ஆவிக்குரிய திறன்
அவரது விசுவாசமிக்க சீஷர்களாக, உங்களுக்காக உருவாக்கப்பட்ட அவரது கட்டளைகளுடன் பொருந்துகிற தனிப்பட்ட உணர்த்துதலும் வெளிப்படுத்தலும் பெறலாம்.
இந்தக் கோடை காலத்தில் நான் ஒரு இளம்பெண்கள் முகாமை விட்டு வரும்போது, ஒரு இனிமையான இளம் பெண் என் கையில் ஒரு குறிப்பைக் கொடுத்தாள். அதில் அவள் கேட்டாள், “தேவன் ஏதொவொன்றை என்னிடம் சொல்ல முயற்சிக்கிறார் என எப்படி நான் சொல்ல முடியும்?” நான் அவளது கேள்வியை விரும்புகிறேன். நமது பரலோக வீட்டோடு தொடர்புக்காக நமது ஆத்துமாக்கள் ஏங்குகின்றன. நாம் தேவைப்படுபவர்களாகவும், பயன்படுபவர்களாகவும் உணர விரும்புகிறோம். ஆனால் சில சமயங்களில், நாம் நமது சொந்த சிந்தனைகளுக்கும் ஆவியின் மெல்லிய உணர்வுகளுக்கும் இடையே பிரித்தறிய போராடுகிறோம். பூர்வகால மற்றும் தற்கால தீர்க்கதரிசிகள் போதித்திருக்கிறார்கள், “நன்மை செய்யுமாறு ஏதாவதொன்று அழைத்து தூண்டுகிறது என்றால் அது கிறிஸ்துவிடமிருந்து வருகிறது.”1
தலைவர் ரசல் எம். நெல்சன் ஒரு எளிய வல்லமையான அழைப்பைக் கொடுத்திருக்கிறார் என் அன்பு சகோதர சகோதரிகளே, வெளிப்படுத்தல் பெற உங்கள்ஆவிக்குரிய திறனை அதிகரிக்குமாறு நான் உங்களைக்கெஞ்சுகிறேன். … பரிசுத்த ஆவியானவரின் வரத்தை அனுபவிக்கவும், ஆவியின் குரலை அடிக்கடியும் அதிக தெளிவாயும் கேட்கவும், தேவையான ஆவிக்குரிய பணியை செய்ய தெரிந்து கொள்ளுங்கள்.2
இக்காலையில் என் விருப்பம், வெளிப்படுத்தல் பெற உங்கள் ஆவிக்குரிய திறனை அதிகரிக்க, நான்கு வழிகளை என் இருதயத்திலிருந்து பேசுகிறேன்.
1. தேவனின் குரலைக் கேட்க, நேரத்தையும், இடத்தையும் உருவாக்க விழையுங்கள்.
தேவனின் குரலுக்கு நெருங்கி வர தினமும் நேரத்தை ஒதுக்கி அர்ப்பணிக்கும்போது, விசேஷமாக மார்மன் புஸ்தகத்தில் காலப்போக்கில், அவரது குரல் உங்களுக்கு மிகவும் அறிமுகமான தெளிவானதாகும்.
மாறாக உலகத்தையும் நமது வீடுகளையும், நமது வாழ்க்கையையும் நிரப்பும்கவனச்சிதறல்களும்சத்தங்களும், அவரது குரலைக் கேட்பதைக் கடினமானதாக்கலாம். பரிசுத்த ஆவியின் மென்மையான தூண்டுதல்களுக்கு நாம் இடமளிக்காதவாறு நமது மனங்களையும் இருதயங்களையும் இந்த கவனச்சிதறல்கள் ஆக்கிரமிக்க முடியும்.
அடிக்கடி தேவன் தம்மை தனிநபர்களுக்கு தனிமையிலும், அவர்களது அறைகளிலும், வனாந்தரத்திலும், வயல்களிலும், பொதுவாக சத்தமோ குழப்பமோ இன்றி வெளிப்படுத்துகிறார் என தீர்க்கதரிசி ஜோசப் ஸ்மித் போதித்தார்.3
அந்த அமைதியான இடங்களிலிருந்து நம்மை வெளியேற்றி, தேவனின் குரலிலிருந்து நம்மை பிரிக்கிறார். தேவன் மெல்லிய அமர்ந்த சத்தத்தில் பேசினால், அவர் பேசுவதைக் கேட்க நீங்களும் நானும் அவரை நெருங்கிச் செல்ல வேண்டும். நாம் வைபையோடு இணைந்திருப்பதுபோல, நாம் பரலோகத்தோடு இணைந்திருக்க விரும்பினால், என்ன நடக்கும் என நினைத்துப் பாருங்கள். தினமும் கர்த்தரின் குரலைக் கேட்க ஒரு நேரத்தையும் இடத்தையும் தேர்வு செய்யுங்கள். இந்த பரிசுத்த நேரத்தை சரியாக காத்துக்கொள்ளுங்கள், ஏனெனில் நிறைய காரியங்கள் இதைச் சார்ந்துள்ளது.
2. தாமதிக்காமல் செயல்படுங்கள்.
நீங்கள் தூண்டுதல் பெறும்போது, ஆர்வத்தோடு செயல்படுங்கள், கர்த்தர் உங்களைப் பயன்படுத்தலாம். நீங்கள் அதிகமாக செயல்படும்போது, ஆவியின் குரல் மிக அறிமுகமானதாகிறது. நீங்கள் அதிகமாக தேவனின் வழிநடத்துதலையும், அவர் தமது மனதையும் சித்தத்தையும் வெளிப்படுத்த சித்தமாயிருக்கிறார் என அடையாளம் காண்பீர்கள்.4 நீங்கள் தாமதித்தால், நீங்கள் தூண்டுதலை மறப்பீர்கள், அல்லது தேவனுக்காக ஒருவருக்கு உதவும் சந்தர்ப்பத்தை இழக்கலாம்.
3. உங்கள் வேலையை கர்த்தரிடமிருந்து பெறுங்கள்.
பரலோக பிதா பதிலளிக்க ஆர்வமாயிருக்கிற ஜெபம், நமது உதவி தேவைப்படுகிற ஒருவரிடம் வழிநடத்தப்பட நமது கெஞ்சுதலாகும். அவருக்காக நாம் யாருக்கு உதவ முடியும் என கேட்டு வெளிப்படுத்தலை நாட தலைவர் ஹென்றி பி. ஐரிங் நமக்கு போதித்திருக்கிறார். நீங்கள் அப்படிப்பட்ட கேள்விகளைக் கேட்டால், பரிசுத்த ஆவி வரும், பிற ஜனங்களுக்காக செய்யக்கூடிய காரியங்கள் பற்றி இடித்துரைக்கப்படுவதை உணர்வீர்கள். நீங்கள் சென்று இக்காரியங்களைச் செய்யும்போது, நீங்கள் கர்த்தரின் பணியில் இருக்கிறீர்கள், நீங்கள் கர்த்தரின் பணியிலிருக்கும்போது, நீங்கள் பரிசுத்த ஆவியின் வரத்துக்கு தகுதி பெறுவீர்கள்.5
நீங்கள் ஜெபித்து ஒரு வேலைக்காக கர்த்தரிடம் கேட்கலாம். நீங்கள் செய்யும்போது, அவரது அசாதாரண வேலையை நிறைவேற்ற உங்கள் சாதாரண திறமைகளை அவர் பயன்படுத்த முடியும்.
என் தாய்வழித் தாத்தா, ப்ரிட்ஜ் ஜால்மர் லண்ட்க்ரன் அவருக்கு 19 வயதாயிருந்தபோது, ஸ்வீடனிலிருந்து குடிபெயர்ந்தார். அவர் தனியாக அமெரிக்காவுக்கு ஒரு பெட்டி மற்றும் ஆறு வருட முறையான கல்வியுடன் வந்தார். ஆங்கிலம் பேச முடியாமல், ஆரிகனுக்கு வந்து மரவேலை செய்தார், என் அம்மா வழிப் பாட்டி மற்றும் என் அம்மாவுடன் சபையில் சேர்ந்தார். அவர் ஒரு தொகுதிக்கு தலைமை தாங்கவில்லை, ஆனால் விசுவாசமிக்க வீட்டுப் போதகராக 50க்கும் அதிகமான குடும்பங்களை சபை நிகழ்ச்சிக்குள் கொண்டு வந்தார். அவர் அதை எப்படிச் செய்தார்?
தாத்தாவின் மரணத்துக்குப்பிறகு, அவரது காகிதங்கள் இருந்த பெட்டியில் தேடி, தாத்தாவின் அன்பினிமித்தம் சபைக்குத் திரும்ப வந்த ஒருவரால் எழுதப்பட்ட கடிதத்தைப் பார்த்தேன். அக்கடிதம் கூறியது, சகோதரர் ப்ரிட்ஜின் ரகசியம் அவர் எப்போதும் பரலோக பிதாவின் வேலையிலிருக்கிறார் என்பதே, என நான் நம்புகிறேன்.
அக்கடிதம் சகோதரர் வெய்ன் சிமோனிஸிடமிருந்து வந்தது. தாத்தா அவரைச் சந்தித்து, குடும்பத்தினர் ஒவ்வொருவரையும் அறிந்திருக்கிறார். காலப்போக்கில், அவர்கள் தேவைப்படுவதாகவும், சபைக்கு வருமாறும் அவர்களை அழைத்தார். அந்த ஞாயிற்றுக்கிழமை சகோதரர் சிமோனிஸ் ஒரு குழப்பத்துடன் கண்விழித்தார், அவர் தன் கூரையினை சரியாக சீரமைக்கவில்லை, மழை அந்த வாரம் எதிர்பார்க்கப்பட்டது. சபைக்குச் சென்று, தாத்தாவுடன் கைகுலுக்கிவிட்டு, வீட்டுக்குத் திரும்பி வந்து கூரையைச் சரிசெய்ய தீர்மானித்தார். அவரில்லாமல் அவரது குடும்பம் திருவிருந்து கூட்டத்தில் கலந்து கொள்ளலாம்.
அவரது கூரை மீது ஏணியிலேறி ஒருவர் வருவதைக் கேடகும்வரை எல்லாம் சரியாக நடந்தது. அவரது வார்த்தைகளில், “நான் பார்த்தபோது, … ஏணியில் சகோதரர் ப்ரிட்ஜ் நின்று கொண்டிருந்தார். அவர் பெரிதாக புன்னகைத்தார். முதலாவது, நான் வெட்கமடைந்து, பள்ளிக்கு வராததால் சிறுபிள்ளை மாட்டிக்கொண்டது போல உணர்ந்தேன். பின்பு … நான் கோபமடைந்தேன். [ஆனால் சகோதரர் ப்ரிட்ஜ்] தன் மேலங்கியை கழட்டி ஏணியில் மாட்டினார். அவர் தன் வெள்ளைச் சட்டையின் கையை மடக்கிவிட்டு, என்னிடம் திரும்பி சொன்னார், ‘சகோதரர் சிமோனிஸ், இன்னொரு சுத்தியல் இருக்கிறதா? இந்த வேலை முக்கியமானது, அல்லது நீங்கள் உங்கள் குடும்பத்தை விட்டு விட்டு வந்திருக்க மாட்டீர்கள். இது முக்கியமானால் நான் உங்களுக்கு உதவ விரும்புகிறேன்.’ நான் அவரது கண்களைப் பார்த்தேன், நான் தயவையும் கிறிஸ்து போன்ற அன்பையும் மாத்திரம் கண்டேன். என் கோபம் விலகியது. … அந்த ஞாயிற்றுக்கிழமை நான் கருவிகளைக் கீழே போட்டுவிட்டு, என் நல்ல நண்பருடன் ஏணியிலிருந்து இறங்கி, சபை கூடுமிடத்துக்கு திரும்ப நடந்தேன்.”
தாத்தா கர்த்தரிடமிருந்து தன் பணியை பெற்றிருந்தார், காணாமற்போன ஆட்டைக் கண்டுபிடிக்க வேண்டுமென அவர் அறிந்தார். திமிர்வாதக்காரனாயிருந்த தங்கள் நண்பனை சுமந்து வந்து கூரையிலிருந்து இயேசுவால் குணமாக்கப்பட இறக்கிய நான்கு மனுஷர் போல்,6 தாத்தாவின் பணியும் அவரைக் கூரை உச்சிக்கு கொண்டு சென்றது. பிறருக்கு உதவுவதை நாடுபவர்களுக்கு, கர்த்தர் வெளிப்படுத்தல் அனுப்புகிறார்.
4. விசுவாசியுங்கள், நம்புங்கள்
அண்மையில் கர்த்தரிடமிருந்து தன் பணியைப் பெற்ற மற்றொரு ஊழியக்காரன் பற்றி நான் வாசித்தேன். ஆரோன் லாமானிய இராஜாவுக்கு போதித்துக் கொண்டிருந்தான், தனக்கு போதிக்க ஆரோனின் சகோதரனாகிய அம்மோன் ஏன் வரவில்லை என ஆச்சரியப்பட்டான். “மேலும் ஆரோன் இராஜாவை நோக்கி: கர்த்தருடைய ஆவியானவர் அவனை வேறொரு மார்க்கமாய் அழைத்துப்போனார், என்றான்.”7
நான் இந்த வார்த்தைகளை வாசிக்கும்போது, ஆவி என் இருதயத்தினுள் பேசியது, நம் ஒவ்வொருவருக்கும் நிறைவேற்ற வெவ்வேறு ஊழியங்கள் இருக்கின்றன, சிலசமயங்களில் “வேறொரு மார்க்கமாக” ஆவியானவர் நம்மை அழைக்கலாம். உடன்படிக்கை செய்கிற, உடன்படிக்கையை காத்துக்கொள்கிற இயேசு கிறிஸ்துவின் சீஷர்களாக, தேவ இராஜ்யத்தைக் கட்ட அனேக வழிகள் உள்ளன. அவரது விசுவாசமிக்க சீஷர்களாக உங்களுக்காக உருவாக்கப்பட்ட அவரது கட்டளைகளுடன் பொருந்துகிற தனிப்பட்ட உணர்த்துதலும் வெளிப்படுத்தலும் பெறலாம். வாழ்க்கையில் நீங்கள் நிறைவேற்ற விசேஷித்த ஊழியங்களும் பாத்திரங்களும் உண்டு, அவற்றை நிறைவேற்ற உங்களுக்கு விசேஷித்த வழிகாட்டுதல் கொடுக்கப்படும்.
நேபி, யாரேதின் சகோதரன் மற்றும் மோசே, அனைவருக்கும் கடப்பதற்கு பெரிய தண்ணீர் இருந்தன, ஆனால் ஒவ்வொருவரும் வித்தியாசமாக செய்தார்கள். நேபி மரத்தில் விசித்திர வேலைப்பாடுகள் செய்தான்.8 “ஒரு கிண்ணம் போல இறுக்கமான” தோணிகளை யாரேதின் சகோதரன் கட்டினான்.9 மோசே “சமுத்திரத்தின் நடுவிலே கட்டாந்தரையில் நடந்து போனான்.”10
ஒவ்வொருவரும் தனிப்பட்ட வழிகாட்டுதல் பெற்றார்கள், அவர்களுக்காக வடிவமைக்கப்பட்டு, ஒவ்வொருவரும் நம்பி செயல்பட்டார்கள். கீழ்ப்படிவோர் மீது கர்த்தர் கண்ணோக்கமாயிருக்கிறார், நேபியின் வார்த்தைகளில், “தாம் கட்டளையிட்ட காரியத்தை செய்து முடிக்கக்கூடிய ஒரு வழியை ஆயத்தப்படுத்துவார்.”11 நேபி சொல்வதைக் கவனியுங்கள், ஒரு வழி, அந்த வழியல்ல.
நாம் எதிர்பாரத்தைவிட வித்தியாசமான “வழியை” அவர் ஆயத்தம் செய்ததால், கர்த்தரிடமிருந்து தனிப்பட்ட வேலைகளை நாம் தவற விடுகிறோமா அல்லது விலக்குகிறோமா?
என் தாத்தா வழக்கத்துக்கு மாறான இடத்துக்கு வழிநடத்தப்பட்டார்—கோட்டுடன், கூரை உச்சிக்கு, ஞாயிற்றுக் கிழமையில். உங்களை வழிநடத்த தேவனை நம்புங்கள், அந்த வழி நீங்கள் எதிர் பார்த்ததைவிட வித்தியாசமாக தோன்றினாலும் அல்லது பிறரை விட வித்தியாசமானதானாலும்.
பிற்காலப் பரிசுத்தவான்கள் அநேக வடிவங்களிலும் விதங்களிலும் வருகிறார்கள், ஆனால், “தேவனுக்கு அனைவரும் ஒன்றே,”—”கருப்பு மற்றும் வெள்ளை, அடிமை மற்றும் சுதந்திரவான், ஆண் மற்றும் பெண்,” தனிமையானோர் மற்றும் மணமானோர், பணக்காரன் மற்றும் தரித்திரன், இளைஞர் மற்றும் முதியோர், வாழ்நாள் அங்கத்தினர் மற்றும் அண்மையில் மனமாறியவர்.12 நீங்கள் யாராயிருந்தாலும், அல்லது நீங்கள் எதைச் செய்தாலும், நீங்கள் கர்த்தரின் பந்திக்கு அழைக்கப்படுகிறீர்கள்.13
உங்கள் அன்றாட வாழ்வின் ஒலியாக பிதாவின் சித்தம் நாடுவதும் செய்வதும் இருக்கும்போது, நீங்கள் கண்டிப்பாக, நிச்சயமாக, மாறவும் மனந்திரும்பவும் வழிநடத்தப்படுவீர்கள்.
பிள்ளைகள் மற்றும் இளைஞர்களுக்கான சபையின் புதிய திட்டம், வெளிப்படுத்தலை நாட கற்றல், நாம் என்ன செய்ய வேண்டும் என கர்த்தர் விரும்புகிறார் என கண்டுபிடித்தல், பின்பு அந்த வழியில் நடத்தல் ஆகிய அஸ்திவாரத்தின் மேல் கட்டப்பட்டுள்ளது. நாம் ஒவ்வொருவரும், வயது சூழ்நிலை பொருட்டின்றி, நாடவும், பெறவும், செயல்படவும், முயற்சி செய்ய முடியும். நமது நாளுக்காக நியமிக்கப்பட்ட இந்த நித்திய மாதிரியை நீங்கள் பின்பற்றும்போது, நீங்கள் இயேசு கிறிஸ்துவுக்கு அருகிலும், அவரது வழிகாட்டுதலிலும், அவரது அன்பிலும், அவரது ஒளியிலும், அவரது சமாதானத்திலும், அவரது குணமாக்கலிலும், சாத்தியமான வல்லமையிலும் நெருங்கி வருவீர்கள். அவரது மாபெரும் பணியை நிறைவேற்ற அவரது கரங்களில் அன்றாட கருவியாக ஆக நீங்கள் உங்கள் ஆவிக்குரிய திறனை அதிகரிப்பீர்கள். இயேசு கிறிஸ்துவின், நாமத்தினாலே, ஆமென்.