பாகம் 47
மார்ச் 8, 1831ல் ஒஹாயோவின் கர்த்லாந்தில் தீர்க்கதரிசி ஜோசப் மூலமாகக் கொடுக்கப்பட்ட வெளிப்படுத்தல். தீர்க்கதரிசிக்கு ஏற்கனவே எழுத்தராக பணியாற்றிய ஜான் விட்மர், ஆலிவர் கௌட்ரிக்குப் பதிலாக சபையின் வரலாற்று ஆசிரியராகவும், பதிவாளராகவும் அவர் பணியாற்ற அவரைக் கேட்டுக்கொண்டபோது ஆரம்பத்தில் அவர் தயங்கினார். “ஒருவேளை நான் இதை செய்யாதிருந்திருப்பேன், ஆனால் கர்த்தரின் சித்தம் செய்யப்படவேண்டும், மேலும் இதை அவர் விரும்பினால், ஞான திருஷ்டிக்காரரான ஜோசப் மூலமாக இதை அவர் வெளிப்படுத்துவார்” என நான் விரும்புகிறேன் என அவர் எழுதினார். இந்த வெளிப்படுத்தலை ஜோசப் ஸ்மித் பெற்ற பின்பு ஜான் விட்மர் ஏற்றுக்கொண்டு அவருக்கு நியமிக்கப்பட்டதில் பணிபுரிந்தார்.
1–4, சபையின் வரலாற்றை எழுதவும், தீர்க்கதரிசிக்காக எழுதவும் ஜான் விட்மர் அமர்த்தப்பட்டார்.
1 இதோ, எனது ஊழியக்காரனாகிய ஜான், ஒரு முறையான வரலாற்றை எழுதி பாதுகாக்கவும், உனக்கு உதவி செய்யவும், எனது ஊழியக்காரனாகிய ஜோசப் கூடுதலான பணிகளுக்கு அழைக்கப்படும்வரை உனக்குக் கொடுக்கப்படுகிற அனைத்துக் காரியங்களையும் எழுதுவதும் எனக்கு அவசியமாயிருக்கிறது.
2 மீண்டும், மெய்யாகவே நான் உனக்குச் சொல்லுகிறேன், அவசியப்படும்போதெல்லாம் கூட்டங்களில் அவன் தனது குரலை உயர்த்தலாம்.
3 மீண்டும் நான் உனக்குச் சொல்லுகிறேன், சபையின் பதிவேட்டையும் வரலாற்றையும் தொடர்ந்து எழுதுவது அவனுக்கு பணிக்கப்படவேண்டும்; ஏனெனில் ஆலிவர் கௌட்ரியை, மற்றொரு அலுவலுக்கு நான் நியமித்திருக்கிறேன்.
4 ஆகவே, தேற்றரவாளனால் இந்தக் காரியங்களை எழுதுவதில் எவ்வளவாய் அவன் உண்மையுள்ளவனாயிருக்கிறானோ அவ்வளவாய் அது அவனுக்கு கொடுக்கப்படவேண்டும். அப்படியே ஆகக்கடவது. ஆமென்.