வேதங்கள்
கோட்பாடும் உடன்படிக்கைகளும் 4


பாகம் 4

பெப்ருவரி 1829ல், பென்சில்வேனியாவின் ஹார்மனியில், தீர்க்கதரிசி ஜோசப் ஸ்மித் மூலமாக அவரது தகப்பன் ஜோசப் ஸ்மித் மூத்தவருக்கு கொடுக்கப்பட்ட வெளிப்படுத்தல்.

1–4, கர்த்தரின் ஊழியக்காரர்களை பராக்கிரம சேவை பாதுகாக்கிறது; 5–6, தேவதன்மை, ஊழியத்திற்கு அவர்களை தகுதிப்படுத்துகிறது; 7, தேவனுக்குரிய காரியங்கள் நாடப்படவேண்டும்.

1 இப்பொழுது இதோ, மனுபுத்திரருக்கு மத்தியிலே ஒரு அதிசயமான காரியம் வரப்போகிறது.

2 ஆகவே, தேவனின் ஊழியத்தில் ஈடுபட்டிருக்கிறவர்களே, கடைசி நாளிலே தேவனுக்கு முன்பாக குற்றமற்றவர்களாக நீங்கள் நிற்கும்படியாக, நீங்கள் உங்கள் முழு இருதயத்தோடும், ஊக்கத்தோடும், மனதோடும், பலத்தோடும் அவருக்கு ஊழியம் செய்யுங்கள்.

3 ஆகவே தேவனுக்கு ஊழியம் செய்ய நீங்கள் வாஞ்சை உள்ளவர்களாயிருந்தால், பணிக்கு நீங்கள் அழைக்கப்படுகிறீர்கள்.

4 இதோ, வயல் இப்போதே அறுப்புக்கு விளைந்திருக்கிறது; இதோ, தனது பெலத்தினால் தனது அரிவாளை நீட்டுகிறவன் அழிந்து போகாமலிருக்கும் பொருட்டு அதை அவன் சேமித்து வைத்து தனது ஆத்துமாவுக்கு இரட்சிப்பைக் கொண்டுவருகிறான்.

5 தேவனுடைய மகிமைக்கென்ற ஒரே நோக்கத்துடன், விசுவாசம், நம்பிக்கை, தயாளம், அன்பு இவைகள் பணிக்கு அவனை தகுதிப்படுத்தும்.

6 விசுவாசம், நற்குணம், அறிவு, இச்சையடக்கம், பொறுமை, சகோதர பாசம், தேவதன்மை, தயாளம், தாழ்மை, ஜாக்கிரதை இவைகளை நினைவுகூருங்கள்,

7 கேளுங்கள், பெற்றுக்கொள்வீர்கள், தட்டுங்கள் உங்களுக்குத் திறக்கப்படும். ஆமென்.