பாகம் 137
ஜனுவரி 21, 1836ல் ஒஹாயோவின் கர்த்லாந்து ஆலயத்தில் தீர்க்கதரிசி ஜோசப் ஸ்மித்துக்கு கொடுக்கப்பட்ட தரிசனம். அது ஆலய பிரதிஷ்டைக்கான ஆயத்தத்தின் நியமங்களை நிர்வகிக்கும் தருணமாயிருந்தது.
1–6, சிலஸ்டியல் ராஜ்யத்தில் தன்னுடைய சகோதரர் ஆல்வினை தீர்க்கதரிசி பார்க்கிறார்; 7–9, மரித்தவர்களுக்கான இரட்சிப்பின் கோட்பாடு வெளிப்படுத்தப்படுகிறது; 10, சிலஸ்டியல் ராஜ்யத்தில் எல்லா பிள்ளைகளும் இரட்சிக்கப்படுகிறார்கள்.
1 நமக்காக பரலோகங்கள் திறக்கப்பட்டன, சிலஸ்டியல் ராஜ்யத்தையும் அதன் மகிமையையும் நான் கண்டேன், பார்த்தேன் சரீரத்திலிருந்தா அல்லது புறம்பேயிருந்தா என்பதை என்னால் சொல்ல முடியாது.
2 அந்த ராஜ்யத்தின் சந்ததிகள் பிரவேசிக்கும் வாசலின் அளவு கடந்த அழகைப் பார்த்தேன்; அது சுழலும் அக்கினி ஜுவாலையைப் போன்றிருந்தது.
3 பிதாவும் குமாரனும் வீற்றிருந்த பிரகாசிக்கிற தேவனின் சிங்காசனத்தையும் நான் கண்டேன்.
4 பொன் பதிக்கப்பட்டது போன்ற தோற்றமளித்த அந்த ராஜ்யத்தின் அழகான வீதிகளை நான் கண்டேன்.
5 பிதாவான ஆதாமையும், ஆபிரகாமையும்; என்னுடைய தகப்பனையும் என்னுடைய தாயையும்; நீண்ட காலத்திற்கு முன் நித்திரையடைந்த என்னுடைய சகோதரனான ஆல்வினையும் நான் கண்டேன்;
6 இரண்டாவது முறையாக இஸ்ரவேலைக் கூட்டிச் சேர்க்க கர்த்தர் அவருடைய கைகளை வைப்பதற்கு முன்பு இந்த ஜீவியத்தை விட்டுப்போன பாவங்களின் மீட்பிற்காக ஞானஸ்நானம் பெறாத அவன் அந்த ராஜ்யத்திலே ஒரு சுதந்தரத்தை எவ்வாறு அடைந்தான் என ஆச்சரியப்பட்டேன்.
7 அப்படியாக கர்த்தரின் சத்தம் என்னிடம் வந்து: இந்த சுவிசேஷத்தை அறியாமல் மரித்த யாவரும், தங்குவதற்கு அவர்கள் அனுமதிக்கப்பட்டிருந்தால் அதைப் பெற்றிருந்திருப்பார்கள் என்றால், தேவனின் சிலஸ்டியல் ராஜ்யத்தின் சந்ததிகளாயிருப்பார்கள் என சொல்லியது;
8 தங்களுடைய முழு இருதயங்களோடும் அதை ஏற்றுக் கொண்டிருக்கக் கூடியவர்கள் இப்போதிலிருந்து அதுபற்றி அறியாமல் மரிக்கப் போகிறவர்கள் யாவரும் அந்த ராஜ்யத்தின் சந்ததிகளாவார்கள்,
9 ஏனெனில், அவர்களுடைய கிரியைகளின் படியும், அவர்களுடைய இருதயங்களின் வாஞ்சைகளின் படியும் கர்த்தராகிய நான் எல்லா மனுஷர்களையும் நியாயந்தீர்ப்பேன்.
10 அவர்களுடைய பொறுப்பேற்கும் வயதை அடைவதற்கு முன்பே மரித்த பிள்ளைகள் யாவரும் பரலோகத்தின் சிலஸ்டியல் ராஜ்யத்தில் இரட்சிக்கப்பட்டதையும் கூட நான் கண்டேன்.