பாகம் 121
மார்ச் 20, 1839 தேதியில் மிசௌரியிலுள்ள லிபர்டி சிறைச்சாலையில் தீர்க்கதரிசி ஜோசப் ஸ்மித் ஒரு கைதியாக இருந்தபோது ஜெபமும் தீர்க்கதரிசனங்களும் சபைக்கு ஒரு நிருபத்தில் அவரால் எழுதப்பட்டன. தீர்க்கதரிசியும் ஏராளமான தோழர்களும் மாதக்கணக்கில் சிறைச்சாலையில் இருந்தார்கள். நிர்வாக அதிகாரிகளுக்கும் நீதிமன்றத்திற்கும் கொடுக்கப்பட்ட விண்ணப்பங்களும் மேல்முறையீடுகளும் அவர்களுக்கு மீட்பைக் கொண்டுவரவில்லை.
1–6, துன்பப்பட்டுக் கொண்டிருந்த பரிசுத்தவான்களுக்காக கர்த்தரிடம் தீர்க்கதரிசி வேண்டுகிறார்; 7–10, அவரோடு கர்த்தர் சமாதானத்தைப் பேசுகிறார்; 11–17, கர்த்தருடைய ஜனங்களுக்கு விரோதமாக பொய்யான மீறுதலின் கூக்குரலை எழுப்புகிற யாவரும் சபிக்கப்பட்டவர்கள்; 18–25, ஆசாரியத்துவத்திற்கு அவர்களுக்கு உரிமையிருக்காது, அவர்கள் ஆக்கினைக்குள்ளாவார்கள்; 26–32, பராக்கிரமத்துடன் நிலைத்திருப்பவர்களுக்கு மகிமையான வெளிப்படுத்தல்கள் வாக்களிக்கப்பட்டிருக்கிறது; 33–40, ஏன் அநேகர் அழைக்கப்பட்டு சிலரே தெரிந்துகொள்ளப்படுகிறார்கள்; 41–46, ஆசாரியத்துவம் நீதியில் மாத்திரமே பயன்படுத்தப்படவேண்டும்.
1தேவனே, நீர் எங்கே இருக்கிறீர்? உம்முடைய மறைவான இடத்தை மூடியிருக்கிற கூடாரம் எங்கே?
2எம்மட்டும் உமது கரமும், உமது கண்ணும், ஆம், உம்முடைய தூய்மையான கண்ணும் தடுக்கப்படும், நித்திய வானங்களிலிருந்து உம்முடைய ஜனங்களின் மற்றும் உம்முடைய ஊழியக்காரர்களுக்கு விரோதமான தவறுகளைப் பாரும், அவர்களுடைய அழுகையால் உம்முடைய காது ஊடுருவப்படுவதாக.
3ஆம், கர்த்தாவே, உமது இருதயம் அவர்களுக்காக மிருதுவாக்கப்படுவதற்கும், உம்முடைய உள்ளம் இரக்கத்தோடு அவர்களை நோக்கி வரும் முன்பாக, இந்த தவறுகளாலும் அக்கிரமமான ஒடுக்கங்களாலும் எம்மட்டும் அவர்கள் பாடுபடவேண்டும்?
4சர்வ வல்லமையுள்ள தேவனாகிய கர்த்தாவே, வானத்தையும், பூமியையும், சமுத்திரங்களையும், அதிலுள்ள சகலத்தையும் சிருஷ்டித்தவரே, பிசாசானவனையும், அந்தகாரமும் இருளுமாக்கப்பட்ட ஷியோலின் ஆளுகையையும் அடக்கி கட்டுப்படுத்துபவரே, உமது கரத்தை நீட்டும்; உமது கண் ஊடுருவதாக, உமது கூடாரம் உயர்த்தப்படுவதாக; உமது மறைவான இடம் இனியும் மூடப்படாதிருப்பதாக; உமது செவி சாய்க்கப்படுவதாக; உமது இருதயம் மிருதுவாகுவதாக, எங்களை நோக்கி உமது உள்ளம் இரக்கத்தால் அசைக்கப்படுவதாக.
5எங்களுடைய சத்துருக்களுக்கு விரோதமாக உம்முடைய கோபம் மூள்வதாக; உம்முடைய இருதயத்தின் உக்கிரத்தில் உமது பட்டயத்துடன் எங்களுக்கு இழைக்கப்பட்ட குற்றங்களுக்காக பழிதீர்ப்பீராக.
6எங்களுடைய தேவனே, உம்முடைய துன்பப்பட்டுக்கொண்டிருக்கிற பரிசுத்தவான்களை நினைவுகூரும்; உம்முடைய ஊழியக்காரர்கள் என்றென்றைக்கும் உம்முடைய நாமத்தில் களிகூருவார்கள்.
7என்னுடைய மகனே, உன்னுடைய ஆத்துமாவுக்கு சமாதானம் உண்டாவதாக; உன்னுடைய இக்கட்டுகளும் உன்னுடைய உபத்திரவங்களும் ஒரு சிறிய சமயத்திற்கு மட்டுமே;
8பின்னர், நீ அதில் நன்றாய் நிலைத்திருந்தால் தேவன் உன்னை உன்னதத்திற்கு உயர்த்துவார்; நீ உன்னுடைய சத்துருக்கள் யாவர் மீதும் ஜெயங்கொள்ளுவாய்.
9உன்னுடைய சிநேகிதர் உன்னோடு நிற்பார்கள், அன்பான இருதயங்களுடனும் நட்பான கரங்களுடனும் அவர்கள் மீண்டும் உன்னைப் புகழ்வார்கள்.
10நீ இன்னும் யோபுவைப் போலில்லை; உன் சிநேகிதர்கள் உனக்கு விரோதமாக வாதாடுவதில்லை, யோபுவுக்கு அவர்கள் செய்ததைப்போல மீறுதலினால் உன்னை குற்றம் சுமத்துவதுமில்லை.
11மீறுதல் என உன்னைக் குற்றம் சுமத்துபவர்களின் நம்பிக்கை அழிக்கப்படும், உதிக்கும் சூரியனின் எரிக்கும் கதிர்களுக்கு முன்பாக பனிக்கட்டிப் பொடி கரைந்து போவதைப்போல அவர்களின் செயல்திட்டம் கரைந்துபோகும்;
12அவருடைய அற்புதமான கிரியைகளை அவர்கள் புரிந்துகொள்ளாதிருக்கும்படியும் அவர்களுடைய மனங்களை குருடாக்கவும், அவர்களுக்கு அவர் நிரூபிக்கும்படியாகவும் அவர்களுடைய தந்திர செயல்களின்போது அவர்களை பிடிக்கும்படியாகவும் காலங்களையும் சமயங்களையும் மாற்றவும் தேவன் அவருடைய கையை வைத்து முத்திரையிட்டிருக்கிறார்;
13அவர்களுடைய இருதயங்கள் கெட்டுப்போயிருப்பதாலும் மற்றவர்களின்மீது கொண்டுவர அவர்கள் விரும்புகிற காரியங்கள், மற்றவர்கள் துன்பப்படுவதை விரும்புவதாலும், அவர்கள் ஏமாற்றமடையும்படிக்கு கடையாந்தரம் மட்டும் அவைகள் அவர்கள் மீதே வரும்;
14அவர்கள் ஏமாற்றமடையும்படிக்கும், அவர்களுடைய நம்பிக்கைகள் அறுப்புண்டு போகும்படிக்கும்;
15இப்போதிலிருந்து பல வருஷங்கள் அல்ல, அவர்களில் ஒருவனும் மதிலினருகில் நிற்க எஞ்சியிருக்காதபடிக்கு அவர்களும் அவர்களுடைய சந்ததியரும் வானத்தின் கீழெங்கும் இராதபடிக்கு துடைக்கப்பட்டுப்போவார்கள் என தேவன் சொல்லுகிறார்.
16என்னால் அபிஷேகம் பண்ணப்பட்டவனுக்கு விரோதமாக குதிகாலைத் தூக்குகிற யாவரும் சபிக்கப்பட்டவர்கள், எனக்கு முன்பாக பாவஞ் செய்யாதிருந்தபோது, அவர்கள் பாவஞ் செய்தார்களென கூக்குரலிடுகிறார்கள் என தேவன் சொல்லுகிறார், ஆனால், பார்வையில் சரியாயிருக்கிற, நான் அவர்களுக்குக் கட்டளையிட்டவற்றைச் செய்தார்கள் என தேவன் சொல்லுகிறார்.
17ஆனால் மீறுதல் எனக் கூக்குரலிடுபவர்கள் அதைச் செய்கிறார்கள், ஏனெனில் அவர்கள் பாவத்தின் வேலைக்காரர்களாயும் அவர்களே கீழ்ப்படியாமையின் பிள்ளைகளாயும் இருக்கிறார்கள்.
18அவர்களுக்கு அடிமைத்தனத்தையும் மரணத்தையும் அவர்களே கொண்டுவரும்படியாக என்னுடைய ஊழியக்காரர்களுக்கு விரோதமாக பொய் சாட்சி சொல்லுகிறவர்களுக்கு,
19அவர்களுக்கு ஐயோ; ஏனெனில் அறுப்புண்டு போகும்படிக்கு, அவர்கள் என்னுடைய சிறியரை இடறலடையச் செய்தார்கள், என்னுடைய ஆலயத்தின் நியமங்களிலிருந்து அவர்கள் அறுப்புண்டு போவார்கள்.
20அவர்களுடைய கூடை நிரம்பாது, அவர்களுடைய வீடுகளும் அவர்களுடைய களஞ்சியங்களும் பாழடைந்து அவர்களிடம் முகதாட்சண்யம் பேசியவர்களாலே அவர்கள் அலட்சியம் பண்ணப்படுவார்கள்.
21அவர்களுக்கும் அவர்களுக்குப் பின்பு அவர்களுடைய சந்ததியருக்கும் தலைமுறை தலைமுறைக்கும் ஆசாரியத்துவத்தின் உரிமையிருக்காது.
22அவர்களுடைய கழுத்துக்களில் ஒரு எந்திரக்கல் கட்டப்பட்டு சமுத்திரத்தின் ஆழத்தில் அவர்களை அமுத்திப்போடுவது அவர்களுக்கு நலமாயிருக்கும்.
23என்னுடைய ஜனங்களை தொந்திரவு செய்கிற, துரத்துகிற, கொலை செய்கிற அவர்களுக்கு விரோதமாக சாட்சி சொல்லுகிற அவர்கள் யாவருக்கும் ஐயோ என சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார்; பாதாளத்தின் ஆக்கினைக்கு விரியன் பாம்பின் தலைமுறை தப்பிக்காது.
24இதோ, அவர்களுடைய கிரியைகள் யாவற்றையும் என்னுடைய கண்கள் பார்க்கும், அறியும், அவர்கள் யாவருக்காகவும் சரியான நேரத்திலே விரைந்துவரும் நியாயத்தீர்ப்பை நான் வைத்திருக்கிறேன்;
25ஏனெனில் அவனுடைய கிரியைக்குத் தக்கதாக ஒவ்வொரு மனுஷனுக்கும் ஒரு காலம் நியமிக்கப்பட்டுள்ளது.
26ஆம், உலகத் தோற்றத்திலிருந்து இப்போது வரை வெளிப்படுத்தப்படாத பரிசுத்த ஆவியின் சொல்ல முடியாத ஈவினால் தேவன் உனக்கு அவருடைய பரிசுத்த ஆவியினால் ஞானத்தைக் கொடுப்பார்;
27நம்முடைய முற்பிதாக்கள் கடைசிக் காலங்களில் அவை வெளிப்படுத்தப்படுமென ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருந்த, அவர்களுடைய மகிமையின் பூரணத்துவத்திற்காக காக்கப்பட்டிருப்பதைப்போல, தூதர்களால் அவர்களின் மனங்களில் காண்பிக்கப்பட்ட,
28எதுவுமே மறைக்கப்படாத ஒரு நேரம் வரும், அங்கு ஒரு தேவனோ அல்லது அநேக தேவர்களோ இருந்தாலும், அவர்கள் வெளிக்கொண்டு வரப்படுவார்கள்.
29சகல சிங்காசனங்களும், கர்த்தத்துவங்களும், துரைத்தனங்களும், அதிகாரங்களும் வெளிப்படுத்தப்பட்டு, இயேசு கிறிஸ்துவின் சுவிசேஷத்திற்காக பராக்கிரமத்துடன் நிலைத்திருந்த அனைவர் மேலும் அருளப்படும்.
30வானங்களுக்கு அல்லது சமுத்திரங்களுக்கு அல்லது உலர்ந்த நிலத்துக்கு, அல்லது சூரியனுக்கு, சந்திரனுக்கு அல்லது நட்சத்திரங்களுக்கு எல்லை குறிக்கப்பட்டிருந்தால்,
31அவற்றின் சுழற்சியின் காலமெல்லாம், குறிக்கப்பட்ட நாட்களெல்லாம், மாதங்களெல்லாம், வருஷங்களெல்லாம், அவர்களுடைய நாட்களெல்லாம், அவர்களுடைய மகிமைகள், நியாயப்பிரமாணங்கள், குறிக்கப்பட்ட நேரங்களெல்லாம் காலங்களின் நிறைவேறுதலின் ஊழியக்காலத்தின் நாட்களில் வெளிப்படுத்தப்படும்,
32இந்த உலகத் தோற்றத்திற்கு முன்பாகவும் சகல பிற தேவர்களின், நித்திய தேவனின் ஆலோசனைக் குழுவிலே நியமிக்கப்பட்டபடி, ஒவ்வொரு மனுஷனும் அவருடைய நித்திய பிரசன்னத்திற்குள்ளும் அவருடைய அழியாமையின் இளைப்பாறுதலுக்குள்ளும் பிரவேசிக்கும் வரை முடிவுக்காக கடைசி வரைக்கும் வைக்கப்பட்டிருக்க வேண்டும்.
33எம்மட்டும் ஓடுகின்ற தண்ணீர்கள் அசுத்தமாயிருக்க முடியும்? வானங்களை எந்த சக்தி நிறுத்தும்? அப்படியே அதன் வகுக்கப்பட்ட பாதையிலிருந்து மிசௌரி ஆற்றைத் தடுக்க அல்லது அதன் ஓட்டத்தை மேல் நோக்கி திருப்ப மனுஷன் தன்னுடைய அற்பமான கையை நீட்டுவதைப்போல, பிற்காலப் பரிசுத்தவான்களின் தலைகள்மீது வானத்திலிருந்து சர்வ வல்லவர் ஞானத்தைப் பொழிவதைத் தடுப்பது இருக்கும்.
34இதோ, அநேகர் அழைக்கப்பட்டார்கள், ஆனால் சிலரே தெரிந்து கொள்ளப்பட்டார்கள், அவர்கள் ஏன் தெரிந்து கொள்ளப்படவில்லை?
35ஏனெனில் அவர்களின் இருதயங்கள் இந்த உலகத்தின் காரியங்களின் மீது மிகுதியாக இருக்கிறது, இந்த ஒரு பாடத்தை அவர்கள் கற்றுக் கொள்ளாதபடிக்கு மனுஷர்களின் புகழை வாஞ்சிக்கிறது,
36ஆசாரியத்துவத்தின் உரிமைகள் பரலோகத்தின் வல்லமைகளோடு பிரிக்கப்படாதபடிக்கு இணைக்கப்பட்டிருக்கிறது, நீதியின் கொள்கைகளால் அல்லாமல் பரலோகத்தின் வல்லமைகள் கட்டுப்படுத்தப்படவோ கையாளப்படவோ முடியாது.
37அவைகள் நம்மீது அருளப்படலாம் என்பது சத்தியமே, ஆனால் அநீதியின் எந்த அளவிலும் நமது பாவங்களை மறைக்க, அல்லது நமது பெருமையை, நமது வீணான ஆசையை நிறைவேற்ற, அல்லது மனுபுத்திரர்களின் ஆத்துமாக்களின் மீது கட்டுப்பாட்டை அல்லது ஆளுகையை அல்லது கட்டாயத்தை பிரயோகிக்கும்போது, இதோ, பரலோகம் தாமே விலகும். கர்த்தரின் ஆவி துக்கப்படும், அது விலகும்போது அந்த மனுஷனின் ஆசாரியத்துவத்திற்கு அல்லது அதிகாரத்திற்கு, ஆமென்.
38இதோ, முள்ளில் உதைக்க, பரிசுத்தவான்களைத் துன்புறுத்த, தேவனுக்கு விரோதமாக போராட அவன் தனியாக விடப்பட்டதை அவன் அறியாதிருக்கிறான்.
39ஒரு சிறிய அதிகாரத்தை அவர்கள் பெற்ற உடனேயே அவர்கள் எண்ணுவதைப்போல அவர்கள் உடனேயே அநீதியான ஆளுகையை பிரயோகிக்க ஆரம்பிக்கிறார்கள் என்பது ஏறக்குறைய சகல மனுஷர்களின் இயற்கையான மனநிலை என்ற துக்கமான அனுபவத்திலிருந்து நாம் கற்றுக்கொண்டோம்.
40ஆகவே அநேகர் அழைக்கப்பட்டார்கள், ஆனால் சிலரே தெரிந்து கொள்ளப்பட்டார்கள்.
41ஆசாரியத்துவத்தின் சிலாக்கியத்தால், எந்த வல்லமையும் அல்லது செல்வாக்கும் பராமரிக்கப்பட முடியாது அல்லது கூடாது, ஊக்கத்தாலும், நீடிய சாந்தத்தாலும், தயவாலும், சாந்தத்தாலும், மாறாத அன்பாலும் மட்டுமே;
42மாய்மாலமில்லாமலும் கபடமில்லாமலும் ஆத்துமாவை பெரிதாய் விரிவுபடுத்துகிற பாசத்துடனும், தூய ஞானத்தாலும்,
43பரிசுத்த ஆவியால் அசைக்கப்படும்போது கண்டிப்புடன் சரியான நேரத்தில் கடிந்துகொண்டு; அவன் உங்களை சத்துருவாய் கருதாதபடிக்கு,
44மரணத்தின் கயிறுகளைவிட உங்களுடைய சத்தியம் பெலமுள்ளதென அவன் அறிந்து கொள்ளும்படியாக, பின்னர் நீ கடிந்து கொண்ட அவனிடத்தில் அதிகமான அன்பைக் காட்டவேண்டும்.
45சகல மனுஷர்களிடத்திலும், விசுவாசமுள்ள வீட்டாரிடத்திலும் உங்களுடைய உள்ளம் தயாளம் நிறைந்ததாய் இருப்பதாக, உனது சிந்தனைகளை நற்குணம் இடைவிடாது அலங்கரிப்பதாக; பின்னர் உனது தன்னம்பிக்கை தேவனின் பிரசன்னத்தில் பெலப்படும், ஆசாரியத்துவத்தின் கோட்பாடு வானத்திலிருந்து பனியைப்போல உனது ஆத்துமாவின்மீது சொட்டும்.
46பரிசுத்த ஆவியானவர் உன்னுடைய நிரந்தர சிநேகிதராயிருப்பார், உன்னுடைய செங்கோல் மாறாத நீதி மற்றும் சத்தியத்தின் செங்கோலாயிருக்கிறது, உனது ஆளுகை ஒரு நித்திய ஆளுகையாயிருந்து, நிர்ப்பந்தமாயில்லாமல் என்றென்றைக்கும் அது உன்னிடத்தில் வழிந்தோடும்.