நீதியிலும் ஒற்றுமையிலும் பின்னப்பட்ட இருதயங்கள்
நமது சபை வரலாற்றில் இந்த 200 ஆண்டுகாலத்தின் முக்கிய கட்டத்தில், கர்த்தருடைய சபையின் அங்கத்தினர்களாக நீதியுடனும், எப்போதையும்விட ஒற்றுமையாகவும் இருக்க ஒப்புக்கொடுப்போமாக.
நீதியும், ஒற்றுமையும் மிகவும் குறிப்பிடத்தக்கவை. 1 ஜனங்கள் தேவனை முழு இருதயத்தோடு நேசிக்கும்போது, அவரைப் போல நீதியுள்ளவர்களாக மாற முயற்சிக்கும்போது, சமுதாயத்தில் சச்சரவும் பிணக்கும் குறைவாகவே இருக்கும். அங்கே அதிக ஒற்றுமை இருக்கிறது. இதை எடுத்துக்காட்டுகின்ற ஒரு உண்மையான விவரத்தை நான் விரும்புகிறேன்.
நமது விசுவாசத்திலில்லாத ஒரு இளைஞனாக, ஜெனரல் தாமஸ் எல். கேன் நாவூவை விட்டு வெளியேற வேண்டிய அவசியம் இருந்ததால், பரிசுத்தவான்களுக்கு உதவிசெய்து பாதுகாத்தார். பல ஆண்டுகளாக அவர் சபையின் வக்கீலாக இருந்தார். 2
1872 ஆம் ஆண்டில், ஜெனரல் கேன், அவரது திறமையான மனைவி, எலிசபெத் வூட் கேன் மற்றும் அவர்களது இரண்டு மகன்கள் பென்சில்வேனியாவில் உள்ள தங்கள் வீட்டிலிருந்து சால்ட் லேக் சிட்டிக்கு பயணம் செய்தனர். அவர்கள் பிரிகாம் யங் மற்றும் அவரது கூட்டாளிகளுடன் தெற்கு நோக்கி நடந்து செயின்ட் ஜார்ஜ், யூட்டாவிற்குச் சென்றனர். பெண்களைப்பற்றிய எதிர்மறை கருத்துக்களுடன் யூட்டாவுக்கு தன் முதல் பயணத்தை எலிசபெத் அணுகினார். அவர் கற்றுக்கொண்ட சில விஷயங்களால் அவர் ஆச்சரியப்பட்டார். உதாரணமாக, யூட்டாவில் பெண் ஒரு வாழ்க்கைக்காக சம்பாதிக்கக்கூடிய எந்தவொரு வேலையும் அவளுக்குத் திறந்திருப்பதைக் கண்டார். 3 சபை அங்கத்தினர்கள் பூர்வீக அமெரிக்கர்களைப் பொருத்தவரை தயவு மற்றும் புரிதல் கொண்டவர்களாக இருப்பதையும் அவர் கண்டார் 4
பயணத்தின் போது அவர்கள், ஃபில்மோரிலிலுள்ள தாமஸ் ஆர். மற்றும் மெற்றில்டா ராபின் கிங் வீட்டில் தங்கினர். 5
தலைவர் யங் மற்றும் அவரது குழுவுக்கு மெற்றில்டா உணவைத் தயாரித்துக் கொண்டிருந்தபோது, ஐந்து அமெரிக்க இந்தியர்கள் அறைக்குள் வந்ததாக எலிசபெத் எழுதினார். அழைக்கப்படாத போதிலும், அவர்கள் குழுவில் சேருவார்கள் என்று எதிர்பார்க்கப்பட்டது தெளிவாக தெரிந்தது. சகோதரி கிங் அவர்களிடம் “அவர்களின் பேச்சுவழக்கில்” பேசினார். தங்களுடைய முகத்தில் இனிமையான தோற்றத்துடன் அவர்கள் போர்வைகளுடன் அமர்ந்தனர். கிங் குழந்தைகளில் ஒருவரிடம், “உங்கள் தாய் அந்த மனிதர்களிடம் என்ன சொன்னார்…?” என்று எலிசபெத் கேட்டார்.
மெற்றில்டாவின் மகனின் பதில் “அவர் சொன்னார், இந்த அந்நியர்கள் முதலில் வந்தார்கள், நான் அவர்களுக்கு மட்டுமே சமைத்தேன்; ஆனால் உங்கள் உணவு இப்போது அடுப்பில் உள்ளது, அது தயாரானவுடன் நான் உங்களை அழைக்கிறேன்.”
எலிசபெத் கேட்டார், “அவர் உண்மையிலேயே அதைச் செய்வாரா, அல்லது சமையலறை வாசலில் துணிக்கைகளைக் கொடுப்பாரா?” 6
மெற்றில்டாவின் மகன், “அம்மா உங்களைப் போலவே அவர்களுக்கு சேவை செய்வார், அவருடைய மேஜையில் அவர்களுக்கு ஒரு இடம் கொடுப்பார்” என்று பதிலளித்தான்.
அவரும் அப்படியே செய்தார், “அவர்கள் முழு உரிமையுடன் சாப்பிட்டார்கள்.” இந்த உபசரிப்பவர் தனது கருத்தில் 100 சதவீதம் உயர்ந்ததாக எலிசபெத் விளக்கினார். 7 வெளிப்புற குணாதிசயங்களில் வித்தியாசமாக இருந்தாலும் ஜனங்கள் கண்ணியத்துடனும் மரியாதையுடனும் நடத்தப்படும்போது ஒற்றுமை மேம்படுகிறது.
தலைவர்களாக, கடந்த காலங்களில் எல்லா உறவுகளும் சரியாக இருந்தன, எல்லா நடத்தைகளும் கிறிஸ்துவைப் போன்றவை, அல்லது எல்லா முடிவுகளும் நியாயமானவை என்ற மாயையின் கீழ் நாமில்லை. ஆயினும், நாம் அனைவரும் பரலோகத்திலுள்ள நம்முடைய பிதாவின் பிள்ளைகள் என்று நம்முடைய விசுவாசம் கற்பிக்கிறது, மேலும் அவரையும் அவருடைய குமாரனும் நம்முடைய இரட்சகருமாகிய இயேசு கிறிஸ்துவையும் ஆராதிக்கிறோம். நமது விருப்பம் என்னவென்றால், நம்முடைய இருதயங்களும் மனங்களும் நீதியிலும் ஒற்றுமையிலும் பின்னப்பட்டிருக்கும், நாம் அவர்களுடன் ஒன்றாக இருப்போம் 8
நீதியானது ஒரு விரிவான தெளிவான சொல், ஆனால் மிக நிச்சயமாக தேவனின் கட்டளைகளின்படி வாழ்வது அதில் அடங்கும். 9 இது உடன்படிக்கை பாதையை உருவாக்கும் பரிசுத்தமான நியமங்களுக்கு நம்மைத் தகுதிபடுத்துகிறது, மேலும் நம் வாழ்விற்கு ஆவியானவர் வழிநடத்த வேண்டும் என்று ஆசீர்வதிக்கிறது. 10
இந்த நேரத்தில் நீதியாயிருப்பதென்பது நம் வாழ்வில் ஒவ்வொரு ஆசீர்வாதத்தையும் நாம் பெற்றிருப்போம் என்பதைச் சார்ந்து இருப்பதில்லை. நாம் திருமணமாகாமலோ அல்லது குழந்தைகளுடன் ஆசீர்வதிக்கப்படாமலோ அல்லது இப்போது விரும்பிய பிற ஆசீர்வாதங்களைப் பெறாமலோ இருக்கலாம். ஆனால் உண்மையுள்ள நீதியுள்ளவர்கள் “ஒருபோதும் முடிவில்லாத மகிழ்ச்சியின் நிலையில் தேவனோடு வாழலாம்” என்று கர்த்தர் வாக்குறுதி அளித்துள்ளார். 11
ஒற்றுமை என்பது ஒரு விரிவான தெளிவான சொல், ஆனால் நிச்சயமாக தேவனை நேசிக்கவும், நம்முடைய சக மனிதர்களை நேசிக்கவும் முதல் மற்றும் இரண்டாவது பெரிய கட்டளைகளை எடுத்துக்காட்டுகிறது. 12 இது சீயோன் மக்களைக் குறிக்கிறது, அவர்களின் இருதயங்களும் மனங்களும் ஒற்றுமையுடன் பின்னப்பட்டுள்ளன. 13
எனது செய்தியின் பொருள் பரிசுத்த வேதங்களில் இருந்து மாறுபாடு மற்றும் படிப்பினைகள்.
பிதாவும் அவருடைய குமாரனும் முதன்முதலில் தோன்றி 1820 ஆம் ஆண்டில் இயேசு கிறிஸ்துவின் சுவிசேஷத்தை மறுஸ்தாபிதம் செய்ய ஆரம்பித்து 200 ஆண்டுகள் ஆகின்றன. மார்மன் புஸ்தகத்தில் 4 நேபியில் உள்ள விவரம், இரட்சகர் தோன்றி பண்டைய அமெரிக்காவில் அவரது சபையை ஸ்தாபித்த பின்னர், இதேபோன்ற 200 ஆண்டு காலத்தை உள்ளடக்கியது.
4 நேபியில் நாம் வாசிக்கிற வரலாற்றுப் பதிவு, பொறாமைகள், சண்டைகள், சலசலப்புகள், பொய்கள், கொலைகள் அல்லது எந்தவிதமான காமவெறியும் இல்லாத ஜனத்தை விவரிக்கிறது. இந்த நீதியின் காரணமாக பதிவு கூறுகிறது, “… தேவ கரத்தால் சிருஷ்டிக்கப்பட்ட ஜனங்கள் எல்லோருக்குள்ளும் இவர்களை காட்டிலும் மிகுந்த மகிழ்ச்சியான ஜனம் நிச்சயமாக இருக்க முடியாது. 14
ஒற்றுமையைப் பொறுத்தவரையில் 4 நேபி வாசிக்கிறது, “மேலும் ஆனபடியால், ஜனங்களுடைய இருதயங்களில் வாசமாயிருந்த தேவ அன்பினிமித்தம், தேசத்தில் எந்த பிணக்கும் இல்லாமல் இருந்தது.” 15
துரதிருஷ்டவிதமாக, பின்னர் இருநூற்று ஒன்றாம் வருடத்தில் தொடங்கிய பெரும் மாற்றத்தை 4 நேபி விவரிக்கிறது. 16 அப்போது அக்கிரமமும் பிரிவினைகளும் நீதியையும் ஒற்றுமையையும் அழித்தன. இறுதியில் மாபெரும் தீர்க்கதரிசி மார்மன் தனது மகன் மரோனியிடம் புலம்புகிறபடி பின்னர் ஏற்பட்ட சீரழிவின் மிகுதி மிகவும் தீயதாக இருந்தது,
“என் குமாரனே, இவ்வளவு அருவருப்பிலே பிரியப்படுகிற இப்படியொரு ஜனம் இருக்கக்கூடுமோ?
“தேவன் தம்முடைய புயத்தை நியாய விசாரிப்பிலே நமக்கு விரோதமாக நீட்டாதிருப்பார் என்று நாம் எப்படி எதிர்பார்க்க முடியும்?” 17
இந்த ஊழியக்காலத்தில், நாம் ஒரு விசேஷித்த காலத்தில் வாழ்ந்தாலும், 4 நேபியில் விவரிக்கப்பட்டுள்ள நீதியாலும் ஒற்றுமையாலும் உலகம் ஆசீர்வதிக்கப்படவில்லை. உண்மையில், நாம் குறிப்பாக வலுவான பிரிவினைகளின் தருணத்தில் வாழ்கிறோம். இருப்பினும், இயேசு கிறிஸ்துவின் சுவிசேஷத்தை ஏற்றுக்கொண்ட மில்லியன் கணக்கானவர்கள் நீதியையும் ஒற்றுமையையும் அடைய தங்களை அர்ப்பணித்துள்ளனர். நாம் சிறப்பாகச் செய்ய முடியும் என்பதை நாம் அனைவரும் அறிவோம், அதுதான் இந்த நாளில் நமது சவால். ஒட்டுமொத்த சமுதாயத்தையும் உயர்த்தவும் ஆசீர்வதிக்கவும் நாம் ஒரு சக்தியாக இருக்க முடியும். நமது சபை வரலாற்றில் இந்த 200 ஆண்டுகாலத்தின் முக்கிய கட்டத்தில், கர்த்தருடைய சபையின் அங்கத்தினர்களாக நீதியுடனும், எப்போதையும்விட ஒற்றுமையாகவும் இருப்போம். தலைவர் ரசல் எம். நெல்சன் நம்மிடம் “அதிக நாகரிகம், இன மற்றும் கலாச்சார நல்லிணக்கம் மற்றும் பரஸ்பர மரியாதை ஆகியவற்றை வெளிப்படுத்த” கேட்டுள்ளார். 18 இதன் பொருள் ஒருவருக்கொருவரையும் தேவனையும் நேசிப்பதும், அனைவரையும் சகோதர சகோதரிகளாக ஏற்றுக்கொள்வதும், உண்மையிலேயே ஒரு சீயோன் ஜனமாக இருப்பதும் ஆகும்.
அனைத்தையும் உள்ளடக்கிய நமது கோட்பாட்டுடன், நாம் ஒற்றுமையின் சோலையாக இருந்து பன்முகத்தன்மையைக் கொண்டாடலாம். ஒற்றுமையும் பன்முகத்தன்மையும் எதிரெதிரானது அல்ல. சேர்த்துக்கொள்ளும் சூழ்நிலையையும் பன்முகத்தன்மைக்கு மரியாதையையும் வளர்ப்பதால் நாம் அதிக ஒற்றுமையை அடைய முடியும். நான் சான் பிரான்சிஸ்கோ, கலிஃபோர்னியா பிணைய தலைமையில் பணியாற்றிய காலப்பகுதியில், எங்களிடம் ஸ்பானிஷ், டோங்கன், சமோவான், டகலாக் மற்றும் மாண்டரின் மொழி பேசும் சபைகள் இருந்தன. எங்கள் ஆங்கிலம் பேசும் தொகுதிகள் பல இன மற்றும் கலாச்சார பின்னணியைச் சேர்ந்தவர்களால் ஆனவை. அங்கு அன்பும் நீதியும் ஒற்றுமையும் இருந்தது.
பிற்காலப் பரிசுத்தவான்களின் இயேசு கிறிஸ்து சபையில் தொகுதிகள் மற்றும் கிளைகள், புவியியலால் அல்லது மொழியால் 19 தீர்மானிக்கப்படுகிறது, இனம் அல்லது கலாச்சாரத்தால் அல்ல. அங்கத்தினர் பதிவேடுகளில் இனம் அடையாளம் காணப்படுவதில்லை.
மார்மன் புஸ்தகத்தின் ஆரம்பத்தில், கிறிஸ்துவின் பிறப்புக்கு சுமார் 550 ஆண்டுகளுக்கு முன்பு, பரலோக பிதாவின் பிள்ளைகளுக்கும் தகப்பனுக்கும் இடையிலான உறவு குறித்த அடிப்படை கட்டளையை நாம் கற்பிக்கப்படுகிறோம். அனைவரும் கர்த்தருடைய கட்டளைகளைக் கடைப்பிடிக்க வேண்டும், மேலும் அனைவரும் கர்த்தருடைய நன்மையில் பங்கெடுக்க அழைக்கப்படுகிறார்கள்; “தம்மிடம் வரும் ஒருவனையும் வெள்ளையனாகிலும், கருப்பனாகிலும், அடிமையாகிலும் சுதந்தரவாளியாகிலும், ஆணாகிலும், பெண்ணாகிலும் அனைவரும் தேவனுக்குச் சமமானவர்களே; அவர் புறஜாதிகளை நினைவு கூர்ந்தார்; தேவனுக்கு யூதரும் புறஜாதியாரும் அனைவரும் ஒத்தவர்கள்.” 20
இரட்சகரின் ஊழியமும் செய்தியும் எல்லா இனங்களையும் நிறங்களையும் தேவனின் குழந்தைகள் என்று தொடர்ந்து அறிவித்துள்ளன. நாம் சகோதர சகோதரிகளாயிருக்கிறோம். நமது கோட்பாட்டில் மறுஸ்தாபிதத்துக்கு புரவலர் தேசம், அமெரிக்க ஐக்கிய நாடுகள் என நாம் நம்புகிறோம், அ.ஐ.நாட்டின் அரசியல் சாசனம் 21 , மற்றும் அது தொடர்புள்ள ஆவணங்கள் 22 பரிபூரணமற்ற மனுஷர்களால் எழுதப்பட்டவை, எல்லா ஜனத்தையும் ஆசீர்வதிக்க தேவனால் அவர்கள் உணர்த்தப்பட்டார்கள். கோட்பாடும் உடன்படிக்கைகளுமில் நாம் வாசிக்கிறபடியே, இந்த ஆவணங்கள் “எழுதப்பட்டன, அவை எல்லா மாம்சங்களின் உரிமைகள் மற்றும் பாதுகாப்பிற்காக , நியாயமான மற்றும் புனிதமான கொள்கைகளின்படி பராமரிக்கப்பட வேண்டும்.” 23 இந்த கொள்கைகளில் இரண்டு, சுயாதீனம் மற்றும் ஒருவர் தன் சொந்த பாவங்களுக்கான பொறுப்பேற்றல். கர்த்தர் சொன்னார்:
“ஆகையால், எந்தவொரு மனிதனும் ஒருவருக்கொருவர் அடிமைத்தனத்தில் இருப்பது சரியல்ல.
“இந்த நோக்கத்திற்காக நான் இந்த நிலத்தின் அரசியலமைப்பை ஸ்தாபித்தேன், இந்த நோக்கத்திற்காக நான் எழுப்பிய ஞானமுள்ள மனிதர்களின் கைகளால், இரத்தம் சிந்துவதன் மூலம் தேசத்தை மீட்டேன்.” 24
இந்த வெளிப்படுத்தல் மிசௌரியில் பரிசுத்தவான்கள் அதிக துன்புறுத்தல் அடைந்த 1833ல் பெறப்பட்டது. கோட்பாடும் உடன்படிக்கைகளும் பாகம் 101 தலைப்பின் ஒரு பகுதி கூறுகிறது, ”ஜாக்சன் கவுண்டியில் உள்ள வீடுகளிலிருந்து கும்பல்கள் அவர்களை விரட்டியடித்தன. … சபையின் [அங்கத்தினர்களுக்கு] எதிரான மரண அச்சுறுத்தல்கள் பல இருந்தன. ” 25
இது பல முனைகளிலும் பதற்றத்தின் காலமாயிருந்தது. பல மிசௌரியர்கள் பூர்வீக அமெரிக்கர்களை விட்டுக்கொடுக்காத எதிரியாகக் கருதி, அவர்கள் நிலத்திலிருந்து அகற்றப்பட வேண்டும் என்று விரும்பினர். கூடுதலாக, மிசௌரியின் ஜனங்களில் பலர் அடிமை உரிமையாளர்களாக இருந்தனர் மற்றும் அடிமைத்தனத்தை எதிர்ப்பவர்களால் அச்சுறுத்தப்பட்டதாக உணர்ந்தனர்.
இதற்கு நேர்மாறாக, நமது கோட்பாடு பூர்வீக அமெரிக்கர்களை மதித்தது, இயேசு கிறிஸ்துவின் சுவிசேஷத்தை அவர்களுக்கு கற்பிக்க வேண்டும் என்பதே நமது விருப்பம். அடிமைத்தனத்தைப் பொறுத்தவரை, எந்த ஒரு மனிதனும் இன்னொருவனுக்கு அடிமைப்படக்கூடாது என்பதை நம் வேதங்கள் தெளிவுபடுத்தியிருந்தன. 26
இறுதியாக பரிசுத்தவான்கள் வன்முறையால் மிசௌரியிலிருந்து துரத்தப்பட்டனர் 27 மேற்கு நோக்கி போகும்படி தள்ளப்பட்டனர். 28 பரிசுத்தவான்கள் முன்னேறி, நீதியையும், ஒற்றுமையையும் தொடர்கிற, இயேசு கிறிஸ்துவின் சுவிசேஷத்தின்படி வாழ்வதால் வருகிற சமாதானத்தைக் கண்டார்கள்.
யோவானின் சுவிசேஷத்தில் பதிவுசெய்யப்பட்ட இரட்சகரின் பரிந்துபேசும் ஜெபத்தால் நான் மகிழ்ச்சியடைகிறேன். பிதா தன்னை அனுப்பியதாகவும், இரட்சகராகிய அவர் செய்ய அனுப்பப்பட்ட வேலையை முடித்துவிட்டார் என்பதையும் மீட்பர் ஏற்றுக்கொண்டார். அவர் தன் சீஷர்களுக்குக்காகவும் கிறிஸ்துவை விசுவாசிக்கிறவர்களுக்காகவும் ஜெபிக்கிறார்: “அவர்கள் ஒன்றாக இருக்க வேண்டும்; பிதா என்னிடத்திலும், என்னிடத்தில் நீங்களும் இருப்பதுபோல, அவர்களும் நம்மில் ஒன்றாக இருக்க வேண்டும்.“ 29 தான் காட்டிக்கொடுக்கப்படுவதற்கும் சிலுவையிலறையப்படுவதற்கும் முன்பு கிறிஸ்து ஜெபித்தது ஒன்றாயிருக்கவே.
இயேசு கிறிஸ்துவின் சுவிசேஷத்தை மறுஸ்தாபிதம் செய்த பிறகு முதல் ஆண்டில், கோட்பாடும் உடன்படிக்கைகளுமின் பாகம் 38 ல் பதிவு செய்யப்பட்டுள்ளதாவது, கர்த்தர் போர்களையும் துன்மார்க்கத்தையும்பற்றிப் பேசுகிறார், “நான் உங்களுக்குச் சொல்கிறேன், ஒன்றாக இருங்கள்; நீங்கள் ஒன்றாயில்லாவிட்டால் நீங்கள் என்னுடையவர்கள் அல்ல. ” 30
நமது சபை கலாச்சாரம் இயேசு கிறிஸ்துவின் சுவிசேஷத்திலிருந்து வருகிறது. ரோமாபுரியினருக்கு பவுல் அப்போஸ்தலன் எழுதிய நிருபம் ஆழமானது 31 ரோமிலிருந்த ஆரம்பகால சபை யூதர்கள் மற்றும் புறஜாதியார் அடங்கியது. இந்த முற்கால யூதர்கள் யூத கலாச்சாரத்தைக் கொண்டிருந்தனர், அடிமைத்தளையை வென்று பலுகிப் பெருகத் தொடங்கினர். 32
ரோமில் உள்ள புறஜாதியார் ஒரு குறிப்பிடத்தக்க ஹெலனிஸ்டிக் செல்வாக்கைக் கொண்ட ஒரு கலாச்சாரத்தைக் கொண்டிருந்தனர், ஏதென்ஸ் மற்றும் கொரிந்துவில் அவன் பெற்ற அனுபவங்களால் பவுல் அப்போஸ்தலன் நன்கு புரிந்து கொண்டான்.
இயேசு கிறிஸ்துவின் சுவிசேஷத்தை ஒரு சுருக்கமான முறையில் பவுல் முன்வைக்கிறான். இயேசு கிறிஸ்துவின் உண்மையான சுவிசேஷத்துடன் முரண்படுகிற, யூத மற்றும் புறஜாதி கலாச்சாரத்தின் பொருத்தமான அம்சங்களை அவன் விவரிக்கிறான். 33 இயேசு கிறிஸ்துவின் சுவிசேஷத்துடன் ஒத்துப்போகாத அவர்களின் நம்பிக்கைகள் மற்றும் கலாச்சார தடைகளை விட்டுவிடுமாறு முக்கியமாக அவன் ஒவ்வொருவரையும் கேட்டுக்கொள்கிறான். கட்டளைகளைக் கடைப்பிடிக்கவும், ஒருவருக்கொருவர் அன்பு செலுத்தவும், நீதியே இரட்சிப்புக்கு வழிவகுக்கிறது என்றும் யூதர்களுக்கும் புறஜாதியினருக்கும் பவுல் அறிவுறுத்துகிறான். 34
இயேசு கிறிஸ்துவின் சுவிசேஷத்தின் கலாச்சாரம் ஒரு புறஜாதி கலாச்சாரம் அல்லது யூத கலாச்சாரம் அல்ல. இது ஒருவரின் தோலின் நிறம் அல்லது ஒருவர் வசிக்கும் இடத்தால் தீர்மானிக்கப்படுவதில்லை. தனித்துவமான கலாச்சாரங்களால் நாம் மகிழ்ச்சியடைகையில், இயேசு கிறிஸ்துவின் சுவிசேஷத்துடன் முரண்படும் அந்த கலாச்சாரங்களின் அம்சங்களை நாம் விட்டுவிட வேண்டும். நமது அங்கத்தினர்கள் மற்றும் புதிய மனமாறியோர் பெரும்பாலும் பல்வேறு இன மற்றும் கலாச்சார பின்னணியிலிருந்து வந்தவர்கள். சிதறிய இஸ்ரேலை கூட்டிச்சேர்க்க தலைவர் நெல்சனின் அறிவுரையை நாம் பின்பற்றினால், பவுலின் காலத்தில் யூதர்களும் புறஜாதியாரும் இருந்ததைப் போலவே நாம் வித்தியாசமாக இருப்பதைக் காண்போம். ஆயினும், இயேசு கிறிஸ்துவை நேசிப்பதிலும் விசுவாசத்திலும் நாம் ஒன்றுபடலாம். பவுல் ரோமருக்கு எழுதிய நிருபம் இயேசு கிறிஸ்துவின் நற்செய்தியின் கலாச்சாரத்தையும் கோட்பாட்டையும் நாம் பின்பற்றுகிறோம் என்ற கொள்கையை நிறுவுகிறது. அது இன்றும் நமக்கு ஒரு மாதிரி. 35 ஆலய நியமங்கள் நம்மை விசேஷித்த வழிகளில் ஒன்றிணைத்து, நித்திய முக்கியத்துவம் வாய்ந்த ஒவ்வொரு வழியிலும் ஒன்றாக இருக்க அனுமதிக்கின்றன.
உலகெங்கிலும் உள்ள நமது முன்னோடி அங்கத்தினர்களை நாம் மதிக்கிறோம், அவர்கள் பரிபூரணர்களாக இருந்ததால் அல்ல, ஆனால் அவர்கள் கஷ்டங்களை வென்று, தியாகங்களைச் செய்தார்கள், கிறிஸ்துவைப் போலவே இருக்க விரும்பினார்கள், விசுவாசத்தைக் கட்டியெழுப்பவும், இரட்சகருடன் ஒன்றாக இருக்கவும் முயன்றார்கள். இரட்சகருடன் அவர்கள் ஒன்றுபட்டிருந்தது அவர்களை ஒருவருக்கொருவராக ஒன்றுபட்டிருக்க உருவாக்கியது.35 இந்த கொள்கை இன்று உங்களுக்கும் எனக்கும் பொருந்தும்.
பிற்காலப் பரிசுத்தவான்களின் இயேசு கிறிஸ்து சபையின் அங்கத்தினர்களுக்கான தெளிவான அழைப்பு, ஒரே இதயமும் ஒரே மனமும் கொண்ட ஒரு சீயோன் ஜனமாக இருக்க முயற்சித்து நீதியுடன் வாழ வேண்டும் என்பதே. 36
நாம் நீதியுள்ளவர்களாகவும், ஐக்கியமாகவும், நான் சாட்சியமளிக்கிற நம்முடைய இரட்சகராகிய இயேசு கிறிஸ்துவுக்கு சேவை செய்வதிலும் ஆராதிப்பதிலும் முழுமையாக கவனம் செலுத்த வேண்டும் என்பதே எனது ஜெபம். இயேசு கிறிஸ்துவின், நாமத்தினாலே, ஆமென்.