“என்னைப் பின்பற்றி வா”
நமது பரலோகப் பெற்றோரின் வீட்டிற்குத் திரும்பவும், நாம் நேசிக்கிறவர்களுடனிருக்கவும் உடன்படிக்கை பாதையை எடுக்க இயேசு கிறிஸ்து நம்மை அழைக்கிறார்.
எனக்கன்பான சகோதர சகோதரிகளே, இந்த ஓய்வுநாளின் காலையில் உங்களோடிருப்பதில் என்னுடைய மனைவி வென்டியும் நானும் மகிழ்ச்சியடைகிறோம். கடந்த நமது பொதுமாநாட்டிலிருந்து நிறைய நடந்துவிட்டன. கன்செப்சியான், சிலியில், பாரென்க்யுவில்லா, கொலம்பியா, ரோம், இத்தாலியில் புதிய ஆலயங்கள் பிரதிஷ்டை செய்யப்பட்டன. இந்த பரிசுத்த நிகழ்ச்சிகளில் ஆவியின் ஒரு செழுமையான பொழிவை நாம் அனுபவித்தோம்.
சமீபத்தில், மார்மன் புஸ்தகத்தைப் படித்து, சந்தோஷத்தையும், மறைந்திருந்த பொக்கிஷங்களையும் கண்ட அநேக பெண்களுக்கு (ஆண்களுக்கும்) நான் பாராட்டுதலைத் தெரிவிக்கிறேன். அற்புதங்கள் பெறப்பட்டதைப்பற்றிய அறிக்கைகளால் நான் உணர்த்தப்பட்டேன்.
இப்போது உதவிக்காரர்களாக இருந்து, ஒவ்வொரு ஞாயிறும் தகுதியுள்ளவர்களாக திருவிருந்தை பரிமாறுகிற 11வயதான இளம் வாலிபர்களைப்பற்றி நான் வியப்புறுகிறேன். பீஹைவ்வாக இப்போது ஆர்வமாகக் கற்றுக்கொண்டும் சேவைசெய்துகொண்டுமிருக்கிற நமது 11வயது இளம் பெண்களுடனேகூட அவர்கள் ஆலயத்திற்குப் போகிறார்கள். இளம் வாலிபர்களும், இளம் பெண்களும் சுவிசேஷ சத்தியங்களை தெளிவுடனும் அர்ப்பணிப்புடனும் போதித்துக்கொண்டிருக்கிறார்கள்.
சபை ஆதரிக்கிற வீட்டை மையப்படுத்துகிற பாடத்திட்டத்தைப் பின்பற்ற அவர்களுடைய பெற்றோருடன் அவர்கள் செயல்படும்போது தங்கள் வீடுகளில் சுவிசேஷத்தைப் போதிக்க உதவிக்கொண்டிருக்கிற பிள்ளைகளுடன், வாலிபர்களுடன் நான் மகிழ்ச்சியடைகிறேன்.
ஒரு சனிக்கிழமை அதிகாலையில், சபை புத்தகத்தை எடுத்து நான் என் ஆவியைப் போஷிக்கவேணடுமென சந்தோஷத்தில் சத்தமிட்ட ஒரு நான்கு வயது சிறுவன் பிளேக்கின் இந்த புகைப்படத்தை நாங்கள் பெற்றோம்.
பிளேக், நாங்கள் உன்னுடனும், இயேசு கிறிஸ்துவின் மறுஸ்தாபிக்கப்பட்ட சுவிசேஷத்தின் சத்தியங்களில் உண்டுகளித்தலில் தங்களுடைய ஆவியைப் போஷிக்க தேர்ந்தெடுக்கிற மற்றவர்களுடனும் நாங்கள் சிலிர்க்கிறோம். ஆலயத்தில் அவர்கள் தொழுதுகொண்டு சேவை செய்யும்போது, தங்கள் வாழ்க்கையில் தேவனின் வல்லமையை அநேகர் பெற்றுக்கொண்டிருக்கிறார்கள் என்பதை அறிந்ததில் நாங்கள் சந்தோஷப்படுகிறோம்.
உங்களில் அநேகர் அறிந்ததைப்போல, மூன்று மாதங்களுக்கு முன்பு எங்கள் மகள் வென்டி இந்த அநித்திய வாழ்க்கையிலிருந்து புறப்பட்டுப்போனபோது, எங்கள் குடும்பம் ஒரு மென்மையான பிரிவை அனுபவித்தோம். புற்றுநோயோடு அவளுடைய போராட்டத்தின் கடைசி நாட்களில் எங்கள் அப்பா மகள் வழியனுப்பு உரையாடலுக்கான சந்தர்ப்பத்துடன் நான் ஆசீர்வதிக்கப்பட்டிருந்தேன்.
நான் அவளுடைய கைகளைப் பற்றிக்கொண்டு நான் எவ்வளவாக அவளை நேசிக்கிறேன், அவளுடைய தகப்பனாயிருக்க நான் எவ்வளவு நன்றியுள்ளவனாக இருக்கிறேன் என்று அவளிடம் கூறினேன். “நீ ஆலயத்தில் திருமணம் செய்து, உண்மையுள்ளவளாக உன்னுடைய உடன்படிக்கைகளைக் கௌரவித்தாய். நீயும் உன் கணவரும் உங்கள் குடும்பத்திற்குள் ஏழு பிள்ளைகளைக் கொண்டுவந்து, இயேசு கிறிஸ்துவின் பக்தியுள்ள சீஷர்களாயிருக்க, வீரமுள்ள சபை அங்கத்தினர்களாயிருக்க, குடிமக்களுக்கு பங்களிப்பாக இருக்க, அவர்களை வளர்த்தீர்கள். அதே திறமை கொண்ட துணைகளை அவர்கள் தேர்ந்தெடுத்தனர். உன் தகப்பன் உன்னைப்பற்றி மிகமிக பெருமைப்படுகிறார். நீ எனக்கு அதிக சந்தோஷத்தைக் கொண்டுவந்தாய்!” என நான் சொன்னேன்.
“உங்களுக்கு நன்றி அப்பா” என அவள் அமைதியாக பதிலளித்தாள்.
எங்களுக்கு அது ஒரு இளகிய, கண்ணீரின் நேரமாயிருந்தது. அவளுடைய 67 ஆண்டுகளில் நாங்கள் ஒன்றாய் வேலை செய்தோம், ஒன்றாய் பாடினோம், அடிக்கடி ஒன்றாய் சறுக்கு விளையாடினோம். ஆனால் அந்த மாலையில், உடன்படிக்கைகள், நியமங்கள், விசுவாசம், குடும்பம், அன்பு, நித்திய ஜீவன் போன்ற மிகமுக்கியமான காரியங்களைக் குறித்து நாங்கள் பேசினோம்.
நாங்கள் எங்களுடைய மகளை அதிகமாக தவறவிடுகிறோம். இருப்பினும், இயேசு கிறிஸ்துவின் மறுஸ்தாபித சுவிசேஷத்தினால் அவளைப்பற்றி நாங்கள் கவலைப்படவில்லை. தேவனுடான உடன்படிக்கைகளை நாம் தொடர்ந்து கைக்கொள்ளும்போது மீண்டும் அவளுடனிருப்பதின் எதிரபார்ப்பில் நாம் வாழுகிறோம். இதற்கிடையில், இங்கே நாம் கர்த்தருக்கு சேவைசெய்து கொண்டிருக்கிறோம், அங்கே, பரதீசில் அவருக்கு அவள் சேவை செய்துகொண்டிருக்கிறாள்.1
உண்மையில், என் மனையியும் நானும், இந்த ஆண்டின் ஆரம்பத்தில் பரதீசுக்கு விஜயம் செய்தோம், பரதீசு, கலிபோர்னியா. இது நடந்தபோது, இந்த உலகத்தைவிட்டு எங்கள் மகள் புறப்பட்டுச் சென்ற பின்பு 40 மணிநேரங்களுக்குள் அங்கு எங்களுடைய திட்டமிடப்பட்ட விஜயம் வந்தது. மூப்பர் கெவின் டபுள்யு. பியர்சன்னுடனும் அவர் மனைவி ஜூனுடனும் நாங்களும் சிகோ கலிபோர்னியா பிணையத்தின் பரிசுத்தவான்களால் வலுப்படுத்தப்பட்டோம். அவர்களுடைய விசுவாசம், அவர்களுடைய ஊழியம் செய்தல் மேலும், கலிபோர்னியாவின் வரலாற்றில் மிகப்பெரிய அழிவுக்கேதுவான காட்டுத்தீயிலிருந்து அவர்களுடைய பேரழிவின் இழப்புக்கு மத்தியில் நடந்த அற்புதங்களைப்பற்றி நாங்கள் அறிந்துகொண்டோம்.
முதலாவதாக முன் வந்த அநேகரில் ஒருவரான இளம் காவலதிகாரி ஜானுடன் நாங்கள் நீண்ட நேரம் பேசினோம். நவம்பர் 8, 2018ல் தீப்பிழம்பும், நெருப்பும் நகரத்தின் வழியே ஊடுருவி, ஒரு சவுக்கைப்போல எதையும் விட்டுவைக்காமல் சொத்துக்களையும் உடமைகளையும் விழுங்கி பரதீசு மேல் அடர்ந்த இருள் இறங்கியது ஆனால், சாமபலும்,செங்கல் புகைப்போக்கிகளும் குவிந்தன என அவர் நினைவுகூர்ந்தார்.
தன்னுடைய உயிருக்கு ஆபத்திலும், பாதுகாப்பாக தப்பிக்க நபர் நபராக, குடும்பம் குடும்பமாக அவர் உதவியபோது, அச்சுறுத்தலைத் தூண்டுகிற ஈட்டிகளுடன் ஊடுருவமுடியாத, இருளின் கோடுகளுடனே 15மணிநேரங்களாக ஜான் வண்டியோட்டினார். இருந்தும், அந்த கடுமையான சோதனையின்போது, ஜானை மிகவும் அச்சுறுத்திய கேள்வி எதுவென்றால், “என்னுடைய குடும்பத்தினர் எங்கேயிருக்கிறார்கள்?” விரக்தியின் அச்சுறுத்தலின் அநேக நீண்ட மணிநேரங்களுக்குப் பின்னர், இறுதியில் அவர்களுடைய பாதுகாப்பான வெளியேற்றத்தைப்பற்றி அவர் அறிந்தார்.
அவருடைய குடும்பத்தின்மீதுள்ள அக்கறையின் ஜானின் விவரம், உங்களுடைய அநித்திய வாழ்க்கையின் முடிவு அணுகிக்கொண்டிருக்கும்போது “என்னுடைய குடும்பத்தினர் எங்கேயிருக்கிறார்கள்?” என்று நீங்கள் கேட்கக்கூடிய உங்களுடன், இன்றிரவு பேச நான் உணர்த்தப்பட்டேன். அந்த வரும் நாளில் நீங்கள் உங்கள் அநித்திய தகுதிகாணலை நிறைவேற்றி, ஆவி உலகத்திற்குள் பிரவேசிக்கும்போது “என்னுடைய குடும்பத்தினர் எங்கேயிருக்கிறார்கள்?” என்ற அந்த இருதயத்தைப் பிடுங்குகிற கேள்வியுடன் நேருக்கு நேராக நீங்கள் கொண்டுவரப்படுவீர்கள்.
நமது நித்திய வீட்டிற்குத் திரும்புகிறதைப்பற்றி இயேசு கிறிஸ்து போதிக்கிறார். நமது பரலோக பிதாவின் நித்திய முன்னேற்றத்தின் திட்டத்தைப்பற்றி நம்மில் எவரையும்விட அவர் நண்றாகப் புரிந்திருக்கிறார். எல்லாவற்றிற்கும் மேலாக அவர் அனைத்திற்கும் தலைக்கல்லானவர். அவரே நமது மீட்பர், நம்மை குணமாக்குபவர், நமது இரட்சகர்.
ஆதாமும் ஏவாளும் ஏதேன் தோட்டத்திலிருந்து வெளியேற்றப்பட்டதிலிருந்து, அவரைப் பின்பற்ற தேர்ந்தெடுத்த அனைவருக்கும் உதவும்படியாக, அவருடைய மகா பலத்தினாலான புயத்தை கிறிஸ்துவான இயேசு வழங்கினார். எல்லா வகையான மனிதர்களிடத்திலிருந்து, எல்லா வகையான பாவங்களிருந்தபோதிலும் அவருடைய புயங்கள் இன்னமும் நீட்டப்பட்டிருக்கினவென்று திரும்பத் திரும்ப வேதங்கள் பதிவு செய்திருக்கின்றன.2
குடும்ப அன்பு என்றென்றும் நீடித்திருக்க நம் ஒவ்வொருவரிலுமிருக்கிற ஆவி இயற்கையாக ஏங்குகிறது நீங்கள் என்றென்றும் ஒன்று சேர்ந்திருக்க நீங்கள் விரும்பினால் அன்பு ஒன்றே உங்களுக்குத் தேவை என்ற ஒரு பொய்யான நம்பிக்கையை காதல் பாடல்கள் நிலைக்கச் செய்கிறது. மரணத்திற்குப் பின்பு எல்லா ஜனங்களும் அவர்களின் அன்புக்குரியவர்களுடன் இருப்பதற்கு இயேசு கிறிஸ்துவின் உயிர்த்தெழுதல் ஒரு வாக்குத்தத்தத்தைக் கொடுக்கிறது என சிலர் தவறாக நம்புகிறார்கள்.
உண்மையில், வாழ்ந்தவர்கள் அனைவரும் உயிர்த்தெழுந்து என்றென்றும் 3வாழ்வார்கள் என அவருடைய உயிர்த்தெழுதல் உறுதியளிக்கும்போது, மேன்மையடைதலின் உயர்ந்த சிலாக்கியம் நமக்கு வேண்டுமென்றால் மிகவும் அதிகமானது தேவையாயிருக்கிறது என இரட்சகரே பெருமளவில் தெளிவுபடுத்தினார். இரட்சிப்பு ஒரு தனிப்பட்ட காரியமாயிருக்கிறது ஆனால், மேன்மையடைதல் ஒரு குடும்ப காரியமாயிருக்கிறது.
அவருடைய தீர்க்கதரிசிக்கு கர்த்தராகிய இயேசு கிறிஸ்து பேசிய இந்த வார்த்தைகளைக் கவனியுங்கள்.“உடன்படிக்கைகள், ஒப்பந்தங்கள், பத்திரங்கள், கட்டாயக்கடமைகள், பொருத்தனைகள், ஆணைகள், செய்கைகள், தொடர்புகள், சங்கங்கள் அல்லது எதிர்பார்ப்புகள், அனைத்தும் அபிஷேகிக்கப்பட்ட அவரால் இப்போதைக்கும் நித்தியத்திற்கும் வாக்குத்தத்தத்தின் பரிசுத்த ஆவியால் செய்யப்படாததும் பிரவேசிக்கப்படாததும் முத்திரிக்கப்படாததுமாயிருக்கிற அந்த வல்லமையைத் தரித்திருக்க பூமியில் நான் நியமித்த என்னால் அபிஷேகிக்கப்பட்டவன் வழியாக (கடைசி நாட்களில் இந்த வல்லமையைத் தரித்திருக்க என்னுடைய ஊழியக்காரனாகிய ஜோசப்பை நான் நியமித்தேன். பூமியின்மேல் ஒரே நேரத்தில் ஒருவருக்குமட்டுமே இந்த ஆசாரியத்துவத்தின் வல்லமையும் திறவுகோல்களும் அருளப்பட்டிருக்கிறது) வெளிப்படுத்தலாலும், கட்டளையாலும் செய்து பிரவேசிக்கப்படாத, மிகுந்த பரிசுத்தமாயிருக்கிற அது மரணத்திலிருந்து உயிர்த்தெழுதலுக்குப்பின் அதற்கு தகுதி, நற்குணம் அல்லது சக்தியிருக்காது, ஏனெனில் மனுஷர்கள் மரிக்கும்போது இந்த முடிவுவரை செய்யப்படாத எல்லா ஒப்பந்தங்களுக்கும் முடிவிருக்கும்.”4
ஆகவே, என்றென்றைக்கும் மேன்மையடைதலாயிருக்க ஒரு குடும்பத்திற்கு எது தேவையாயிருக்கிறது? தேவனுடன் உடன்படிக்கைகளைச் செய்து, அந்த உடன்படிக்கைகளைக் கைக்கொண்டு, அத்தியாவசியமான நியமங்களைப் பெறுவதால் அந்த சிலாக்கியத்திற்கு நாம் தகுதியாவோம்.
ஆரம்ப காலத்திலிருந்தே இது உண்மையாயிருக்கிறது. ஆதாமும் ஏவாளும், நோவாவும் அவனுடைய மனைவியும், ஆபிரகாமும் சாராளும், லேகியும் சாராயும் இயேசு கிறிஸ்துவின் அர்ப்பணிப்பான சீளர்களான அனைவரும், உலகம் சிருஷ்டிக்கப்பட்டதிலிருந்து தேவனோடு இதே உடன்படிக்கையைச் செய்தார்கள். இன்று நாம் கர்த்தருடைய மறுஸ்தாபிக்கப்பட்ட சபையின் அங்கத்தினர்களாக ஞானஸ்நானத்திலும், ஆலயத்திலும் பெறுகிற உடன்படிக்கைகளை செய்த அதே நியமங்களை அவர்கள் பெற்றார்கள்.
ஞானஸ்நானத்தின் தண்ணீருக்குள் அவரைப் பின்பற்றவும், சரியான நேரத்தில் ஆலயத்தில் தேவனுடன் கூடுதலான உடன்படிக்கைகளைச் செய்யவும், அந்த கூடுதலான அத்தியாவசியமான நியமங்களுக்கு உண்மையுள்ளவர்களாயிருக்கவும் அனவரையும் இரட்சகர் அழைக்கிறார். நமது குடும்பங்களுடனும் தேவனுடனும் மேன்மையடைதலாயிருக்க நாம் விரும்பினால் இவை அனைத்தும் தேவையாயிருக்கிறது.
நான் நேசி்க்கிற, மெச்சுகிற, மதிக்கிற அநேக மக்கள் அவருடைய அழைப்பை நிராகரிக்கிறார்கள் என்பது என்னுடைய இருதயத்தின் வேதனை. “என்னைப் பின்பற்றி வா”5 என அவர் அழைக்கும்போது இயேசு கிறிஸ்துவின் வேண்டுதல்களை அவர்கள் புறக்கணிக்கிறார்கள்.
தேவன் ஏன் அழுகிறார் என நான் புரிந்துகொள்கிறேன்6 அத்தகைய நண்பர்களுக்காகவும் உறவினர்களுக்காகவும் நானும் அழுகிறேன். தங்கள் குடும்பத்திற்காகவும் குடிமை பொறுப்புகளுக்கும் அர்ப்பணித்திருக்கிற அவர்கள் அற்புதமான ஆண்களும் பெண்களுமாயிருக்கிறார்கள். தங்களுடைய நேரத்தையும், சக்தியையும், ஆதாரத்தையும் தாராளமாக அவர்கள் கொடுக்கிறார்கள். அவர்களுடைய முயற்சிகளுக்காக உலகம் நன்றாயிருக்கிறது. ஆனால் தேவனுடன் உடன்படிக்கை செய்ய அவர்கள் தேர்ந்தெடுக்கவில்லை. அவர்களுடைய குடும்பங்களுடன் அவர்களை மேன்மையடையச் செய்து, என்றென்றைக்கும் அவர்களை ஒன்றாக பிணையச் செய்கிற நியமங்களை அவர்கள் பெறவில்லை.7
நான் அவர்களை சந்திக்க முடிந்து,கர்த்தருடைய பிரமாணங்கள் செயல்படுத்தப்படுவதை தீவிரமாக கருதுவதற்கு அவர்களை அழைக்க நான் எவ்வாறு விரும்பமுடியும். இரட்சகர் அவர்களை எவ்வளவாக நேசிக்கிறார் என்று அவர்கள் உணரும்படியாகவும், எவ்வளவாக நான் அவர்களை நேசிக்கிறேன் என அவர்கள் அறியவும், ஒரு உடன்படிக்கையின் பெண்களும் ஆண்களும் எவ்வாறு “சந்தோஷத்தின் பரிபூரணத்தைப்”8 பெறமுடியும் என அடையாளம் காணவரவும் சாத்தியமாக நான் என்ன சொல்லக்கூடுமென நான் வியந்தேன்.
தேவனுடன் உடன்படிக்கை செய்ய தேர்ந்தெடுக்காத அற்புதமான ஆண்களுடனும் பெண்களுனுடனும் இப்போதிலிருந்து அவர்களுக்கு ஒரு இடமிருக்கும்போது, குடும்பங்கள் மறுபடியும் ஒன்று சேர்ந்து என்றென்றைக்கும் வாழவும் முன்னேறவும் தருணம் கொடுக்கப்படுகிற இடம் அதுவல்ல என அவர்கள் புரிந்துகொள்ளவேண்டும். ஒருபோதும் முடிவில்லாத முன்னேற்றமும், சந்தோஷமுமான, மகிழ்ச்சியின் பரபூரணத்தை அவர்கள் அனுபவிக்க அது இராஜ்ஜியம் அல்ல.9 நமது நித்திய பிதாவான தேவனுடனும், அவருடைய குமாரனான இயேசு கிறிஸ்துவுடனும், நமது அற்புதமான, தகுதியான, தகுதிபெற்ற, நமது குடும்ப அங்கத்தினர்களுடன் ஒரு மேன்மையான சிலஸ்டியல் ஆளுமையில் வாழுவதால் மட்டுமே அந்த முழுநிறைவான ஆசீர்வாதங்கள் வரும்.
என்னுடைய தயக்கமான நண்பர்களுக்கு நான் சொல்ல உணர்கிறேன்.
“இந்த வாழ்க்கையில் இரண்டாவது சிறப்பான எதிலும் நீங்கள் ஒருபோதும் குடியேறவில்லை. இருந்தும் ,இயேசு கிறிஸ்துவின் மறுஸ்தாபித சுவிசேஷத்தைத் தழுவ நீங்கள் முழுமையாக தடுக்கும்போது, இரண்டாவது சிறப்பானதில் குடியேற நீங்கள் தேர்ந்தெடுக்கிறீர்கள்.
“இட்சகர் சொன்னார், ‘என் பிதாவின் வீட்டில் அநேக வாசஸ்தலங்கள் உண்டு’10 எப்படியாயினும், தேவனுடன் உடன்படிக்கை செய்ய நீங்கள் தேர்ந்தெடுக்காதிருக்கும்போது, சகல நித்தியம் முழுவதிலும் உங்கள் தலைக்குமேலே ஒரு சிறிய கூரைக்காக நீங்கள் குடியேறுகிறீர்கள்.
பின்வருவதைச் சொல்வதில் நான் கூடுதலாக என்னுடைய தயக்கமுள்ள நண்பர்களை வேண்டிக்கொள்கிறேன்.
“தேவனிடத்தில் உங்கள் இருதயத்தை ஊற்றுங்கள். இந்தக் காரியங்கள் உண்மை.யானதா என அவரிடம் கேளுங்கள். அவருடைய வார்த்தைகளைப் படிக்க நேரம் ஒதுக்குங்கள். உண்மையில் படியுங்கள்! நீங்கள் உண்மையில் உங்கள் குடும்பத்தை நேசித்தீர்களென்றால், நித்தியம் முழுமைக்கும் அவர்களோடு மேன்மையடைதலாக இருக்க நீங்கள் விரும்பினால், தீவிர படிப்பாலும் சிரத்தையான ஜெபத்தாலும் இந்த நித்திய சத்தியங்களை அறிந்துகொள்ளவும், பின்னர் அவைகளில் தங்கியிருக்கவும் இப்போது கிரயத்தைச் செலுத்துங்கள்.
“தேவனில் உங்களுக்கு நம்பிக்கை இருப்பதில் நிச்சயமில்லாதிருந்தால் இங்கே ஆரம்பியுங்கள். தேவனோடுள்ள அனுபவங்களில்லாதிருந்தால், தேவனிருப்பதை ஒருவன் சந்தேகிக்கமுடியும் என்பதைப் புரிந்துகொள்ளுங்கள். ஆகவே, அவரோடு அனுபவங்களிருக்க ஆரம்பிக்க ஒரு நிலையில் உங்களை வையுங்கள் உங்களை தாழ்மைப்படுத்துங்கள். உங்கள் வாழ்க்கையிலும், உங்களைச் சுற்றியுள்ள உலகத்திலும் தேவனுடை. கரங்களைப் பார்க்க கண்களிருக்க ஜெபியுங்கள். உண்மையில் அவர் இருக்கிறாரா, அவருக்கு உங்களைத் தெரியுமா என உங்களுக்குக் கூறும்படி அவரிடத்தில் கேளுங்கள். உங்களைப்பற்றி அவர் எப்படி உணருகிறாரென அவரிடத்தில் கேளுங்கள். பின்னர் செவிகொடுங்கள்.
அத்தகைய என்னுடைய ஒரு அன்பு நண்பர் தேவனுடான அனுபவங்களைக் குறைத்துக்கொண்டார். ஆனால் அவருடைய மரித்துப்போன மனைவியுடனிருக்க அவர் ஏங்கினார். ஆகவே, அவருக்கு உதவும்படியாக அவர் என்னிடம் கேட்டார். கிறிஸ்துவின் கொள்கைகளைப் புரிந்துகொள்ளவும், சுவிசேஷத்தின் உடன்படிக்கைகளை, நியமங்களை, ஆசீர்வாதங்களை அறிந்துகொள்ளும்படியாகவும் நமது ஊழியக்காரர்களை சந்திக்க நான் அவரை ஊக்குவித்தேன்.
அவர் அதைச் செய்தார். ஆனால், அவர்கள் அறிவுறுத்திய மார்க்கம், அவருடைய வாழ்க்கையில் மிக அநேக மாற்றங்களைச் செய்ய தேவையாயிருக்குமென அவர் உணர்ந்தார் அவர் சொன்னார், “அந்த கற்பனைகளும் உடன்படிக்கைகளும் எனக்கு மிகக் கடினமாயிருக்கும். மேலும், என்னால் தசமபாகத்தைச் செலுத்துவது சாத்தியமாகாதிருக்கலாம், சபையில் சேவை செய்ய எனக்கு நேரமில்லை”. “நாங்கள் மீண்டும் ஒன்று சேர்ந்திருக்க என் மனைவிக்கும் எனக்கும் தேவையான ஆலயப்பணியை நான் மரிக்கும்போது தயவுசெய்து உங்களால் செய்யமுடியுமா” என பின்னர் அவர் என்னைக் கேட்டார்
இந்த மனிதனுக்கு நான் நீதிபதியாய் இல்லாமலிருப்பதற்கு நன்றி. இந்த வாழ்க்கையில் ஞானஸ்நானம் பெறவும், ஆசாரியத்துவத்திற்கு நியமிக்கப்பட, இங்கே அநித்தியத்தில் ஆலய ஆசீர்வாதங்களைப் பெறவும் வாய்ப்பிருந்து ஆனால், அந்த மார்க்கத்தை உணர்வுபூர்வமாக புறக்கணித்த ஒரு மனிதனுக்கு பதிலி ஆலயப்பணியின் பயன் என்ன நான் கேள்விகேட்கிறேன்.
எனக்கன்பான சகோதர சகோதரிகளே, நமது பரலோகப் பெற்றோரின் வீட்டிற்குத் திரும்பவும், நாம் நேசிக்கிறவர்களுடனிருக்கவும் உடன்படிக்கை பாதையை எடுக்க இயேசு கிறிஸ்து நம்மை அழைக்கிறார். “என்னைப் பின்பற்றி வா” என அவர் நம்மை அழைக்கிறார்.
சபையிலிருந்து உங்களைத் தூரப்படுத்திக்கொண்ட, இரட்சகரின் சபை மறுஸ்தாபிக்கப்பட்டதைப்பற்றி அறிந்துகொள்ள உண்மையில் இன்னமும் நாடாதவர்களுடன் நீங்கள் இருக்க இப்போது அவருடைய சபையின் தலைவராக நான் உங்களை வேண்டுகிறேன். நீங்களே கண்டுபிடிக்க ஆவிக்குரிய வேலையைச் செய்யுங்கள், தயவுசெய்து அதை இப்போதே செய்யுங்கள். நேரம் ஓடிக்கொண்டிருக்கிறது.
தேவன் ஜீவிக்கிறாரென நான் சாட்சியளிக்கிறேன்! இயேசுவே கிறிஸ்து இங்கும் இப்போதிலிருந்தும் நமது வாழ்க்கையை ஆசீர்வதிக்க அவருடைய சபையும் அவருடைய சுவிசேஷத்தின் பரிபூரணமும் மறுஸ்தாபிக்கப்பட்டிருக்கிறது. அப்படியே இயேசு கிறிஸ்துவின் பரிசுத்த நாமத்தில் நான் சாட்சியளிக்கிறேன், ஆமென்.