பாகம் 119
ஜூலை 8, 1838ல் மிசௌரியின் பார் வெஸ்டில், அவருடைய வேண்டுதலுக்குப் பதிலாக தீர்க்கதரிசி ஜோசப் ஸ்மித் மூலமாகக் கொடுக்கப்பட்ட வெளிப்படுத்தல்: “தசமபாகத்திற்காக உமது ஜனங்களின் ஆஸ்திகளிலிருந்து நீர் எவ்வளவாக எதிர்பார்க்கிறீரென கர்த்தாவே! உமது ஊழியக்காரர்களுக்கு காட்டுவீராக.” இன்று புரிந்துகொண்டிருப்பதைப்போன்று தசமபாகத்தின் நியாயப்பிரமாணம் இந்த வெளிப்படுத்தலுக்கு முன்பு சபைக்குக் கொடுக்கப்படவில்லை. ஜெபத்தில் தசமபாகம் என்ற பதம் சாதாரணமாக மேற்கோள் காட்டப்பட்டிருக்கிறது, முன்னாலுள்ள வெளிப்படுத்தல்களில் (64:23; 85:3; 97:11) பத்தில் ஒரு பங்கு என குறிப்பிடவில்லை, ஆனால் சபை நிதிக்கு மனமுவந்த காணிக்கைகளும் சந்தாக்களும். நித்தியமாயிருக்கக்கூடிய ஒரு உடன்படிக்கைக்குள் அங்கத்தினர்கள் (முதன்மையாக முன்னோடித் தலைவர்கள்) பிரவேசித்த பரிசுத்தமாக்கப்படுதலின் மற்றும் ஆஸ்தியின் உக்கிராணத்துவத்தின் நியாயப்பிரமாணத்தை சபைக்கு முன்பு கர்த்தர் கொடுத்திருந்தார். இந்த உடன்படிக்கைக்குள் நிலைத்திருக்க அநேகர் தவறியதால் குறிப்பிட்ட காலத்திற்கு கர்த்தர் அதை திரும்பப்பெற்று பதிலாக சபை முழுவதற்கும் தசமபாக நியாயப்பிரமாணத்தைக் கொடுத்தார். பரிசுத்த நோக்கங்களுக்காக அவர்களுடைய எவ்வளவு ஆஸ்திகளை அவர் எதிர்பார்க்கிறார் என தீர்க்கதரிசி கர்த்தரிடம் கேட்டார். பதிலே இந்த வெளிப்படுத்தல்.
1–5, பரிசுத்தவான்கள் தங்களுடைய அதிகப்படியான ஆஸ்தியை கொடுத்து, பின்னர் வருஷந்தோறும் தங்களுடைய வருவாயில் பத்தில் ஒரு பங்கை தசமபாகமாக செலுத்தவேண்டும்; 6–7, அத்தகைய ஒரு நடைமுறை சீயோன் தேசத்தை பரிசுத்தப்படுத்தும்.
1 மெய்யாகவே நான் உனக்குச் சொல்லுகிறேன், அவர்களுடைய சகல அதிகப்படியான ஆஸ்திகளை,
2 என்னுடைய வீட்டைக் கட்டுவதற்காகவும் சீயோனின் அஸ்திபாரத்தைப் போடுவதற்காகவும் ஆசாரியத்துவத்திற்காகவும் என்னுடைய சபையின் தலைமைக்கிருக்கிற கடனுக்காகவும் சீயோனின் என்னுடைய சபையின் ஆயரின் கைகளில் கொடுக்கும்படியாக நான் கேட்கிறேன்.
3 இது என்னுடைய ஜனங்களின் தசமபாகத்திற்கான ஆரம்பமாயிருக்கும்.
4 அதன் பிறகு இப்படியாக வருஷந்தோறும் தங்களுடைய சகல வருமானத்திலிருந்தும் தசமபாகம் செலுத்துபவர்கள் பத்தில் ஒரு பாகத்தை கொடுப்பார்களாக, என்னுடைய பரிசுத்த ஆசாரியத்துவத்திற்காக என்றென்றைக்கும் இது அவர்களுக்கு ஒரு நிரந்தர நியாயப்பிரமாணமாயிருக்கும் என கர்த்தர் சொல்லுகிறார்.
5 மெய்யாகவே நான் உனக்குச் சொல்லுகிறேன், சீயோன் தேசத்தில் கூடிவருகிறவர்கள் தங்களுடைய அதிகப்படியான ஆஸ்திகளை தசமபாகமாக செலுத்தி, இந்த பிரமாணத்தை ஆசரிப்பார்கள் அல்லது உங்களுக்கு மத்தியிலே வாசம்பண்ண அவர்கள் தகுதியில்லாதவர்களாக காணப்படுவார்கள் என்பது சம்பவிக்கும்.
6 நான் உனக்குச் சொல்லுகிறேன், அதைப் பரிசுத்தமாக கைக்கொள்ள இந்தப் பிரமாணத்தை என்னுடைய ஜனங்கள் ஆசரிக்காதிருந்தால், என்னுடைய கட்டளைகளும், தீர்ப்புக்களும் வைக்கப்படும்படியாக, அது மிகுந்த பரிசுத்தமாயிருக்கும்படியாக இந்த நியாயப்பிரமாணத்தால் எனக்காக சீயோனின் தேசத்தை பரிசுத்தப்படுத்தாதிருந்தால், உனக்கு சீயோனின் தேசமாக இது இருக்காது என இதோ, மெய்யாகவே நான் உனக்குச் சொல்லுகிறேன்.
7 சீயோனின் சகல பிணையங்களுக்கும் இது ஒரு மாதிரியாயிருக்கும். அப்படியே ஆகக்கடவது. ஆமென்.