2010–2019
பரலோக பிதாவிடத்துக்கும் கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவிடத்துக்கும் ஆழமான, நீடித்திருக்கிற மனமாற்றம்
அக்டோபர் 2018


16:7

பரலோக பிதாவிடமும் கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவிடமும் ஆழ்ந்த, நீடித்த மனமாற்றம்

விசுவாசத்தையும் ஆவிக்குரிய தன்மையையும் பெருமளவில் அதிகரித்து, மனமாற்றத்தை ஆழமாக்குகிற விதமாக சபை மற்றும் வீட்டு அனுபவங்களை சமநிலைப்படுத்துவதே நமது நோக்கமாகும்.

தலைவர் ரசல் எம். நெல்சன் இப்போது அழகாகவும் நயமாகவும் சொன்னதைப்போல, “கோட்பாட்டை கற்கவும், விசுவாசத்தை பெலப்படுத்தவும், பெரிதும் தனிப்பட்ட ஆராதனையை அதிகரிக்கவும், வீட்டை மையமாகக் கொண்ட,சபை ஆதரிக்கும் திட்டத்திற்காக நீண்ட காலமாக சபைத் தலைவர்கள் பிரயாசப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள்.” வீட்டிற்கும் சபைக்குமிடையில் சுவிசேஷம் கற்பித்தலில் ஒரு சமநிலையும் தொடர்பும் ஏற்படுத்த ஒரு அனுசரித்தலை, தலைவர் நெல்சன் பின்னர் அறிவித்தார். 1

தலைவர் ரசல் எம். நெல்சனால் விவரிக்கப்பட்ட, அவருடைய வழிநடத்துதலின் கீழ் மற்றும் பிரதான தலைமையின் ஆலோசனைக்குழு, மற்றும் பன்னிரு அப்போஸ்தலர் குழுமத்தின் தீர்மானத்தைத் தொடர்ந்து, இந்த நோக்கங்களை அடைய ஜனவரி 2019 முதல் ஆரம்பித்து பின்வரும் வழிகளில் ஞாயிறு கூட்ட நேர அட்டவணை அனுசரிக்கப்படும்.

ஞாயிற்றுக்கிழமை ஆராதனை முறை

ஒவ்வொரு ஞாயிறும், இரட்சகரையும், திருவிருந்தின் நியமத்தையும், ஆவிக்குரிய செய்திகளையும் மையப்படுத்தி 60 நிமிடங்கள் திருவிருந்து கூட்டங்களை ஞாயிறு சபைக்கூட்டங்கள் கொண்டிருக்கும். வகுப்புகளுக்குச் செல்லும் நேரத்திற்குப் பின், ஒவ்வொரு ஞாயிறும் மாறி மாறி 50 நிமிட வகுப்பில் சபை அங்கத்தினர்கள் கலந்துகொள்வார்கள்.

  • முதல் மற்றும் மூன்றாவது ஞாயிறுகளில் ஞாயிறு பள்ளி நடக்கும்.

  • இரண்டாவது மற்றும் நான்காவது ஞாயிறுகளில், ஆசாரியத்துவ குழுமங்கள், ஒத்தாசைச் சங்கம், இளம் பெண்கள் கூட்டங்கள் நடக்கும்.

  • ஐந்தாவது ஞாயிறு கூட்டங்கள் ஆயரின் வழிநடத்துதலின் கீழ் நடக்கும்.

இதே, 50 நிமிட நேரத்தில் ஒவ்வொரு வாரமும் ஆரம்ப வகுப்பும், பாடல் பாடும், நேரமும் அடங்கும்.

ஞாயிற்றுக்கிழமை முறை

ஞாயிறு கூட்ட அட்டவணையைக் குறித்து, சபையில், ஞாயிற்றுக் கிழமை மூன்று மணிநேரம் கூட்டம், அருமையான நமது சில அங்கத்தினர்களுக்கு கடினமாயிருக்கலாம் என்பதை அநேக ஆண்டுகளாக நமது சபையின் மூத்த தலைவர்கள் அறிந்திருக்கிறார்கள். சிறு பிள்ளைகளை வைத்திருக்கும் பெற்றோருக்கு, ஆரம்ப வகுப்பு பிள்ளைகளுக்கு, மூத்த அங்கத்தினர்களுக்கு, புதிதாய் மனமாற்றமடைந்தவர்களுக்கு மற்றும் பிறருக்கு குறிப்பாக இது உண்மையாயிருக்கிறது. 2

ஞாயிறு கூடுமிடங்களில் நேரத்தைச் சுருக்குவதைவிட இந்த அனுசரிப்பில் அதிக விஷயமிருக்கிறது. முந்தய அழைப்புகளுக்கு உங்களுடைய விசுவாசத்தின் விளைவாக எவ்வளவு சாதிக்கப்பட்டிருக்கிறதென்பதற்காக நன்றியுணர்வுடன் தலைவர் நெல்சன் பாராட்டியிருக்கிறார். பெற்றோருக்கும், பிள்ளைகளுக்கும், இளைஞர்களுக்கும், தனிமையிலிருப்பவர்களுக்கும், மூத்தகுடிமக்களுக்கும், புதிதாக மனமாறியவர்களுக்கும், ஊழியக்காரர்கள் போதித்துக்கொண்டிருக்கிற மக்களுக்கும் வீட்டை மையமாகக்கொண்ட, சபை ஆதரிக்கிற சமநிலை செய்யப்பட்ட முயற்சியின் மூலமாக, அதிக சுவிசேஷ சந்தோஷத்தைக் கொண்டுவர அவரும் சபையின் முழு தலைமையும் விரும்புகிறார்கள். இந்த அனுசரிப்புகளோடு, சமீபத்திய மாற்றங்களுக்கும் தொடர்புடைய நோக்கங்களும் ஆசீர்வாதங்கள் பின்வருவனவற்றை அடக்கியுள்ளன.

  • பரலோக பிதாவிடமும் கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவிடமும் மனமாற்றத்தை ஆழப்படுத்துதல் மற்றும் அவர்களிடம் விசுவாசத்தை பெலப்படுத்துதல்.

  • சந்தோஷமான சுவிசேஷ வாழ்க்கைக்கு பங்களிக்கிற வீட்டை மையமாகக்கொண்ட, சபை ஆதரிக்கும் பாடத்திட்டம் மூலமாக தனிப்பட்டவர்களையும் குடும்பங்களையும் பெலப்படுத்துதல்.

  • திருவிருந்தின் நியமங்களில் கவனம் செலுத்துவதுடன், ஓய்வுநாளை கனம்பண்ணுதல்.

  • ஊழிய பணி, ஆலய நியமங்கள் பெறுதல், உடன்படிக்கைகள், மற்றும் ஆசீர்வாதங்கள் மூலமாக திரைக்கு இரண்டு பக்கங்களிலுமுள்ள பரலோக பிதாவின் அனைத்து பிள்ளகளுக்கும் உதவுதல்.

வீட்டை மையமாகக் கொண்ட, சபையால் ஆதரிக்கப்படுகிற சுவிசேஷம் கற்றல்

இந்த ஞாயிறு காலஅட்டவணை, இல்ல மாலைக்கும், ஞாயிற்றுக் கிழமையில் வீட்டில் அல்லது தனிப்பட்டவர்களும், குடும்பங்களும் தேர்ந்தெடுக்கிறதைப்போல் பிற நேரங்களில் சுவிசேஷத்தைப் படிக்க, அதிக நேரத்தை அனுமதிக்கிறது. ஒரு குடும்ப நிகழ்ச்சி இரவு, திங்கட்கிழமை அல்லது பிற நேரங்களில் நடத்தப்படலாம். இந்த நோக்கத்திற்காக, சபைக் கூட்டங்களிலிருந்தும் நடவடிக்கைகளிலிருந்தும் திங்கட்கிழமை மாலைகளை தலைவர்கள் தொடர்ந்து சுதந்தரமாக விடவேண்டும். ஆயினும், குடும்ப இல்ல மாலைக்கும், சுவிசேஷ படிப்பு மற்றும் நடவடிக்கைகளுக்கும் நேரம் செலவழிப்பதற்கு தனிநபர்களுக்கும் குடும்பங்களுக்கும் அவர்களுடைய சூழ்நிலைக்கேற்ப நேரம் ஒதுக்கப்படலாம்.

என்னைப் பின்பற்றி வாருங்கள்--தனிநபர்களுக்கும் குடும்பங்களுக்கும்

ஒத்திசைவான பாடத்திட்டத்தாலும், ஒரு புதிய என்னைப் பின்பற்றி வாருங்கள்-ஆலும் [ஆதாரம்] வீட்டில், குடும்ப மற்றும் தனிப்பட்ட சுவிசேஷ படிப்பு கணிசமாக மேம்படுத்தப்படும். தனிநபர்களுக்கும் குடும்பங்களுக்கும் ஞாயிறு பள்ளியிலும் ஆரம்ப வகுப்பிலும் போதிக்கப்பட்டதுடன் அது ஒருங்கிணைக்கப்பட்டுள்ளது. 3 ஜனவரியில் சபையின் இளைஞர் மற்றும் வயதுவந்தோர் ஞாயிறு பள்ளியும் ஆரம்ப வகுப்புகளும் புதிய ஏற்பாட்டைப் படிப்பார்கள். தனிநபர்களுக்கும் குடும்பங்களுக்குமான புதிய வீட்டுப் படிப்பான புதிய ஏற்பாட்டையும் உள்ளடக்கிய என்னைப் பின்பற்றி வாருங்கள், வீட்டில் சுவிசேஷத்தைக் கற்றுக்கொள்ள [நமக்கு சிறப்பாக] உதவ வடிவமைக்கப்பட்டிருக்கிறது. இந்த ஆதாரம் சபையிலுள்ள எல்லா தனிநபர்களுக்கும் குடும்பத்திற்குமென விவரிக்கிறது. [நாம்]சொந்தமாகவோ அல்லது [நமது] குடும்பத்துடனோ சுவிசேஷத்தைக் [நாம் சிறப்பாக] கற்றுக்கொள்ள உதவ இது வடிவமைக்கப்பட்டிருக்கிறது. இந்த [புதிய] ஆதாரத்திலுள்ள இதன் திட்டவரைவு வாராந்தர நேர அட்டவணையின்படி அமைக்கப்பட்டிருக்கிறது. 4

சபையில் போதிக்கப்பட்ட புதிய ஆரம்ப வகுப்பு என்னைப் பின்பற்றி வாருங்கள் பாடங்கள் அதே வாராந்தர நேர அட்டவணையைப் பின்பற்றும். வீட்டு ஆதாரமான புதிய என்னைப் பின்பற்றி வாருங்களை அவைகள் ஆதரிக்கும்படியாக முதல் மற்றும் மூன்றாவது ஞாயிறுகளில் வயது வந்தோர் மற்றும் இளைஞர் ஞாயிறு பள்ளி வகுப்புகள் ஒருங்கிணைக்கப்படும். இரண்டாவது மற்றும் நான்காவது ஞாயிறுகளில் ஆசாரியத்துவத்திலுள்ள வயதுவந்தோரும், ஒத்தாசைச் சங்கமும், தற்காலத் தீர்க்கதரிசிகளின் தற்போதைய செய்திகளை முக்கியப்படுத்தி சபைத் தலைவர்களின் போதனைகளைத் தொடர்ந்து படிப்பார்கள். 5 இளம் பெண்கள் மற்றும் ஆரோனிய ஆசாரியத்துவ வாலிபர் அந்த ஞாயிறுகளில் சுவிசேஷத் தலைப்புகளைப் படிப்பார்கள்.

குடும்ப வேதப் படிப்புக்கும் குடும்ப இல்ல மாலைக்கும் கருத்துக்களை புதிய வீட்டுப் படிப்பு ஆதாரம் வழங்குகிறது. 6 ஒவ்வொரு வாரத்திற்குமுள்ள குறிப்புக்கள் தனிநபர்களுக்கும் குடும்பங்களுக்கும் உதவிகரமான படிப்பு கருத்துகளையும் செயல்களையும் கொண்டிருக்கின்றன. தனிநபர்களுக்கும் குடும்பங்களுக்குமான என்னைப் பின்பற்றி வாருங்கள் ஆதார புஸ்தகம், தனிநபர்கள் மற்றும் குடும்ப படிப்பு, விசேஷமாக பிள்ளைகளின் கற்றலை அதிகரிக்க உதவ அநேக விளக்கங்கள் கொண்டுள்ளது.7 இந்த ஆண்டு டிசம்பர் மாதத்தில் ஒவ்வொரு குடும்பத்தினருக்கும் இந்த புதிய ஆதாரம் வழங்கப்படும். 7

உடன்படிக்கை பாதையில் நடப்பதால் இயேசு கிறிஸ்துவின் இரண்டாம் வருகைக்காக நாம் ஆயத்தப்பட, ஜனவரியில் சபை அங்கத்தினர்களுக்கு தலைவர் நெல்சனின் தொடக்க உரையில், அவர் நம்மை அறிவுறுத்தியிருக்கிறார். 8

தனிநபர்களின் மனமாற்றத்தை ஆழப்படுத்துவதும் பரலோக பிதாவிடத்திலும் அவருடைய குமாரனிடத்திலும், அவருடைய பாவநிவர்த்தியிலும் விசுவாசத்தை பெலப்படுத்துவதும் உலகத்தின் நிலைமைகளுக்கு அதிகமாகத் தேவைப்படுகிறது. இப்போது நாம் எதிர்கொள்கிற அழிவின் காலங்களுக்காக வரிவரியாக கர்த்தர் நம்மை ஆயத்தப்படுத்தியிருக்கிறார். சமீப ஆண்டுகளில் பின் வருபவைகள் உள்ளிட்ட பொது அக்கறைகளுக்கு சம்பந்தப்பட்டவற்றை தீர்க்க கர்த்தர் நம்மை வழிநடத்தியிருக்கிறார்.

  • ஓய்வுநாளையும், திருவிருந்து என்ற பரிசுத்த நியமத்தையும் கனம் பண்ணுதல், கடந்த மூன்று ஆண்டுகளாக மீண்டும் வலியுறுத்தப்பட்டிருக்கிறது.

  • ஆயரின் வழிநடத்தலின் கீழ் பெலப்படுத்தப்பட்ட மூப்பர் குழுமங்களும், ஒத்தாசைச் சங்கங்களும் சபையின் தெய்வீகமாக நியமிக்கப்பட்ட பொறுப்புக்களின் நோக்கத்திலும், 9 அங்கத்தினர்கள் பரிசுத்த உடன்படிக்கைகளை செய்து காத்துக்கொள்ள உதவிசெய்வதிலும் கவனம் செலுத்துதல்.

  • ஊழியம் செய்தல் உயர்வான மற்றும் பரிசுத்தமான வழிகளில் மகிழ்ச்சியாக கடைபிடிக்கப்படுதல்.

  • முடிவை மனதில் வைத்து தொடங்கி, ஆலய உடன்படிக்கைகள் மற்றும் குடும்ப வரலாறு சேவை, உடன்படிக்கை பாதையின் நோக்கமுடைய பகுதியாக மாறிக்கொண்டிருக்கின்றன.

இந்தக் காலையில் அறிவிக்கப்பட்ட அனுசரிப்பு, நமது நாட்களின் சவால்களுக்காக வழிகாட்டுதலின் மற்றொரு எடுத்துக்காட்டு.

சபையின் பாரம்பரிய பாடத்திட்டம் ஞாயிறு சபை அனுபவத்தை வலியுறுத்துகிறது. சிறப்பான போதனைகளும், ஆவிக்குரியவிதமாக அதிக ஆயத்தமுடைய வகுப்பு அங்கத்தினர்களும் நமக்கிருக்கும்போது, நமக்கு ஒரு சிறப்பான ஞாயிறு சபை அனுபவம் இருக்கும் என நாம் அறிவோம். சபை அமைப்பில் ஆவி அடிக்கடி மனமாறுதலை அதிகரிப்பதாலும் பெலப்படுத்துவதாலும் நாம் ஆசீர்வதிக்கப்பட்டிருக்கிறோம்.

வீட்டை மையமாக கொண்ட, சபை ஆதரிக்கிற புதிய பாடத்திட்டம் குடும்ப மத ஆசரிப்பு, மற்றும் நடத்தை, தனிப்பட்ட மத ஆசரிப்பு மற்றும் நடத்தையையும் மிக ஆற்றலுடன் செல்வாக்கடையச் செய்ய வேண்டும். ஆவிக்குரிய தாக்கம், ஆழமும், நீடித்திருக்கிறதுமான மனமாற்றம், வீட்டு அமைப்பில் சாதிக்கக்கூடியதென நாம் அறிவோம். வாலிபர்களுக்கும், இளம் பெண்களுக்கும், பரிசுத்த ஆவியின் செல்வாக்கு மிக அடிக்கடி வீட்டில் தனிப்பட்ட வேதப் படிப்புடனும் ஜெபத்துடனும் சேர்ந்திருக்கிறதென சில ஆண்டுகளுக்கு முன்பு ஒரு ஆய்வு உறுதி செய்தது. விசுவாசத்தையும், ஆவிக்குரிய தன்மையையும், பரலோக பிதாவிடத்துக்கும் கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவிடத்துக்கும் மனமாறுதலை ஆழமாக்க ஒரு வழியில் சபையையும் வீட்டு அனுபவத்தையும் சமநிலைப்படுத்துவது நமது நோக்கம்.

வீட்டை மையப்படுத்திய, சபை ஆதரிக்கிற இந்த சரிப்படுத்தலின் பகுதியில், எப்போது, எவ்வாறு இது செயல்படுத்தப்படுமென ஜெபத்துடன் தீர்மானிக்க ஒவ்வொரு தனிநபர்களுக்கும் குடும்பத்திற்கும் வளைந்து கொடுக்கக்கூடியது. உதாரணமாக, உள்ளூர் தேவைகளின் அடிப்படையில், இது எல்லாக் குடும்பங்களையும் மிக அதிகமாய் ஆசீர்வதிக்கும்போது, இளம் தனிமையாவர்களுக்கும், தனிமையான வயதுவந்தோருக்கும், தனிமையான பெற்றோருக்கும், பகுதி அங்கத்தினர் குடும்பங்களுக்கும், புதிய அங்கத்தினர்களுக்கும்,10 சுவிசேஷ சமூக உறவை அனுபவிக்கவும் வீட்டை மையமாகக்கொண்ட , சபையால் ஆதரிக்கப்பட்ட ஆதாரத்தை ஒன்றுகூடி படிப்பதால் பெலப்படுத்தப்படவும் வழக்கமான ஞாயிறு ஆராதனைக் கூட்டங்களுக்கு வெளியே குழுவாக ஒன்றுகூடுகிற மற்றவர்களுக்கும் இது முற்றிலுமாக பொருத்தமாயிருக்கும். அவ்விதமாக விரும்புகிறவர்களால் இது நடைமுறையைப் பின்பற்றாமல் நிறைவேற்றப்படும்.

உலகத்தின் அநேக பகுதிகளில், வழக்கமான ஞாயிறு நேர அட்டவணைக்குப் பின் சமூக உறவுகளை அனுபவிக்க கூடுமிடங்களில் தங்கியிருக்க மக்கள் தேர்ந்தெடுக்கிறார்கள். எந்த வகையிலும் இந்த அற்புதமான, திருப்திகரமான பழக்கங்களுடன் தலையிடுகிற எதுவும் இந்த அறிவிக்கப்பட்ட சரிசெய்தலில் இருக்காது.

ஓய்வுநாளுக்காக ஆயத்தப்பட அங்கத்தினர்களுக்குதவ, சில தொகுதிகள் ஏற்கனவே ஒரு மின்அஞ்சலை, செய்தியை அல்லது சமூக ஊடக செய்தியை வார நடுவில் அனுப்புகிறார்கள். இந்த அனுசரிப்பின்படி, இம்மாதிரியான தொடர்பை நாங்கள் வலுவாக சிபாரிசு செய்கிறோம். வரப்போகிற வகுப்பு பாடத்தின் தலைப்பையும் வீட்டில் தொடர்ந்துவரும் சுவிசேஷ உரையாடலையும் சேர்த்து, அந்த வாரத்திற்கான ஞாயிறு கூட்ட நேர அட்டவணையை அங்கத்தினர்களுக்கு இந்த அழைப்புகள் நினைவுபடுத்தும். கூடுதலாக, ஒவ்வொரு வாரமும் சபையையும் வீட்டு படிப்பையும் இணைக்க, ஞாயிற்றுக்கிழமையில் வயதுவந்தோர் கூட்டங்களும் தகவலை வழங்கும்.

திருவிருந்து கூட்டமும் வகுப்பு நேரமும் நிர்வாக செயல்பாடுகளுக்கு மேலாக ஆவிக்குரிய முன்னுரிமைகளை வலியுறுத்துவதை நிச்சயப்படுத்த ஜெபத்துடன் கருத்தில் கொள்ளுதல் தேவையாயிருக்கிறது. உதாரணமாக, நடுவார அழைப்பில் அல்லது நிகழ்ச்சி அச்சடிக்கப்பட்டு அறிவிப்புகளின் அதிக பகுதி நிறைவேற்றப்படலாம். திருவிருந்து கூட்டத்தில் ஒரு ஆரம்ப ஜெபமும் இறுதி ஜெபமும் இருக்கவேண்டியபோது, இரண்டாவது கூட்டத்திற்கு நிறைவு ஜெபம் மட்டும் தேவையாயிருக்கிறது. 11

முதலில் குறிப்பிட்டதைப்போல, ஜனவரி 2019 வரை ஞாயிறு புதிய நேர அட்டவணை தொடங்கப்படாது. இதற்கு ஏராளமான காரணங்களிருக்கின்றன. இரண்டு மிக முக்கியமானவை, முதலில் தனிநபர்களுக்கும், குடும்பங்களுக்கும் என்னைப் பின்பற்றி வாவை வினியோகிக்க நேரம் எடுப்பது. இரண்டாவது, நாளின் ஆரம்பத்தில் அதிக தொகுதிகள் கூட கூட்ட நேர அட்டவணையை ஏற்பாடு செய்ய பிணையத் தலைவர்களுக்கும் ஆயர்களுக்கும் நேரத்தை அனுமதித்தல்.

தலைவர்கள் வெளிப்படுத்தலை நாடும்போது, கடந்த சில ஆண்டுகளில் பெறப்பட்ட வழிநடத்துதல், திருவிருந்து கூட்டத்தை பெலப்படுத்தவும், ஓய்வுநாளை கனம்பண்ணவும், தங்கள் வீடுகளை ஆவிக்குரிய வலிமையின், அதிகரிக்கப்பட்ட விசுவாசத்தின் ஆதாரமாக, மகிழ்ச்சி, சந்தோஷத்தின் இடமாகச் செய்ய பெற்றோரையும் தனிநபர்களையும் ஊக்குவிக்கவும் உதவவும் வழிநடத்துதல் பெறப்பட்டது.

விசேஷித்த ஆசீர்வாதங்கள்

பிற்காலப் பரிசுத்தவான்களின் இயேசு கிறிஸ்து சபை அங்கத்தினர்களுக்கு இந்த அனுசரிப்பு எவ்வாறு தோன்றுகிறது? அசாதாரணமான வழிகளில் அங்கத்தினர்கள் ஆசீர்வதிக்கப்படுவார்களென நாங்கள் நம்புகிறோம். சுவிசேஷத்தைக் கற்றுக்கொள்ளுதல், சபையிலும் வீட்டிலும் போதித்தலின் நாளாய் ஞாயிற்றுக் கிழமையிருக்கலாம். குடும்ப ஆலோசனைகளில், குடும்ப வரலாற்றில், ஊழியம் செய்தலில், சேவையில், தனிப்பட்ட தொழுகையில், மகிழ்ச்சியான குடும்ப நேரத்தில் தனிப்பட்டவர்களாக, குடும்பங்களாக ஈடுபடும்போது ஓய்வுநாள் உண்மையிலே ஒரு மகிழ்ச்சிகரமானதாயிருக்கும்.

கார்வாலோ குடும்பம்

ஒரு பிணையத்தின் அங்கத்தினர்களான பிரேசிலிலுள்ள ஒரு குடும்பத்தில் புதிய வீட்டு என்னைப் பின்பற்றி வாருங்கள் ஆதாரம் சோதிக்கப்பட்டது. ஊழியம் செய்துமுடித்த, அப்பாவான பெர்னான்டோவும் அவர் மனைவி நான்ஸியும் நான்கு இளம் பிள்ளைகளுக்கு பெற்றோர். அவர்கள் அறிவித்தார்கள். எங்கள் பிணையத்தில் என்னைப் பின்பற்றி வாருங்கள் நிகழ்ச்சி அறிமுகப்படுத்தப்பட்டபோது நான் மிகவும் உணர்ச்சி வசப்பட்டேன், வீட்டில் எங்கள் வேதப்படிப்பு வழி, மாறப்போகிறதென நான் நினைத்தேன். உண்மையில் அது எங்கள் வீட்டில் நடந்தது, சபைத் தலைவராக, அது பிற வீடுகளிலும் நடந்ததை நான் பார்த்தேன். உண்மையில், எங்கள் வீட்டில் வேதங்களைப்பற்றி விவாதிக்க இது எங்களுக்குதவியது. படித்த தலைப்புகளைப்பற்றி எனது மனைவிக்கும் எனக்கும் ஆழமான புரிந்துகொள்ளுதலிருந்தது. எங்களுடைய சுவிசேஷ அறிவை அதிகரிக்கவும், எங்களுடைய விசுவாசத்தையும் சாட்சியையும் அதிகரிக்கவும் இது எங்களுக்குதவியது. வேதங்களில் அடங்கியிருக்கிற கொள்கைகள் மற்றும் கோட்பாடுகளின் சீரான, ஆற்றல்மிக்க படிப்பு அதிகம் வீழ்ந்த உலகத்தில், அதிக விசுவாசத்தையும், சாட்சியையும், ஒளியையும் குடும்பங்களுக்குக் கொண்டுவரும்படிக்கு கர்த்தரால் இது உணர்த்தப்பட்டதென நான் அறிவேன் என நான் எனது சாட்சியைக் கொடுக்கிறேன். 12

உலகமுழுவதிலுமுள்ள பிணையங்களில் மாதிரி சோதனையில், புதிய, என்னைப் பின்பற்றி வாருங்கள் வீட்டு ஆதாரத்திற்கு மிக உயர்ந்த சாதகமான பதில் கிடைத்தது. வேதங்களைப் படித்தலிலிருந்து உண்மையில் வேதங்களை ஆய்வு செய்தலுக்கு அவர்கள் முன்னேறியதாக அநேகர் அறிவித்தார்கள். இது விசுவாசத்தை விருத்தி செய்து, தொகுதியில் ஒரு அற்புதமான தாக்கத்தை ஏற்படுத்திய அனுபவம் பொதுவாக உணரப்பட்டது. 13

ஆழ்ந்த, நீடித்த மனமாற்றம்

வயது வந்தோரும் வளர்ந்துவரும் தலைமுறையும் ஒரு ஆழமான நீடித்திருக்கிற மனமாற்றத்தைப் பெறுவது, இந்த அனுசரிப்புகளின் இலக்கு. தனிநபர்கள் மற்றும் குடும்ப ஆதாரத்தின் முதல் பக்கம் சுட்டிக்காட்டுகிறது: “நமது மனமாற்றத்தை ஆழமாக்கவும் இயேசு கிறிஸ்துவைப் போலாகவும் நமக்குதவுவது, எல்லா சுவிசேஷ கற்றுக்கொள்ளுதலுக்கும் போதனைகளுக்கும் இலக்காயிருக்கிறது. நமது இருதயங்களை மாற்ற கிறிஸ்துவை சார்ந்திருத்தல் என்பது இதற்கு அர்த்தம்.” 14 வகுப்புக்கும் அப்பால் ஒரு தனிநபரின் இருதயத்தையும் வீட்டையும் அணுகுதலால் இது உதவப்படுகிறது. சுவிசேஷத்தைப் புரிந்துகொள்ளவும், அதன்படி வாழவும் சீரான, அனுதின முயற்சிகள் தேவைப்படுகிறது. உண்மையான மனமாற்றத்திற்கு பரிசுத்த ஆவியின் செல்வாக்கு தேவைப்படுகிறது. 15

ஆழமான, நீடித்திருக்கிற மனமாற்றத்தின் மிகமுக்கிய இலக்கும் முடிவாருங்கள்ன ஆசீர்வாதங்களும், உடன்படிக்கையின் பாதையில் உடன்படிக்கைகளையும் நிமங்களையும் தகுதியுள்ளவர்களாக பெறுவதே. 16

இலக்குக்கு அப்பால் பார்க்காமல், அல்லது தனிப்பட்டவர்களையும் குடும்பங்களையும் உட்படுத்த முயற்சி செய்யாமல் ஒன்றுகூடி ஆலோசிக்கவும் இந்த அனுசரிப்புகளை செயல்படுத்துவதற்காக வெளிப்படுத்தலை நாடவும் நாங்கள் உங்களை நம்புகிறோம். பிரதான தலைமைக் கடிதமும் இணைப்பையும் சேர்த்து வரப்போகிற தொடர்புகளில் கூடுதலான தகவல் பகிர்ந்து கொள்ளப்படும்.

ஆலயத்தில், பிரதான தலைமையின் ஆலோசனைக் குழுமமும் பன்னிரு அப்போஸ்தலர் குழுமமும் ஆழ்ந்து ஆராய்ந்து, பின்னர், இந்த அனுசரிப்புகளுடன் முன் செல்ல வெளிப்படுத்தலுக்காக நமது அன்பான தீர்க்கதரிசி கர்த்தரிடம் விண்ணப்பித்தபோது, ஒரு வல்லமையான உறுதிப்பாட்டை அனைவரும் பெற்றோம் என நான் உங்களுக்கு சாட்சியளிக்கிறேன். ரசல் எம். நெல்சன் நமக்கு அன்பான தலைவரும் தீர்க்கதரிசியுமாவார். சரிசெய்தல்களை ஆர்வத்துடன் தழுவி, பரிசுத்த ஆவியின் வழிநடத்துதலை நாடுகிறவர்களுக்கு இன்று செய்யப்பட்ட அறிவுப்புகள் மகத்துவமான விளைவுகளாகும். நான் ஒரு நிச்சயமான சாட்சியாயிருக்கிற நமது பரலோக பிதாவிடமும், கர்த்தரும், இரட்சகருமான இயேசு கிறிஸ்துவுடனும் நெருக்கமாக வருவோம், இயேசு கிறிஸ்துவின் நாமத்தில், ஆமென்.

குறிப்புகள்

  1. Russell M. Nelson, “Opening Remarks,” Liahona, Nov. 2018, 8.

  2. பொதுவாக சமூகத்தில் தகவல், கல்வி மற்றும் பொழுதுபோக்கு நிகழ்ச்சிகள் பெரும்பான்மையானவை கூட அதிக அளவில் குறைக்கப்பட்டுவிட்டன என நமக்குத் தெரியும்.

  3. இப்பாடத்திட்டம் டிஜிட்டலாகவும் அச்சிடப்பட்டதாகவும் கிடைக்கும்.

  4. Come, Follow Me—For Individuals and Families (2019), vi.

  5. See “Come, Follow Me—For Elders Quorum and Relief Society,” Liahona, May 2018, 140. இரண்டாம் மற்றும் மூன்றாம் ஞாயிற்றுக்கிழமைகளுக்குப் பதிலாக, பொது மாநாட்டுச் செய்திகள் இரண்டாம் மற்றும் நான்காம் ஞாயிற்றுக்கிழமைகளில் கலந்துரையாடப்படும்.

  6. See Come, Follow Me—For Individuals and Families, 4. வீட்டு சுவிசேஷ படிப்பு, வீட்டு மாலை, மற்றும் குடும்ப நிகழ்ச்சிகளில் எப்பகுதி குடும்ப இல்ல மாலையாக இருக்கும் என்பதை தனிநபர்களும் குடும்பத்தினரும் முடிவு செய்கிறார்கள் (அநேகர் அதை குடும்ப மாலை என ஏற்கனவே அழைக்கிறார்கள்). இந்த முடிவை தனிநபர்களும் குடும்பத்தினரும் செய்வதால், அறிவிக்கப்பட்டுள்ள அனுசரிப்புகளில் குடும்ப மாலையும்குடும்ப இல்ல மாலையும் மாற்றிக்கொள்ளத்தக்க வகையில் பயன்படுத்தப்பட்டுள்ளது.

  7. See Come, Follow Me—For Individuals and Families, 29.

  8. See Russell M. Nelson, “As We Go Forward Together,” Liahona, Apr. 2018, 7.

  9. See Handbook 2: Administering the Church (2010), 2.2. தெய்வீகமாக நியமிக்கப்பட்ட பொறுப்புக்களில் “இயேசு கிறிஸ்துவின் சுவிசேஷத்தின்படி வாழ அங்கத்தினர்களுக்கு உதவுவதும், ஊழியப்பணி மூலம் இஸ்ரவேலைக் கூட்டிச் சேர்ப்பதுவும், வறியோரையும் தேவையிலிருப்போரையும் கவனித்தலும், ஆலயங்களைக் கட்டி பதிலி நியமங்களை நிறைவேற்றி மரித்தோருக்கான இரட்சிப்பை சாத்தியப்படுத்துவதும் அடங்கும்.” முக்கிய திறவுகோல்களின் மறுஸ்தாபிதம் பற்றிய விவரம் அடங்கிய கோட்பாடும் உடன்படிக்கைகளும் 110-ஐயும் பார்க்கவும்.

  10. பெற்றோர் அங்கத்தினர்களல்லாத அல்லது ஒழுங்காக சபைக்கு வராத பிள்ளைகளுக்கு விசேஷித்த கவனம் செலுத்தவும். சம்மந்தப்பவர்களுக்கு உதவிகரமானதாக இருந்தால், தனிநபர்களும் பிறரும் ஒரு குடும்பத்தோடு சந்திக்கலாம்.

  11. ஆரம்ப நிகழ்வுகள் சாதாரணமாக இரண்டாவது கூட்டத்தின் பாகமாக இருக்காது.

  12. பெர்னாண்டோ மற்றும் நான்சி டி கார்வல்ஹோ குடும்பம், பிரேசில்.

  13. முன்னோடி சோதனையில் ஈடுபடுத்தப்பட்ட தனிநபர்களும் குடும்பங்களும், சராசரியாக சுவிசேஷத்தை அதிக முறை படித்தார்கள், அதிக அர்த்தமுள்ள வேதப்படிப்பு நடத்தினார்கள், வீட்டில் சுவிசேஷ கலந்துரையாடல்கள் நடத்தினார்கள். குடும்பத்தோடும் தொகுதி அங்கத்தினர்களுடனும் வழக்கத்துக்கு மாறான சுவிசேஷ கலந்துரையாடல்கள் செய்ததாக அறிவித்தார்கள் மற்றும் தங்கள் குடும்பமாக அதே சுவிசேஷ பாகத்தை படித்ததை பாராட்டினார்கள். குறிப்பாக இளைஞர்களைப் பொருத்தவரை இது உண்மை.

  14. Come, Follow Me—For Individuals and Families, v; மற்றும்2 கொரிந்தியர் 5:17 பார்க்கவும் பார்க்கவும்.

  15. Come, Follow Me—For Individuals and Families, v.

  16. See Russell M. Nelson, “As We Go Forward Together,” 7.