பாகம் 21
ஏப்ரல் 6, 1830ல் நியூயார்க்கின் பயெட்டியில் தீர்க்கதரிசி ஜோசப் ஸ்மித்துக்கு கொடுக்கப்பட்ட வெளிப்படுத்தல். இந்த வெளிப்படுத்தல் சபை ஆரம்பிக்கப்படும்போது, தீர்மானிக்கப்பட்ட தேதியில், பீட்டர் விட்மர் மூத்தவர் வீட்டில் கொடுக்கப்பட்டது. முன்னதாக ஞானஸ்நானம் பெற்ற ஆறுபேர் பங்கேற்றனர். ஏகோபித்த வாக்குகள் மூலம் இந்த மனுஷர்கள், சபையை அமைப்பதற்கான தங்கள் வாஞ்சையையும் தீர்மானத்தையும் தேவனின் கட்டளையின்படி தெரிவித்தனர். (பாகம் 20 பார்க்கவும்). சபையின் தலைமை தாங்கும் அலுவலர்களாக ஜோசப் ஸ்மித் இளையவரையும், ஆலிவர் கௌட்ரியையும் ஏற்றுக்கொள்ளவும், ஆதரிக்கவும் அவர்கள் மேலும் வாக்களித்தார்கள். பின்னர் கைகள் வைக்கப்பட்டதுடன் சபையின் ஒரு மூப்பராக ஜோசப் ஆலிவரை நியமித்தார், அப்படியே ஜோசப்பை ஆலிவர் நியமித்தார். திருவிருந்தை நிர்வகித்த பின்பு, பரிசுத்த ஆவியை அருளுவதற்காகவும், சபையின் அங்கத்தினராக ஒவ்வொருவரையும் திடப்படுத்தவும் ஜோசப்பும் ஆலிவரும், பங்கேற்ற ஒவ்வொருவர் மீதும் தனித்தனியே கைகளை வைத்தார்கள்.
1–3, ஒரு ஞானதிருஷ்டிக்காரராக, மொழிபெயர்ப்பாளராக, தீர்க்கதரிசியாக, அப்போஸ்தலராக, மூப்பராக, ஜோசப் ஸ்மித் அழைக்கப்பட்டார்; 4–8, சீயோனின் காரியத்தை அவரது வார்த்தை வழிநடத்தும்; 9–12, தேற்றரவாளனால் அவர் பேசுவதால், பரிசுத்தவான்கள் அவரது வார்த்தைகளை நம்புவார்கள்.
1 இதோ, ஒரு பதிவேடு உங்களுக்கு மத்தியில் வைக்கப்படும்; அதில், பிதாவாகிய தேவனின் சித்தப்படியும், கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் கிருபையாலும் ஒரு ஞானதிருஷ்டிக்காரராக, மொழிபெயர்ப்பாளராக, தீர்க்கதரிசியாக, இயேசு கிறிஸ்துவின் அப்போஸ்தலராக, சபையின் மூப்பராக நீ அழைக்கப்படுவாய்.
2 அஸ்திபாரத்தை அமைக்க பரிசுத்த ஆவியானவரால் உணர்த்தப்பட்டு, அதை மகா பரிசுத்தமான விசுவாசத்துக்காக கட்டவும்,
3 அந்த சபை உங்கள் கர்த்தரின் வருஷமான ஆயிரத்து எண்ணூற்று முப்பதாம் வருஷம், நான்காவது மாதம் என அழைக்கப்படுகிற ஏப்ரல் மாதத்தின் ஆறாவது நாளில் அமைக்கப்பட்டு நிர்வகிக்கப்பட்டது.
4 ஆகவே, சபையைக் கருத்தில் கொண்டு எனக்கு முன்பாக முழு பரிசுத்தமாக நடந்து அவைகளை அவன் பெறுவது போலவே உங்களுக்கு அவன் கொடுக்கவிருக்கிற அவனது வார்த்தைகள் மற்றும் கட்டளைகள் அனைத்திற்கும் நீங்கள் செவிகொடுங்கள்.
5 ஏனெனில், எல்லா பொறுமையிலும் விசுவாசத்திலும் எனது வாயிலிருந்து வருவதாகவே, அவனது வார்த்தையை நீங்கள் பெறுவீர்கள்.
6 ஏனெனில் இந்தக் காரியங்களைச் செய்வதால், பாதாளத்தின் வாசல்கள் உங்களை மேற்கொள்ளாது; ஆம் உங்களுக்கு முன்பாக அந்தகாரத்தின் வல்லமைகளை கர்த்தராகிய தேவன் சிதறடிக்கப்பண்ணி, உங்கள் நன்மைக்காகவும், அவரது நாம மகிமைக்காகவும் வானங்களை அசையப்பண்ணுவார்.
7 ஏனெனில் கர்த்தராகிய தேவன் இப்படியாக சொல்கிறார்: நன்மைக்காக பராக்கிரம வல்லமையினால் சீயோனின் காரியத்தை நடத்த அவனை நான் உணர்த்தினேன், அவனது சிரத்தையை நான் அறிவேன், அவனது ஜெபங்களை நான் கேட்டேன்.
8 ஆம், சீயோனுக்காக அவன் அழுததை நான் பார்த்தேன், நான் இனிமேலும் அவளுக்காக அவனை துக்கமடையச் செய்யமாட்டேன்; ஏனெனில் அவனது பாவங்கள் மன்னிக்கப்படவும், அவனது கிரியைகளுக்காக எனது ஆசீர்வாதங்களை வெளிக்கொண்டு வரவும் அவனது களிகூருதலின் நாட்கள் வந்து விட்டன.
9 ஏனெனில், இதோ, எனது திராட்சைத் தோட்டத்தில் பிரயாசப்படுகிறவர்களை ஒரு பலமான ஆசீர்வாதத்துடன் நான் ஆசீர்வதிப்பேன், உலகத்தின் பாவங்களுக்காக பாவிகளான மனுஷர்களால் இயேசு சிலுவையிலறையப்பட்டார் என வெளிப்படுத்துகிற, தேற்றரவாளனால் என் மூலமாக அவனுக்குக் கொடுக்கப்பட்ட, ஆம் நொறுங்குண்ட இருதயமுள்ளவர்களின் பாவங்களின் மன்னிப்புக்காக, அவனது வார்த்தைகளை அவர்கள் நம்புவார்கள்.
10 ஆகவே எனது அப்போஸ்தலனாகிய ஆலிவர் கௌட்ரியே, அவன் உன்னால் நியமிக்கப்படவேண்டுமென்பது எனக்கு நீதியாயிருக்கிறது;
11 இது உனக்கு ஒரு நியமமாயிருப்பதால், அவனது கட்டுப்பாட்டின் கீழ் நீ ஒரு மூப்பராயிருக்கும்படிக்கு, அவன் உனக்கு முதன்மையாய் இருப்பதால் எனது நாமத்தைக் கொண்டுள்ள கிறிஸ்துவின் இந்த சபைக்கு நீ மூப்பராயிருக்கும்படிக்கு,
12 இந்த சபையின் முதல் பிரசங்கியாய் சபைக்கும், உலகத்திற்கும் முன்பாகவும், ஆம், புறஜாதியாருக்கு முன்பாகவும் இருப்பாய், ஆம், இப்படியாக கர்த்தராகிய தேவன் சொல்கிறார், இதோ, இதோ, யூதர்களுக்கும் கூட, ஆமென்.