மனுபுத்திரருக்காக அவர் பரிந்து பேசுகிறார்.” 8
நமக்காக பிதாவிடம் கிறிஸ்துவின் பரிந்துரைத்தல் எதிரானதல்ல. அவருடைய சித்தம் பிதாவினுடைய சித்தத்தினால் விழுங்கப்பட அனுமதித்த, 9 இயேசு கிறிஸ்து ஆரம்பத்திலிருந்தே பிதா விரும்பியதைவிட பிற எதற்காகவும் போராடமாட்டார். நமது வெற்றிகளில் பரலோக பிதா சந்தேகமின்றி உற்சாகப் படுத்துகிறார்.
அவர் நம்முடைய பாவங்களுக்காக கிரயம் செலுத்திவிட்டாரென்றும், தேவனின் இரக்கத்தை அடைவதிலிருந்து யாருமே விடுபடவில்லை என்றும் நமக்கு நினைவூட்ட, கிறிஸ்துவின் பரிந்துரை குறைந்த பட்சம் பகுதியாயிருக்கிறது. 10 இயேசு கிறிஸ்துவில் நம்பிக்கை வைப்பவர்கள் ஒப்புரவாகுதலுக்கு நடத்துகிற11 ஒரு செயல்முறையான, மனந்திரும்பி, ஞானஸ்நானம் பெற்று, முடிவுபரியந்தம் நிலைத்திருக்கிறார்கள், இரட்சகர் மன்னிக்கிறார், குணமாக்குகிறார், பரிந்துரைக்கிறார். தேவனுடன் நமது ஒப்புரவாகுதலுக்கு சான்றளிக்கிற, உறுதியளிக்கிற, அவர் நமது உதவியாளர், ஆறுதலளிப்பவர், மத்தியஸ்தர். 12
முற்றிலும் மாறுபட்ட, லூசிபர் ஒரு குற்றம் சுமத்துபவன் அல்லது தண்டிப்பவன். லூசிபரின் முற்றிலுமான தோல்வியை வெளிப்படுத்துபவனான யோவான் விளக்கினான்: “அப்பொழுது வானத்திலே ஒரு பெரிய சத்தமுண்டாகி, இப்பொழுது இரட்சிப்பும் வல்லமையும் நமது தேவனுடைய ராஜ்யமும், அவருடைய கிறிஸ்துவின் அதிகாரமும் உண்டாயிருக்கிறது, இரவும் பகலும் நம்முடைய தேவனுக்கு முன்பாக நம்முடைய சகோதரர் மேல் குற்றஞ் சுமத்தும்பொருட்டு அவர்கள் மேல் குற்றஞ்சாட்டுகிறவன் தாழத் தள்ளப்பட்டுப் போனான்.” 13
லூசிபரே இந்தக் குற்றம் சுமத்துபவன். அநித்தியத்திற்கு முந்தைய ஜீவியத்தில் அவன் நமக்கு எதிராகப் பேசினான், இந்த வாழ்க்கையிலும் அவன் தொடர்ந்து நம்மைக் குறை சொல்கிறான். அவன் நம்மைக் கீழே இழுக்க நாடுகிறான். முடிவில்லாத துயரை நாம் அனுபவிக்க அவன் விரும்புகிறான். போதுமானளவுக்கு நாம் நல்லவர்களல்ல என நமக்குக்குக் கூறுகிற, தவறுக்கு எந்த மீட்புமில்லை என நமக்குக் கூறுகிற, அவனே, நாம் போதுமானவர்களல்ல என நமக்குக் கூறுகிறான். நாம் கீழே விழும்போது நம்மை உதைக்கிற, அவனே முடிவான தண்டிப்பவன்.
ஒரு பிள்ளைக்கு நடக்க லூசிபர் கற்றுக்கொடுத்து, அந்தப் பிள்ளை தடுமாறினால் அவன் பிள்ளையிடம் கூச்சலிட்டு அவனைத் தண்டிப்பான், முயற்சிப்பதைக் கைவிடும்படி அவனுக்குக் கூறுவான். முடிவில், லூசிபரின் வழிகள் கடைசியாகவும் எப்போதுமே ஊக்கமிழத்தல்களையும் விரக்தியையும் கொண்டுவரும். இந்த பொய்களின் தகப்பன் பொய்யைப் பயிற்றுவிக்கிறதில் இறுதியானவன்14 மற்றும் ஏமாற்ற, தந்திரமாய் வேலைசெய்து, “தன்னைப்போல மனுஷர் யாவரும் துர்ப்பாக்கியவான்களாய் இருக்க வகை தேடுகிறதற்காக” 15 நம்மை திசைதிருப்புகிறான்.
ஒரு பிள்ளை நடப்பதற்கு கிறிஸ்து கற்றுக்கொடுத்தால், பிள்ளை தடுமாறினால் எழுந்திருக்க பிள்ளைக்கு உதவி அடுத்த அடிவைக்க ஊக்குவிப்பார். 16 கிறிஸ்து உதவியளிப்பவர், ஆறுதலளிப்பவர். அவருடைய வழிகள் கடைசியாகவும் எப்போதுமே மகிழ்ச்சியையும் நம்பிக்கையையும் கொண்டுவருகிறது.
வேதங்களில் கட்டளைகளாக குறிப்பிடப்பட்டிருக்கிற தேவனுடைய திட்டத்தில் நமக்காக வழிகாட்டுதல்கள் அடங்கியிருக்கிறது. இந்த கட்டளைகள் விசித்திரமான தொகுப்புகளில்லை, அல்லது கீழ்படிதலாயிருக்க நமக்கு பயிற்றுவிக்க மட்டும் திணிக்கப்பட்ட விதிகளின் தன்னிச்சையான சேகரிப்புமில்லை. நமது தேவ தன்மைகளை விருத்தி செய்வதிலும், நமது பரலோக பிதாவினிடத்தில் திரும்புவதிலும், நிலையான மகிழ்ச்சியைப் பெறுவதிலும் அவைகள் இணைக்கப்பட்டிருக்கின்றன. அவருடைய கட்டளைகளுக்கு கீழ்ப்படிதல் குருடானதல்ல, நாம் அறிந்தே தேவனையும் வீட்டிற்கான அவருடைய பாதையையும் தேர்ந்தெடுத்தோம். நமக்கான மாதிரியேதான் ஆதாமுக்கும் ஏவாளுக்குமிருந்தது, அங்குதான், “தேவன் அவர்களுக்கு மீட்பின் திட்டத்தை வெளிப்படுத்தின பின்னர் அவர்களுக்குக் கற்பனையைக் கொடுத்தார்.” 17 நாம் உடன்படிக்கையின் பாதையிலிருக்க தேவன் விரும்பினாலும்கூட, தேர்ந்தெடுக்கும் கண்ணியத்தை அவர் நமக்குக் கொடுக்கிறார்.
உண்மையாகவே, அவனுக்காக அல்லது அவளுக்காக அவருடைய பிள்ளைகள் ஒவ்வொருவரும் தேர்ந்தெடுக்கும்படி தேவன் விரும்புகிறார், எதிர்பார்க்கிறார், வழிகாட்டுகிறார். சுயாதீன வரத்தின் மூலமாக “தங்களுக்குத் தாங்களே செயல்படுகிறவர்களாயிருந்து வேறொன்றாலும் செயல்படுத்தப்படாதிருக்க” 18 தேவன் அவருடைய பிள்ளைகளை அனுமதிக்கிறார். பாதையிலிருக்க அல்லது இல்லாதிருக்க தேர்ந்தெடுக்க சுயாதீனம் நம்மை அனுமதிக்கிறது. பாதையை விட்டு விலக அல்லது விலகாதிருக்க, இது நம்மை அனுமதிக்கிறது. கீழ்ப்படிய நம்மை கட்டாயப்படுத்த முடியாததைப்போல, கீழ்ப்படியாமலிருக்க நம்மை கட்டாயப்படுத்தமுடியாது. நமது ஒத்துழைப்பில்லாமல் யாராலும் நம்மை பாதையிலிருந்து விலகச்செய்ய முடியாது. (சுயாதீனத்தை மீறியவர்களோடு இது குழப்பப்படக்கூடாது. அவர்கள் பாதிக்கப்பட்டவர்கள். அவர்கள் தேவனின் புரிதலையும், அன்பையும், மனதுருக்கத்தையும் பெறுகிறார்கள்.)
நாம் பாதையிலிருந்து விலகும்போது தேவன் துக்கப்படுகிறார் ஏனெனில் முடிவாக இதை அவர் அறிந்திருக்கிறார், ஆனால் வழக்கமாக இது மங்கிய சந்தோஷத்திற்கும் இழக்கப்பட்ட ஆசீர்வாதங்களுக்கும் நடத்துகிறது. பாதையிலிருந்து விலகுதல், வேதங்களில் பாவமென குறிப்பிடப்படுகிறது, சந்தோஷத்தின் குறைதலும் ஆசிர்வாதங்களின் இழப்பும் தண்டனை என அழைக்கப்படுகிறது. இதற்கு அர்த்தம் தேவன் நம்மை தண்டிக்கிறார் என்பதல்ல; தண்டனை நமது தேர்ந்தெடுப்புகளின் விளைவு, அவருடையதல்ல.
நாம் பாதையிலிருந்து விலகியிருக்கிறோமென்பதை நாம் கண்டுபிடிக்கும்போது, நாம் விலகியிருக்கலாம், அல்லது இயேசு கிறிஸ்துவின் பாவநிவர்த்தியால் நமது தீர்மானங்களை திருப்ப நாம் தேர்ந்தெடுத்து, திரும்ப வரலாம். மாறுவதற்கு தீர்மானித்து பாதைக்கு திரும்ப வருகிற நடைமுறை மனந்திரும்புதலாக வேதங்களில் குறிப்பிடப்படுகிறது. மனந்திரும்ப தவறுதல் என்பது கொடுப்பதற்கு தேவன் விரும்புகிற ஆசீர்வாதங்களிலிருந்து நம்மை தகுதியில்லாதிருக்க தேர்ந்தெடுக்கிறோமென அர்த்தமாகிறது. “[நாம்] பெற்றிருக்கவேண்டியதை அனுபவிக்க விரும்பாதலால் [நாம்] பெற விரும்பியதை அனுபவிக்க மீண்டும் [நமது] சொந்த இடத்திற்கு நாம் திரும்புவோம்” 19, இது நம்முடைய தேர்ந்தெடுப்பு, தேவனுடையதல்ல.
எவ்வளவு நீண்ட காலம் பாதையிலிருந்து விலகியிருந்தோம் அல்லது எவ்வளவு தூரம் நாம் சுற்றித்திரிந்தோமென்பதைப் பொருட்படுத்தாமல் மாறுவதற்கு நாம் தீர்மானித்த உடனே, திரும்புவதற்கு தேவன் நமக்குதவுகிறார். 20 உண்மையான மனந்திரும்புதலின் மூலமாகவும், கிறிஸ்துவில் திடநம்பிக்கையுடன் முன்னேறிச்செல்வதின் மூலமாக, பாதையில் ஒருமுறை திரும்ப வரும்போது, ஒருபோதும் வெளியில் போகாதது போல தேவனின் பார்வையில் கருதப்படுகிறது. 21 நமது பாவங்களுக்காக இரட்சகர் கிரயம் செலுத்தி, சந்தோஷத்திலும் ஆசீர்வாதங்களிலும் பயமுறுத்துகிற குறைவிலிருந்து நம்மை விடுவிக்கிறார். மன்னிப்பாக இது வேதங்களில் குறிப்பிடப்படுகிறது. ஞானஸ்நானத்திற்குப் பின் அங்கத்தினர்கள் அனைவரும் பாதையிலிருந்து வெளியில் நழுவுகிறார்கள், நம்மில் சிலர் மூழ்குகிறோம். ஆகவே, இயேசு கிறிஸ்துவில் விசுவாசத்தை வைத்தல், மனந்திரும்புதல், அவரிடமிருந்து உதவி பெறுதல், மன்னிக்கப்படுதல் ஒரு முறை நிகழ்ச்சி அல்ல, ஆனால் திரும்ப திரும்பச் செய்கிற, மறுசெய்கையுடைய நடைமுறையான வாழ்நாள் முழுவதற்கான நடைமுறைகள். இப்படித்தான் நாம் “முடிவுபரியந்தம் நிலைத்திருக்கிறோம்.” 22
நாம் யாருக்கு சேவை செய்கிறோமென்பதை நாம் தேர்ந்தெடுக்கவேண்டும். 23 நமது நித்திய சந்தோஷத்தின் அளவு ஜீவனுள்ள தேவனைத் தேர்ந்தெடுப்பதையும் அவருடைய பணியில் அவரோடு சேருவதையும் பொருத்தது. நாம் சொந்தமாக அடுத்த கொஞ்சத்தை செய்ய நாம் முயற்சிக்கும்போது நமது சுயாதீனத்தை சரியாகப் பயன்படுத்த நாம் பயிலுகிறோம். இரண்டு முந்தைய பொது ஒத்தாசைச் சங்கத் தலைவர்கள் சொன்னதைப்போல, “எல்லா நேரங்களிலும் செல்லமும் திருத்தமும் தேவையாயிருக்கிற குழந்தைகளாக” 24 நாம் இருக்கக்கூடாது. இல்லை, நம்மையே நாம் ஆளுகை செய்கிற முதிர்ச்சியான வயதுவந்தோராக நாம் மாற தேவன் விரும்புகிறார்.
அவருடைய இராஜ்ஜியத்தில் சுதந்தரவாளிகளாக பிதாவின் திட்டத்தைப் பின்பற்ற தேர்ந்தெடுத்தல் ஒரே வழி, அப்போதுதான் அவருடைய சித்தத்திற்கு எதிரானதைக் கேட்க மாட்டோம் என அவர் நம்மை நம்ப முடியும். 25 “எல்லாவற்றையும் அறிந்திருக்கிற பிள்ளைக்கு கடினமாகப் போதிக்க யாருமில்லை” என்பதை நாம் நினைவில் வைக்கவேண்டும். ஆகவே கர்த்தருடைய வழிகளில் கர்த்தராலும் அவருடைய ஊழியக்காரர்களாலும் கற்பிக்கப்பட நாம் விருப்பமுள்ளவர்களாயிருக்கவேண்டும். பரலோக பெற்றோருக்கு26 நாம் அன்பான பிள்ளைகள் மற்றும் “அக்கறைகாட்டப்பட” தகுதியானவர்கள், “நமது சொந்த” சித்தம் என்பது ஒருபோதும் “தனிமை” இல்லை என உறுதியாயிருக்க நாம் நம்பவேண்டும்.
யாக்கோபுவுடன் சேர்ந்து நான் சொல்கிறேன்:
“ஆதலால் உங்கள் இருதயங்களில் திடன்கொள்ளுங்கள். நீங்கள் என்றுமுள்ள மரணத்தின் வழி அல்லது நித்திய ஜீவனின் வழியைத் தேர்ந்தெடுக்கத் தங்களையே நடப்பிக்க நீங்கள் சுயாதீனர்களாய் இருக்கிறீர்கள் என்பதை நினைவுகூருங்கள்.
“ஆதலால், என் பிரியமான சகோதரர்களே, மாம்சம் மற்றும் பிசாசின் சித்தத்திற்கு அல்ல, … தேவனுடைய சித்தத்திற்கே உங்களை ஒப்புரவாக்குங்கள். நீங்கள் தேவனுடன் ஒப்புரவாகிய பின்னர், தேவனின் கிருபையைக்கொண்டு அதன் மூலம் மாத்திரமே, நீங்கள் மீட்கப்படுவீர்கள் என்பதை நினைவுகூருங்கள்.” 27
ஆகவே, கிறிஸ்துவில் விசுவாசம் வைக்க தேர்ந்தெடுங்கள்; மனந்திரும்புதலை தேர்ந்தெடுங்கள்; ஞானஸ்நானம் பெறவும், பரிசுத்த ஆவியைப் பெற்றுக்கொள்ளவும் தேர்ந்தெடுங்கள்; திருவிருந்திற்கு மனசாட்சியுடன் ஆயத்தமடையவும், தகுதியுள்ளவராக பங்கேற்கவும் தேர்ந்தெடுங்கள்; ஆலயத்தில் உடன்படிக்கை செய்ய தேர்ந்தெடுங்கள்; ஜீவனுள்ள தேவனுக்கும் அவருடைய குமாரனுக்கும் சேவை செய்ய தேர்ந்தெடுங்கள். நாம் யாரென்பதையும் யாராகப்போகிறமென்பதையும் நமது தேர்ந்தெடுப்புகள் தீர்மானிக்கிறது.
நான் யாக்கோபுவின் மீதி ஆசீர்வாதங்களோடு முடிக்கிறேன்: “தேவனுடைய என்றுமுள்ள இராஜ்ஜியத்திற்குள் ஏற்றுக்கொள்ளப்படவும், பாவநிவாரணத்தின் வல்லமையால் தேவன் உங்களை எழுப்புவாராக.” 28 இயேசு கிறிஸ்துவின் நாமத்தில், ஆமென்.