சபையின் சரியான பெயர்
இது அவரது சபையாக இருப்பதாலும், அவரது வல்லமையால் நிறைக்கப்பட்டிருப்பதாலும், சபையை அவரது பெயரால் அழைக்க இயேசு கிறிஸ்து நமக்கு வழிகாட்டியிருக்கிறார்.
எனக்கன்பான சகோதர சகோதரிகளே, இந்த அழகான ஓய்வுநாளில், கர்த்தரிடமிருந்து வருகிற நமது அநேக ஆசீர்வாதங்களில் நாம் ஒன்றுகூடி களிகூருகிறோம். இயேசு கிறிஸ்துவின் மறுஸ்தாபிதம் செய்யப்பட்ட சுவிசேஷத்தைப்பற்றிய உங்களுடைய சாட்சிகளுக்காக, நிலைத்திருக்க அல்லது அவருடைய உடன்படிக்கை பாதைக்குத் திரும்பிவர நீங்கள் செய்த தியாகங்களுக்காக, அவருடைய சபையில் உங்களுடைய அர்ப்பணிப்புள்ள சேவைக்காக நாங்கள் நன்றியுள்ளவர்களாயிருக்கிறோம்.
மிக முக்கியமான ஒரு காரியத்தைப்பற்றி உங்களோடு விவாதிக்க இன்று நான் கட்டாயப்படுத்தப்பட்டவனாக உணர்கிறேன். சில வாரங்களுக்கு முன், சபையின் பெயருக்கான நிச்சயமான திருத்தத்தைப் பற்றி ஒரு அறிக்கையை நான் வெளியிட்டேன். 1 அவருடைய சபைக்கு அவர் கட்டளையிட்ட பிற்காலப் பரிசுத்தவான்களின் இயேசு கிறிஸ்து சபை என்ற பெயரின் முக்கியத்துவத்தை என் மனதில் கர்த்தர் பதிய வைத்ததால் இதை நான் செய்தேன். 2
நீங்கள் எதிர்பார்த்த மாதிரி, இந்த அறிக்கைக்கு பதில்களுடன் திருத்தப்பட்ட மாதிரி வழிகாட்டிகளும்3 கலந்திருந்தன. தங்களுடைய பிளாக்குகளிலும், சமூக ஊடக பக்கங்களிலும் அநேக அங்கத்தினர்கள் உடனடியாக பெயரை மாற்றினார்கள். உலகத்தில் நடப்பவை அனைத்துடன் முக்கியத்துவமற்ற ஒன்றை வலியுறுத்துவதற்கு என்ன அவசியமிருக்கிறதென மற்றவர்கள் வியப்புற்றனர். இதைச் செய்யமுடியாது, ஆகவே ஏன் முயற்சிக்கவேண்டுமென சிலர் சொன்னார்கள். இந்த பிரச்சினையை ஏன் நாம் மிக ஆழமாக அக்கறை காட்டுகிறோமென நான் விளக்குகிறேன். எது இந்த முயற்சி இல்லை என முதலில் நான் தெரிவிக்கிறேன்.
-
இது ஒரு பெயர் மாற்றம் இல்லை.
-
இது மறு அடையாளம் இல்லை.
-
இது ஒப்பனை இல்லை.
-
இது ஒரு அபிப்பிராயம் இல்லை.
-
இது விளைவுகள் இல்லாதது இல்லை.
மாறாக, இது ஒரு திருத்தம் ஆகும். இது கர்த்தருடைய கட்டளை ஆகும். அவர் மூலமாக மறுஸ்தாபிதம் செய்யப்பட்ட சபைக்கு ஜோசப் ஸ்மித் பெயர் சூட்டவில்லை, மார்மனும் செய்யவில்லை. இதை இரட்சகரே சொன்னார், “ஏனெனில் கடைசி நாட்களில் என்னுடைய சபை இப்படியாக, பிற்காலப் பரிசுத்தவான்களின் இயேசு கிறிஸ்து சபை என அழைக்கப்படும்.” 4
ஆரம்பத்தில்கூட, கி.பி 34ல், நமது உயிர்த்தெழுந்த கர்த்தர் அவருடைய சபை அங்கத்தினர்களை அமெரிக்காவில் சந்தித்தபோது இதைப்போன்ற அறிவுறுத்தல்களை அவர்களுக்குக் கொடுத்தார். அந்த நேரத்தில் அவர் சொன்னார்:
நீங்கள் சபையை என் நாமத்தினால் அழையுங்கள். …
“என் நாமத்தினால் அழைக்கப்பட்டாலொழிய அது எப்படி என் சபையாக முடியும்? ஏனெனில் ஒரு சபை மோசேயின் நாமத்தினால் அழைக்கப்பட்டால் அது மோசேயின் சபையாகுமே, அல்லது அது ஒரு மனுஷனுடைய நாமத்தினால் அழைக்கப்பட்டால், அது மனுஷனின் சபையாகுமே, என் நாமத்தினால் அது அழைக்கப்பட்டால் அப்பொழுது அது என் சபையாயிருக்கும்.” 5
அப்படியாக சபையின் பெயர் மாற்றக்கூடியதல்ல. அவருடைய சபையின் பெயர் என்னவாக இருக்கவேண்டுமென இரட்சகர் தெளிவாக உரைத்தபோது, அவருடைய பிரகடனத்திற்கு முன்பு “என்னுடைய சபை அப்படியாக அழைக்கப்படவேண்டும்” என்பதில் அவர் தீவிரமாயிருக்கிறார். புனைப்பெயர்களை பயன்படுத்தப்பட, ஏற்றுக்கொள்ள நாம் அனுமதித்தால், அல்லது அந்த புனைப்பெயர்களை நாமே தழுவினாலோ அல்லது ஆதரித்தால் அவர் காயப்படுவார்.
ஒரு பெயரில், அல்லது இந்த விஷயத்தில், ஒரு புனைப் பெயரில் என்ன இருக்கிறது? எல்.டி.எஸ் சபை மார்மன் சபை அல்லது பிற்காலப் பரிசுத்தவான்களின் சபை மாதிரி, சபையின் புனைப்பெயர்களுக்கு வரும்போது, அந்தப் பெயர்களில் மிக முக்கியமான காரியம் இரட்சகரின் பெயர் இல்லாமையே. கர்த்தரின் சபையில் கர்த்தரின் பெயரை அகற்றுவது சாத்தானுக்கு ஒரு முக்கிய வெற்றி, இரட்சகரின் பெயரை நாம் நிராகரிக்கும்போது, இயேசு கிறிஸ்து நமக்காகக் செய்த எல்லாவற்றையும், அவருடைய பாவநிவர்த்தியையும்கூட நாம் நுட்பமாக அலட்சியப்படுத்துகிறோம்.
அவருடைய பார்வையிலிருந்து இதை கவனிப்போம். அநித்தியத்திற்கு முன்பு அவர் பழைய ஏற்பாட்டின் தேவனாகிய யேகோவாக இருந்தார். அவருடைய பிதாவின் வழிகாட்டுதலின் கீழ் இந்த மற்றும் பிற உலகங்களுக்கு அவர் சிருஷ்டிகராக இருந்தார். 6 அவருடைய பிதாவின் சித்தத்திற்கு ஒப்புக்கொடுக்கவும், யாராலும் செய்யமுடியாத ஒன்றை தேவனின் பிள்ளைகள் அனைவருக்கும் செய்ய அவர் தேர்ந்தெடுத்தார். மாம்சத்தில் பிதாவின் ஒரேபேறான குமாரனாக பூமிக்கு வர தாராளமானவராக இருந்த அவர் கொடூரமாக தூற்றப்பட்டு, கேலி செய்யப்பட்டு, துப்பப்பட்டு, வாரினால் அடிக்கப்பட்டார். கெத்சமனே தோட்டத்தில் சகல வேதனையையும், சகல பாவத்தையும், உங்களாலும், என்னாலும், எப்போதும் வாழ்ந்தவர்கள் அல்லது வாழப்போகிறவர்களாலும் எப்போதுமே அனுபவித்த வேதனையையும் துன்பங்களையும், நமது இரட்சகர் அவர்மேல் எடுத்துக்கொண்டார். அந்த அதீதமான சுமையின் பாரத்தின் கீழ் ஒவ்வொரு துவாரத்திலிருந்தும் அவர் இரத்தம் சிந்தினார். 7 இந்த பாடுகள் அனைத்தும் கல்வாரி சிலுவையில் அவர் கொடூரமாக சிலுவையிலறையப்பட்டபோது அதிகரித்தது.
அவருடைய முடிவற்ற பாவநிவர்த்தியான இந்த மிகத்துன்புறுத்துகிற அனுபவங்கள், அவருடைய தொடர்ந்த உயிர்த்தெழுதல் மூலமாக, நமது மனந்திரும்புதலின் நிபந்தனையில் பாவத்தின் பாதிப்பிலிருந்து நம் ஒவ்வொருவருக்கும் கிரயம் செலுத்தி அனைவருக்கும் அழியாமையை அவர் வழங்கினார்.
இரட்சகரின் உயிர்த்தெழுதலைப் பின்பற்றுவதிலும், அவருடைய அப்போஸ்தலர்களின் மரணத்திலும் நூற்றாண்டுகளாக உலகம் இருளுக்குள் மூழ்கியிருந்தது. பின்னர் 1820 ஆம் ஆண்டு, பிதாவாகிய தேவனும் அவருடைய குமாரனாகிய இயேசு கிறிஸ்துவும், கர்த்தருடைய சபையின் மறுஸ்தாபிதத்துக்கு ஆரம்பமாயிருக்க, தீர்க்கதரிசி ஜோசப் ஸ்மித்துக்குத் தரிசனமானார்கள்.
அவர் சகித்திருந்த எல்லாவற்றிற்கும் பின்பு, அவர் மனுக்குலத்திற்கு செய்த எல்லாவற்றிலும், எல்லாமுமே இயேசு கிறிஸ்துவின் பரிசுத்த நாமத்தை அகற்றுகிற பிற பெயர்களால் கர்த்தருடைய மறுஸ்தாபிதம் செய்யப்பட்ட சபை அழைக்கப்படுவதை அறியாமலே நாம் ஏற்றுக்கொண்டோம் என்ற ஆழ்ந்த வருத்தத்தை நான் அங்கீகரித்தேன்.
தகுதியுள்ளவர்களாக ஒவ்வொரு ஞாயிறும் நாம் திருவிருந்தில் பங்கேற்கும்போது, அவருடைய குமாரனாகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தை நம்மீது எடுத்துக்கொள்ள நாம் மனதுள்ளவர்களாயிருக்கிறோமென பரலோக பிதாவுக்கு நாம் கொடுக்கிற பரிசுத்த வாக்களிப்பை நாம் புதுப்பிக்கிறோம். 8 அவரைப் பின்பற்ற, மனந்திரும்ப, அவருடைய கற்பனைகளைக் கைக்கொள்ளவும் எப்பொழுதும் அவரை நினைவுகூரவும் நாம் வாக்களிக்கிறோம்.
அவருடைய சபையிலிருந்து அவருடைய பெயரை நாம் நீக்கும்போது, நமது வாழ்க்கையின் மத்திய கவனமான அவரை கவனக்குறைவாக நாம் அகற்றுகிறோமா?
நம்மீது இரட்சகரின் பெயரை தரித்துக்கொள்வதென்பது, இயேசுவே கிறிஸ்து என்று நமது செயல்கள் மற்றும் நமது வார்த்தைகளின் மூலமாக மற்றவர்களுக்கு அறிவிப்பதும் சாடசியளிப்பதும் அதில் அடங்கியிருக்கிறது. அவருக்காக நின்று, அவருடைய சபை அழைக்கப்படுகிற பெயரிலும் இரட்சகரையே பாதுகாக்க நாம் தவறி, “மார்மன்கள்” என்று நம்மை அழைக்கிற ஒருவரை புண்படுத்த நாம் மிகவும் பயப்படுகிறோமா?
மக்களாக, தனிப்பட்டவர்களாக, நம்மை சுத்திகரிக்க, நம்மைக் குணமாக்க, நம்மை பெலப்படுத்த, பெரிதாக்க, இறுதியாக நம்மை மேன்மைப்படுத்த, இயேசு கிறிஸ்துவின் பாவநிவர்த்தியின் வல்லமைக்கு பிரவேசிக்கும்படியிருந்தால் நாம் அந்த வல்லமைக்கு ஆதாரமாக தெளிவாக அவரை நாம் அங்கீகரிக்கவேண்டும். அவர் கட்டளையிட்ட பெயரால் அவருடைய சபையை அழைப்பதால் இதை நாம் ஆரம்பிக்கலாம்.
உலகத்தின் பெரும்பாலான இடங்களில் கர்த்தருடைய சபை தற்சமயம் “மார்மன் சபை” என மாறுவேடமிடப்பட்டிருக்கிறது. ஆனால், அதன் தலையாக யார் நின்றுகொண்டிருக்கிறார் என கர்த்தருடைய சபையின் அங்கத்தினர்களாகிய நாம் அறிவோம். இயேசு கிறிஸ்துவே. துரதிருஷ்டவசமாக, மார்மன் என்ற பதத்தை கேட்கிற அநேகர், நாம் மார்மனை தொழுதுகொள்கிறோம் என நினைக்கலாம். அப்படியல்ல. அந்த மகா பூர்வகாலத்து அமெரிக்க தீர்க்கதரிசியை நாம் கனம்பண்ணுகிறோம், மதிக்கிறோம். 9 ஆனால் நாம் மார்மனின் சீஷர்கள் அல்ல. நாம் கர்த்தருடைய சீஷர்கள்.
மறுஸ்தாபிதம் செய்யப்பட்ட சபையின் ஆரம்ப காலத்தில், மார்மன் சபை,மார்மன்கள் போன்ற பதங்கள், 10 இந்த பிற்காலங்களில் இயேசு கிறிஸ்துவின் சபையை மறுஸ்தாபிதம் செய்வதில் தேவனின் கரங்களை அழிக்க வடிவமைக்கப்பட்ட, வழக்கமாக கொடூரமான பதங்களாக, பழிச்சொல்லின் பதங்களின் அடைமொழிகளாகப் பயன்படுத்தப்பட்டன. 11
சகோதர சகோதரிகளே, சபையின் சரியான பெயரை மறுஸ்தாபிதம் செய்வதற்கு எதிராக அங்கே அநேக உலகப்பிரகாரமான விவாதங்களிருந்தன. நாம் வாழுகிற டிஜிட்டல் உலகத்திலினாலும், ஏறக்குறைய உடனடியாக, கர்த்தருடைய சபையைப்பற்றிய தகவலையும் சேர்த்து, நமக்குத் தேவையான தகவலைக் கண்டுபிடிக்க உதவுகிற தேடுதல் இயந்திரத்தின் தேர்வுமுறையினாலும், இந்த நேரத்தில் திருத்தம் புத்திசாலித்தனமானதல்ல என விமர்சகர்கள் சொல்லுகிறார்கள். நாம் “மார்மன்கள்” என்றும் “மார்மன் சபை” என்றும் மிகப்பரந்த அளவில் அறியப்பட்டிருப்பதால், நாம் அதைச் சிறந்தமுறையில் செய்யவேண்டுமென மற்றவர்கள் உணருகிறார்கள்.
ஒரு மனிதனால் உருவாக்கப்பட்ட ஸ்தாபனத்திற்கு வர்த்தகப் பெயரிடுதலைப்பற்றிய விவாதமாக இது இருந்தால், அந்த விவாதங்கள் வழக்கத்திலிருக்கலாம். ஆனால், இந்த முக்கியமான விஷயத்தில், அவருடைய சபையாக இருப்பதால் அவரை நோக்கிப் பார்த்து, கர்த்தருடைய வழிகள் ஒருபோதும் மனிதனுடைய வழிகளாயிருப்பதில்லை என்பதை அங்கீகரிப்போம். நாம் பொறுமையாயிருந்து நமது பாத்திரங்களை சிறப்பாய்ச் செய்தால், இந்த முக்கியமான பணியின் மூலமாக கர்த்தர் நம்மை நடத்துவார். எப்படியிருந்தாலும், சமுத்திரத்தைக் கடக்க ஒரு கப்பலைக் கட்டும் முயற்சியை நிறைவேற்ற நேபிக்கு அவர் உதவியதைப்போல, அவருடைய சித்தத்தைச் செய்ய நாடுகிறவர்களுக்கு கர்த்தர் உதவுகிறாரென நாம் அறிவோம். 12
இந்த தவறுகளை சரிசெய்யும் நமது முயற்சிகளில் நாம் மரியாதையாகவும் பொறுமையாகவும் இருக்கவேண்டும். நமது வேண்டுகோளுக்கு பதிலளிப்பதில் பொறுப்பான ஊடகம் அனுதாபப்படும்.
இத்தகைய ஒரு நிகழ்ச்சியை, இதற்கு முந்திய பொது மாநாட்டில் மூப்பர் பெஞ்சமின் டி ஹோயோஸ் பேசினார்.
“சில ஆண்டுகளுக்கு முன், மெக்சிகோவில் சபையின் பொது விவகார அலுவலகத்தில் பணிபுரிந்துகொண்டிருக்கும்போது [ஒரு கூட்டாளியும் நானும்] ஒரு வானொலி உரையில் பங்கேற்க அழைக்கப்பட்டபோது [நிகழ்ச்சி இயக்குனர்களில் ஒருவர்] [எங்களைக்] கேட்டார் ‘சபைக்கு ஏன் இவ்வளவு நீளப் பெயரிருக்கிறது?. . .
“இத்தகைய ஒரு அற்புதமான கேள்வியால் நானும் என்னுடைய கூட்டாளியும் புன்னகைத்து, பின்னர் சபையின் பெயர் மனிதனால் தேர்ந்தெடுக்கப்படவில்லை என விவரிக்கத் தொடர்ந்தோம். இது இரட்சகரால் கொடுக்கப்பட்டது. . . நிகழ்ச்சி இயக்குனர் உடனடியாகவும் மரியாதையுடனும் பதிலளித்தார், ‘மிகுந்த சந்தோஷத்துடன் நாங்கள் இப்படியாக இதை திரும்பச் சொல்வோம்.’” 13
அந்த அறிக்கை ஒரு மாதிரியைக் கொடுத்தது. பல ஆண்டுகளாக உள்ளே நுழைந்த தவறுகளை சரிசெய்ய ஒருவர் பின் ஒருவராக தனிப்பட்டவர்களாக நமது சிறப்பான முயற்சிகள் தேவைப்படுகிறது. 14 சரியான பெயரால் அழைக்கப்பட நம்மை அழைக்க நாம் முன்செல்வதை மீதமுள்ள உலகம் பின்பற்றலாம் அல்லது பின்பற்றாதிருக்கலாம். நாமும் அதையே செய்கிற, தவறான பெயர்களில் சபையையும் அதன் அங்கத்தினர்களையும் உலகத்தின் அநேகர் அழைத்தால் விரக்தியாயிருப்பது நமக்கு வெகுளித்தனமாயிருக்கும்.
நமது திருத்தப்பட்ட பாணி வழிகாட்டி உதவிகரமாயிருக்கிறது. அது கூறுகிறது, “முதல் குறிப்பில், சபையின் முழுப்பெயரான பிற்காலப் பரிசுத்தவான்களின் இயேசு கிறிஸ்து சபை விரும்பத்தக்கது. சுருக்கப்பட்ட குறிப்பு இரண்டாவது தேவைப்படும்போது சபை அல்லது இயேசு கிறிஸ்துவின் சபை என்ற பதங்கள் ஊக்குவிக்கப்படுகிறது. இயேசு கிறிஸ்துவின் மறுஸ்தாபிக்கப்பட்ட சபையும்கூட துல்லியமானது, ஊக்குவிக்கப்படுகிறது.” 15
“நீங்கள் மார்மனா?” என யாராவது கேட்டால், “நான் ஒரு பிற்காலப் பரிசுத்தவான்களின் இயேசு கிறிஸ்து சபையின் அங்கத்தினரா என நீங்கள் கேட்டால், ஆம், நான்!” என நீங்கள் பதிலளிக்கலாம்.
“நீங்கள் பிற்காலப் பரிசுத்தவான்களா?” 16 என யாராவது கேட்டால் “ஆம், நாங்கள். நான் இயேசு கிறிஸ்துவை நம்புகிறேன், நான் அவருடைய மறுஸ்தாபிதம் செய்யப்பட்ட சபையின் அங்கத்தினர்” என நீங்கள் பதிலளிக்கலாம்.
என்னுடைய அன்பான சகோதர சகோதரிகளே, கர்த்தருடைய சபையின் சரியான பெயரை மறுஸ்தாபிதம் செய்ய நமது சிறப்பானதை நாம் செய்தால் இது யாருடைய சபையோ அவர் அவருடைய வல்லமையையும் ஆசீர்வாதங்களையும் நாம் பார்த்திராத வழியில் பிற்காலப் பரிசுத்தவான்களின் தலைகள் மீது பொழிவார்.17 இயேசு கிறிஸ்துவின் மறுஸ்தாபிதம் செய்யப்பட்ட சுவிசேஷத்தின் ஆசீர்வாதத்தை ஒவ்வொரு தேசத்திற்கும், இனத்திற்கும், பாஷைக்கும், ஜனத்திற்கும் எடுத்துப்போகவும், கர்த்தருடைய இரண்டாம் வருகைக்காக உலகத்தை ஆயத்தப்படுத்தவும் நமக்குதவ நமக்கு அறிவும் தேவனின் வல்லமையும் நமக்கிருக்கும்.
ஆகவே பெயரில் என்ன இருக்கிறது? கர்த்தருடைய சபையின் பெயர் என்று வரும்போது, பதில் “எல்லாமுமே!” இது அவருடைய சபையாயிருப்பதால, அவருடைய வல்லமையால் நிறைந்திருப்பதால் அவருடைய பெயரில் அழைக்க இயேசு கிறிஸ்து நமக்கு வழிகாட்டினார்.
தேவன் ஜீவிக்கிறாரென நான் அறிவேன். இயேசுவே கிறிஸ்து. இன்று அவருடைய சபையை அவர் நடத்துகிறார். அப்படியே இயேசு கிறிஸ்துவின் பரிசுத்த நாமத்தில் நான் சாட்சியளிக்கிறேன், ஆமென்.