வேதங்கள்
கோட்பாடும் உடன்படிக்கைகளும் 113


பாகம் 113

மார்ச் 1838ல் மிசௌரியின் பார் வெஸ்டில் அல்லது அதற்கருகில் தீர்க்கதரிசி ஜோசப் ஸ்மித்தால் கொடுக்கப்பட்ட ஏசாயாவின் எழுத்துக்களில் குறிப்பிட்ட கேள்விகளுக்கான பதில்கள்.

1–6, ஈசாயென்னும் அடிமரத்திலிருந்து கிளை தோன்றி, ஈசாயின் வேர்கள் கண்டுபிடிக்கப்படும்; 7–10, சிதறடிக்கப்பட்ட சீயோனின் மீதியானோருக்கு ஆசாரியத்துவ உரிமை உண்டு மற்றும் கர்த்தரிடத்தில் திரும்ப அழைக்கப்படுகிறார்கள்.

1 ஏசாயாவின் 11வது அதிகாரத்திலுள்ள 1, 2, 3, 4, 5வது வசனங்களில் பேசப்படுகிற ஈசாயின் அடிமரம் யார்?

2 மெய்யாகவே கர்த்தர் இப்படியாகச் சொல்லுகிறார்: அவரே கிறிஸ்து.

3 ஏசாயாவின் 11வது அதிகாரத்தின் முதலாவது வசனத்தில் பேசப்படுகிற, ஈசாயின் அடிமரத்திலிருந்து வரவேண்டிய கிளை எது?

4 இதோ, கர்த்தர் இப்படியாகச் சொல்லுகிறார்: ஈசா மற்றும் எப்பிராயீமின் அல்லது அதிக அதிகாரம் கொடுக்கப்பட்டிருக்கிற யோசேப்பின் வீட்டாரின் பாதி சந்ததியாயிருப்பவனே கிறிஸ்துவின் கரங்களில் ஒரு ஊழியக்காரனாய் இருக்கிறான்.

5 11வது அதிகாரத்தின் 10வது, வசனத்தில் பேசப்படுகிற ஈசாயின் வேர் எது?

6 இதோ, கர்த்தர் இப்படியாகச் சொல்லுகிறார், கடைசி நாட்களில் ஒரு கொடியாக மற்றும் என்னுடைய ஜனங்களின் கூடுகைக்காக ஈசா மற்றும் யோசேப்பின் சந்ததிக்கு, ஆசாரியத்துவமும், ராஜ்யத்தின் திறவுகோல்களும் நியாயப்படி சொந்தமானதாகும்.

7 எலியாஸ் ஹிக்பீயின் கேள்விகள்: சீயோனே உன் வல்லமையைத் தரித்துக்கொள் எனச் சொல்லுகிற ஏசாயாவின் 52வது அதிகாரத்தின் 1வது வசனத்திலுள்ள கட்டளைக்கு அர்த்தமென்ன, ஏசாயா குறிப்பிட்ட ஜனங்கள் யார்?

8 கடைசி நாட்களில் தேவன் அழைக்கிற சீயோனைக் கொண்டுவரவும், இஸ்ரவேலின் மீட்புக்காகவும், ஆசாரியத்துவத்தின் அதிகாரம் தரித்தவர்களைப்பற்றிய குறிப்பு அவனிடமிருந்தது; அவளுடைய பெலத்தைத் தரித்துக்கொள்ள வேண்டுமென்பது சீயோனாகிய அவள், வம்சாவளியாக உரிமை பெற்றுள்ள ஆசாரியத்துவ அதிகாரத்தை தரித்துக் கொள்வதாகும் மற்றும் அவள் இழந்த அதிகாரத்திற்கு திரும்ப வேண்டுமென்பதாகும்.

9 2வது வசனத்தில், சீயோன் அவளுடைய கழுத்திலுள்ள கட்டுக்களிலிருந்து அவளை அவிழ்த்துக்கொள்வதைப்பற்றி நாம் என்ன புரிந்துகொள்ள வேண்டும்?

10 சிதறடிக்கப்பட்ட மீதியானோர் அவர்கள் விழுந்த இடத்திலிருந்து கர்த்தரிடத்தில் திரும்ப புத்தி சொல்லப்பட்டார்கள்; அவர்கள் அதைச் செய்தால், அவர்களோடு அவர் பேசுவார் என்பதுவும், அல்லது அவர்களுக்கு வெளிப்படுத்தலைக் கொடுப்பார் என்பதுவும், கர்த்தருடைய வாக்குத்தத்தம் என நாம் புரிந்துகொள்ளவேண்டும். 6, 7, 8வது வசனங்களைப் பார்க்கவும். அவளுடைய கழுத்தின் கட்டுக்கள், அவள், அல்லது புறஜாதியாருக்கு மத்தியிலே அவர்களுடைய சிதறடிக்கப்பட்ட நிலைமையில் இஸ்ரவேலின் மீதியானோர்மீது தேவனின் சாபங்கள் ஆகும்.